உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 21 மார்ச், 2011

காதல் மழை...* சிறுதுளி பெரு வெள்ளமாய்....
உன் ஓரப்பார்வை
என்னுள் காதலாய்....


* நாம் சந்திக்கும்
வேளை சிறிதாயினும்...
விழி  மேடையில்
நமக்கான பரிமாற்றங்கள்
அழகாகவே அரங்கேறுகிறது
காதலாய்...


* நீ பேசாத
வார்த்தைகளையெல்லாம்
அழகாய் பேசி விடுகிறது
உன் சிரிப்பு...

* உனைக் கண்டுவிட்டால்
எனக்குள் காதல்,
காணாது தவறவிட்டால்
கனவு...
இது தான் காதலா?...


* உன் பார்வைவரம்
பெறவேண்டியே, தினமும்
தவமிருக்கிறேன்
ஜன்னலோரம் 
உன் வருகைக்கு... 
* இரவில் மாடியில்
உறங்கச் செல்லாதே
நிலவுப் பெண்ணும்
உனைக் கண்டால்
காதல் மோகம் கொள்வாள்..

* குழந்தை அதிகம்
ரசிக்கும் நான்
உன்னையும் அதிகமாய்
ரசிக்கிறேன்...என் காதல்
குழந்தையை உன்னிடம்
கண்டதால் ...

* உன் இதழ் திறந்து
கொஞ்சம் புன்னகை செய்
பிழைத்துக்கொள்ளும்
நம் காதல்..


* என் இரவு எல்லாம்
உன் நினைவு
தாலாட்டிலே உறங்கிப்
போக...என் காதல்
மட்டும் உனைச்
சேராது விழித்துக்
கொண்டிருக்கிறது.. 


* உன்னிடம், பேச வார்த்தைகள்
இருந்தும், வெளிப்படுத்த
காதல் இருந்ததும்
வெளிப்படுத்த முடியா
ஏழையாய் என் வெட்கம்...

* மரபுக்கவிதைகள்
புரியும் எனக்கு,
ஆனால். 
என் ஆண் கவிதை
உந்தன் மௌனம் தான் 
இன்னும்
புரியா மொழியாய்..

***********

முந்தையப் பதிவு  : இந்த மனுசனக் கட்டிக்கிட்டு நான் படுறபாடு இருக்கே..(நகைச்சுவை பதிவு)
 

50 கருத்துகள்:

பதிவுலகில் பாபு சொன்னது…

ம்ம்ம்.. காதல் மழைதான்.. :-)

சௌந்தர் சொன்னது…

எல்லா கவிதையும் நன்றாக இருக்கிறது

* உனைக் கண்டுவிட்டால்
எனக்குள் காதல்,
காணாது தவறவிட்டால்
கனவு...
இது தான் காதலா?...

எனக்கு பிடித்த வரிகள்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

* மரபுக்கவிதைகள்
புரியும் எனக்கு,
ஆனால்.
என் ஆண் கவிதை
உந்தன் மௌனம் தான்
இன்னும்
புரியா மொழியாய்..

அருமையான கவிதை ரேவா! ஆண்களைப் பற்றிய பெண்களின் பார்வை ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//சிறுதுளி பெரு வெள்ளமாய்....
உன் ஓரப்பார்வை
என்னுள் காதலாய்//

ஆரம்பமே அமர்களமா இருக்கே.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

// நீ பேசாத
வார்த்தைகளையெல்லாம்
அழகாய் பேசி விடுகிறது
உன் சிரிப்பு...//

ஹைக்கூ அருமை....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//உன்னிடம், பேச வார்த்தைகள்
இருந்தும், வெளிப்படுத்த
காதல் இருந்ததும்
வெளிப்படுத்த முடியா
ஏழையாய் என் வெட்கம்...//

கலக்கல்....

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

எறிமையான தமிழில் அருமையான கவிதை...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

சுவையான காதல் கவிதை வாழ்த்துக்கள் தோழி...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க அத்தனை வாக்குகளும் தந்தாயிற்று..

logu.. சொன்னது…

\\ என் இரவு எல்லாம்
உன் நினைவு
தாலாட்டிலே உறங்கிப்
போக...என் காதல்
மட்டும் உனைச்
சேராது விழித்துக்
கொண்டிருக்கிறது..\\

நிஜமாலுமே காதல் மழைதான்..

