உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

அவனும் அவளும்..ரகுவும், லதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்... ரகு ஒரு பன்னாட்டு அலுவலகத்தில் உயர் அதிகாரியாக பணிபுரியும் கட்டிளம் காளை... அவனைக் கண்டதும் காதல் செய்ய சொல்லும் அவன் கண்கள்...ஒட்டுமொத்த அழகையும் இறைவன் தனக்கே படித்ததாய்  நினைத்து எப்போதும் கர்வம் குடிகொண்டிருக்கும் நெஞ்சம் அவனுக்கு... இதற்க்கு நேர் எதிர் லதா....பார்த்ததும் பணிவு கொள்ளச்செய்யும் தோற்றம்.. தமிழ் பெண்ணுக்கே உரித்தான நாணம் என எப்பொதும் அமைதி குடிகொண்ட இடமாய் காட்சி தருவாள்..

இவர்கள் காதல் துளிர்த்த இடம் ....இருவரும் அலுவலக பணி நிமித்தமாய் சந்தித்துக் கொள்ள பார்த்ததுமே  இருவருக்குள்ளும் காதல் தீ பற்றிக் கொண்டது... ஆனாலும் ரகுவும் லதாவும் காதலை வெளிப் படுத்தாது  பரஸ்பரம் நண்பர்களாய் இருந்தது வந்தனர்...

லதாவின் பொறுமையும் நேர்த்தியான செயல் திறமையும், அடங்கிப் போகும் குணமும், ரகுவுக்கு பிடித்துபோக தன் காதலை அழகான ஒரு மாலைப் பொழுதில் தென்றல் தழுவும் கடற்க்கரை அருகில் அலைகளின் சாட்சியோடு அழகான தன் காதலைச் சொல்ல...
அழகியவள் கொஞ்சம் தடுமாற பின் நாணிக் குருகி வெட்கம் தின்ன தன் காதலை அவளும் அவனிடம் சொல்ல... அவளும் அவனும் ஒன்றாகி காதல் மொழி பேச காலங்கள் உருண்டோடியது...

லதாவின் வீட்டில் திருமண பேச்சுக்கள் நடக்க, இவளும் தன் காதலைப் பற்றி தன் குடும்பத்திடம் சொல்ல,  ரகுவை சந்தித்து பேச லதாவின் குடும்பம் ஆயத்தமானது...ஒரு ஞாயிறு அன்று ரகு லதாவின் வீட்டுக்கு சென்று தன் காதலை பற்றி லதாவின் குடும்பத்திடம் பேச, ரகுவின் நான் என்ற ஆணவமும், உயர் பதிவியில் பணிபுரியும் கர்வமும் அவனிடம் அதிகமாய் இருப்பதாய் உணர்த்த லதாவின் பெற்றோர் லதாவிருக்கு பொருத்தமானவன் இவன் இல்லை என்று வேறு இடம் பார்க்க... பதறிப்போன லதா வீட்டுக்கு தெரியமால் ரகுவை மணந்தாள்...

புதுமண தம்பதியாறகிப்போன காதலர்கள், காதலையும் இளமையையும்  பருகிப் பருகி சுவைக்க, வாழ்க்கை இருவருக்கும் சுகமாய் நகர்ந்தது... தன் குடும்பத்தை பிரிந்த லதாவின் துயரும் உள்ளக் குழியில் ஒட்டி இன்று வலித்தது.. ரகுவின் குடும்பத்திருக்கு பிடித்தமாகிப் போன லதா அங்கு இன்னொரு மகளாய் பவனி வந்தாள்.. ரகுவிற்கு மட்டும் லதாவின் குடும்பத்தின் மீது இனம் தெரியா கோவம்... லதாவின் முன்னே அவள் குடும்பத்தை சாடுவது, எள்ளி நகைப்பது என அவள் பொறுமையை கட்டவிழ்த்து கொண்டிருந்தான்..

