உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 2 மார்ச், 2011

மழைக்கால காதல்...

 ஆண் பால் 


மழைக் கம்பிகள்
அவள் தேகம் தொடும் போதெல்லாம்
ஆயிரம் ஊசிகள்
என் நெஞ்சில் தைக்கிறது...
இந்த அழகு சிலைக்குள்
முடியும் என்று தெரிந்திருந்தால்
மழையாய்  ஜனித்து, மழையாகவே
அவளில் சங்கமித்திருப்பேன்....


விடாத மழை விட்டு
தீர்ந்தாலும்,
உன்னை பார்த்ததில் இருந்து
என்னுள் இடி முழக்கம்..

மழையை ரசிக்க
நீ ஜன்னல் ஓரம் வந்து
நிற்கும் போதெல்லாம்,
ரசிக்கிறேன் மழையை
ரசிக்கும் ஒரு அழகுச் சிலையை..


அழகுப் பெண்களுக்கு
பெரும்பாலும் மழை
பிடிக்குமாமே..
பின்ன
வானமகன் போடும் 
கோலத்தை
ஏந்திக் கொள்ள 
யாருக்கு தான் பிடிக்காது...


 பெண் பால் 


கொட்டி தீர்த்து
விட்ட நிம்மதியில்,
மழைக்காற்று சலனமற்று
சில்லென்ற  காதில் சங்கீதம் பாட
என்னுள் அடைமழை
ஆரம்பம் அவனை நினைத்து...

 

தாளம் தப்பாமல்,
அவன் தேகம் தொடும்
மழை..
அதைப் பார்த்ததும்
எனக்குள் தப்பு தாளங்கள்..


இந்த மழை முடிவதில்
சம்மதம் இல்லை எனக்கு,
குடைக்குள் மழையாய்
என் அருகில் அவன்  

**********

கொஞ்சம் பெரிய கவிதை தான் பொறுத்துக்கோங்க  இருவர் உணர்வையும் பதிக்க நினைத்ததால் இவ்வளவு நீளம் ஹ ஹ....

முந்தய பதிவு : யார் அறிந்தார் 

பாஸ் அப்படியே  மறக்காம உங்கள் கருத்துக்களை இன்ட்லி உலவு தமிழ்மணம் இந்த மூன்றிலும்   இட்டுச் செல்லவும்.....

அன்புடன் 
ரேவா 


38 கருத்துகள்:

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

கவிதையின் நீளம் கூட அழகுதான்...

எவனோ ஒருவன் சொன்னது…

மழை - எனக்கு ரொம்ப பிடிக்கும் தோழி. மழையைப் பற்றி நானும் நீண்ட நாட்களாக எழுத வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், என்னால் முடியவில்லை. நீங்க கலக்கிட்டீங்க :-)

பதிவு நீளமாக இல்லை. அதற்குள் முடிந்துவிட்டதே என்று எனக்கு வருத்தமாக உள்ளது.

VELU.G சொன்னது…

கவிதை மழையில் நனைத்து விட்டீர்கள்

மிக அருமை

Harini Nathan சொன்னது…

//மழையை ரசிக்க
நீ ஜன்னல் ஓரம் வந்து
நிற்கும் போதெல்லாம்,
ரசிக்கிறேன் மழையை
ரசிக்கும் ஒரு அழகுச் சிலையை..//


அசத்திடீங்க ரேவா :)
ஒவ்வரு வரியும் அருமை

ரேவா சொன்னது…

வேடந்தாங்கல் - கருன் said...

கவிதையின் நீளம் கூட அழகுதான்...


நன்றி நண்பரே... இவ்ளோ நாளா ஆளையே காணாம்... வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

மழை - எனக்கு ரொம்ப பிடிக்கும் தோழி. மழையைப் பற்றி நானும் நீண்ட நாட்களாக எழுத வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், என்னால் முடியவில்லை. நீங்க கலக்கிட்டீங்க :-)

பதிவு நீளமாக இல்லை. அதற்குள் முடிந்துவிட்டதே என்று எனக்கு வருத்தமாக உள்ளது.

வாங்க நண்பா.... நன்றி நன்றி உங்கள் மறுமொழிக்கு...

ரேவா சொன்னது…

VELU.G said...