ரேவா சொன்னது…

பதிவுலகில் பாபு said...

ம்ம்ம்.. காதல் மழைதான்.. :-)

வெயில் காலம்ல அதான் மழை..நன்றி நண்பா உங்கள் வருகைக்கு :-)

ரேவா சொன்னது…

சௌந்தர் said...

எல்லா கவிதையும் நன்றாக இருக்கிறது

* உனைக் கண்டுவிட்டால்
எனக்குள் காதல்,
காணாது தவறவிட்டால்
கனவு...
இது தான் காதலா?...

எனக்கு பிடித்த வரிகள்

இம்ம் நன்றி சகோ நீ ரசித்த வரியை மறுமொழியாய் பகிர்ந்து கொண்டதற்கு..:-)

ரேவா சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

* மரபுக்கவிதைகள்
புரியும் எனக்கு,
ஆனால்.
என் ஆண் கவிதை
உந்தன் மௌனம் தான்
இன்னும்
புரியா மொழியாய்..

அருமையான கவிதை ரேவா! ஆண்களைப் பற்றிய பெண்களின் பார்வை ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!

ஹி ஹி....நன்றி நன்றி ரஜீவன்... ரொம்பநாளா உங்கள ஆளையே காணோம்... நான்கூட என்னோட முந்தையப் பதிவை பார்த்து கோவிச்சுக் கிட்டிடேங்கலோனு நினைச்சேன்...நன்றி நண்பா உங்கள் வருகைக்கு/

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//சிறுதுளி பெரு வெள்ளமாய்....
உன் ஓரப்பார்வை
என்னுள் காதலாய்//

ஆரம்பமே அமர்களமா இருக்கே.....

அட வாங்க வாங்க... வந்து ரொம்ப நாள் ஆகுதே.. பஹ்ரைன் நிலவரம் எப்படி உள்ளது நண்பா ...

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

// நீ பேசாத
வார்த்தைகளையெல்லாம்
அழகாய் பேசி விடுகிறது
உன் சிரிப்பு...//

ஹைக்கூ அருமை....

ஹி ஹி...ஹைக்கூ பதில்...நன்றி நன்றி...

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//உன்னிடம், பேச வார்த்தைகள்
இருந்தும், வெளிப்படுத்த
காதல் இருந்ததும்
வெளிப்படுத்த முடியா
ஏழையாய் என் வெட்கம்...//

கலக்கல்....

நன்றி நண்பரே உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு...தொடர்ந்து வாருங்கள்..:-)))

ரேவா சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

எறிமையான தமிழில் அருமையான கவிதை...

நன்றி வாத்தியார் நண்பரே(கருண்) உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :-)

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

சுவையான காதல் கவிதை வாழ்த்துக்கள் தோழி...

நன்றி நண்பா...உங்கள் வாழ்த்துக்கு

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க அத்தனை வாக்குகளும் தந்தாயிற்று..

ஹி ஹி உங்கள் பொன்னான வாக்குகளுக்கு நன்றி...

ரேவா சொன்னது…

logu.. said...

\\ என் இரவு எல்லாம்
உன் நினைவு
தாலாட்டிலே உறங்கிப்
போக...என் காதல்
மட்டும் உனைச்
சேராது விழித்துக்
கொண்டிருக்கிறது..\\

நிஜமாலுமே காதல் மழைதான்..

இம்ம்ம்.. நன்றி லோகு உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்..

ananth சொன்னது…

சிறுதுளி பெரு வெள்ளமாய்....
உன் ஓரப்பார்வை
என்னுள் காதலாய்....


கவிதை நல்லா இருக்குங்க..தோழி.

ananth சொன்னது…

* என் இரவு எல்லாம்
உன் நினைவு
தாலாட்டிலே உறங்கிப்
போக...என் காதல்
மட்டும் உனைச்
சேராது விழித்துக்
கொண்டிருக்கிறது..

இதுகூட நல்லா இருக்கே.. :-)

ananth சொன்னது…

* இரவில் மாடியில்
உறங்கச் செல்லாதே
நிலவுப் பெண்ணும்
உனைக் கண்டால்
காதல் மோகம் கொள்வாள்..