இதன் இடையே லதா வேலைக்கு செல்வதும்...  அவன் அல்லாத வேறு ஆண்கள் கூட பேசுவதும் பழகுவதும் நட்பு பாராட்டுவதும்  அவனுக்கு  பிடிக்காமல் போக பெண் என்றால் இப்படி தான் என்று ஒரு படித்த இளைஞனுக்குள்  ஒளிந்து கொண்டிருந்த பாமரனையும், ஆண் நான் என்ற கர்வத்தையும் லதா அவன் பேச்சில் உணர்ந்தாள்... நாட்கள் நகர நகர ரகுவின் ஆளுமை லதாவிடம் எரிச்சலை உருவாக்க, இருவருக்கும் பரஸ்பரம் இருந்த காதல் காணமல் போக.. சண்டையும், கோவமுமே வீட்டில் நர்த்தனம் ஆடியது... தன்னை தன் கணவன் பணிப்பெண்ணாகவும் , போகப் பொருளாகவுமே பார்ப்பதாய் உணர்ந்த லதா காதல் கணவனை விடுத்து இன்று விவாகரத்து பெற்று  தனிமையில் படிப்பின் துணையுடன்  வாழ்த்து கொண்டிருக்க, ரகு தன் காதலை பற்றியும் தன் கட்டிய மனைவியைப் பற்றியும் சிறிதும் நினைப்பில்லாமல் அலைந்து கொண்டிருக்க, முதுமையில் தன் மகனின் வாழ்கை மாற்றங்களை ரசிக்க நினைத்து, ரணங்களை மட்டும் பார்த்து வாழ்க்கையின் இறுதி காலத்தை துயரோடு அனுகிகிறார்கள் ரகு மற்றும் லதாவின் பெற்றோர்...

நண்பர்களே இந்த கதையோ இல்லா கற்பனையோ இல்லை... நாம அன்றாடம் பாக்குற விசயங்கள்ல இப்போ கணவன் மனைவி பிரிவு ஒரு முக்கிய அங்கமா வந்துருச்சு...வேக வேகமா காதலிக்கிறோம் அதே வேகத்துல சில பேரு காதல் , தாம்பத்தியம், குடும்பம் இப்படி  எது பத்தியும் நினைக்காம இளமையோட உந்துதல்ல கல்யாணமும் பண்ணிக்கிறோம்...  நம்மோட பாரம்பரியமே குடும்பமும்  குடும்பம் சூழ்ந்த நம் அமைப்பு தான் ஆனா இப்போ அதுவும் காணாம போயிட்டு  இருக்கு..

பரஸ்பரம் கணவன் மனைவிக்குள்ள இருக்கிற அன்பு, விட்டு கொடுத்தல், தட்டி கொடுத்து விட்டு பிடித்தல், உணர்வுகள புரிஞ்சு அதன் படி நடத்தல், பணிந்து போதல், புரிந்து கொள்ளுதல், இப்படி எதுவுமே நம்ம இளைய தலைமுறை கணவன் மனைவிகிட்ட இல்லாம போக காரணம் என்ன?...

இங்க யாரும் யாரையும் புரிஞ்சுக்க நினைக்கிறதில்ல, இப்போ நாம இருக்கிற சுழலும் அதுக்கு ஒரு காரணமா போயிடு இருக்கு... கணவனும் மனைவியும் பொருளாதார ரீதியில சுதந்திரமா செயல பட ஆரம்பிச்சுட்டோம்...ஒரு பொண்ணுனா இப்படிதான் வளரணும்னு சொல்லி சொல்லி வளர்க்கபடுறோம்..

ஆனா ஒரு ஆணுக்கு அப்படி எந்த கட்டுப் பாடுகளும் இல்லை...ஒரு ஆணை தான்  ஆண்கிற முறையிலேயே அவங்கள வளர விடுறோம்..எவ்ளோ தான் ஒரு ஆண் படிச்சாலும் ஒரு சிலர், பெண் நமக்கு கட்டுப்பட்டு தான் இருக்கணும்கிற எண்ணத்தோட இருக்கிறோம்... அவளுக்கும் மனசு இருக்கு அவளோட உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து அவளோட எண்ணங்களோட நாமும் ஒத்துப் போவோம்னு நினைக்கிறது கிடையாது..

சில பெண்ணுங்களும் ஆண்கள புரிஞ்சுக்க தயார இல்லை...படிப்பும், பணமும் கொடுக்கிற சுதந்திரத்த ஒரு ஆணுக்கிட அடகு வைக்க தயார இல்லை.. அதோட விளைவு நீ சொல்லி நான் கேக்கணுமா கிற நிலை..
இவ என்ன சொல்ல நான் என்ன கேக்கனு.. பிரச்சனைகள் ஆரம்பம் ஆகா விளைவு சுயலமான  விவாகரத்து தான்...

