உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 7 மார்ச், 2011

உனக்கான என் இருவரிக்கவிதைகள்..........

அழகான காதலுக்கு காதலன் கேள்விகளும் காதலியின் பதில்களும் கவிதையாக...இருவரியில்....
காதலோடு நாமும் அதை ரசிப்போமா!!!!!
இக் கவிதையை  எழுதத் தூண்டிய நட்புக்கு நன்றி....


காதலன் : காதல்

காதலி : நமக்குள்  பிறந்த
               நம் முதல் குழந்தை..
காதலன் : பிரிவு

காதலி : நம்  அன்பை நாம் உணரும்
      முதல் காதல் கால பாடம் ..

காதலன் : காத்திருத்தல்

காதலி :  என் காதல் கொண்ட

           பிரசவகால வேதனை 
காதலன் :  ம்ம்

காதலி : உன்னில் நான் உணர்ந்த
       இரு வரிக் கவிதை..

காதலன் : நிலா

காதலி : நம் நேச நினைவுகளின்.
காவல்காரன்..
காதலன் :  இரவு

காதலி : நம் தூக்கம் களவாடிய
              கொள்ளைக்காரன் 


காதலன் : தனிமை 

காதலி : நாம்  முடிக்க தவிக்கும்
     வனவாசம்..

காதலன் : நிழற்படம்

காதலி : தனிமையின் தணலில்
     தகிக்கும் என் மனதின் நிழற்குடை 
காதலன் :  மீசை 

காதலி : என்  காதல்
                                      ஓவியத்தின் தூரிகை 

காதலன் : தாவணி 

காதலி : என்னை வெட்க்க கொலை
செய்யும் குறும்புக்காரி
காதலன் :  முத்தம் 

காதலி : நம் உதடுகள் தேடும்
     காதல் முக(தல்)வரி...
காதலன் : கவிதை

காதலி :உன்னோடு
     நான் வாழும் நாட்கள்

காதலன் :  வெட்கம்

காதலி : உன் பார்வை ஆயுதத்தால்
               நான் பறிகொடுத்த என் இளமை ராஜ்ஜியம் 

காதலன் :  ப்ரியம்

காதலி :நம் உயிர் கொண்டு நிறைத்த
     நம் காதல் காலம்.. 
காதலன் :  ஊடல்

காதலி :  நாம் ஜெயிக்க நினைக்கும்
      செல்ல சாம்ராஜியம்
காதலன் :  இசை

காதலி : நான் தலைசாய்க்கும்
     மாலை நேர உன் மடி 
காதலன் :  கூடல்

காதலி : நமக்கான
              கவிதை பிறக்கும் இடம் 


காதலன் :  உன் அருகாமை

காதலி : என் வாழ்வின் 
              இரண்டாம் கருவறை..

*************************


பொறுமையாய் படித்த நட்புக்கு நன்றி... பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை திரட்டிகளில் பதிவு செய்து செல்லவும்...


அன்புடன் 
பிரியத் தோழி 
ரேவா  

32 கருத்துகள்:

தமிழ்வாசி - Prakash சொன்னது…

காதலன், காதலி ...... அருமையான கவிதை பகிர்வு.

எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

sulthanonline சொன்னது…

kaadhalan kaadhali unarvukkavithai arumai thozi

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

இன்னிக்கு எல்லோருக்கும் அண்ணன் டெம்பிளேட் கமெண்டும் ஓட்டுக்களும் போடுவேனாம்! நீங்கள் கோபிக்க கூடாதாம்!!

வேங்கை சொன்னது…

வணக்கம்

என்னமோ போங்க
கலக்கிபுட்டீங்க போங்க

ரொம்ப நல்லா இருக்குங்க

அதுவும் கடைசி இரண்டு கூடல் , உன் அருகாமை

ரொம்ப அழகு ... வாழ்த்துக்கள்

அருண் K நடராஜ் சொன்னது…

arumai thozhi ... azhaganaa iruvarigal :)

ரேவா சொன்னது…

தமிழ்வாசி - Prakash said...

காதலன், காதலி ...... அருமையான கவிதை பகிர்வு.

எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

நன்றி தமிழ்வாசி உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்.....

ரேவா சொன்னது…

sulthanonline said...


kaadhalan kaadhali unarvukkavithai arumai thozi

நன்றி நண்பரே...உங்கள் வாழ்த்துக்கு

ரேவா சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இன்னிக்கு எல்லோருக்கும் அண்ணன் டெம்பிளேட் கமெண்டும் ஓட்டுக்களும் போடுவேனாம்! நீங்கள் கோபிக்க கூடாதாம்!!

ஹ ஹ இது என்ன புதுப் பேரு.. இல்லப்பா நான் கோவிக்கலாம் மாட்டேன் பா..உங்கள் மறுமொழிக்கு நன்றி நண்பரே

ரேவா சொன்னது…

வேங்கை said...

வணக்கம்

என்னமோ போங்க
கலக்கிபுட்டீங்க போங்க

ரொம்ப நல்லா இருக்குங்க

அதுவும் கடைசி இரண்டு கூடல் , உன் அருகாமை

ரொம்ப அழகு ... வாழ்த்துக்கள்

நன்றி நண்பா...உன் அருகாமை மட்டும் என்னோடது இல்ல.....

ரேவா சொன்னது…

அருண் K நடராஜ் said...

arumai thozhi ... azhaganaa iruvarigal :)


ஹஹா நன்றி அருண்

மாணவன் சொன்னது…

கவித்துமான வரிகளுடன் சூப்பர்...

