உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

இப்படியும் சில மனித மிருகங்கள்* காட்டில் மிருகங்கள்
கட்டுபாடுகள் கொண்டு
கட்டுக்கோப்பாய் வாழ
நாட்டில், நாணயம் மறந்து,
மனிதனின் மனிதம் மறந்த
சில மனித மிருகங்கள்...


* கொன்று கொளுத்த தேகத்தின்
சூடு தணிய  காதலின்
பெயரில் 
கலவு தேடும் 
சில மிருகங்கள்...

* கட்டிய தாலிக்காய்
கட்டிய மனைவியிடம்
காட்டு மிருகங்களை விட
கேவலமாய் வேட்டை யாடும்
சில மிருகங்கள்...

* தன் குறை இதுவென்று
அறியாமல், பிறர்
குறையை நிறைவாய்ச்சொல்லி
புகழ் தேடும் சில மிருகங்கள்..

* உணவிற்க்காய் பலர்
உடலைவிற்க,
உணர்வுகளை கொன்று
உறவு தேடும் சில மிருகங்கள்..

* ஆணென்றும் , பெண்ணென்றும்
பாலனினம் வகுக்க,
பாலுணர்விலே பாசம்
அறுக்கும் எமமைந்தர்கள்...

* ஒருவனுக்கு ஒருத்தி என்ற
புகழுக்குள் நம் பாரதம்
ஒளிந்து கொள்ள, உயிர்க்கொள்ளும்
நோய்க்கு சிவப்புக் கம்பளம்
விரித்து விருந்துகொடுக்கும்
உத்தம மைந்தர்கள்..

* கட்டுப் பாடுகள் இருப்பதாலோ
நாம் கலவில் நாம்
கட்டுப்படமறுக்கின்றோம்?....
கண்ணியம் காப்பதாய்
பலர் பொய் வேஷம் போடுகின்றோம்..

*  சிந்திக்க தெரிந்தவன் தான்
மனிதன் என்றால்,
சிதைக்குள் முடிந்து போகும்
மனித சதைக்கு அலையும்
மிருகங்களே!!!!

* காட்டு மிருகங்கள்
உன்னை பார்த்து ஏளனமாய்
சிரிப்பது உன் செவிக்கு
எட்டவில்லையா?..

** காட்டில் கண்ணியம்
காக்கும் விலங்குகள்
மத்தியில்,
நாட்டில் இப்படியும்
சில மனித மிருகங்கள்...
 
அன்புடன் 
ரேவா 

முந்தய கவிதை : "நலமா என் காதலே..."

26 நேசித்த உள்ளங்கள்:

{ sakthistudycentre-கருன் } at: 2/12/2011 5:43 பிற்பகல் சொன்னது…

வடை வாங்க வந்துட்டோம்ல ..
இன்றைக்கு ஸ்கூல் லீவு எல்லா நண்பர் / நண்பிகளிடத்தில் வடை வாங்கிடுவோமில்ல..

{ ரேவா } at: 2/12/2011 5:48 பிற்பகல் சொன்னது…

sakthistudycentre-கருன் said...

வடை வாங்க வந்துட்டோம்ல ..
இன்றைக்கு ஸ்கூல் லீவு எல்லா நண்பர் / நண்பிகளிடத்தில் வடை வாங்கிடுவோமில்ல..


ஹ ஹ..... உங்களுக்கே வடை...

{ sakthistudycentre-கருன் } at: 2/12/2011 5:48 பிற்பகல் சொன்னது…

மிருகங்களாக மாறும் மனிதர்களுக்கு சாட்டையடி..

{ தமிழ் உதயம் } at: 2/12/2011 6:08 பிற்பகல் சொன்னது…

கவிதைக்கான புகைப்படத்தை பார்க்கவே பயமாக உள்ளது. மனிதன், மனிதனுக்குரிய மாண்பினை பெற எவ்வளவோ மாற வேண்டியுள்ளது இன்னும்.

{ MANO நாஞ்சில் மனோ } at: 2/12/2011 6:32 பிற்பகல் சொன்னது…

அடடா வடை போச்சே......
கவிதை சூப்பர்.................