தனிப்பட்ட இவருக்குள்ள பிரச்னைக்கு விவாக ரத்து மட்டும் போதுமா?... ஏன் நம்ம யாரும் உறவுகளை புரிஞ்சுக்க தயார இல்லை... ரத்தம் வரும்படி ஒருத்தர குத்திக் கொல்லுறது மட்டும் கொலைகிடையாது... உணர்வுகளை புரிஞ்சுக்காம, உறவுக்குள்ள இருக்காம பிரிஞ்சு, நம்ம சுயநலத்தால சுத்தி இருக்கிற நம்ம உறவுகளோட உணர்வுகளை கொல்லுறதும் கொலைதான் நண்பர்களே..

குடும்பம்கிறது ஒரு அழகான ஆலயம்...அங்கு அமைதியும் சந்தோசமும் தவழ்ந்தா தான் அன்புகிற கடவுள் மூலம் குடும்ப உறவை வளப்படுத்த முடியும்... பொறுமையா எந்த விசயத்துக்கும் அறிவுப் பூர்வமா சிந்தித்து உணர்வுக்கும் கொஞ்சம் வழிவிட்டு நடந்தா பிரச்சனை  என்பது இல்லாமல் போகும் தானே நண்பர்களே...
சிந்திப்போம்  நம் குடும்ப அமைப்பை பண்பாடு மாறாமல் பேணிக்காப்போம்...   முந்தையப் பதிவு : என் காதல் தேவன் நீ

நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள்... உங்கள் வாழ்த்துக்களே எங்களை வளப்படுத்தும் 
அன்புடன் 
உங்கள் தோழி 
ரேவா 

39 நேசித்த உள்ளங்கள்:

{ MANO நாஞ்சில் மனோ } at: 2/22/2011 1:55 பிற்பகல் சொன்னது…

//குடும்பம்கிறது ஒரு அழகான ஆலயம்...அங்கு அமைதியும் சந்தோசமும் தவழ்ந்தா தான் அன்புகிற கடவுள் மூலம் குடும்ப உறவை வளப்படுத்த முடியும்... //

அருமையாக சொன்னீர்கள் ரேவா....

{ MANO நாஞ்சில் மனோ } at: 2/22/2011 1:56 பிற்பகல் சொன்னது…

ஹே வடையும் எனக்கா ஹா ஹா ஹா....

{ வேடந்தாங்கல் - கருன் } at: 2/22/2011 1:57 பிற்பகல் சொன்னது…

கவிதைகள் போலவே உங்கள் கட்டுரையும் அருமை..

ஆமா நம்மபக்கம் வருவதேயில்லையே ஏன்?

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_22.html

{ வேங்கை } at: 2/22/2011 2:15 பிற்பகல் சொன்னது…

இன்றைய சூழ்நிலைக்கும், வாழ்க்கை முறைக்கும் தேவையான பதிவு ....

வாழ்த்துக்கள்

{ மாணவன் } at: 2/22/2011 2:16 பிற்பகல் சொன்னது…

//குடும்பம்கிறது ஒரு அழகான ஆலயம்...அங்கு அமைதியும் சந்தோசமும் தவழ்ந்தா தான் அன்புகிற கடவுள் மூலம் குடும்ப உறவை வளப்படுத்த முடியும்... பொறுமையா எந்த விசயத்துக்கும் அறிவுப் பூர்வமா சிந்தித்து உணர்வுக்கும் கொஞ்சம் வழிவிட்டு நடந்தா பிரச்சனை என்பது இல்லாமல் போகும் தானே நண்பர்களே...
சித்திப்போம் நம் குடும்ப அமைப்பை பண்பாடு மாறாமல் பேணிக்காப்போம்... ///

தெளிவான பார்வையுடன் சிறப்பாக சொல்லியிருக்கீங்க அருமை சகோ,

வாழ்த்துக்கள் :))

{ siva } at: 2/22/2011 2:51 பிற்பகல் சொன்னது…

நல்ல இருக்குங்க
ம் வேகம் வேகமா வந்து வேகம் வேகமே போய்விடுகிறது நேசம்
திருமணதிற்கு பிறகு நேசித்தல் எல்லாமே போய்விடுகிறது
முன்பே நேசித்துவிடுவதால்.......

