உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 11 மார்ச், 2011

கொஞ்சம் கொஞ்சம் காதல்காதல் கவிதை 
அவளுக்கு பிடிக்காதாம்,
அதனால் என்ன 
என் கவிதைகளுக்கு
உன்னைத் தான் 
பிடித்திருக்கிறதாம்...
அதனால் தான் 
எதை எழுத 
முயன்றாலும் 
கடைசியில் காதலாகவே 
வந்து நிற்கிறது....

**************

எட்டாத தூரத்தில் 
நிலவு (நீ)
இருந்ததும்,
எட்டிவிட
நினைக்கிறது,
உன்னில் தொலைந்த 
என் மனது...

**************

ஒப்பனைகள் இட்டுக்கொள்ளாமல்
நீ வந்தாலும், 
என் கவிதைகள்,
உன் அழகை ஒப்பனைகளோடு
சொல்லி விடுகிறதே!!!!

*************
  

அழகாய் மலரும்
உன் இதழ் பூக்களில்,
தேனெடுக்க 
காத்திருக்கும் காதல்
தேனீ  நான்...

*********


மழைக்கு முன் 
வரும் வானவில் போல
உனக்கு முன்
என் காதல்...
நீ கொஞ்சம் வளைந்து 
கொடு
நம் காதல்
கொண்டு அழகாய் 
உன்னைப் போல்
அழகான
ஓவியம் 
தீட்டலாம்... 

**********

அன்புடன் 
பிரியத் தோழி 
ரேவா 


முந்தையக் கவிதை : தனிமையில் நம் காதல்


26 கருத்துகள்:

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

நன்றித் தோழி மறுபடியும் ஒரு காதல் கவிதைக்கு..

Chitra சொன்னது…

அழகிய தொகுப்பு....

சித்தாரா மகேஷ். சொன்னது…

நன்றாக இருக்கிறது அக்கா........

"காதல் கவிதை
அவளுக்கு பிடிக்காதாம்,
அதனால் என்ன
என் கவிதைகளுக்கு
உன்னைத் தான்
பிடித்திருக்கிறதாம்..."

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//ஒப்பனைகள் இட்டுக்கொள்ளாமல்
நீ வந்தாலும்,
என் கவிதைகள்,
உன் அழகை ஒப்பனைகளோடு
சொல்லி விடுகிறதே!!!!////


அடடடடடா................அருமை அருமை மக்கா...

Balaji saravana சொன்னது…

//எதை எழுத
முயன்றாலும்
கடைசியில் காதலாகவே
வந்து நிற்கிறது..//

இது ரொம்பப் பிடித்திருக்கிறது ரேவா! :)

karthikkumar சொன்னது…

:)........

ரேவா சொன்னது…

வேடந்தாங்கல் - கருன் said...

நன்றித் தோழி மறுபடியும் ஒரு காதல் கவிதைக்கு..
நன்றி கருண்:-)

ரேவா சொன்னது…

Chitra said...

அழகிய தொகுப்பு....

நன்றி தோழி

ரேவா சொன்னது…

சித்தாரா மகேஷ். said...

நன்றாக இருக்கிறது அக்கா........

"காதல் கவிதை
அவளுக்கு பிடிக்காதாம்,
அதனால் என்ன
என் கவிதைகளுக்கு
உன்னைத் தான்
பிடித்திருக்கிறதாம்..."

நன்றி சித்தாரா மகேஷ்.

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//ஒப்பனைகள் இட்டுக்கொள்ளாமல்
நீ வந்தாலும்,
என் கவிதைகள்,
உன் அழகை ஒப்பனைகளோடு
சொல்லி விடுகிறதே!!!!////


அடடடடடா................அருமை அருமை மக்கா...


அடடே வாங்க வாங்க மக்கா இப்போலாம் நம்ம கடைல கூட்டம் எகிறுது போல..
வாழ்த்துக்கள் அதோடு நன்றிகளும்

ரேவா சொன்னது…

Balaji saravana said...

//எதை எழுத
முயன்றாலும்
கடைசியில் காதலாகவே
வந்து நிற்கிறது..//

இது ரொம்பப் பிடித்திருக்கிறது ரேவா! :)

நன்றி நண்பா....

ரேவா சொன்னது…

karthikkumar said...