{ சி.பி.செந்தில்குமார் } at: 2/12/2011 8:57 பிற்பகல் சொன்னது…

கவிதை ரொம்ப ஆக்ரோஷமா இருக்கு.

{ சே.குமார் } at: 2/13/2011 11:16 முற்பகல் சொன்னது…

nalla irukku... vazhththukkal.

{ logu.. } at: 2/14/2011 10:59 முற்பகல் சொன்னது…

hayyo.. sameeeeee..

kolaveriya irukaingale..

{ karthikkumar } at: 2/14/2011 11:41 முற்பகல் சொன்னது…

good one sister......:))

{ siva } at: 2/14/2011 2:28 பிற்பகல் சொன்னது…

நோ நோ வடை எனக்குத்தான்
சாரி மிஸ் கொஞ்சம் லேட் ஆகிட்டு..
(நம்ம கடையில வியாபாரமே ஆகமாட்டுக்கு :)...

{ siva } at: 2/14/2011 2:30 பிற்பகல் சொன்னது…

எது சொன்னாலும்
திருந்துகிற மனிதர்கள்
மட்டுமே
திருந்துகிறார்கள்

உணர்வின் வெளிப்பாடு அருமை.

{ எவனோ ஒருவன் } at: 2/18/2011 1:32 பிற்பகல் சொன்னது…

வரிகள் ஒவ்வொன்றும் சாட்டையடி. அருமை தோழி....

{ siva } at: 2/19/2011 10:05 முற்பகல் சொன்னது…

y y y late..for the next post..

engal sangam ungalai kandikirathu..adutha post veravil eluthumarum kettukollapadukirathu..

nandri vanakkam

{ ரேவா } at: 2/19/2011 10:42 முற்பகல் சொன்னது…

sakthistudycentre-கருன் said...

மிருகங்களாக மாறும் மனிதர்களுக்கு சாட்டையடி..
உண்மை தான் நண்பரே... உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி... அதோடு காலதாமதமான என் மறுமொழிக்கும் மனிக்கவும்.... இனி தொடர்ந்து வாருங்கள்

{ ரேவா } at: 2/19/2011 10:42 முற்பகல் சொன்னது…

தமிழ் உதயம் said...

கவிதைக்கான புகைப்படத்தை பார்க்கவே பயமாக உள்ளது. மனிதன், மனிதனுக்குரிய மாண்பினை பெற எவ்வளவோ மாற வேண்டியுள்ளது இன்னும்.
உண்மை தான் நண்பரே... உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி... அதோடு காலதாமதமான என் மறுமொழிக்கும் மனிக்கவும்.... இனி தொடர்ந்து வாருங்கள்

{ ரேவா } at: 2/19/2011 10:43 முற்பகல் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

அடடா வடை போச்சே......
கவிதை சூப்பர்.................

நண்பரே... உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி... அதோடு காலதாமதமான என் மறுமொழிக்கும் மனிக்கவும்.... இனி தொடர்ந்து வாருங்கள்

{ ரேவா } at: 2/20/2011 7:40 முற்பகல் சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை ரொம்ப ஆக்ரோஷமா இருக்கு.

உள்ளக்கருத்தை உள்ளபடி சொல்ல நினைத்து ஏதோ ஒரு பயம் காரணமாய் என் வார்த்தை வடிவங்களை மாற்றினேன்... இருப்பினும் ஆக்ரோஷம் வெளிபடுகிறதே... என்ன செய்ய புலம்பத்தான் முடிகிறது சில பேரால், சிலரால்.......அதற்காகவே இந்த பதிவு உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.....இனி தொடர்ந்து வா(சியு)ருங்கள்.........அதோடு காலதாமதமான என் மறுமொழிக்கும் மனிக்கவும்....