(சித்திப்போம்....??? may be mistakes......சிந்திப்போம் )..

{ siva } at: 2/22/2011 2:53 பிற்பகல் சொன்னது…

நம்மபக்கம் வருவதேயில்லையே ஏன்?
// am very busy....//

{ ananth } at: 2/22/2011 4:23 பிற்பகல் சொன்னது…

//குடும்பம்கிறது ஒரு அழகான ஆலயம்...அங்கு அமைதியும் சந்தோசமும் தவழ்ந்தா தான் அன்புகிற கடவுள் மூலம் குடும்ப உறவை வளப்படுத்த முடியும்... //

அருமையாக சொன்னீர்கள் ரேவா...

{ logu.. } at: 2/22/2011 4:40 பிற்பகல் சொன்னது…

ullen teacher...


( Kathaikum namakum rommmba distance maintain panrom )

{ ரேவா } at: 2/22/2011 5:07 பிற்பகல் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//குடும்பம்கிறது ஒரு அழகான ஆலயம்...அங்கு அமைதியும் சந்தோசமும் தவழ்ந்தா தான் அன்புகிற கடவுள் மூலம் குடும்ப உறவை வளப்படுத்த முடியும்... //

அருமையாக சொன்னீர்கள் ரேவா....

நன்றி மனோ உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்

{ ரேவா } at: 2/22/2011 5:08 பிற்பகல் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

ஹே வடையும் எனக்கா ஹா ஹா ஹா....

உங்களுக்கே வடை... ஹ ஹ வச்சுகோங்க

{ ரேவா } at: 2/22/2011 5:09 பிற்பகல் சொன்னது…

வேடந்தாங்கல் - கருன் said...

கவிதைகள் போலவே உங்கள் கட்டுரையும் அருமை..

ஆமா நம்மபக்கம் வருவதேயில்லையே ஏன்?

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_22.html


நண்பா உங்கள் ஒவ்வொரு பதிவையும் படித்து மறுமொழி இட்டுக் கொண்டு தான் இருக்கிறேன் தங்கள் தான் கவனிக்கவில்லை போலும்... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

{ ரேவா } at: 2/22/2011 5:10 பிற்பகல் சொன்னது…

வேங்கை said...

இன்றைய சூழ்நிலைக்கும், வாழ்க்கை முறைக்கும் தேவையான பதிவு ....

வாழ்த்துக்கள்

நன்றி நண்பா உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்

{ ரேவா } at: 2/22/2011 5:11 பிற்பகல் சொன்னது…

மாணவன் said...

//குடும்பம்கிறது ஒரு அழகான ஆலயம்...அங்கு அமைதியும் சந்தோசமும் தவழ்ந்தா தான் அன்புகிற கடவுள் மூலம் குடும்ப உறவை வளப்படுத்த முடியும்... பொறுமையா எந்த விசயத்துக்கும் அறிவுப் பூர்வமா சிந்தித்து உணர்வுக்கும் கொஞ்சம் வழிவிட்டு நடந்தா பிரச்சனை என்பது இல்லாமல் போகும் தானே நண்பர்களே...
சித்திப்போம் நம் குடும்ப அமைப்பை பண்பாடு மாறாமல் பேணிக்காப்போம்... ///

தெளிவான பார்வையுடன் சிறப்பாக சொல்லியிருக்கீங்க அருமை சகோ,

வாழ்த்துக்கள் :))


நன்றி சகோ உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்

{ ரேவா } at: 2/22/2011 5:13 பிற்பகல் சொன்னது…

siva said...

நல்ல இருக்குங்க
ம் வேகம் வேகமா வந்து வேகம் வேகமே போய்விடுகிறது நேசம்
திருமணதிற்கு பிறகு நேசித்தல் எல்லாமே போய்விடுகிறது
முன்பே நேசித்துவிடுவதால்.......

(சித்திப்போம்....??? may be mistakes......சிந்திப்போம் )..


உண்மைதான் நண்பா... நன்றி உங்கள் வருகைக்கும் என் தவறை சுட்டிக் காட்டியமைக்கும் நன்றி நன்றி நன்றி..

{ ரேவா } at: 2/22/2011 5:14 பிற்பகல் சொன்னது…

siva said...