கவிதை மழையில் நனைத்து விட்டீர்கள்

மிக அருமை

நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் இனி தொடர்ந்து வாரு(சியு)ங்கள்

ரேவா சொன்னது…

Harini Nathan said...

//மழையை ரசிக்க
நீ ஜன்னல் ஓரம் வந்து
நிற்கும் போதெல்லாம்,
ரசிக்கிறேன் மழையை
ரசிக்கும் ஒரு அழகுச் சிலையை..//


அசத்திடீங்க ரேவா :)
ஒவ்வரு வரியும் அருமை


நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்துக்கும்...

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

BOTH VIEW ARE SUPERB.RAIN + LOVE = ALWAYS CREATE GOOD MEMORIES.....

சே.குமார் சொன்னது…

கவிதை அழகு...

போளூர் தயாநிதி சொன்னது…

//மழையை ரசிக்க
நீ ஜன்னல் ஓரம் வந்து
நிற்கும் போதெல்லாம்,
ரசிக்கிறேன் மழையை
ரசிக்கும் ஒரு அழகுச் சிலையை..//
கவிதையின் நீளம் கூட அழகுதான்...

ரேவா சொன்னது…

ஓட்ட வட நாராயணன் said...

BOTH VIEW ARE SUPERB.RAIN + LOVE = ALWAYS CREATE GOOD MEMORIES.....


மாத்தி மாத்தி யோசிக்கிறதால எங்க பக்கம்லா வர முடியல போல.. நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

சே.குமார் said...

கவிதை அழகு...

நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

போளூர் தயாநிதி said...

//மழையை ரசிக்க
நீ ஜன்னல் ஓரம் வந்து
நிற்கும் போதெல்லாம்,
ரசிக்கிறேன் மழையை
ரசிக்கும் ஒரு அழகுச் சிலையை..//
கவிதையின் நீளம் கூட அழகுதான்...

நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் இனி தொடர்ந்து வாரு(சியு)ங்கள்

நேசமுடன் ஹாசிம் சொன்னது…

ரசனை மிக்கவை நீளத்திற்கு அப்பால் பட்டவை
வாவ் என்று சொல்லத்தோன்றிய வரிகளாக அமைந்தது வாழ்த்துகள்

நன்றி தோழா...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//மழையாய் ஜனித்து, மழையாகவே
அவளில் சங்கமித்திருப்பேன்//

அருமையான வரிகள்...
படங்களும் சூப்பர்....

ரேவா சொன்னது…

நேசமுடன் ஹாசிம் said...

ரசனை மிக்கவை நீளத்திற்கு அப்பால் பட்டவை
வாவ் என்று சொல்லத்தோன்றிய வரிகளாக அமைந்தது வாழ்த்துகள்

நன்றி தோழா...

உங்கள் முதல் வருகைக்கும் உங்கள் மறுமொழிக்கும் நன்றி நேசமுடன் ஹாசிம் அவர்களே.... இனி தொடர்ந்து வாருங்கள்...
பிரியமுடன்
தோழி
ரேவா

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//மழையாய் ஜனித்து, மழையாகவே
அவளில் சங்கமித்திருப்பேன்//

அருமையான வரிகள்...
படங்களும் சூப்பர்....


நன்றி மனோ... உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

மாணவன் சொன்னது…

ஒரே அடைமழையால்ல இருக்கு காதல் வரிகளில்...

கவிதை சூப்பர் சகோ :)

மாணவன் சொன்னது…

//பாஸ் அப்படியே மறக்காம உங்கள் கருத்துக்களை இன்ட்லி உலவு தமிழ்மணம் இந்த மூன்றிலும் இட்டுச் செல்லவும்.....//

அட இதுகூட நல்லாருக்கே.... :))

Ramani சொன்னது…

நல்ல மழையில் நனைந்த சுகம்
உங்கள் கவியில் திளைக்க கிடைத்தது
படத்தால் கவிதைக்கு அழகு கூடியதா இல்லை
கவிதையால் படத்துக்கு பெருமையா என குழப்புமளவு
இரண்டுக்கும் அத்தனை பொருத்தம்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

ரேவா சொன்னது…

மாணவன் said...

