வணக்கம் மக்கா( சும்மா நம்ம பலமொழி பகலவன் கிட்ட இருந்து சுட்டது ஹி ஹி )...எல்லாரும் எப்படி இருக்கீங்க.. என்னடா இவ திடிருன்னு நலம் விசாரிக்கிரானு பாத்திங்களா... அட ஆமாங்க கொஞ்ச நாளா நாமா யாரும் நலமா இல்லையோனு எனக்கு ஒரு டவுட்.... நாமா நல்லாத் தானே இருக்கோம் இவ என்ன பதிவு போடணுமுன்னு நம்மள எல்லாம் சீக்காளியா ஆக்குரானு நினைக்காதிங்க... உடல் ஆரோக்கியம் மட்டும் ஆரோக்கியம் இல்ல நம்ம சமூக ஆரோக்கியமும் நமக்கு அவசியம் தானே.... அதன் படி பாத்தா நம்ம சமூகம் ஆரோக்கியமா இல்ல.... அரசியல் தொடங்கி அன்றாட அரிசியியல் வரைக்கும் நம் ஆரோக்கியம் யாரோ ஒருத்தரால சுரண்ட படுறது உண்மை தானே....
சரி விசயத்துக்கு வரேன்... இன்னைக்கு உலகம் ரொம்ப அவசர உலகமா போயிகிட்டு இருக்கு.... யாருக்கும் எதப் பத்தியும் சிந்திக்க நேரம் இல்ல... எது சரி எது தப்புன்னு தீர்மானிக்க தெரியல... (ஹலோ இது டூ மச் அஹ இல்ல னு நீங்க சொல்லுறது எங்களுக்கும் கேக்குது)....
நம்ம உலகம் விளம்பர உலகமா போயிடுச்சு.... கொழந்த பொறப்புல இருந்து காதல், கல்யாணம், கல்யாணத்துக்கு தேவையான ஆடை அணிகலன் முகப் பூச்சு..என .நமா அன்றாடம் உபயோக்கிகிற அத்யாவிசயப் பொருள் எல்லாத்துக்கும் விளம்பரம்....இதுல அணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியான விளம்பரங்கள் நெறைய , இப்படி A TO Z எல்லாத்துக்கும் நமக்கு விளம்பரத்தோட துணை தேவையா இருக்கு....
டிரஸ் வாங்கனுமா அதுக்கு ஒரு விளம்பரம்...வீடுகட்ட தரமான சிமெண்ட் வேணுமா அதுக்கு ஒரு விளம்பரம்...விளம்பரம் விளம்பரம் விளம்பரம்..இந்த கொடுமை எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு இருந்தாலும் இப்போ வருற விளம்பரம் இருக்கே ஐயோ..முடியல சாமி...
அது எப்டிங்க ஒரு பையன் சென்ட் அஹ ஸ்ப்ரே பண்ணதும் பொண்ணுங்கலாம் டபுக்கு டபுக்குனு வந்து அவன் மேல ஒட்டிக்கிராங்களாம்...கேட்டா பொண்ணுங்கள கவருற சக்தி அந்த வாசனைக்கு இருக்காம்... அதுக்காக இப்படியா, இதுக்கு எந்த கண்டனமும் இதுவரைக்கும் எழுந்த மாதிரி தெரியல... இதுல புதுசு கண்ணா புதுசுனு பிளேவர் வந்துகிட்டே இருக்கு...சரி இன்னொரு கொடுமை என்னன்னா நேத்து பொழுது போகலன்னு டிவி அஹ ஆன் பண்ணேன் மக்கா... ஒரு பொண்ணு ஆண்கள் உபயோகிக்கும் பைக் அஹ ஓட்டிக்கிட்டு வந்துச்சு.. ஒரு பையன் அவளுக்காக வெயிட் பண்றான்,, இவ போலாமான்னு கேட்க அவன் சோகமான முகத்தோட அவன் வீட்ட பாக்குறான்...
இந்த அம்மணி ஏன் கவலைப்படுற நாம ஓடிப் போயி கல்யாணம் பண்ணிக்கிட்டு, வரவேற்ப்புக்கு உங்க அம்மா அப்பாவா கூப்பிடலாம்னு சொல்லுது, பையன் அப்படியும் டவுட் அஹ இருக்க, இந்த அம்மணி அவர் கைமேல் இவங்க கை வச்ச உடனே இந்த அம்மிணி போட்டிருக்கிற பவுடர் வாசனைல மயங்கி பையன் பொண்ணு பின்னாடி வண்டில ஒக்காந்து போயிட்டான்....கேட்டா வாழ்க்கைக்கு நல்ல துவக்கம் வேணும்னா நறுமணம் கவழும் இந்த பவுடர் யூஸ் பண்ணுங்கனு.முடிச்சிட்டாங்க.. என்ன ஒரு தீம்ல... ச்ச யோசிச்சவனுக்கு விருது கொடுக்கனும்யா... கொடுமை கொடுமைன்னு தலைல தான் அடிச்சுக்கணும்... கேக்குறவன் கேணைனா கேப்பைல ஏதோ வடியுமா?....