வாழ்த்துக்கள் சகோ :)

Harini Nathan சொன்னது…

//தனிமை
நாம் முடிக்க தவிக்கும்
வனவாசம்//
Hm உண்மைதான் :)
அருமையான வரிகள் தோழி :)

எவனோ ஒருவன் சொன்னது…

வித்தியாசமான முயற்சி. மிக அருமையாக இருந்தது தோழி....

ஆயிஷா சொன்னது…

அருமையான கவிதை.வாழ்த்துக்கள்.

ராஜ ராஜ ராஜன் சொன்னது…

ரொம்பவே அழகு... எல்லா வரிகளும். எல்லா உணர்வுகளும்.

சின்னச் சின்ன விஷயங்களில் தான் வாழ்க்கையின் ஜீவன் இருப்பதாய் சொல்வார்கள். இந்த சின்னச் சின்ன வரிகள் பதிவாகி இருக்கிறது காதலின் ஜீவன்.

எல்லாவற்றையும் அழகாய் காட்டும் காதலை, ரொம்பவே அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

ரேவா சொன்னது…

மாணவன் said...

கவித்துமான வரிகளுடன் சூப்பர்...

வாழ்த்துக்கள் சகோ :)

நன்றி சகோ உன் வாழ்த்துக்கு :):):):)

ரேவா சொன்னது…

Harini Nathan said...

//தனிமை
நாம் முடிக்க தவிக்கும்
வனவாசம்//
Hm உண்மைதான் :)
அருமையான வரிகள் தோழி :)

நன்றி தோழி உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கு

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

வித்தியாசமான முயற்சி. மிக அருமையாக இருந்தது தோழி....

நன்றி நண்பா .........

ரேவா சொன்னது…

ஆயிஷா said...

அருமையான கவிதை.வாழ்த்துக்கள்.

நன்றி ஆயிஷா உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கு

ரேவா சொன்னது…

ராஜ ராஜ ராஜன் said...

ரொம்பவே அழகு... எல்லா வரிகளும். எல்லா உணர்வுகளும்.

சின்னச் சின்ன விஷயங்களில் தான் வாழ்க்கையின் ஜீவன் இருப்பதாய் சொல்வார்கள். இந்த சின்னச் சின்ன வரிகள் பதிவாகி இருக்கிறது காதலின் ஜீவன்.

எல்லாவற்றையும் அழகாய் காட்டும் காதலை, ரொம்பவே அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

//////////சின்னச் சின்ன விஷயங்களில் தான் வாழ்க்கையின் ஜீவன் இருப்பதாய் சொல்வார்கள்.//////////
உண்மைதான் நண்பரே....நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும் முதல் முதல் விதைத்த மறுமொழிக்கும்...இனி தொடர்ந்து வாருங்கள்

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//காதலன் : தனிமை

காதலி : நாம் முடிக்க தவிக்கும்
வனவாசம்..
//

அருமை...! வாழ்த்துகள் பாஸ்!

logu.. சொன்னது…

அடங்கொய்யால..

கண்ண கட்டுதே..
எவ்ளோ அழகு..

இப்டியே கண்டினியூ பண்ணுங்க.

logu.. சொன்னது…

ஹய்யோ.. போங்க பாஸூ..
மறுபடியும் ஒருவாட்டி படிச்சேன்.

பின்றீங்க.

logu.. சொன்னது…

படங்கள் எல்லாமே நல்லா இருக்கு..
எனக்கும் இதை கொடுத்து உதவ முடியுமா?

ரேவா சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் said...

//காதலன் : தனிமை

காதலி : நாம் முடிக்க தவிக்கும்
வனவாசம்..
//

அருமை...! வாழ்த்துகள் பாஸ்!

ஹ ஹ நன்றி பாஸ்....

ரேவா சொன்னது…

logu.. said...

அடங்கொய்யால..

கண்ண கட்டுதே..
எவ்ளோ அழகு..

இப்டியே கண்டினியூ பண்ணுங்க.........

.ஹ ஹ நன்றி நண்பா கண்டிப்பாக கண்டினியூ பண்றேன்.........

ரேவா சொன்னது…

logu.. said...

ஹய்யோ.. போங்க பாஸூ..
மறுபடியும் ஒருவாட்டி படிச்சேன்.

பின்றீங்க.

அப்டியா ரொம்ப நன்றி பாஸ்... இதை எழுதத் தூண்டிய நட்புக்கும் நன்றி...

ரேவா சொன்னது…

logu.. said...

படங்கள் எல்லாமே நல்லா இருக்கு..
எனக்கும் இதை கொடுத்து உதவ முடியுமா?...

நண்பா இதுல கொடுத்து உதவ என்ன இருக்கு...இம்ம்ம்ம் எடுத்துக்கோங்க.. நானே கூகுள் ல சுட்டேன் ஹி ஹி

Chitra சொன்னது…

Each one is nice.

காதலன் : மீசை

காதலி : என் காதல்
ஓவியத்தின் தூரிகை


..... So cute!

I am following your blog... it is good. :-)

ரேவா சொன்னது…

Chitra said...

Each one is nice.

காதலன் : மீசை

காதலி : என் காதல்
ஓவியத்தின் தூரிகை


..... So cute!

I am following your blog... it is good. :-)


உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி......
இனி தொடர்ந்து வாருங்கள்

சி.கருணாகரசு சொன்னது…

மிக நன்று.
பாராட்டுக்கள்.

jothi சொன்னது…

க‌டைசி ஒன்று அருமை