ஒரே அடைமழையால்ல இருக்கு காதல் வரிகளில்...

கவிதை சூப்பர் சகோ :)

ஹ ஹ நன்றி சகோ

ரேவா சொன்னது…

மாணவன் said...

//பாஸ் அப்படியே மறக்காம உங்கள் கருத்துக்களை இன்ட்லி உலவு தமிழ்மணம் இந்த மூன்றிலும் இட்டுச் செல்லவும்.....//

அட இதுகூட நல்லாருக்கே.... :))


ஹி ஹி நன்றி நன்றி நன்றி சகோ

ரேவா சொன்னது…

Ramani said...

நல்ல மழையில் நனைந்த சுகம்
உங்கள் கவியில் திளைக்க கிடைத்தது
படத்தால் கவிதைக்கு அழகு கூடியதா இல்லை
கவிதையால் படத்துக்கு பெருமையா என குழப்புமளவு
இரண்டுக்கும் அத்தனை பொருத்தம்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி திரு. ரமணி அவர்களே

சௌந்தர் சொன்னது…

மழைக் கம்பிகள்
அவள் தேகம் தொடும் போதெல்லாம்
ஆயிரம் ஊசிகள்
என் நெஞ்சில் தைக்கிறது...
இந்த அழகு சிலைக்குள்
முடியும் என்று தெரிந்திருந்தால்
மழையாய் ஜனித்து, மழையாகவே
அவளில் சங்கமித்திருப்பேன்....///

இது சூப்பரோ சூப்பர்.....

ரசிக்கிறேன் மழையை
ரசிக்கும் ஒரு அழகுச் சிலையை..///

எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த கவிதை தான்

கவிதை சூப்பர் காதல் மழையில்...கவிதைகள்...

நிரூபன் சொன்னது…

அவள் தேகம் தொடும் போதெல்லாம்
ஆயிரம் ஊசிகள்
என் நெஞ்சில் தைக்கிறது... //

வணக்கம், ஆகா பின்னிட்டீங்க போங்க. அருமையான உவமேயம், மங்கையின் மார்பில் தவள மாந்தருக்கு உள்ள ஆசையினை கவிதை மறைமுகமாகச் சொல்கிறது.


உன்னை பார்த்ததில் இருந்து
என்னுள் இடி முழக்கம்..//

ஆஹா, ஒரு இதயத்தில் தனது மனதிற்குப் பிடித்தமானவரைப் பற்றிய நினைப்பில் தவிக்கும் போது ஏற்படும் இதயத் துடிப்பை அற்புதமாகக் காட்டியுள்ளீர்கள்.

//
ரசிக்கிறேன் மழையை
ரசிக்கும் ஒரு அழகுச் சிலையை.//

இந்த வர்ணனைகளிற்கு நிகரேதுமில்லை. கவிதையின் கனமே இதில் தான் தங்கியுள்ளது.

//
இந்த மழை முடிவதில்
சம்மதம் இல்லை எனக்கு,
குடைக்குள் மழையாய்
என் அருகில் அவன்//

இது காதல் கொண்ட உள்ளங்களின் அடி மன ஆசைகளின் வெளிப்பாடாய் அமைந்துள்ளது.
மழைக் கால காதல், வார்த்தைகள் எனும் வரண ஜாலங்களால் எங்களை நனைத்துள்ளது.

ரேவா சொன்னது…

சௌந்தர் said...

மழைக் கம்பிகள்
அவள் தேகம் தொடும் போதெல்லாம்
ஆயிரம் ஊசிகள்
என் நெஞ்சில் தைக்கிறது...
இந்த அழகு சிலைக்குள்
முடியும் என்று தெரிந்திருந்தால்
மழையாய் ஜனித்து, மழையாகவே
அவளில் சங்கமித்திருப்பேன்....///

இது சூப்பரோ சூப்பர்.....

ரசிக்கிறேன் மழையை
ரசிக்கும் ஒரு அழகுச் சிலையை..///

எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த கவிதை தான்

கவிதை சூப்பர் காதல் மழையில்...கவிதைகள்...


உன் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி சகோ

ரேவா சொன்னது…

நிரூபன் said...

