உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

*** யார் அறிந்தார் ****


எந்தன்
சிந்தனையில் நுழைந்து
அங்கம் அதில் கலந்த
ஒன்றை
சீர்தூக்கி பார்க்க
திறன் அற்றுப்
போனோம்.....
ஆம் 
சிறகது முளைக்கும்
முன்னே வறுமையில் 
சருகாய் போன
எந்தன் பிஞ்சின் வலியை
சீர்தூக்கி பார்க்க
திறன் அற்றுப் போனோம்..


* அன்னையின் மகன் ஆசைக்காய்
தந்தையின் பெண் ஆசைக்காய்
எண்ணிக்கை கூடி,
அதனால்
எங்கள் எண்ணங்கள் கூடி
ஓடிப் போனதை யார் அறிந்தார்...

 

* மாற்றம் வரும்
எங்கள் வாழ்வில் மீறுதல் தரும்
என்று பத்திரமாய்
நான் பாதுகாத்த 
எங்கள் பாட புத்தங்களை
காலம் தின்று ஏப்பம்
விட்டதை யார் அறிந்தார்...

 

* தமிழ் வணக்கம்
பாட வேண்டிய எங்கள்
பூவிதழ்கள்,
அம்மா தாயே என்ற
பாடலையே  தேசியகீதமாய்  
பாடித் திரிவோம்
என்பதை யார் அறிந்தார்...


* பேனா பிடித்து
கரை பட வேண்டிய
பிஞ்சு விரல்கள்,
பத்துக்கு பத்து ஸ்பேனர்
பிடித்து கரை படிந்த
காரணத்தை யார் அறிந்தார்...

 

* எங்கள் இளமையை
வறுமைக்கு விலை பேசிய
விலை மாந்தர்கள் யார்
என்று யார் அறிந்தார்...

* இங்கு மறித்து போன மனிதனுக்கும்
அன்பில்லை
மனிதன் என்ற பெயரில் 
அலையும் சவங்களுக்கும்
அன்பில்லை...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
என்ற வள்ளுவரின் குறளில்
மட்டும் அன்புள்ளது
என்பதை யார் அறிந்தார்...


* எங்களை வளர விட்ட
வேர்களுக்கும்  தெரியவில்லை,
வளர இடம் தந்த
பூமிக்கும் தெரியவில்லை
விழுதுகள் வளர
பணச்சேர்க்கை தேவை என்பதை...
இதில் எங்கள் உணர்வுகளை
யார் அறிந்தார்..
 
* கடலும்
எங்கள் கண்ணீரின்
எச்சம் என்பதை யார் அறிந்தார்....
 
* இளமை இந்தியாவின்
வளமை என்று
மார்த்தட்டி சொல்பவர்களே...
இந்த இளமை வறுமையில்
வளமாய் வாழ்கிறது
என்று மார்தட்டி சொல்லுங்கள்...

இப்படியே போனால்,
இளமையில் வறுமை
தரும் முதுமை மட்டுமே
இந்தியாவின்
முதல் அடையாளமாய் போகும்....
 
 * அதற்க்கேனும்,
எங்கள் வறுமைக்கு
ஒரு வழி சொல்லுங்கள்....
உங்கள் முகமுடிக்கு
சாயம் இட்டுக்கொள்ளுங்கள்....
இந்த சடலங்களுக்கு
பிடி சாம்பலாவது
அள்ளிக்கொண்டுங்கள்....
 
 * எங்கள் இந்தியா
பண்பாடு நிறைந்த நாடு
மட்டும் அல்ல..
பணத் தேக்கம் பெருத்த
நாடு என்பதை நான் அறிவேன்
நீர் அறிவீரா?........
 
* இங்கு மறித்து போன மனிதனுக்கும்
அன்பில்லை
மனிதன் என்ற பெயரில் 
அலையும் சவங்களுக்கும்
அன்பில்லை...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
என்ற வள்ளுவரின் குறளில்
மட்டும் அன்புள்ளது
என்பதை யார் அறிந்தார்...
 
* எந்தன்
சிந்தனையில் நுழைந்து
அங்கம் அதில் கலந்த
ஒன்றை
சீர்தூக்கி பார்க்க
திறன் அற்றுப்
போனோம்.....
ஆம் 
சிறகது முளைக்கும்
முன்னே வறுமையில் 
சருகாய் போன
எந்தன் பிஞ்சின் வலியை
சீர்தூக்கி பார்க்க
திறன் அற்றுப் போனோ
ம்.. 


அன்புடன்
ரேவா 

28 கருத்துகள்:

பலே பிரபு சொன்னது…

I am Back.....................!!!!!!!!!!!!

மிகவும் அருமை தோழி.

அத்துடன் மரித்து(இறந்து) போன மனிதன் என்பது தானே சரி??.

வேங்கை சொன்னது…

வணக்கம்

\\மனிதன் என்ற பெயரில்
அலையும் சவங்களுக்கும்
அன்பில்லை...\\

இந்த வரி போதும் ......................