இதுவா விளம்பரம்... ஒரு பொருளோட தரம் நல்லா இருந்தா, விளம்பரம்கூட தேவை இல்ல... அப்படியே விளம்பரம் தேவையானதா இருந்தா பொருளைப் பத்தி சொன்னாவே போதுமே...நிக்க கூட நேரம் இல்லாத இந்த நேரத்துல ஒரு புதிய பொருள் பத்தி நமக்கு தெளிவான எண்ணம் தேவை தான், அதுக்கு விளம்பரங்கள் அவசியம் தான்... அதுக்காக நானே ராஜா நானே மந்திரி மாதிரி எதையும் விளம்பர தயாரிப்பு நிறுவங்கள் செய்யக் கூடாதே..
ஒரு குழந்தை ஆரோக்கியமா இந்த உலகத்தில வாழனும்னா முதல்ல தாயோட அரவணைப்பு அவசியம் அப்போதான் அந்த குழந்த நல்ல படியா வளர முடியும்...சோ நம்ம வாழ்க்கைக்கே அன்புங்கிற கரு தேவைப்படுது...நம்மள நம்ம தாய் நம்ம வளர்த்தது போக சமுதாயம் தான் நம்மள வளர்கிறது..அப்படிப்பட்ட . நம்ம சமுதாயத்தின் நிலைகளை இன்னொரு நிழலாய் தொடரும் மீடியா கொஞ்சம் யோசிச்சு எல்லாத்தையும் செஞ்சா நல்லா இருக்கும்....மீடியாக்களும், மீடியா வழியா ஒய்யார பவனி வரும் விளம்பர நிகழ்சிகளும் நல்ல கருவை தரமான முறைல சொன்னா எல்லாருக்கும் நல்லா இருக்கும்... வளர தலைமுறைய நம்ம பாதை மாறமா கொண்டு போகமுடியும்...நீங்க என்ன சொல்லறேங்க நண்பர்களே....
கடைசில நம்ம கமல் சார் ஸ்டைல்ல மீடியாக்களும், மீடியாக்கள் கொடுக்கிற விளம்பரங்களும் நமக்கு நல்லது செய்யலன்னு சொல்லல.... செஞ்சா நல்லா இருக்கும்னு சொல்லுறேன்....
முந்தய பதிவு: உன்னால் உடைந்து போனேன்
உங்கள் கருத்துக்களை மறக்காமல் இன்ட்லி, உலவு, தமிழ் மணத்தில் இட்டுச் செல்லவும்.... வாழ்த்துங்கள் வளர்கின்றோம்...
23 கருத்துகள்:
மீடியாவை கட்டுபடுத்த வேண்டிய அவசியத்தை இன்று எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் என்று தான் தெரியவில்லை
ஒருவேளை ஓடிப்போகிறவங்க எண்ணிக்கை
அதிகமாயிட்டு வருதோ?
அவங்க வாங்கினாலே போதும்னு நினைகிறாங்களோ?
நாம கூட அந்த விளம்பரத்தை பதிவிலே போட்டு
ஓடிபோறவங்க அவசியம் வாங்கவேண்டியதுன்னு
போட்டாலாவது வாங்குகிறவங்களுக்கு கொஞ்சம் உறைக்குமோ ?
மிக அருமை.தொடர வாழ்த்துக்கள்
நல்லா எழுதியிருக்கீங்க சகோ விழிப்புணர்வு பதிவு :)
//கடைசில நம்ம கமல் சார் ஸ்டைல்ல மீடியாக்களும், மீடியாக்கள் கொடுக்கிற விளம்பரங்களும் நமக்கு நல்லது செய்யலன்னு சொல்லல.... செஞ்சா நல்லா இருக்கும்னு சொல்லுறேன்.... ///
புரிஞ்சுடுச்சு புரிஞ்சுடுச்சு... :))
கடைசியா என்ன சொல்ல ....... நல்லது நடக்கலைனாலும் பரவால கெட்டது நடக்காம இருந்தா சரி ... ஏனுங்க இந்த விளம்பரத்துக்கு சென்சார் இருக்கா ? இல்லையா ?