அவள் தேகம் தொடும் போதெல்லாம்
ஆயிரம் ஊசிகள்
என் நெஞ்சில் தைக்கிறது... //

வணக்கம், ஆகா பின்னிட்டீங்க போங்க. அருமையான உவமேயம், மங்கையின் மார்பில் தவள மாந்தருக்கு உள்ள ஆசையினை கவிதை மறைமுகமாகச் சொல்கிறது.


உன்னை பார்த்ததில் இருந்து
என்னுள் இடி முழக்கம்..//

ஆஹா, ஒரு இதயத்தில் தனது மனதிற்குப் பிடித்தமானவரைப் பற்றிய நினைப்பில் தவிக்கும் போது ஏற்படும் இதயத் துடிப்பை அற்புதமாகக் காட்டியுள்ளீர்கள்.

//
ரசிக்கிறேன் மழையை
ரசிக்கும் ஒரு அழகுச் சிலையை.//

இந்த வர்ணனைகளிற்கு நிகரேதுமில்லை. கவிதையின் கனமே இதில் தான் தங்கியுள்ளது.

//
இந்த மழை முடிவதில்
சம்மதம் இல்லை எனக்கு,
குடைக்குள் மழையாய்
என் அருகில் அவன்//

இது காதல் கொண்ட உள்ளங்களின் அடி மன ஆசைகளின் வெளிப்பாடாய் அமைந்துள்ளது.
மழைக் கால காதல், வார்த்தைகள் எனும் வரண ஜாலங்களால் எங்களை நனைத்துள்ளது.

நிருபனுக்கு என் கவிதையை தங்கள் அதிகம் ரசித்ததை உங்கள் மறுமொழியில் நானும் ரசித்தேன்,,, இனி தொடர்ந்து வாருங்கள்

siva சொன்னது…

me the first...(sorry konjam late..)

siva சொன்னது…

அட ஆமாம் கவிதை எழுதி இருக்கீங்க.....

எனக்கு கவிதை பிடிக்கலை

வரிகள் பிடிச்சு இருக்கு

ரேவா சொன்னது…

siva said...

me the first...(sorry konjam late..)

it's ok.........thanks for coming on my site........

ரேவா சொன்னது…

siva said...

அட ஆமாம் கவிதை எழுதி இருக்கீங்க.....

எனக்கு கவிதை பிடிக்கலை

வரிகள் பிடிச்சு இருக்கு

ரொம்ப சந்தோஷம்..
எனக்கும் கமெண்ட் போட பிடிக்கல
ஆனா போடுறேன்... நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்,,,, தொடர்ந்து என் வரிகளை படிக்க வாருங்கள்

karthikkumar சொன்னது…

:)))))

Ashwin-WIN சொன்னது…

//மழையை ரசிக்க
நீ ஜன்னல் ஓரம் வந்து
நிற்கும் போதெல்லாம்,
ரசிக்கிறேன் மழையை
ரசிக்கும் ஒரு அழகுச் சிலையை.//
அழகு அழகு.. பிடித்தது..

//இந்த மழை முடிவதில்
சம்மதம் இல்லை எனக்கு,
குடைக்குள் மழையாய்
என் அருகில் அவன்//
உள்ளூறுது உணர்வுகள்...
Ashwin Arangam

ரேவா சொன்னது…

karthikkumar said...

:)))))

வாங்க சகோ.. நலமா இருக்கீங்களா?.....

ரேவா சொன்னது…

Ashwin-WIN said...

//மழையை ரசிக்க
நீ ஜன்னல் ஓரம் வந்து
நிற்கும் போதெல்லாம்,
ரசிக்கிறேன் மழையை
ரசிக்கும் ஒரு அழகுச் சிலையை.//
அழகு அழகு.. பிடித்தது..

//இந்த மழை முடிவதில்
சம்மதம் இல்லை எனக்கு,
குடைக்குள் மழையாய்
என் அருகில் அவன்//
உள்ளூறுது உணர்வுகள்...
Ashwin Arangam

நன்றி நண்பா உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்... இனி தொடர்ந்து வாருங்கள்...

logu.. சொன்னது…

செமையா இருக்கு..

ஹைய்யோடா.

ரேவா சொன்னது…

logu.. said...

செமையா இருக்கு..

ஹைய்யோடா.
நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்..