நம்மபக்கம் வருவதேயில்லையே ஏன்?
// am very busy....//


ஹி ஹி ஹி...நண்பா ஏன் இந்த கொலைவெறி

{ ரேவா } at: 2/22/2011 5:15 பிற்பகல் சொன்னது…

ananth said...

//குடும்பம்கிறது ஒரு அழகான ஆலயம்...அங்கு அமைதியும் சந்தோசமும் தவழ்ந்தா தான் அன்புகிற கடவுள் மூலம் குடும்ப உறவை வளப்படுத்த முடியும்... //

அருமையாக சொன்னீர்கள் ரேவா...

நன்றி நண்பா உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்

{ ரேவா } at: 2/22/2011 5:16 பிற்பகல் சொன்னது…

logu.. said...

ullen teacher...


( Kathaikum namakum rommmba distance maintain panrom )ஹ ஹ நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ஆனா நண்பா இது கதை அல்ல நிஜம்

{ Ramani } at: 2/22/2011 7:28 பிற்பகல் சொன்னது…

கடைசி இரண்டு பத்திகளும் மிக ஆழமாக
நெஞ்சில் பதிந்து போவதற்கு
முன்னர் சொல்லிபோகிற விஷயம் மிக அவசியம்
ந்ன்றாக உண்ர்ந்து செய்திருக்கிறீர்கள்.மிக அருமை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

{ ரேவா } at: 2/22/2011 9:28 பிற்பகல் சொன்னது…

Ramani said...

கடைசி இரண்டு பத்திகளும் மிக ஆழமாக
நெஞ்சில் பதிந்து போவதற்கு
முன்னர் சொல்லிபோகிற விஷயம் மிக அவசியம்
ந்ன்றாக உண்ர்ந்து செய்திருக்கிறீர்கள்.மிக அருமை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

நன்றி திரு. ரமணி அவர்களே... உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

{ ப்ரியமுடன் வசந்த் } at: 2/22/2011 9:42 பிற்பகல் சொன்னது…

//ரத்தம் வரும்படி ஒருத்தர குத்திக் கொல்லுறது மட்டும் கொலைகிடையாது... உணர்வுகளை புரிஞ்சுக்காம, உறவுக்குள்ள இருக்காம பிரிஞ்சு, நம்ம சுயநலத்தால சுத்தி இருக்கிற நம்ம உறவுகளோட உணர்வுகளை கொல்லுறதும் கொலைதான் //

சரியா சொன்னீங்க ரேவதி

கட்டுரையும் நல்லா எழுதுறீங்க

உங்களுக்கு உபயோகமா இருக்கும்ன்னு இதுவும் :))

நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

{ ரேவா } at: 2/22/2011 9:47 பிற்பகல் சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் said...

//ரத்தம் வரும்படி ஒருத்தர குத்திக் கொல்லுறது மட்டும் கொலைகிடையாது... உணர்வுகளை புரிஞ்சுக்காம, உறவுக்குள்ள இருக்காம பிரிஞ்சு, நம்ம சுயநலத்தால சுத்தி இருக்கிற நம்ம உறவுகளோட உணர்வுகளை கொல்லுறதும் கொலைதான் //

சரியா சொன்னீங்க ரேவதி

கட்டுரையும் நல்லா எழுதுறீங்க

உங்களுக்கு உபயோகமா இருக்கும்ன்னு இதுவும் :))

நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்


ஹ ஹ ஹ பதிவுலக நண்பர்கள் எப்படியெல்லாம் எனக்கு உதவுறேங்க... முடியல அழுதுடுவேன்.... இருந்தாலும் நன்றி நன்றி நன்றி நன்றி பாஸ்.. ஹி ஹி இந்த தவா என் சைட்டுக்கு வந்ததுக்கு நன்றி தலைவா... ஹி ஹி இப்படி கூட சொல்லுவோம்...
இருந்தாலும் என் நட்பின் ஆசைப்படி நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

{ வேங்கை } at: 2/22/2011 11:05 பிற்பகல் சொன்னது…

madam giv me ur mail id

{ வேங்கை } at: 2/22/2011 11:07 பிற்பகல் சொன்னது…

madam giv me ur mail id

{ வேங்கை } at: 2/22/2011 11:26 பிற்பகல் சொன்னது…

உங்கள் மின் அஞ்சல் கிடைச்சா சந்தோசபடுவேன்

{ வைகை } at: 2/23/2011 9:46 முற்பகல் சொன்னது…

இது உண்மைக்கதை என்றால் வருத்தம்தான் மிஞ்சுகிறது!