நிஜமாலுமே காதல் மழைதான்.

மாணவன் சொன்னது…

காதல் மழை.... நல்லா எழுதியிருக்கிங்க சகோ வாழ்த்துக்கள் :)

மயாதி சொன்னது…

alaku kavithaikal tholi

நிரூபன் சொன்னது…

* நீ பேசாத
வார்த்தைகளையெல்லாம்
அழகாய் பேசி விடுகிறது
உன் சிரிப்பு...//

புன்னகைக்கும் காதலில் ஒரு மதிப்பு இருக்கிறது என்பதற்கு இவ் வரிகளே சான்று.

அப்ப கொஞ்ச நேரம் பேசாம இருந்தாலே நிறைய விசயங்களைப் பேசின மாதிரித் தான்.

//

* உனைக் கண்டுவிட்டால்
எனக்குள் காதல்,
காணாது தவறவிட்டால்
கனவு...
இது தான் காதலா?...//

கனவிலும் காதலனைத் தரிசிக்கும் உணமையான உணர்விற்கும், உள்ளம் யாவும் காதலனை நினைத்தே எந் நேரமும் சிந்திக்கும் உணர்விற்கும் காதல் என்பார்களே, அது இது தானோ?

//

* உன் பார்வைவரம்
பெறவேண்டியே, தினமும்
தவமிருக்கிறேன்
ஜன்னலோரம்
உன் வருகைக்கு...
* இரவில் மாடியில்
உறங்கச் செல்லாதே
நிலவுப் பெண்ணும்
உனைக் கண்டால்
காதல் மோகம் கொள்வாள்..//

ஏன் அவர் அந்தளவு அழகோ?
ஒரு பெண்ணின் மன ஓட்டத்தில் ஆண் மீதான அப்பழுக்கற்ற, வெள்ளிடை மலையான காதல் உணர்வுகளை இவ் வரிகளில் காண்கிறேன்.

//
* குழந்தை அதிகம்
ரசிக்கும் நான்
உன்னையும் அதிகமாய்
ரசிக்கிறேன்...என் காதல்
குழந்தையை உன்னிடம்
கண்டதால் .....//

இதுவே இக் கவிதைக்குச் சிகரமான வரிகள்.


//
என் இரவு எல்லாம்
உன் நினைவு
தாலாட்டிலே உறங்கிப்
போக...என் காதல்
மட்டும் உனைச்
சேராது விழித்துக்
கொண்டிருக்கிறது..//

அழகான சொல்லோவியங்களும், கற்பனைக்கு முக்கியத்துவம் கொடுக்காத கவிதை என எண்ணத் தோன்றும் நிஜங்களின் வார்த்தைப் பரிமாறல்களும் இக் கவிதைகளில் தெறித்து விழுந்துள்ளன.

சேராத காதலிலும், காதலனின் நினைவுடனே ஒரு தலை மனித உள்ளமாய் வாழும் கவிதை வரிகள் கவிதைக்கு இன்னும் இன்னும் அழகு சேர்க்கின்றன.

காதல் மழை...அழகிய சொல்லோவியங்கள் எனும் வானவில் வர்ணங்களால் கற்பனை ஊற்றுக்கு முக்கியத்துவமளிக்காது நிஜ உள்ளத்து உணர்வுகளை மட்டும் பாடி நிற்கிறது.

siva சொன்னது…

ம் ப்ரெசென்ட் தோழி அட்டேண்டன்சே போட்டுக்கோங்க

siva சொன்னது…

உனைக் கண்டுவிட்டால்எனக்குள் காதல், காணாது தவறவிட்டால் கனவு... இது தான் காதலா?...

இல்லை நீங்க சீயக்ரம் லூசு ஆகா போறீங்கனு அர்த்தம்:) ஹிஹி

siva சொன்னது…

எனக்கு பிடித்த வரிகள்

///எந்த லைன் வரிக்கும்தான் அவர் படிச்சு இருக்காராம் :)//

ரேவா சொன்னது…

ananth said...

சிறுதுளி பெரு வெள்ளமாய்....
உன் ஓரப்பார்வை
என்னுள் காதலாய்....


கவிதை நல்லா இருக்குங்க..தோழி.

உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ஆனந்த்

ரேவா சொன்னது…

ananth said...

* என் இரவு எல்லாம்
உன் நினைவு
தாலாட்டிலே உறங்கிப்
போக...என் காதல்
மட்டும் உனைச்
சேராது விழித்துக்
கொண்டிருக்கிறது..

இதுகூட நல்லா இருக்கே.. :-)

ஹி ஹி நன்றி நன்றி :-):-)

ரேவா சொன்னது…

ananth said...

* இரவில் மாடியில்
உறங்கச் செல்லாதே
நிலவுப் பெண்ணும்
உனைக் கண்டால்
காதல் மோகம் கொள்வாள்..

நிஜமாலுமே காதல் மழைதான்.

இம் நன்றி நண்பரே உங்கள் மறுமொழிக்கு

ரேவா சொன்னது…

மாணவன் said...

காதல் மழை.... நல்லா எழுதியிருக்கிங்க சகோ வாழ்த்துக்கள் :)

நன்றி சகோ உன் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

மயாதி said...

alaku kavithaikal tholi

நன்றி நன்றி நன்றி மயாதி உங்கள் வருக்கைக்கும் வாழ்த்துக்கும்..:-)

karthikkumar சொன்னது…

வழக்கம்போல சூப்பர்........:))

ரேவா சொன்னது…

///புன்னகைக்கும் காதலில் ஒரு மதிப்பு இருக்கிறது என்பதற்கு இவ் வரிகளே சான்று.

அப்ப கொஞ்ச நேரம் பேசாம இருந்தாலே நிறைய விசயங்களைப் பேசின மாதிரித் தான்..///

ஹி ஹி ஆமாம் நிரூபன்.

கனவிலும் காதலனைத் தரிசிக்கும் உணமையான உணர்விற்கும், //உள்ளம் யாவும் காதலனை நினைத்தே எந் நேரமும் சிந்திக்கும் உணர்விற்கும் காதல் என்பார்களே, அது இது தானோ?//

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது..:-)

///ஏன் அவர் அந்தளவு அழகோ?
ஒரு பெண்ணின் மன ஓட்டத்தில் ஆண் மீதான அப்பழுக்கற்ற, வெள்ளிடை மலையான காதல் உணர்வுகளை இவ் வரிகளில் காண்கிறேன்.///

என் கனவு நாயகன் குறைவற்ற குணத்தோடு நிச்சயம் அழகாய் இருப்பான் நிரூபன்..

//இதுவே இக் கவிதைக்குச் சிகரமான வரிகள்.///

நன்றி நிரூபன்

///அழகான சொல்லோவியங்களும், கற்பனைக்கு முக்கியத்துவம் கொடுக்காத கவிதை என எண்ணத் தோன்றும் நிஜங்களின் வார்த்தைப் பரிமாறல்களும் இக் கவிதைகளில் தெறித்து விழுந்துள்ளன.///

///சேராத காதலிலும், காதலனின் நினைவுடனே ஒரு தலை மனித உள்ளமாய் வாழும் கவிதை வரிகள் கவிதைக்கு இன்னும் இன்னும் அழகு சேர்க்கின்றன.///

////காதல் மழை...அழகிய சொல்லோவியங்கள் எனும் வானவில் வர்ணங்களால் கற்பனை ஊற்றுக்கு முக்கியத்துவமளிக்காது நிஜ உள்ளத்து உணர்வுகளை மட்டும் பாடி நிற்கிறது.///

நன்றி நண்பா உங்கள் ஆழமான பார்வைக்கும் அழகான மறுமொழிக்கும்...:-)

ரேவா சொன்னது…

siva said...

ம் ப்ரெசென்ட் தோழி அட்டேண்டன்சே போட்டுக்கோங்க

இம்ம்ம் இப்போ தான் ப்ரெசென்ட் போட்டேன் சிவா... ஏன் இவ்ளோ லேட்...ஹி ஹி..

ரேவா சொன்னது…

siva said...

உனைக் கண்டுவிட்டால்எனக்குள் காதல், காணாது தவறவிட்டால் கனவு... இது தான் காதலா?...

