உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 2 மார்ச், 2011

உன்னால் உடைந்து போனேன்...

* காதலே!!!!
பிடித்தம் இல்லாத என் வாழ்வில்
உன்னால் பிடித்தமாகிப் போன
என் விசயங்களும்
என் காதலும்
உன்னை சேரும்
வழி தெரியாமல்
உன் மொழிக்காய்  
காத்திருக்கின்றன....

* நீ இனிக்க இனிக்க பேசி
ருசி பார்த்த என் காதல்,
உன் கட்டளைக்காய்
காத்திருக்கின்றது...

* காதல் கசக்கும் மருந்தென்று
தெரியும்....ஆனால்
உயிர் பறிக்கும்
விஷம் என்பதை
உன் பிரிவில் 
தான் உணர்ந்தேன்...

* உன் மௌனம் 
கொன்று தின்ற
என் நெஞ்சத்தை,
உன் வார்த்தை கொஞ்சம்
கொஞ்சமாய் சாகடிக்கிறது...

* காலம் எல்லாம் குறையாக்
காதலோடு வாழ்வேன்
என்றாய்...
இப்படி வருத்தமே
என் வாழ்வின் குறையா
சேமிப்பாய் போகும் என்று
தெரிந்திருந்தால்
நீ காதல் பேசிய காலத்தை
காலனின் (எமன்)  துணையோடு
கொன்று குவித்திருப்பேன்...

* மூர்ச்சையாக்கிப் போன
என் ஆசைகள்
அடைக்கலம் தேடும்
அகதியாய் அலைய,
நீ மட்டும்
என் பிரியத்தை புறம்தள்ளிப்
போக காரணம் என்னடா...

* பிணம் தின்னும் கழுகுக்கும்,
என் உணர்வைதின்று,
என் காதல் கொன்ற
உனக்கும் என்ன வித்யாசம்...

* நீ பிரித்து போவாய் என்று
உனக்கு முன்பே
தெரிந்திருந்தால்,
ஏன் இந்த நலம் விசாரிப்பு,
ஏன் இந்த பகல் வேஷம்..
ஏன் இந்த எதிர்பார்ப்பு நாடகம்...
சொல் ஏன்....?...

* ஆறாத என் வலிகளை
எல்லாம், பத்திரமாய்
சேர்த்து வைத்து,
 சோகத்தின் நார் எடுத்து
உனக்கு ஒரு கவிமாலை
தொடுக்கிறேன்...

* காலம் என் காதலை
புரியவைத்தால்
சீக்கிரம் என் கழுத்தில்
மாலை இடு...
இல்லையேல் உன்னால்
தொலைந்த  என் மனதிற்கு, 
என் மரணத்திலாவது
ஒரு சொட்டு கண்ணீர் விடு...

முந்தையக் கவிதை : மழைக்காலக் காதல்  

நண்பர்களே வாழ்த்துங்கள் வளர்கின்றேன்....அப்படியே உங்கள் ஓட்டுகளை தமிழ்மணம், இன்ட்லி, உலவில் பதிவு செய்து விட்டு செல்லவும்  

அன்புடன் 
ரேவா

46 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

//காதல் கசக்கும் மருந்தென்று
தெரியும்....ஆனால்
உயிர் பறிக்கும்
விஷம் என்பதை
உன் பிரிவில்
தான் உணர்ந்தேன்...//

arumai..vaalththukkal

வேங்கை சொன்னது…

கவிதை நல்லா இருக்குங்க

நிரூபன் சொன்னது…

காதல் கசக்கும் மருந்தென்று
தெரியும்....ஆனால்
உயிர் பறிக்கும்
விஷம் என்பதை
உன் பிரிவில்
தான் உணர்ந்தேன்...//

இது நெஞ்சைத் தொடும் வரிகள். இக் கவிதையே பிரிவினைத் தந்தவரை அடைந்திருந்தால் நிச்சயம் அவரை ஒரு கணம் உறைய வைக்கும்.

நிரூபன் சொன்னது…

நீ காதல் பேசிய காலத்தை
காளனின் துணையோடு
கொன்று குவித்திருப்பேன்...//

இந்த வரி கொஞ்சம் புரியவில்லை சகோதரம்,
காளான் - Mushroom, இது எப்படிக் கொல்லும்? இது உணவில் சேர்க்கப்படும் ஒரு சிறந்த ஊட்டச் சத்து மிக்க மரக்கறி ஆச்சே?

நிரூபன் சொன்னது…

மூர்ச்சையாக்கிப் போன
என் ஆசைகள்
அடைக்கலம் தேடும்
அகதியாய் அலைய,
நீ மட்டும்
என் பிரியத்தை புறம்தள்ளிப்
போக காரணம் என்னடா.....//

இவ் வரிகள் கேள்விக் கணையா அல்லது கோபக் கணையா என்று தெரியவில்லை.

//இல்லையேல் உன்னால்
தொலைந்த என் மனதிற்கு,
என் மரணத்திலாவது
ஒரு சொட்டு கண்ணீர் விடு.//

ஒரு சிறிய வேண்டுகோள், காதலிற்காக தற்கொலை செய்வது என்பது இக் காலத்தில் சரியான முடிவல்ல. இது கவிதைக்கு வேண்டுமானல் அழகு சேர்க்கலாம். ஆனால் நிஜ வாழ்வில் இப்படியான முடிவுகளை எடுப்பது நல்லதல்ல.
எங்கள் உள் மனதில் உறுதி இருந்தால், நெஞ்சில் வைராக்கியம் இருந்தால் காதலித்து ஏமாற்றியவர் அறியும் படி நல்ல வகையில் முன்னேறி வாழ்ந்து காட்ட வேண்டும். உங்களின் உயர்வை நினைத்து அந் நபர் காலம் பூராகவும் வருத்தப்பட வேண்டும்.

உன்னால் உடைந்து போனேன் கவிதை- வலிகளுக்குள் வாழ்வைத் தொலைக்க நினைக்கும் ஒரு ஜீவனின் கோபக் கணைகளின் வெளிப்பாடு.

தோழி பிரஷா சொன்னது…

வலி நிறைந்த கவிதை...

மாணவன் சொன்னது…

என்னாச்சுங்க சகோ, திடீர்னு சோகம்... so sad

but கவிதை நல்லாருக்கு உணர்வுகளின் வரிகள் ...

மாணவன் சொன்னது…

//காலம் என் காதலை
புரியவைத்தால்
சீக்கிரம் என் கழுத்தில்
மாலை இடு...
இல்லையேல் உன்னால்
தொலைந்த என் மனதிற்கு,
என் மரணத்திலாவது
ஒரு சொட்டு கண்ணீர் விடு...///

:((((

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

காலம் என் காதலை
புரியவைத்தால்
சீக்கிரம் என் கழுத்தில்
மாலை இடு...
இல்லையேல் உன்னால்
தொலைந்த என் மனதிற்கு,
என் மரணத்திலாவது
ஒரு சொட்டு கண்ணீர் விடு...

இதயத்தை நெகிழச் செய்யும் வரிகள்! அருமை ரேவா!!

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

தமிழ் 10 தளத்தில் இணையவில்லையா? அதுகூட நமது பதிவு பிரபலமாவதுக்கு நல்ல வழி ஆயிற்றே?

ரேவா சொன்னது…

மதுரை சரவணன் said...

//காதல் கசக்கும் மருந்தென்று
தெரியும்....ஆனால்
உயிர் பறிக்கும்
விஷம் என்பதை
உன் பிரிவில்
தான் உணர்ந்தேன்...//

arumai..vaalththukkal

நன்றி மதுரை சரவணன்...உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்...இனி தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

வேங்கை said...

கவிதை நல்லா இருக்குங்க

நன்றி வேங்கை...உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்...

ரேவா சொன்னது…

நிரூபன் said...

காதல் கசக்கும் மருந்தென்று
தெரியும்....ஆனால்
உயிர் பறிக்கும்
விஷம் என்பதை
உன் பிரிவில்
தான் உணர்ந்தேன்...//

இது நெஞ்சைத் தொடும் வரிகள். இக் கவிதையே பிரிவினைத் தந்தவரை அடைந்திருந்தால் நிச்சயம் அவரை ஒரு கணம் உறைய வைக்கும்.