நீங்கள் பதிவில் குறிப்பிட்டதை விட இன்னும் மோசமான விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் உள்ளன. எல்லாமே ஒரு உத்தி தான். அட ஒரு உதாரணத்திற்கு சொல்லுறேன் பாருங்கோ, fair and lovely fairness cream வாங்கி பூசினால் பதினான்கு நாட்களில் முகம் பிரகாசமடையும் என்று சொல்லிச் சொல்லியே இன்று பல வருடங்களை ஓட்டுறாங்க. அதனை மக்களும் வாங்கி பாவிக்கிறாங்க. இந்த மாதிரி எத்தனையோ விளம்பரங்கள் தமது உத்திகளின் மூலம் நுகர்வோரைக் கவர்கின்றன. ஆக ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருப்பார்கள் என்பது மட்டும் மெய்யாகும். உங்களின் அலசல் அருமை. இன்னும் நிறைய விடயங்களையும், சமூகத்தினைச் சீரழிக்கும் வியூவில் உள்ள விளம்பரங்களையும் அலசியிருக்கலாம்.
அதாவது நீங்க கவிதை எழுதினா நல்ல இருக்கும்
எழுதம இருந்தால் இன்னும் நல்ல இருக்கும் அப்டின்னு சொல்லுறீங்களா?
இதவிட கதை எழுதுங்க
உங்க திறமைக்கு நீங்க எங்கோ போகபோறீங்க
வாழ்த்துக்கள்
கலக்கல் போஸ்ட்
பின் குறிப்பு (ரேவதி சொன்ன மாதிரி கமெண்ட் போட்டுவிட்டேன் )
ஜீவன்சிவம் said...
மீடியாவை கட்டுபடுத்த வேண்டிய அவசியத்தை இன்று எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் என்று தான் தெரியவில்லை..........
நீங்கள் சொல்வது உண்மை தான் ஜீவன்சிவம்அவர்களே... முதல் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி...
Ramani said...
ஒருவேளை ஓடிப்போகிறவங்க எண்ணிக்கை
அதிகமாயிட்டு வருதோ?
அவங்க வாங்கினாலே போதும்னு நினைகிறாங்களோ?
நாம கூட அந்த விளம்பரத்தை பதிவிலே போட்டு
ஓடிபோறவங்க அவசியம் வாங்கவேண்டியதுன்னு
போட்டாலாவது வாங்குகிறவங்களுக்கு கொஞ்சம் உறைக்குமோ ?
மிக அருமை.தொடர வாழ்த்துக்கள்
ஹ ஹ இது நல்ல ஐடியா வா இருக்கே... அடுத்த பதிவில முயற்சி செய்யலாம்.... நன்றி திரு. ரமணிஅவர்களே...
மாணவன் said...
நல்லா எழுதியிருக்கீங்க சகோ விழிப்புணர்வு பதிவு :)
//கடைசில நம்ம கமல் சார் ஸ்டைல்ல மீடியாக்களும், மீடியாக்கள் கொடுக்கிற விளம்பரங்களும் நமக்கு நல்லது செய்யலன்னு சொல்லல.... செஞ்சா நல்லா இருக்கும்னு சொல்லுறேன்.... ///
புரிஞ்சுடுச்சு புரிஞ்சுடுச்சு... :))
ஹ ஹ எனக்கு தெரியும் சகோ உனக்கு புரியும்னு... நன்றி சகோ உன் மறுமொழிக்கு
வேங்கை said...
கடைசியா என்ன சொல்ல ....... நல்லது நடக்கலைனாலும் பரவால கெட்டது நடக்காம இருந்தா சரி ... ஏனுங்க இந்த விளம்பரத்துக்கு சென்சார் இருக்கா ? இல்லையா ?
தெரியலையே... இருந்திருந்தா இந்த கொடுமையெல்லாம் நடக்குமா
நிரூபன் said...
நீங்கள் பதிவில் குறிப்பிட்டதை விட இன்னும் மோசமான விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் உள்ளன. எல்லாமே ஒரு உத்தி தான். அட ஒரு உதாரணத்திற்கு சொல்லுறேன் பாருங்கோ, fair and lovely fairness cream வாங்கி பூசினால் பதினான்கு நாட்களில் முகம் பிரகாசமடையும் என்று சொல்லிச் சொல்லியே இன்று பல வருடங்களை ஓட்டுறாங்க. அதனை மக்களும் வாங்கி பாவிக்கிறாங்க. இந்த மாதிரி எத்தனையோ விளம்பரங்கள் தமது உத்திகளின் மூலம் நுகர்வோரைக் கவர்கின்றன. ஆக ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருப்பார்கள் என்பது மட்டும் மெய்யாகும். உங்களின் அலசல் அருமை. இன்னும் நிறைய விடயங்களையும், சமூகத்தினைச் சீரழிக்கும் வியூவில் உள்ள விளம்பரங்களையும் அலசியிருக்கலாம்.