அருமை அருமை அருமை அருமை

தொடரவும் வாழ்த்துக்கள்

மாணவன் சொன்னது…

என்ன சொல்வதென்றே தெரியவில்லை படிக்கும்போதே மனது கனக்கிறது வரிகள் ஒவ்வொன்றிலும் வலிகளும் வேதனையான உணர்வுகளும்...

அந்த புகைப்படங்களே போதும் நாம் எப்படிபட்ட நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது

சே.குமார் சொன்னது…

Arumai... Arumai...
Photos Kavithai solkirathu.

logu.. சொன்னது…

* இங்கு மறித்து போன மனிதனுக்கும்
அன்பில்லை
மனிதன் என்ற பெயரில்
அலையும் சவங்களுக்கும்
அன்பில்லை...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
என்ற வள்ளுவரின் குறளில்
மட்டும் அன்புள்ளது
என்பதை யார் அறிந்தார்..

ரேவா சொன்னது…

பலே பிரபு said...

I am Back.....................!!!!!!!!!!!!

மிகவும் அருமை தோழி.

அத்துடன் மரித்து(இறந்து) போன மனிதன் என்பது தானே சரி??.

மீண்டும் உங்கள் வருகைக்கு நன்றி நண்பா...
மறித்து என்பதே சரி..நண்பா. உங்கள் கருத்துக்களை சுட்டிக்காட்டியதுக்கு நன்றி... இனியும் என் பிழைகளை
சுட்டிக் காட்டுங்கள்

ரேவா சொன்னது…

வேங்கை said...

வணக்கம்

\\மனிதன் என்ற பெயரில்
அலையும் சவங்களுக்கும்
அன்பில்லை...\\

இந்த வரி போதும் ......................

அருமை அருமை அருமை அருமை

தொடரவும் வாழ்த்துக்கள்

நன்றி.வேங்கை

ரேவா சொன்னது…

மாணவன் said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை படிக்கும்போதே மனது கனக்கிறது வரிகள் ஒவ்வொன்றிலும் வலிகளும் வேதனையான உணர்வுகளும்...

அந்த புகைப்படங்களே போதும் நாம் எப்படிபட்ட நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது

உண்மைதான் சகோ... இளமை வறுமையில் வளமாய் வாழ்கிறது இதுவே நிதர்சனம்... நன்றி சகோ உன் மறுமொழிக்கு

ரேவா சொன்னது…

சே.குமார் said...

Arumai... Arumai...
Photos Kavithai solkirathu.

நன்றி நண்பா...உங்கள் வருகைக்கு நன்றி சே.குமார்

ரேவா சொன்னது…

logu.. said...

* இங்கு மறித்து போன மனிதனுக்கும்
அன்பில்லை
மனிதன் என்ற பெயரில்
அலையும் சவங்களுக்கும்
அன்பில்லை...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
என்ற வள்ளுவரின் குறளில்
மட்டும் அன்புள்ளது
என்பதை யார் அறிந்தார்..

நன்றி logu. உங்கள் மறுமொழிக்கு

♔ம.தி.சுதா♔ சொன்னது…

ஃஃஃஃஃ மாற்றம் வரும்
எங்கள் வாழ்வில் மீறுதல் தரும்
என்று பத்திரமாய்
நான் பாதுகாத்த
எங்கள் பாட புத்தங்களை
காலம் தின்று ஏப்பம்
விட்டதை யார் அறிந்தார்.ஃஃஃஃஃ

அழுத்தமான வரிகள் சகோதரம்.. அத்தனையும் அருமை....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

சித்தாரா மகேஷ். சொன்னது…

இளமை இந்தியாவின்
வளமை என்று
மார்த்தட்டி சொல்பவர்களே...
இந்த இளமை வறுமையில்
வளமாய் வாழ்கிறது
என்று மார்தட்டி சொல்லுங்கள்...
அருமை அக்கா அருமை......................

நிரூபன் சொன்னது…

இளமை இந்தியாவின்
வளமை என்று
மார்த்தட்டி சொல்பவர்களே...
இந்த இளமை வறுமையில்
வளமாய் வாழ்கிறது
என்று மார்தட்டி சொல்லுங்கள்...//

வணக்கம் சகோதரி, இந்த வரிகள் தான் எல்லோரினதும் உச்சியிலும் சம்மட்டியால் அடிப்பது போன்ற உணர்வினைத் தருகிறது. பல பெரு நகரங்களுக்கும், சாலைகளிற்கும் பின்னும் மறைந்துள்ள அழுக்குகளையும், அவலங்களையும் தீர்க்க யார் தான் முயல்வார்கள். கவிதை சமுதாய அவலங்களைச் சொல்லும் வறுமையின் பாடல்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மனதை கனக்க செய்து விட்டது கவிதையும், படங்களும்....

சௌந்தர் சொன்னது…

சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை கொடுமையிலும் கொடுமை இளைமையில் வறுமை கொடுமை....உங்களுடன் இருந்து நிறைய கற்று கொள்ளவேண்டும் அக்கா....

siva சொன்னது…

Dont Know What to say..

Way of writting and Thinking and Photos are nice.

What ever Feel Also no Use....

kEEP on Rocking...

ரேவா சொன்னது…

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஃ மாற்றம் வரும்
எங்கள் வாழ்வில் மீறுதல் தரும்
என்று பத்திரமாய்
நான் பாதுகாத்த
எங்கள் பாட புத்தங்களை
காலம் தின்று ஏப்பம்
விட்டதை யார் அறிந்தார்.ஃஃஃஃஃ

அழுத்தமான வரிகள் சகோதரம்.. அத்தனையும் அருமை....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா

என் எண்ண ஓடையில் நனைய வந்த உங்கள் முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி சகோதரரே.. இனி தொடர்ந்து வாருங்கள் .

ரேவா சொன்னது…

சித்தாரா மகேஷ். said...

இளமை இந்தியாவின்
வளமை என்று
மார்த்தட்டி சொல்பவர்களே...
இந்த இளமை வறுமையில்
வளமாய் வாழ்கிறது
என்று மார்தட்டி சொல்லுங்கள்...
அருமை அக்கா அருமை......................


நன்றி சகோதரி உன் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்... இனி தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

நிரூபன் said...

இளமை இந்தியாவின்
வளமை என்று
மார்த்தட்டி சொல்பவர்களே...
இந்த இளமை வறுமையில்
வளமாய் வாழ்கிறது
என்று மார்தட்டி சொல்லுங்கள்...//

வணக்கம் சகோதரி, இந்த வரிகள் தான் எல்லோரினதும் உச்சியிலும் சம்மட்டியால் அடிப்பது போன்ற உணர்வினைத் தருகிறது. பல பெரு நகரங்களுக்கும், சாலைகளிற்கும் பின்னும் மறைந்துள்ள அழுக்குகளையும், அவலங்களையும் தீர்க்க யார் தான் முயல்வார்கள். கவிதை சமுதாய அவலங்களைச் சொல்லும் வறுமையின் பாடல்.

நன்றி சகோதரரே உங்கள் முதல் வருகைக்கும் மறுமொழிக்கும் இனி தொடர்ந்து வாருங்கள்,,,,,, உங்கள் எல்லோர் ஆதரவை நோக்கியே ரேவா கவிதைகள்....

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

மனதை கனக்க செய்து விட்டது கவிதையும், படங்களும்....

நன்றி நண்பரே... அதே மனநிலையில் தான் இந்த கவிதையையும் எழுதினேன்

ரேவா சொன்னது…

சௌந்தர் said...

சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை கொடுமையிலும் கொடுமை இளைமையில் வறுமை கொடுமை....உங்களுடன் இருந்து நிறைய கற்று கொள்ளவேண்டும் அக்கா....


ரசிகனிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டா நன்றி நன்றி .... சகோ ஒவ்வொரு வரிடமும் நாம் கற்றுக் கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது....விருதுகள் விரும்பும் ரசிகனிடமும் தான் சகோ... நன்றி வருகைக்கும் மறுமொழிக்கும்...

ரேவா சொன்னது…

siva said...

Dont Know What to say..

Way of writting and Thinking and Photos are nice.

What ever Feel Also no Use....

kEEP on Rocking...


நீ சொல்வது உண்மை தான் நண்பா.... நன்றி உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

பாட்டு ரசிகன் சொன்னது…

கவிதை ரசிக்கும் படி இருந்தது..
கொஞ்சம் பெரியதாக இருப்பது போல் இருக்கிறது..
படங்கள் அருமை..

பாட்டு ரசிகன் சொன்னது…

///எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில்
வாழ்ந்து விட்டு போவோம்/////

விவரம் அறிய...

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html

எவனோ ஒருவன் சொன்னது…

////இங்கு மறித்து போன மனிதனுக்கும்
அன்பில்லை
மனிதன் என்ற பெயரில்
அலையும் சவங்களுக்கும்
அன்பில்லை...////

அருமை தோழி. உண்மையச் சொல்லி இருக்கிறீர்கள்.

ரேவா சொன்னது…

பாட்டு ரசிகன் said...

கவிதை ரசிக்கும் படி இருந்தது..
கொஞ்சம் பெரியதாக இருப்பது போல் இருக்கிறது..
படங்கள் அருமை..


நானும் அதையே தான் உணர்ந்தேன் .... இருப்பினும் பத்திகளை நீக்க மனம் வரவில்லை பாட்டு ரசிகரே... நன்றி உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

////இங்கு மறித்து போன மனிதனுக்கும்
அன்பில்லை
மனிதன் என்ற பெயரில்
அலையும் சவங்களுக்கும்
அன்பில்லை...////

அருமை தோழி. உண்மையச் சொல்லி இருக்கிறீர்கள்.

நண்பா.... நன்றி உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

தல தளபதி சொன்னது…

ரூம் போட்டு யோசிப்பீங்களா....