( இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு புத்தகத்தில் இளம் விதவையின் காதல்ங்கிற தலைப்பில் ஒரு கவிதை படித்தேன்... அந்த கவிதை மாதிரி நாமும் ஒரு கவிதை எழுதனும்கிற எண்ணத்தை உருவாக்கினது, அதோட வெளிப்பாடு தான் இந்த கவிதை.... 2009 இல் எழுதிய இந்த கவிதைய இப்போ பதிவு செஞ்சுருக்கேன்.... பிடிச்சிருந்தா உங்க கருத்த சொல்லிட்டு போங்க நண்பர்களே...)
* காட்சிக்கு களங்கமாய்
தெரிந்தாலும்
நிலவும் அழகுதான்....
உன்னோடான என்
காதல் காலமும் அழகு தான்....
* இனம் தெரியா காலத்தில்
இனச்சேர்க்கைக்கு என்னை
திருமண பந்தத்தில்
இணைத்திட, என்னில்
இணைந்திட என் இணையும்
என் இதயத்தில் நுழைவதற்குள்
சிதைக்கு விருந்தாகி போனான்...
* ஆனால் என் உறவே...
உற்றோரும், உள்ளோரும்
அவரவராய் இருந்திட இறந்து போன
என் இதயதிருக்கு இதம் தந்ததது
உன் காதல் தான்..
* பார்த்து பழகிய
நாட்களில் இருந்தே
முன்னுரை எழுதாமலும்
முகவரி புரியாமலும்
நீண்டு கொண்டே போகிறது
உனக்கும் எனக்குமான
நம் பெயரிடப்படாத உறவு....
* நண்பன் என ஒருவன்
நயவஞ்சகம் புரிந்திட
நினைக்கையில் , நாசுக்காய்
என்க்குறைத்து என்னை
நெறிப்படுத்திய
அன்றிலிருந்து ஆரம்பம் ஆனது
நம் உறவு....
* தவறு என்று நீ
ஒதுங்கும் நேரத்திலும்,
தயக்கமற்று நீ
நெருங்கி வரும் நேரத்திலும்,
எனக்குள் ஒரு தீர்வை
தருவது உன்
ஆழபார்வை மட்டுமே!!!!!
* குழந்தையாக ஒரு நாள்...
குமாரனாக ஒரு நாள்...
மண்டியிட்டு ஒரு நாள்...
மவுனமாக ஒரு நாள்...
கொஞ்சல்கள் சில நாள்....
எனக்கான கெஞ்சல்கள் பல நாள்...
புரிந்து பல நாள் ....
புரியாமல் சிலநாள்......
என நீண்டு செல்லும்
எல்லா நாட்களிலும்
நீங்காமல் நிறைத்திருப்பது
உன் நினைவுதானடா.........
* பிழையென பலர்
பார்வைக்கு பட்டாலும்,
தவறே என்று சிலர்
தர்கமே செய்தாலும்
நிலவும் அழகுதான்....
உன்னோடான என்
உறவும் அழகு தான்....
அன்புடன்
ரேவா
தெரிந்தாலும்
நிலவும் அழகுதான்....
உன்னோடான என்
காதல் காலமும் அழகு தான்....
* இனம் தெரியா காலத்தில்
இனச்சேர்க்கைக்கு என்னை
திருமண பந்தத்தில்
இணைத்திட, என்னில்
இணைந்திட என் இணையும்
என் இதயத்தில் நுழைவதற்குள்
சிதைக்கு விருந்தாகி போனான்...
* ஆனால் என் உறவே...
உற்றோரும், உள்ளோரும்
அவரவராய் இருந்திட இறந்து போன
என் இதயதிருக்கு இதம் தந்ததது
உன் காதல் தான்..
* பார்த்து பழகிய
நாட்களில் இருந்தே
முன்னுரை எழுதாமலும்
முகவரி புரியாமலும்
நீண்டு கொண்டே போகிறது
உனக்கும் எனக்குமான
நம் பெயரிடப்படாத உறவு....
* நண்பன் என ஒருவன்
நயவஞ்சகம் புரிந்திட
நினைக்கையில் , நாசுக்காய்
என்க்குறைத்து என்னை
நெறிப்படுத்திய
அன்றிலிருந்து ஆரம்பம் ஆனது
நம் உறவு....
* தவறு என்று நீ
ஒதுங்கும் நேரத்திலும்,
தயக்கமற்று நீ
நெருங்கி வரும் நேரத்திலும்,
எனக்குள் ஒரு தீர்வை
தருவது உன்
ஆழபார்வை மட்டுமே!!!!!
* குழந்தையாக ஒரு நாள்...
குமாரனாக ஒரு நாள்...
மண்டியிட்டு ஒரு நாள்...
மவுனமாக ஒரு நாள்...
கொஞ்சல்கள் சில நாள்....
எனக்கான கெஞ்சல்கள் பல நாள்...
புரிந்து பல நாள் ....
புரியாமல் சிலநாள்......
என நீண்டு செல்லும்
எல்லா நாட்களிலும்
நீங்காமல் நிறைத்திருப்பது
உன் நினைவுதானடா.........
* பிழையென பலர்
பார்வைக்கு பட்டாலும்,
தவறே என்று சிலர்
தர்கமே செய்தாலும்
நிலவும் அழகுதான்....
உன்னோடான என்
உறவும் அழகு தான்....
அன்புடன்
ரேவா
6 கருத்துகள்:
வழக்கம்போல உங்க கவிதை ம்ம்ம்..சூப்பர்..
முன்னுரை ஒப்புக்கொள்ளும்படியாக இல்லை
கவிதையை படித்து முடித்து முடிவுரைக்கு வரும்போது
ஒப்புக்கொள்ளும்படியாகத்தான் இருந்தது.வாழ்த்துக்கள்
sakthistudycentre-கருன் said...
வழக்கம்போல உங்க கவிதை ம்ம்ம்..சூப்பர்..
நன்றி நண்பரே!!! உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்....
Ramani said...
முன்னுரை ஒப்புக்கொள்ளும்படியாக இல்லை
கவிதையை படித்து முடித்து முடிவுரைக்கு வரும்போது
ஒப்புக்கொள்ளும்படியாகத்தான் இருந்தது.வாழ்த்துக்கள்.......
*********************
உள்ளக்கருத்தை உள்ளபடியே கொண்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.... இந்த கவிதைய காதலி ஒரு காதலருக்கு எழுதுனதா இருந்தா இது கண்டிப்பா ஏற்புடையது அல்ல... உங்களளோட பின்னூட்டம் கண்ட பிறகே என் கவிதைக்கு முன்னுரை எழுதிருக்கேன்.. இப்போ உங்க கருத்தை எதிர்பாக்குறேன் திரு.ரமணி அவர்களே...
மிகுந்த மனமகிழ்ச்சியுடன் உங்களுக்கும் உங்கள் மேலான கருத்துக்கும் நன்றி சொல்கிறேன்........
அருமை அருமை அருமை!!!
ஒரு இளம் விதவையின் மனதை படம் பிடித்து காட்டி விட்டீர்கள் )
வாழ்த்துக்கள் தோழி :) :)
chammy fara said...
அருமை அருமை அருமை!!!
ஒரு இளம் விதவையின் மனதை படம் பிடித்து காட்டி விட்டீர்கள் )
வாழ்த்துக்கள் தோழி :) :)
நன்றி தோழி உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்... தொடர்ந்து வாசியுங்கள்
கருத்துரையிடுக