{ ரேவா } at: 2/20/2011 7:41 முற்பகல் சொன்னது…

சே.குமார் said...

nalla irukku... vazhththukkal.
நண்பரே... உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி... அதோடு காலதாமதமான என் மறுமொழிக்கும் மனிக்கவும்.... இனி தொடர்ந்து வாருங்கள்

{ ரேவா } at: 2/20/2011 7:43 முற்பகல் சொன்னது…

logu.. said...

hayyo.. sameeeeee..

kolaveriya irukaingale..


கொலை வெறியெல்லாம் இல்லை நண்பா... இப்படி சில மனுசங்கள நாம ஆண்கவோ பெண்ணாகவோ கடந்து தான் வந்துருக்கோம் அவங்களப் பாக்கும் போது மட்டும் தோணும் மனசுல...ஹ ஹ .. அவ்வளவே.நண்பரே... உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி... அதோடு காலதாமதமான என் மறுமொழிக்கும் மனிக்கவும்.... இனி தொடர்ந்து வாருங்கள்

{ ரேவா } at: 2/20/2011 7:44 முற்பகல் சொன்னது…

karthikkumar said...

good one sister......:))

நன்றி சகோ......அதோடு காலதாமதமான என் மறுமொழிக்கும் மனிக்கவும்.... இனி தொடர்ந்து வாருங்கள்

{ ரேவா } at: 2/20/2011 7:47 முற்பகல் சொன்னது…

siva said...

நோ நோ வடை எனக்குத்தான்
சாரி மிஸ் கொஞ்சம் லேட் ஆகிட்டு..
(நம்ம கடையில வியாபாரமே ஆகமாட்டுக்கு :)...


நம்பிட்டோம் உங்க கடைல வியாபாரமே இல்லைன்னு... அட போங்க பாஸ்... ஹி ஹி வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அதோடு காலதாமதம் ஆனா என் மறுமொழிக்கு மனிக்கவும்... இனி தொடர்ந்து வரணும்... இல்லை பெஞ்சு மேல நிக்க வைப்பேன்... ஹி ஹி

{ ரேவா } at: 2/20/2011 7:52 முற்பகல் சொன்னது…

siva said...

எது சொன்னாலும்
திருந்துகிற மனிதர்கள்
மட்டுமே
திருந்துகிறார்கள்

உணர்வின் வெளிப்பாடு அருமை.

அட நம்ம பதிவுலக அரசன் அவர்களே வருக வருக.... உங்கள் வருகையால் என் தளம் பிரபலமாகட்டும்... நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்................ உங்கள் மறுமொழி ஒவ்வொன்றும் என்னை வளர்க்கின்றது.... (ஏன் இன்னும் வளராம இருகேங்கனு திருப்பி கமெண்ட் போடா கூடாது சொல்லிப் புட்டேன் )........நண்பரே... உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி... அதோடு காலதாமதமான என் மறுமொழிக்கும் மனிக்கவும்.... இனி தொடர்ந்து வாருங்கள்

{ ரேவா } at: 2/20/2011 7:56 முற்பகல் சொன்னது…

எவனோ ஒருவன் said...

வரிகள் ஒவ்வொன்றும் சாட்டையடி. அருமை தோழி....
உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே அதோடு காலதாமதமான என் மறுமொழிக்கும் மனிக்கவும்.... இனி தொடர்ந்து வாருங்கள்

{ ரேவா } at: 2/20/2011 7:56 முற்பகல் சொன்னது…

siva said...

y y y late..for the next post..

engal sangam ungalai kandikirathu..adutha post veravil eluthumarum kettukollapadukirathu..

nandri vanakkam

இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது......... ஹி ஹி மிக விரைவில் வரோம் பாருங்க

{ சௌந்தர் } at: 2/20/2011 8:31 முற்பகல் சொன்னது…

பல உண்மைகளை சொல்லும் கவிதை மீண்டும் மீண்டும் படித்து கொண்டுயிருகிறேன்

{ ரேவா } at: 2/23/2011 4:58 பிற்பகல் சொன்னது…

சௌந்தர் said...

பல உண்மைகளை சொல்லும் கவிதை மீண்டும் மீண்டும் படித்து கொண்டுயிருகிறேன்
நன்றி சௌந்தர் இனி தொடர்ந்து வாருங்கள்