உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 3 பிப்ரவரி, 2011

திரும்பிப் பார்க்கிறேன்


* னவுகள் கொன்றுதின்ன,
கடமைகள் கொஞ்சம் தின்ன,
நிகழ்வுகளில் கனவுகளை,
சாத்தியமாக்கப் போராடும் 
வாழ்வில், கடந்த கால 
என் கல்லூரி வாழ்வைத் 
திரும்பப் பார்க்கிறேன்....

* மாயங்கள் நிறைந்த 
உலகில் அன்பில் மையல்
கொண்டு, ஆனந்தமாய்
நட்போடு பவனிவந்த
காலமது....

* குறும்புகள் உடன்கொண்டு 
குழந்தையாய்   கல்லூரியை 
சுற்றிவந்து,
பலர்கவனம் கவர்ந்த 
முத்தான காலமது...

* ணென்றும் பெண்ணென்றும்,
வரையறைகள் வைக்காமல்,
எம் வையத்து வாழ்நாளில் 
மகிழ்ச்சியாய் இருந்த காலமது...

* சிறிய உணவு பாத்திரத்தில்,
பலர்கைகள் பதிந்து, நிறைவாக 
உணவு உண்ட காலமது..

* சோதனைகள் தெரியாமல்,
வேதனைகள் அறியமால்,
நமைக் காக்கும் கவசமாய் 
நட்பின் கருவறையில் 
நிம்மதியாய்  வாழ்த்த
மூன்றாண்டு காலமது...

* டலாக, உயிராக 
உதிரத்தில் ஒன்றாக,
துடிக்கின்ற இதயத்தில்
இருக்கின்ற அறையாக,
அணுஅணுவாய் எம் 
அங்கம் கலந்த 
அன்பு நட்போடு
அழகாக களித்த காலமது...

* முளைக்காத வாலெல்லாம்
முளைத்திட்ட நேரமது...
ஆசிரியர் போல் பலர்குரலில் பேசி 
நட்பின் சிரிப்பின் மூலம் 
கண்ணீர்த்துளியை     
பரிசாக வாங்கிய காலமது...

* வெளியுலகம் அறியாமல்,
நயவஞ்சகம் புரியாமல்,
நான் எனதென்று இல்லாமல் 
எல்லோரும் சரிசமமாய்
இருந்த்திட்ட காலமது...

* போட்டியில் பரிசுகள் தந்த 
மகிழ்ச்சியைவிட 
என் நட்புதந்த 
ஆனந்தத்தை அனுபவித்த 
காலமது...

* பிரசவவலி கண்ட தாய்ப்போல,
பிரிவின் வலி உணர்ந்தாலும்,
பிறக்கும் மாற்றத்தில்,
பிரிவின் ரணங்களோடும்,
எதிர்காலம் நமக்காய்
ஒளித்து வைத்திருக்கும்
சுவராஸ்யங்களை தேடி
பயணித்த கல்லூரி
இறுதி காலமது...

** இன்று,
முகவுரையும் மறந்துபோய்,
முகவரியும் தொலைந்துபோய்,
குரலொலியில் அடையாளம்தான் காண,
காலமென்னும் காந்தமது,
இழுத்த இழுவைக்கெல்லாம்
சுழன்று சுழன்று ஓடுகின்றோம்...

* னைவியாக, கணவனாக,
குழந்த்தைக்கு பெற்றோராக,
முதுமைக்கு பிள்ளையாக,
வாங்கிய கடனுக்கு கடனாளியாக,
பொறுப்புகள் அதிகரிக்க,
நட்பு தரும் அன்பு மட்டும்
  என்றும் அனாமத்து சொத்தாக 
வாழ்க்கையெனும்
இறுதிநிலைக் குறிப்பை சமன் செய்கிறது...


* னவுகள் கொன்றுதின்ன,
கடமைகள் கொஞ்சம் தின்ன,
நிகழ்வுகளில் கனவுகளை,
சாத்தியமாக்கப் போராடும் 
வாழ்வில், கடந்த கால 
என் கல்லூரி வாழ்வைத் 
திரும்பப் பார்க்கிறேன்....


அன்புடன்
ரேவா


( நான் வணிகவியல் மாணவி அதான் சொத்து பொறுப்புன்னு கொஞ்சம் வறுத்திருப்பேன்...பொறுத்துக்கோங்க...)