நண்பா ஒரு மாறுதலுக்காக இக் கவிதையை எழுதினேன்....என்னவரையே நான் இன்னும் கண்டு பிடிக்கல... இதுல பிரிவினை தந்தவர்?..... ஆனாலும் யாருக்காக இந்த கவிதை எழுதினேனோ அவர்களை சென்றால் நல்லது... நன்றி நிரூபன்...உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு

ரேவா சொன்னது…

நிரூபன் said...

நீ காதல் பேசிய காலத்தை
காளனின் துணையோடு
கொன்று குவித்திருப்பேன்...//

இந்த வரி கொஞ்சம் புரியவில்லை சகோதரம்,
காளான் - Mushroom, இது எப்படிக் கொல்லும்? இது உணவில் சேர்க்கப்படும் ஒரு சிறந்த ஊட்டச் சத்து மிக்க மரக்கறி ஆச்சே?

தவறு என்னுடையதே காலன் என்ற இடத்தில் காளான் என்று எழுதிவிட்டேன்...உங்கள் பின்னூட்டம் படித்ததும் என் பிழைகளை திருத்திக் கொண்டேன்... காலன் என்றால் எமன் என்பது உங்களுக்கு தெரியும்... இருந்தாலும் பதிவிலு இணைத்து விட்டேன்....நன்றி என் பிழைகளை சுட்டிக் காட்டியமைக்கு

ரேவா சொன்னது…

நிரூபன் said...

மூர்ச்சையாக்கிப் போன
என் ஆசைகள்
அடைக்கலம் தேடும்
அகதியாய் அலைய,
நீ மட்டும்
என் பிரியத்தை புறம்தள்ளிப்
போக காரணம் என்னடா.....//

இவ் வரிகள் கேள்விக் கணையா அல்லது கோபக் கணையா என்று தெரியவில்லை.

//இல்லையேல் உன்னால்
தொலைந்த என் மனதிற்கு,
என் மரணத்திலாவது
ஒரு சொட்டு கண்ணீர் விடு.//

ஒரு சிறிய வேண்டுகோள், காதலிற்காக தற்கொலை செய்வது என்பது இக் காலத்தில் சரியான முடிவல்ல. இது கவிதைக்கு வேண்டுமானல் அழகு சேர்க்கலாம். ஆனால் நிஜ வாழ்வில் இப்படியான முடிவுகளை எடுப்பது நல்லதல்ல.
எங்கள் உள் மனதில் உறுதி இருந்தால், நெஞ்சில் வைராக்கியம் இருந்தால் காதலித்து ஏமாற்றியவர் அறியும் படி நல்ல வகையில் முன்னேறி வாழ்ந்து காட்ட வேண்டும். உங்களின் உயர்வை நினைத்து அந் நபர் காலம் பூராகவும் வருத்தப்பட வேண்டும்.

உன்னால் உடைந்து போனேன் கவிதை- வலிகளுக்குள் வாழ்வைத் தொலைக்க நினைக்கும் ஒரு ஜீவனின் கோபக் கணைகளின் வெளிப்பாடு.

இந்த முடிவு கவிதைக்கு தான் அன்றி... எனக்கல்ல நண்பரே... வாழ்க்கையில் இதுவும் கடந்து போகும் என்பது என் எண்ணம்.....தற்கொலை எதற்கும் முடிவு அல்ல..............மிக்க மகிழ்ச்சி நிரூபன் உங்கள் பின்னூட்டத்திற்கு...

ரேவா சொன்னது…

தோழி பிரஷா said...

வலி நிறைந்த கவிதை...

நன்றி தோழி பிரஷா ...உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு

ரேவா சொன்னது…

மாணவன் said...

என்னாச்சுங்க சகோ, திடீர்னு சோகம்... so sad

but கவிதை நல்லாருக்கு உணர்வுகளின் வரிகள் ...

சும்மா ஒரு மாற்றத்துக்காக போட்டேன் சகோ... நன்றி சகோ உன் வருகைக்கு

ரேவா சொன்னது…

மாணவன் said...

//காலம் என் காதலை
புரியவைத்தால்
சீக்கிரம் என் கழுத்தில்
மாலை இடு...
இல்லையேல் உன்னால்
தொலைந்த என் மனதிற்கு,
என் மரணத்திலாவது
ஒரு சொட்டு கண்ணீர் விடு...///

:((((

ஹ ஹ :-)))))

ரேவா சொன்னது…

ஓட்ட வட நாராயணன் said...