உண்மைதான் நீருபன் ஆனால் நீங்கள் சொன்னா விளம்பரத்திற்கும், நான் குறிப்பிட விளம்பரத்திற்கும் நெறைய வித்யாசம் இருக்கிறது... பொய்ய உண்மையா காமிக்கிறது உண்மை தெரியும் போது முடிவுக்கு வந்துரும்... ஆனா இந்த விளம்பரம் அளவுக்கு மீறின விஷயம் தானே...ஆனாலும் நீங்கள் சொன்ன மாதிரி இன்னும் கொஞ்சம் அலசி இருக்கலாம் தான்.. நன்றி நிரூபன் உங்கள் உள்ளக் கருத்தை மறுமொழியாய் பகிர்ந்து கொண்டதற்கு
siva said...
அதாவது நீங்க கவிதை எழுதினா நல்ல இருக்கும்
எழுதம இருந்தால் இன்னும் நல்ல இருக்கும் அப்டின்னு சொல்லுறீங்களா?
இதவிட கதை எழுதுங்க
உங்க திறமைக்கு நீங்க எங்கோ போகபோறீங்க
வாழ்த்துக்கள்
கலக்கல் போஸ்ட்
பின் குறிப்பு (ரேவதி சொன்ன மாதிரி கமெண்ட் போட்டுவிட்டேன் )
ஹி ஹி சிவா நீ நான் கொடுத்த பேமண்ட்க்கு மேல பேசுற.... கொடுத்த காசுக்கு மேல பேசுறவங்க கமெண்ட்லாம் தடை செய்யப்படும்.... எப்புடி... நாங்களும் யோசிப்போம்... சிவா நீ பேசாம அரசியல் பக்கம் போகலாம்... ஏன்னா கொடுத்த காசுக்கு மேல பேசுறவங்க தான் அவங்களுக்கு தேவையாம்... நன்றி நண்பா உன் மறுமொழிக்கு
நீ நான் கொடுத்த பேமண்ட்க்கு மேல பேசுற.... கொடுத்த காசுக்கு மேல பேசுறவங்க கமெண்ட்லாம் தடை செய்யப்படும்.... எப்புடி.///nalla ellai..payment kodukkavey ellai..sari blog pakkam varala...
சிவா நீ பேசாம அரசியல் பக்கம் போகலாம்... //
no no no...am the prime minister of my blog...very soon for india...
மாணவன் said...
நல்லா எழுதியிருக்கீங்க சகோ விழிப்புணர்வு பதிவு :)
புரிஞ்சுடுச்சு புரிஞ்சுடுச்சு... :))///
என்கிட்ட சாட்ல வந்து ரேவதி எழுதினது புரியலைன்னு சொன்ன?.....:))
இப்போ வரும் விளம்பரங்களுக்கு கண்டிப்பாக தணிக்கை அவசியம் போல........ நல்லா எழுதிருக்கீங்க...:))
வாழ்க்கையில் மூன்றே நிமிடங்களில் சிரிக்கலாம்... உடனே வாங்க...
இதுவும் ஒரு விளம்பர உத்திதான்.

வாழ்த்துக்கள் நண்பா....
karthikkumar said...
மாணவன் said...
நல்லா எழுதியிருக்கீங்க சகோ விழிப்புணர்வு பதிவு :)
புரிஞ்சுடுச்சு புரிஞ்சுடுச்சு... :))///
என்கிட்ட சாட்ல வந்து ரேவதி எழுதினது புரியலைன்னு சொன்ன?.....:))
ஹி ஹி சகோ நீயுமா...
karthikkumar said...
இப்போ வரும் விளம்பரங்களுக்கு கண்டிப்பாக தணிக்கை அவசியம் போல........ நல்லா எழுதிருக்கீங்க...:))
கண்டிப்பா அவசியம் தான் சகோ... நன்றி உன் மறுமொழிக்கு
"குறட்டை " புலி said...
வாழ்க்கையில் மூன்றே நிமிடங்களில் சிரிக்கலாம்... உடனே வாங்க...
இதுவும் ஒரு விளம்பர உத்திதான்.
ஹ ஹ...
யோசிச்சவனுக்கு விருது கொடுக்கனும்யா... //
பதிவு போடவருக்கும் சேர்த்தே கொடுக்கலாம்.
இருக்கிறதிலேயே மகா மட்டமான விளம்பரம் "லீவைஸ் ஜீன்ஸ்" விளம்பரம் தான்... (இருப்பதிலேயே சூபர்ப் குவாலிட்டி ஜீன்ஸ்'ம் அதுதான்..)
பார்த்திருக்கிறிர்களா ? இப்போது தமிழிலும் தலை காட்ட தொடங்கியிருக்கிறது...
கருத்துரையிடுக