முந்தய பதிவு : அவள் இல்லாத நாட்கள் 
 

27 கருத்துகள்:

ஜெ.ஜெ சொன்னது…

உடலாக, உயிராக
உதிரத்தில் ஒன்றாக,
துடிக்கின்ற இதயத்தில்
இருக்கின்ற அறையாக,
அணுஅணுவாய் எம்
அங்கம் கலந்த
அன்பு நட்போடு
அழகாக களித்த காலமது...////

அருமையான வரிகள் ரேவா..

எனக்கும் என் கல்லூரி நினைவு வந்துவிட்டது...

ரேவா சொன்னது…

ஜெ.ஜெ said...

உடலாக, உயிராக
உதிரத்தில் ஒன்றாக,
துடிக்கின்ற இதயத்தில்
இருக்கின்ற அறையாக,
அணுஅணுவாய் எம்
அங்கம் கலந்த
அன்பு நட்போடு
அழகாக களித்த காலமது...////

அருமையான வரிகள் ரேவா..

எனக்கும் என் கல்லூரி நினைவு வந்துவிட்டது...

நன்றி தோழி எல்லோருக்கும் இந்த கவிதையும் மூலம் அவங்கவங்க கல்லூரி காலத்த கண்முன்னாடி நிறுத்தனும்னு நினச்சேன்... முழுசா செஞ்சுருக்கேநானு தெரியல... ஆனா உங்க பின்னூட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது தோழி.. தொடர்ந்து வாருங்கள்

மாத்தி யோசி சொன்னது…

சிறிய உணவு பாத்திரத்தில்,
பலர்கைகள் பதிந்து, நிறைவாக
உணவு உண்ட காலமது..


யதார்த்தமான வரிகள்! இப்போது நினைக்கும் போது கொஞ்சம் வலிகள்! இல்லையா?

sulthanonline சொன்னது…

//சிறிய உணவு பாத்திரத்தில்,
பலர்கைகள் பதிந்து, நிறைவாக
உணவு உண்ட காலமது..


பிரிவின் வலி உணர்ந்தாலும்,
பிறக்கும் மாற்றத்தில்,
பிரிவின் ரணங்களோடும்,
எதிர்காலம் நமக்காய்
ஒளித்து வைத்திருக்கும்
சுவராஸ்யங்களை தேடி
பயணித்த கல்லூரி
இறுதி காலமது..
முகவுரையும் மறந்துபோய்,
முகவரியும் தொலைந்துபோய்,
குரலொலியில் அடையாளம்தான் காண,
காலமென்னும் காந்தமது,
இழுத்த இழுவைக்கெல்லாம்
சுழன்று சுழன்று ஓடுகின்றோம்...//நிச்சயமாக தோழி உங்கள் கவிதை மூலம் மீண்டும் கல்லூரிக்கு சென்று திரும்பியதைப்போல் ஒரு சந்தோஷ உணர்வு.

வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய மிகவும் சந்தோஷமான தருணம் கல்லூரி வாழ்க்கை மட்டுமே.

மாணவன் சொன்னது…

//"திரும்பிப் பார்க்கிறேன்//

அழகான ரசனையுடன் கவிதை வரிகளாகவே சிறப்பாக எழுதியிருக்கீங்க...சூப்பர்

மாணவன் சொன்னது…

//* கனவுகள் கொன்றுதின்ன, கடமைகள் கொஞ்சம் தின்ன,நிகழ்வுகளில் கனவுகளை,சாத்தியமாக்கப் போராடும் வாழ்வில், கடந்த கால என் கல்லூரி வாழ்வைத் திரும்பப் பார்க்கிறேன்....//

நம்மில் அனைவருக்குமே பள்ளிப்பருவ நிகழ்வுகளும் கல்லூரி வாழ்கிகையும் மறக்க முடியாத பசுமையான நினைவுகளாக என்றும் நம் மனதில் அசைபோடும்...

நன்றிங்க சகோ, எங்கள் கல்லூரி வாழ்வையும் ஞாபகபடுத்தியமைக்கு...

எவனோ ஒருவன் சொன்னது…

நானும் என் கல்லூரி நாட்களை திரும்பி பார்த்தேன். கவிதை அருமை.

college days - happy days :-)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பிரசவவலி கண்ட தாய்ப்போல,
பிரிவின் வலி உணர்ந்தாலும்,
பிறக்கும் மாற்றத்தில்,
பிரிவின் ரணங்களோடும்,
எதிர்காலம் நமக்காய்
ஒளித்து வைத்திருக்கும்
சுவராஸ்யங்களை தேடி
பயணித்த கல்லூரி
இறுதி காலமது...//

அடடடா அருமை அருமை சூப்பர்.....