காலம் என் காதலை
புரியவைத்தால்
சீக்கிரம் என் கழுத்தில்
மாலை இடு...
இல்லையேல் உன்னால்
தொலைந்த என் மனதிற்கு,
என் மரணத்திலாவது
ஒரு சொட்டு கண்ணீர் விடு...

இதயத்தை நெகிழச் செய்யும் வரிகள்! அருமை ரேவா!!

நன்றி நண்பா...

ரேவா சொன்னது…

ஓட்ட வட நாராயணன் said...

தமிழ் 10 தளத்தில் இணையவில்லையா? அதுகூட நமது பதிவு பிரபலமாவதுக்கு நல்ல வழி ஆயிற்றே?

அடுத்த பதிவில் இருந்து செய்து விடுகிறேன் நண்பா... நன்றி உங்கள் கருத்துரைக்கு

Kavi Tendral சொன்னது…

ஆறாத என் வலிகளை எல்லாம் பத்திரமாய் சேர்த்து வைத்து
சோகத்தின் நார் எடுத்து .......
நெஞ்சைத் தொடும் வரிகள் ! வாழ்த்துக்கள் பல .

Kavi Tendral சொன்னது…

ஆறாத என் வலிகளை எல்லாம் பத்திரமாய் சேர்த்து வைத்து
சோகத்தின் நார் எடுத்து .......
நெஞ்சைத் தொடும் வரிகள் ! வாழ்த்துக்கள் பல .

karthikkumar சொன்னது…

nice lines.........good sister:)

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

இந்தக் கவிதை மனதை வலிக்கிறபடி செய்துவிட்டது..

சே.குமார் சொன்னது…

கவிதை நல்லா இருக்கு. அருமை ரேவா.

ரேவா சொன்னது…

Kavi Tendral said...

ஆறாத என் வலிகளை எல்லாம் பத்திரமாய் சேர்த்து வைத்து
சோகத்தின் நார் எடுத்து .......
நெஞ்சைத் தொடும் வரிகள் ! வாழ்த்துக்கள் பல .

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவி தென்றல் அவர்களே.........

ரேவா சொன்னது…

karthikkumar said...

nice lines.........good sister:)

thank you brother... thank you so much.......

ரேவா சொன்னது…

வேடந்தாங்கல் - கருன் said...

இந்தக் கவிதை மனதை வலிக்கிறபடி செய்துவிட்டது..

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வேடந்தாங்கல் - கருன் அவர்களே.........

ரேவா சொன்னது…

சே.குமார் said...

கவிதை நல்லா இருக்கு. அருமை ரேவா.

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சே.குமார் அவர்களே.........

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//நீ இனிக்க இனிக்க பேசி
ருசி பார்த்த என் காதல்,
உன் கட்டளைக்காய்
காத்திருக்கின்றது//

எங்கே இருந்து வார்த்தைகளை பிடிக்கிறீங்க அசத்தலா கலக்கலா இருக்கு மக்கா....

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//நீ இனிக்க இனிக்க பேசி
ருசி பார்த்த என் காதல்,
உன் கட்டளைக்காய்
காத்திருக்கின்றது//

எங்கே இருந்து வார்த்தைகளை பிடிக்கிறீங்க அசத்தலா கலக்கலா இருக்கு மக்கா....

அட வாங்க வாங்க வாங்க மக்கா... பலமொழி பகவலன் விருது வாங்குனதுக்கு வாழ்த்துக்கள்...நீங்களே இப்படி கேட்ட நான் என்ன சொல்லுறது மக்கா... ஹி ஹி

logu.. சொன்னது…

\\காதல் கசக்கும் மருந்தென்று
தெரியும்....ஆனால்
உயிர் பறிக்கும்
விஷம் என்பதை
உன் பிரிவில்
தான் உணர்ந்தேன்...\\

Valigal..

siva சொன்னது…

present friend......

nalla erukkunga..........

ella kavithaiyum elutha muidumnu eluthreenga..

vaalthukkal...

