உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

என் இனிய நண்பனுக்கு
* நேற்றைய பொழுதுகள் மகிழ்வாக,
இன்றைய பொழுது சுகமாக,
நாளைய பொழுது வளமாக,
 நீ மகிழ்ச்சியின் மடியில்
தவழ்ந்திட
உன் இனிய பிறந்தநாளில்
வாழ்த்துகிறேன்...

*  என் இனி(ணை)ய நட்பே..
உன்னைப்பற்றி சின்ன கவி
நீ  கேட்க     
என் செல்ல கவிதை உன்னைப்பற்றி
என்னசொல்ல இக்கவியில்..

* இதயம் இல்லா இயந்திரத்தில்
இணையம் மூலம் நான்
கண்டெடுத்த நல் இதயம்
கொண்ட உன்னைப் பற்றி சொல்லவா?

*  இல்லை
முகவரி தெரியா என் கவிதையை
என் தோல்வியாய் நீ நினைத்து
எனக்காய் பிரம்மனிடம் 
சண்டையிட்ட உன்  அன்பை
பற்றி  சொல்லவா ?

* எதைச்சொல்ல இந்நாளில்,
கரைசேரா  என் கவலைகளில்
நான் மிதக்க என்னை கரைசேற்ற
என் நட்பே...


* என் தாய்க்கு இணையாய்
நீ தரும் நட்பின் அன்புக்கு,
ஒரு தோழியாக இந்த கவிதையையே
கொடுக்க முடிகிறது உன்  பிறந்த நாள் பரிசாக...

* என் புது மலரே,
மாறாத புன்னகை  கொண்டு
நீ  பூத்திடவே
இந்த தோழியின் விருப்பம்,
நல் இயற்கையும் அதற்கு உதவும்..

* என் உயிர் நண்பா நீ இன்று
உதித்தநாளில் ,
நல் மாற்றம் ஒன்று உன்னை
தேடிவர மாறாத என் நட்பு கொண்டு
வேண்டுகிறேன்...

* நட்பால் என் உயிர் நுழைந்து
இன்று அதே நட்பால்
என் நண்பானாய்
என் உயிரில் வாழ்கின்ற
என் இனிய  நண்பனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

* குறைவற்ற உன் குணத்தோடும்,
குறையாத உன் பண்போடும்,
குறையில்லா புகலோடும்,
குறைவில்லாமல் நீ வாழ்த்திட
வேண்டுகின்றேன்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா...
happy birthday muras
 
( இந்த  ஸ்வீட் அஹ எடுத்துக்கிட்டு என் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு போங்க நண்பர்களே...)


அன்புடன்
ரேவா
20 கருத்துகள்:

Muras சொன்னது…

Thanks a lot Reva .. Happy to have such a good frnd .. thanks once again ..

karthikkumar சொன்னது…

நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ..... சரி அந்த ஸ்வீட்ட எடுக்க நானும் ட்ரை பண்றேன் முடியல என்ன பண்றது சகோ??

ரேவா சொன்னது…

Muras said...

Thanks a lot Reva .. Happy to have such a good frnd .. thanks once again ..

ஹஹஹா சபையில கட்டு சோத்த அவுக்காத... பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா

ரேவா சொன்னது…

நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ..... சரி அந்த ஸ்வீட்ட எடுக்க நானும் ட்ரை பண்றேன் முடியல என்ன பண்றது சகோ??


சகோ அது சாம்பிள் தான் நீ கடைல என் பெற சொல்லி வாங்கி சாப்டுக்கோ ஹஹஹா

மாணவன் சொன்னது…

உங்கள் அன்பு நண்பருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

ஸ்வீட்டுக்கு நன்றிங்க சகோ...

மாணவன் சொன்னது…

சகோ..இத க்ளிக் பண்ணுங்க ஒரு சர்ப்ரைஸ் :)...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என்ன ரேவா, நாளுக்கு நாள் இனிமை கூடிட்டே போகுது எழுத்தில்....

அசத்துங்க அசத்துங்க...

வேங்கை சொன்னது…

//இதயம் இல்லா இயந்திரத்தில் //

மனுசங்க கிட்டயே response இல்லை

நல்ல வரிகள்

ரேவா சொன்னது…

மாணவன் said...

உங்கள் அன்பு நண்பருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

ஸ்வீட்டுக்கு நன்றிங்க சகோ...

நன்றி சகோ... உனது வாழ்த்துக்கும் வருகைக்கும்

ரேவா சொன்னது…

மாணவன் said...

சகோ..இத க்ளிக் பண்ணுங்க ஒரு சர்ப்ரைஸ் :)...


சூப்பர் சர்ப்ரைஸ் :) நன்றி சகோ

ரேவா சொன்னது…

வேங்கை said...

//இதயம் இல்லா இயந்திரத்தில் //

மனுசங்க கிட்டயே response இல்லை

நல்ல வரிகள்..........

நன்றி வேங்கை உங்கள் புதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்...இனி தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

என்ன ரேவா, நாளுக்கு நாள் இனிமை கூடிட்டே போகுது எழுத்தில்....

அசத்துங்க அசத்துங்க...


நண்பா என்ன வச்சு காமிடி கிமீடி பண்ணலையே.. ஹ ஹ நன்றி நண்பா வருகைக்கும் வாழ்த்துக்கும்

ஜெ.ஜெ சொன்னது…

உங்கள் நண்பனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மாணவன் சொன்னது…

வணக்கம் சகோ, உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில்அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்...நன்றி

சே.குமார் சொன்னது…

உங்கள் அன்பு நண்பருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

ஆயிஷா சொன்னது…

உங்கள் அன்பு நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

sakthistudycentre-கருன் சொன்னது…

உங்கள் அன்பு நண்பருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு நன்றி..

என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை..

See,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

அருண் K நடராஜ் சொன்னது…

Pirandhanaal vazhthukkal muras.. :)

ரேவா சொன்னது…

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
ஜெ.ஜெ
சே.குமார்
ஆயிஷா
sakthistudycentre-கருன்
அருண் K நடராஜ்

பெயரில்லா சொன்னது…

good day online marketer, your blog page’s subject is definitely inspiring not to mention passionate the situation. Your main creates really are attractive. Be sure you continue monetary management succeed. Greets.