ரேவா சொன்னது…

மாத்தி யோசி said...

சிறிய உணவு பாத்திரத்தில்,
பலர்கைகள் பதிந்து, நிறைவாக
உணவு உண்ட காலமது..


யதார்த்தமான வரிகள்! இப்போது நினைக்கும் போது கொஞ்சம் வலிகள்! இல்லையா?

கண்டிப்பாக வலிகள் தான் நண்பா...கல்லூரி நட்பு போல் எப்போதும் அமையாது....வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பா

ரேவா சொன்னது…

sulthanonline said...

//சிறிய உணவு பாத்திரத்தில்,
பலர்கைகள் பதிந்து, நிறைவாக
உணவு உண்ட காலமது..


பிரிவின் வலி உணர்ந்தாலும்,
பிறக்கும் மாற்றத்தில்,
பிரிவின் ரணங்களோடும்,
எதிர்காலம் நமக்காய்
ஒளித்து வைத்திருக்கும்
சுவராஸ்யங்களை தேடி
பயணித்த கல்லூரி
இறுதி காலமது..


முகவுரையும் மறந்துபோய்,
முகவரியும் தொலைந்துபோய்,
குரலொலியில் அடையாளம்தான் காண,காலமென்னும் காந்தமது,
இழுத்த இழுவைக்கெல்லாம்
சுழன்று சுழன்று ஓடுகின்றோம்...

நிச்சயமாக தோழி உங்கள் கவிதை மூலம் மீண்டும் கல்லூரிக்கு சென்று திரும்பியதைப்போல் ஒரு சந்தோஷ உணர்வு.

வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய மிகவும் சந்தோஷமான தருணம் கல்லூரி வாழ்க்கை மட்டுமே.

ஆம் நண்பா மிகச் சரியாக சொன்னீர்கள்...வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

ரேவா சொன்னது…

மாணவன் said...

//"திரும்பிப் பார்க்கிறேன்//

அழகான ரசனையுடன் கவிதை வரிகளாகவே சிறப்பாக எழுதியிருக்கீங்க...சூப்பர்..........]

நன்றி சகோ

ரேவா சொன்னது…

மாணவன் said...

//* கனவுகள் கொன்றுதின்ன, கடமைகள் கொஞ்சம் தின்ன,நிகழ்வுகளில் கனவுகளை,சாத்தியமாக்கப் போராடும் வாழ்வில், கடந்த கால என் கல்லூரி வாழ்வைத் திரும்பப் பார்க்கிறேன்....//

நம்மில் அனைவருக்குமே பள்ளிப்பருவ நிகழ்வுகளும் கல்லூரி வாழ்கிகையும் மறக்க முடியாத பசுமையான நினைவுகளாக என்றும் நம் மனதில் அசைபோடும்...

நன்றிங்க சகோ, எங்கள் கல்லூரி வாழ்வையும் ஞாபகபடுத்தியமைக்கு...


உங்க பின்னூட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது சகோ.. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி :-)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

நானும் என் கல்லூரி நாட்களை திரும்பி பார்த்தேன். கவிதை அருமை.

college days - happy days :-)


கண்டிப்பாக கல்லூரி காலம் மகிழ்ச்சியான காலமே......நன்றி நண்பா வருகைக்கும் மறுமொழிக்கும்...

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//பிரசவவலி கண்ட தாய்ப்போல,
பிரிவின் வலி உணர்ந்தாலும்,
பிறக்கும் மாற்றத்தில்,
பிரிவின் ரணங்களோடும்,
எதிர்காலம் நமக்காய்
ஒளித்து வைத்திருக்கும்
சுவராஸ்யங்களை தேடி
பயணித்த கல்லூரி
இறுதி காலமது...//

அடடடா அருமை அருமை சூப்பர்.....நன்றி நண்பா வருகைக்கும் மறுமொழிக்கும்...

வைகை சொன்னது…

சிறிய உணவு பாத்திரத்தில்,
பலர்கைகள் பதிந்து, நிறைவாக
உணவு உண்ட காலமது..////

அனைவருக்குமே மறக்க முடியாத அனுபவம் இது!