siva சொன்னது…

எங்கே இருந்து வார்த்தைகளை பிடிக்கிறீங்க அசத்தலா கலக்கலா இருக்கு மக்கா....//

www.google .tamil transitla erunthuthan..:)

siva சொன்னது…

தெரிந்திருந்தால்
நீ காதல் பேசிய காலத்தை
காலனின் (எமன்) துணையோடு
கொன்று குவித்திருப்பேன்...
//
முடியவே முடியாது
எதிர்பார்ப்புகள் இருக்கும் வரையிலும் ஏமாற்றங்கள் இருக்கும் ..//

siva சொன்னது…

//என்னவரையே நான் இன்னும் கண்டு பிடிக்கல///

just லைக் திஸ் லைன் வெரி மச் :)

ரேவா சொன்னது…

siva said...

present friend......

nalla erukkunga..........

ella kavithaiyum elutha muidumnu eluthreenga..

vaalthukkal...

nandri siva.......

ரேவா சொன்னது…

logu.. said...

\\காதல் கசக்கும் மருந்தென்று
தெரியும்....ஆனால்
உயிர் பறிக்கும்
விஷம் என்பதை
உன் பிரிவில்
தான் உணர்ந்தேன்...\\

Valigal..

நன்றி நண்பா உங்கள் மறுமொழிக்கு

ரேவா சொன்னது…

siva said...

எங்கே இருந்து வார்த்தைகளை பிடிக்கிறீங்க அசத்தலா கலக்கலா இருக்கு மக்கா....//

www.google .tamil transitla erunthuthan..:)

ho nanba nee kuda un blog la apdithan eluthuviyaa... so sweettttttttt of you.. ha ha

ரேவா சொன்னது…

siva said...

தெரிந்திருந்தால்
நீ காதல் பேசிய காலத்தை
காலனின் (எமன்) துணையோடு
கொன்று குவித்திருப்பேன்...
//
முடியவே முடியாது
எதிர்பார்ப்புகள் இருக்கும் வரையிலும் ஏமாற்றங்கள் இருக்கும் ..//

உண்மைதான் சிவா

ரேவா சொன்னது…

siva said...

//என்னவரையே நான் இன்னும் கண்டு பிடிக்கல///

just லைக் திஸ் லைன் வெரி மச் :)
ஹி ஹி நன்றி உன் வருகைக்கு

எவனோ ஒருவன் சொன்னது…

ரேவா ரொம்ப நல்லா இருக்கு. வாசிக்கும் போது என்னையும் அறியாமல் கண் கலங்கினேன். மிக அருமை. ஏதோ என் மனச படிச்சுப் பார்த்து எனக்காக நீங்க எழுதின மாதிரி இருக்கு. மிக்க நன்றி.

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

ரேவா ரொம்ப நல்லா இருக்கு. வாசிக்கும் போது என்னையும் அறியாமல் கண் கலங்கினேன். மிக அருமை. ஏதோ என் மனச படிச்சுப் பார்த்து எனக்காக நீங்க எழுதின மாதிரி இருக்கு. மிக்க நன்றி.

உண்மைதான் நண்பா உன்னோட தளத்திற்கும் தோழி ஜெ.. ஜெ.. தளத்திற்கும் வந்த போது ஏதோ ஒரு சோகம் என்னைத் தொற்றிக் கொண்டது....அதான் விளைவே இந்த கவிதை......... தோழி ஜெ ஜெ க்கும் அவள் எண்ணம் போல அவர் விரும்பிய வாழ்க்கை அமைய கடவுளை வேண்டுகிறேன்...உனக்கும் தான்

raju சொன்னது…

Raju
* காலம் என் காதலை
புரியவைத்தால்
சீக்கிரம் என் கழுத்தில்
மாலை இடு...
இல்லையேல் உன்னால்
தொலைந்த என் மனதிற்கு,
என் மரணத்திலாவது
ஒரு சொட்டு கண்ணீர் விடு...

இதயத்தை நெகிழச் செய்யும் வரிகள்! அருமை ரேவா!!

raju சொன்னது…

Raju
நீ இனிக்க இனிக்க பேசி
ருசி பார்த்த என் காதல்,
உன் கட்டளைக்காய்
காத்திருக்கின்றது..