{ karthikkumar } at: 2/23/2011 9:59 முற்பகல் சொன்னது…

லேட்டா வந்தா இதுதான் ......:))

{ ரேவா } at: 2/23/2011 10:25 முற்பகல் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
{ ரேவா } at: 2/23/2011 10:27 முற்பகல் சொன்னது…

வைகை said...

இது உண்மைக்கதை என்றால் வருத்தம்தான் மிஞ்சுகிறது!


நண்பா நம் அன்றாட வாழ்வில் இப்போது சந்திக்கின்ற விசயங்களில் இதுவும் ஒன்று தானே... நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

{ ரேவா } at: 2/23/2011 10:28 முற்பகல் சொன்னது…

karthikkumar said...

லேட்டா வந்தா இதுதான் ......:))

சகோ இப்போலாம் நீ ரொம்ப பிஸி... ஹி ஹி... வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சகோ

{ சங்கவி } at: 2/23/2011 10:50 முற்பகல் சொன்னது…

இன்று எல்லா இடங்களிலும் நடக்கும் விசயத்தை அற்புதமான சொல்டில இருக்கறீங்க...

{ ரேவா } at: 2/23/2011 4:55 பிற்பகல் சொன்னது…

சங்கவி said...

இன்று எல்லா இடங்களிலும் நடக்கும் விசயத்தை அற்புதமான சொல்டில இருக்கறீங்க..

நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

{ எவனோ ஒருவன் } at: 3/01/2011 11:23 முற்பகல் சொன்னது…

////உணர்வுகளை புரிஞ்சுக்காம, உறவுக்குள்ள இருக்காம பிரிஞ்சு, நம்ம சுயநலத்தால சுத்தி இருக்கிற நம்ம உறவுகளோட உணர்வுகளை கொல்லுறதும் கொலைதான் நண்பர்களே..////

அனைவரையும் சிந்திக்க வைக்கும் பதிவு தோழி. இது போன்ற பதிவுகளையும் உங்களிடம் இருந்து தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்....

{ ரேவா } at: 3/01/2011 3:03 பிற்பகல் சொன்னது…

எவனோ ஒருவன் said...

////உணர்வுகளை புரிஞ்சுக்காம, உறவுக்குள்ள இருக்காம பிரிஞ்சு, நம்ம சுயநலத்தால சுத்தி இருக்கிற நம்ம உறவுகளோட உணர்வுகளை கொல்லுறதும் கொலைதான் நண்பர்களே..////

அனைவரையும் சிந்திக்க வைக்கும் பதிவு தோழி. இது போன்ற பதிவுகளையும் உங்களிடம் இருந்து தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்....

கண்டிப்பாக நண்பா.. நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்

{ உண்மை } at: 3/01/2011 5:35 பிற்பகல் சொன்னது…

எப்டி இருக்கீங்க நண்பரே?

{ ரேவா } at: 3/01/2011 5:44 பிற்பகல் சொன்னது…

உண்மை said...

எப்டி இருக்கீங்க நண்பரே?


உண்மைகளோடு நலம்.... தங்கள்.... வருகைக்கும் உங்கள் மறுமொழிக்கும் நன்றி... தொடர்ந்து வாருங்கள்

{ சி.கருணாகரசு } at: 3/01/2011 6:16 பிற்பகல் சொன்னது…

உண்மைதான்.....
ஒரு நல்ல விடயத்தை கதையா சொல்லி பின் அதற்கு தீர்வும் சொல்லியிருக்கிங்க.... பாராட்டுக்கள்.

{ ரேவா } at: 3/01/2011 9:37 பிற்பகல் சொன்னது…

சி.கருணாகரசு said...

உண்மைதான்.....
ஒரு நல்ல விடயத்தை கதையா சொல்லி பின் அதற்கு தீர்வும் சொல்லியிருக்கிங்க.... பாராட்டுக்கள்.

உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி நண்பரே.. இனி தொடர்ந்து வாருங்கள்

{ baskar } at: 6/02/2011 3:07 பிற்பகல் சொன்னது…

சூப்பர் ரேவா ...அருமை இது முக்கியமான பதிவுதான் ..என் வாழ்த்துக்கள் ..நன்றி