தமிழ் உதயம் சொன்னது…

பெரிய கவிதையாக இருந்தாலும், அருமையாக வாசிக்க முடிந்தது. அருமையான கவிதை.

karthikkumar சொன்னது…

அருமை சகோ..... இந்த கவிதை படிக்கும் அனைவர் மனதிலும் கல்லூரி நினைவுகள் வந்து செல்லும்படி வரிகள் உள்ளன.. சூப்பர் :)

ரேவா சொன்னது…

வைகை said...

சிறிய உணவு பாத்திரத்தில்,
பலர்கைகள் பதிந்து, நிறைவாக
உணவு உண்ட காலமது..////

அனைவருக்குமே மறக்க முடியாத அனுபவம் இது!

கண்டிப்பாக அனைவருக்குமே மறக்க முடியாத அனுபவம் தான் நண்பா....வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பா

ரேவா சொன்னது…

தமிழ் உதயம் said...

பெரிய கவிதையாக இருந்தாலும், அருமையாக வாசிக்க முடிந்தது. அருமையான கவிதை...

நானும் முதலில் அதைதான் நினைத்தேன்... எழுதிய பிறகு எதையும் நீக்க மனம் வரவில்லை.. அதனால் அப்படியே விட்டுவிட்டேன்... தமிழ் உதயம்...வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே

ரேவா சொன்னது…

karthikkumar said...

அருமை சகோ..... இந்த கவிதை படிக்கும் அனைவர் மனதிலும் கல்லூரி நினைவுகள் வந்து செல்லும்படி வரிகள் உள்ளன.. சூப்பர் :)


நன்றி சகோ கார்த்தி... நானும் அதை எதிர்பார்த்துதான் எழுதுனேன்...

bala சொன்னது…

"நிச்சயமாக தோழி உங்கள் கவிதை மூலம் மீண்டும் கல்லூரிக்கு சென்று திரும்பியதைப்போல் ஒரு சந்தோஷ உணர்வு."
நினைக்கையில் கடைசி கண்ணீர் துளிகள் இபொழுதும் நினைவு பெட்டகத்தில் சந்தோஷ வலிகளோடு , நீங்கள் கல்லூரி தொட்டிலில் எங்களை தாலாட்டி உள்ளீர்கள் நன்றி

பலே பிரபு சொன்னது…

அனுபவிக்கும் சந்தோஷம்!!!!

இன்னும் இரண்டு மாதத்தில் தொலைய போகிறது !!!!

பிரிவு நிச்சயமாய் உறவை பலப்படுத்தும்.

நட்பை கொண்டாடுவோம்!!!

ksground சொன்னது…

thank you,your message was so useful...........
by saravanan.

ரேவா சொன்னது…

bala said...

"நிச்சயமாக தோழி உங்கள் கவிதை மூலம் மீண்டும் கல்லூரிக்கு சென்று திரும்பியதைப்போல் ஒரு சந்தோஷ உணர்வு."
நினைக்கையில் கடைசி கண்ணீர் துளிகள் இபொழுதும் நினைவு பெட்டகத்தில் சந்தோஷ வலிகளோடு , நீங்கள் கல்லூரி தொட்டிலில் எங்களை தாலாட்டி உள்ளீர்கள் நன்றி

நான் எதிர்பார்த்த வெற்றி உங்கள் மறுமொழியின் மூலம் கிடைத்ததாய் உணர்கின்றேன் தோழா..வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி...

ரேவா சொன்னது…

பலே பிரபு said...

அனுபவிக்கும் சந்தோஷம்!!!!

இன்னும் இரண்டு மாதத்தில் தொலைய போகிறது !!!!

பிரிவு நிச்சயமாய் உறவை பலப்படுத்தும்.

நட்பை கொண்டாடுவோம்!!!


நிச்சயம் நட்பை கொண்டாடுவோம்!!! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பிரபு

ரேவா சொன்னது…

ksground said...

thank you,your message was so useful...........
by saravanan.

நன்றி சரவணன் உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ஜெயசரஸ்வதி.தி சொன்னது…

I'm in the final yr of my college...

ithai vaasithavudan manam yetho oru nitharsanathai unarthiyathu...

inimayana naatkalin pathivu ...
yengo irukkum nanbargalin ninavil ...

anaithu variagalum arumai ..!!!