:)........
சகோ இப்போயெல்லாம் புன்னைகையை மாட்டும் பதிலாய் கொடுத்து போகும் மர்மம் என்னவோ?....

karthikkumar சொன்னது…

@ REVATHI, AANI VERA ONNUM ILLA...:))

logu.. சொன்னது…

\\காதல் கவிதை
அவளுக்கு பிடிக்காதாம்,
அதனால் என்ன
என் கவிதைகளுக்கு
உன்னைத் தான்
பிடித்திருக்கிறதாம்...
அதனால் தான்
எதை எழுத
முயன்றாலும்
கடைசியில் காதலாகவே
வந்து நிற்கிறது....
\\

நிஜமாய் இனிக்கிறது.

siva சொன்னது…

நடக்கட்டும் நடக்கட்டும் நல்ல இருக்குங்க புது வீடு புது கவிதை புது டேம்ப்லடே கலக்குற ரேவதி....

ரேவா சொன்னது…

karthikkumar said...

@ REVATHI, AANI VERA ONNUM ILLA...:))

நான் சும்மா தான் சொன்னேன் சகோ...

ரேவா சொன்னது…

logu.. said...

\\காதல் கவிதை
அவளுக்கு பிடிக்காதாம்,
அதனால் என்ன
என் கவிதைகளுக்கு
உன்னைத் தான்
பிடித்திருக்கிறதாம்...
அதனால் தான்
எதை எழுத
முயன்றாலும்
கடைசியில் காதலாகவே
வந்து நிற்கிறது....
\\

நிஜமாய் இனிக்கிறது.

நன்றி நண்பா...இனிக்கும் உங்கள் மறுமொழிக்கு

ரேவா சொன்னது…

siva said...

நடக்கட்டும் நடக்கட்டும் நல்ல இருக்குங்க புது வீடு புது கவிதை புது டேம்ப்லடே கலக்குற ரேவதி....
ஹ ஹ நண்பா ஏதோ உங்க தயவு...

சே.குமார் சொன்னது…

Kavithai Arumai... Photos Kalakkal.

ரேவா சொன்னது…

சே.குமார் said...

Kavithai Arumai... Photos Kalakkal.

நன்றி நண்பா

நிரூபன் சொன்னது…

எட்டாத தூரத்தில்
நிலவு (நீ)
இருந்ததும்,
எட்டிவிட
நினைக்கிறது,
உன்னில் தொலைந்த
என் மனது...//

உங்களின் சிறு கவிகளுக்குள் இலக்கிய நயம் மிகு கவி இது தான். உங்கள் இதயத்தின் ஓசையினையும் சொல்லி நிற்கும் கவியும் இது தான். காதலன் எங்கு இருப்பினும் தேடிச் செல்வது காதலியின் இயல்பு என்பதனைக் கவிதையில் குறிப்பால் உயர்த்தியுள்ளீர்கள்.

காதல் கவிகள் இறுதியாகக் கூறியுள்ள வானவில்லின் வரணத் தூறல்களால் எம்மை நனைத்து விட்டன.

எவனோ ஒருவன் சொன்னது…

கலக்கல் தோழி :-)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

கலக்கல் தோழி :-)

நன்றி நண்பா உன் மறவாத வருகைக்கும், அன்பான உன் மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

நிரூபன் said...

எட்டாத தூரத்தில்
நிலவு (நீ)
இருந்ததும்,
எட்டிவிட
நினைக்கிறது,
உன்னில் தொலைந்த
என் மனது...//

உங்களின் சிறு கவிகளுக்குள் இலக்கிய நயம் மிகு கவி இது தான். உங்கள் இதயத்தின் ஓசையினையும் சொல்லி நிற்கும் கவியும் இது தான். காதலன் எங்கு இருப்பினும் தேடிச் செல்வது காதலியின் இயல்பு என்பதனைக் கவிதையில் குறிப்பால் உயர்த்தியுள்ளீர்கள்.

காதல் கவிகள் இறுதியாகக் கூறியுள்ள வானவில்லின் வரணத் தூறல்களால் எம்மை நனைத்து விட்டன.

வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி நிரூபன்...

தல தளபதி சொன்னது…

என்ன நடக்குது இங்க?!! கேக்கறதுக்கு ஆள் இல்லன்னா இப்டித்தானா மேடம்??

ரேவா சொன்னது…

தல தளபதி said...
என்ன நடக்குது இங்க?!! கேக்கறதுக்கு ஆள் இல்லன்னா இப்டித்தானா மேடம்??என்னப்பா,,, ஹி ஹி