இல்லை நீங்க சீயக்ரம் லூசு ஆகா போறீங்கனு அர்த்தம்:) ஹிஹி

அப்டியா, பாத்தியா இத யாருமே என்கிட்ட இதுவரைக்கும் சொல்லல சிவா... ஹி ஹி... பாம்பின் கால் பாம்பறியும் ஹி ஹி.ஹி ஹி.ஹி ஹி.

ரேவா சொன்னது…

siva said...

எனக்கு பிடித்த வரிகள்

///எந்த லைன் வரிக்கும்தான் அவர் படிச்சு இருக்காராம் :)//

எவர்...
நன்றி சிவா உன் மறுமொழிக்கும் மறக்காத உன் வருக்கைக்கும்...

ரேவா சொன்னது…

karthikkumar said...

வழக்கம்போல சூப்பர்........:))

வாங்க வாங்க ஆணி பிரதர்... வழக்கம்போல நீங்களும் லேட் அஹ.. ஹி ஹி நன்றி சகோ உன் கருத்துக்கு

Pranavam Ravikumar a.k.a. Kochuravi சொன்னது…

நல்ல சிந்தனை!

ரேவா சொன்னது…

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

நல்ல சிந்தனை!

நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் :-)

சே.குமார் சொன்னது…

காதலை சொல்லும் கவிதை அருமை...

விக்கி உலகம் சொன்னது…

சகோ கவித அருமையா இருக்கு நன்றி

டெஸ்ட் சொன்னது…

ரேவா உங்கள் கவிதைகள் அருமை.
வாழ்த்துக்கள்.

http://niroodai.blogspot.com

ரேவா சொன்னது…

சே.குமார் said...

காதலை சொல்லும் கவிதை அருமை...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சே.குமார் அவர்களே...

ரேவா சொன்னது…

விக்கி உலகம் said...

சகோ கவித அருமையா இருக்கு நன்றி..

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...:-)

ரேவா சொன்னது…

டெஸ்ட் said...

ரேவா உங்கள் கவிதைகள் அருமை.
வாழ்த்துக்கள்.

http://niroodai.blogspot.com

நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்... தொடர்ந்து வாருங்கள்

எவனோ ஒருவன் சொன்னது…

////* நீ பேசாத
வார்த்தைகளையெல்லாம்
அழகாய் பேசி விடுகிறது
உன் சிரிப்பு...

* உனைக் கண்டுவிட்டால்
எனக்குள் காதல்,
காணாது தவறவிட்டால்
கனவு...
இது தான் காதலா?...////

நான் ரசித்த வரிகள் தோழி. 'நிலவுப் பெண்ணும் காதல் கொள்வாள்' அருமை தோழி. உங்களவர் மிகவும் கொடுத்து வைத்தவர். உங்கள் பதிவுகளைப் பார்க்கும் பொழுது அவர் செய்த புண்ணியங்களை யோசித்துப் பார்ப்பார் இப்படி ஒரு மனைவி அமைந்ததற்கு. வாழ்த்துக்கள் தோழி :-)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

////* நீ பேசாத
வார்த்தைகளையெல்லாம்
அழகாய் பேசி விடுகிறது
உன் சிரிப்பு...

* உனைக் கண்டுவிட்டால்
எனக்குள் காதல்,
காணாது தவறவிட்டால்
கனவு...
இது தான் காதலா?...////

நான் ரசித்த வரிகள் தோழி. 'நிலவுப் பெண்ணும் காதல் கொள்வாள்' அருமை தோழி. உங்களவர் மிகவும் கொடுத்து வைத்தவர். உங்கள் பதிவுகளைப் பார்க்கும் பொழுது அவர் செய்த புண்ணியங்களை யோசித்துப் பார்ப்பார் இப்படி ஒரு மனைவி அமைந்ததற்கு. வாழ்த்துக்கள் தோழி :-)

என்ன பதில் பின்னூட்டம் இட என்று தெரியவில்லை... நெகிழ்ச்சியாக உள்ளது..நன்றி நண்பரே உங்கள் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு...யார் கொடுத்து வைத்திருக்கோம் என்பதை காலம் எங்களுக்கு கொடுக்கும் வாழ்க்கையில் தான் உள்ளது... ஆனாலும் உங்கள் மறுமொழி மகிழ்ச்சியை தந்தது...உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா