உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 29 ஜனவரி, 2011

என் தமிழன்

* அன்பைமட்டும் ஆயுதமாய்
கொண்டு ஆளப்பிறந்தவன்
என் தமிழன்...
அகிம்சை வழியன்றி யாதும்
அறியான் என் தமிழன்...

* அரசியல்வாதி என்னும்
பிணம்தின்னி கழுகின்  பின்
சாவமாய்த்திரிந்தான் என் தமிழன்...
அவன் எச்சிக்கையில் ஒட்டி
கிடக்கும் ஓற்றை வார்த்தைக்காய்
ஏங்கி தவித்தான் என் தமிழன்..

* ஈழத்தமிழனைத்  தான் காவு
கொடுத்தோம் என்றால்,
எஞ்சிய எம் ஏழை மீனவத்தமிழனையும்
சாவுக்கு தாரைவார்க்கவோ
நாம் தரணியில் பிறந்தோம்?

இதயத்தில் இணைந்திட்டவன் ,
தன் சொந்தத்தின் வாழ்வுக்காய்,
கடல் தேடி சென்றானே!!!
கடலோடு போன தந்தை,
நம்மை கரைசேர்க்க, கரைவருவாரோ
என எதிர்ப்பார்த்து நிற்கும்
எந்தன் தாய்க்கும், தவித்து நிற்கும் 
எந்தன் பிள்ளைக்கும
என்ன பதில் நாம் சொல்ல...?
சொல் தமிழா என்ன பதில் நாம் சொல்ல...

* முத்தமிழ்  பேசுவோம் ...
எம் தமிழுக்கு செம்மொழி
உயர்வு வாங்கித்தர போர்க்கொடி
நீட்டுவோம்...ஆனால்
என் ஏழைத்தமிழனுக்கோ?

* ஏழைத்தமிழன் என்றால்
அத்துணை இளப்பமா?...
ஆறடுக்கு மாளிகையில் நீ இருக்க
உன்னை ஏற்றிவிட்ட
ஏழைக்கரங்கள் செய்வது அறியாமல்
ஏங்கி நிற்க....எச்சரிக்கை
விடுவதாய் ஏமாற்றுதல் நியாயமா? 

* பொறுத்திருந்து பொறுத்திருந்து
நாட்களும் நரகமாக,
எங்கள் வாழ்கையும் வீணானது
தான் மிச்சம்...

* எங்கள் எச்சம் தின்னும்
தந்திர நரிகளே...
நாங்கள் மாறினால் நீங்கள்
மண்டியிட்டு வேண்ட காணி நிலமும்
உங்கள்   கைக்குள் இருக்காது..
நாங்களும் மாறுவோம்... எத்தனை
நாள் தான்  உன்னிடம் ஏமாறுவோம்..

* பொறுத்தது  போதும்...
அரசனும் வேணாம்...
அரசியல் வேடதாரியும் வேண்டாம்...
இன்னும்  பொறுத்தால்
மிச்சமே
மிச்சும்...
ஒன்று படு தமிழா
நம்  தமிழனுக்காய்...
நம் தலைமுறைக்காய்..
இனி ஒரு விதி செய்வோம்..
சாட்டையை  சுழற்றி மாற்றம் செய்வோம்
புறப்படு என் தமிழா.....

* அன்பைமட்டும் ஆயுதமாய்
கொண்டு ஆளப்பிறந்தவன்
என் தமிழன்...
அகிம்சை வழியன்றி யாதும்
அறியான் என் தமிழன்...

நம் போடும் சத்தம் சென்றடைய www.savetnfisherman.org தளத்தில்  நம் ஆதரவை தெரிவிப்போம்

இணைய தள முகவரி- savetnfisherman.org
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman 
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form

குரல் கொடுப்போம்... நம் உரிமையை நாமே பெறுவோம்...நன்றி 

( எதற்கு இந்த விலை  இந்த பதிவையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லலாமே...)
 அன்புடன்
ரேவா 

32 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

சரியான நேரத்தில் பதிவிட்டு உங்களின் பங்களிப்பை செய்தமைக்கு நன்றிங்க சகோ,

நிச்சயமாக நாம் அனைவருமே நம்மால் முடிந்தவரையும் பங்கெடுத்துகொண்டு உதவியாய் இருப்போம்...

எஸ்.கே சொன்னது…

மக்களை காக்க வேண்டிய அரசே அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது!

எஸ்.கே சொன்னது…

//அன்பைமட்டும் ஆயுதமாய்
கொண்டு ஆளப்பிறந்தவன்
என் தமிழன்...
அகிம்சை வழியன்றி யாதும்
அறியான் என் தமிழன்...//

அற்புதமான வரிகள்!

மாணவன் சொன்னது…

நண்பர்கள் அனைவரும் இதுபோன்று தொடர்புடைய பதிவு அண்ணன் வைகை அவர்களின் இந்த முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்! பதிவையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சரியான கவிதை, ஒன்றுபடுவோம், உரிமையை மீட்போம்!

logu.. சொன்னது…

\\அன்பைமட்டும் ஆயுதமாய்
கொண்டு ஆளப்பிறந்தவன்
என் தமிழன்...
அகிம்சை வழியன்றி யாதும்
அறியான் என் தமிழன்...\\

Thanmanasingam veeraththamizhan annan prabakaran iruppathu ninaivirukkiratha?

logu.. சொன்னது…

anaivarum onru paduvom...

ரேவா சொன்னது…

மாணவன் said...

சரியான நேரத்தில் பதிவிட்டு உங்களின் பங்களிப்பை செய்தமைக்கு நன்றிங்க சகோ,

நிச்சயமாக நாம் அனைவருமே நம்மால் முடிந்தவரையும் பங்கெடுத்துகொண்டு உதவியாய் இருப்போம்...

நிச்சயம் சகோ

ரேவா சொன்னது…

எஸ்.கே said...

மக்களை காக்க வேண்டிய அரசே அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது!

கண்டனத்திற்க்குரியதும் தான் நண்பரே...

ரேவா சொன்னது…

எஸ்.கே said...

//அன்பைமட்டும் ஆயுதமாய்
கொண்டு ஆளப்பிறந்தவன்
என் தமிழன்...
அகிம்சை வழியன்றி யாதும்
அறியான் என் தமிழன்...//
அற்புதமான வரிகள்!

நன்றி நண்பரே

ரேவா சொன்னது…

மாணவன் said...

நண்பர்கள் அனைவரும் இதுபோன்று தொடர்புடைய பதிவு அண்ணன் வைகை அவர்களின் இந்த முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்! பதிவையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

கண்டிப்பாக பதிவு செய்கிறேன் சகோ

ரேவா சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரியான கவிதை, ஒன்றுபடுவோம், உரிமையை மீட்போம்!

நிச்சயம் நண்பரே...

ரேவா சொன்னது…

logu.. said...

anaivarum onru paduvom...

நிச்சயம் நண்பரே...

karthikkumar சொன்னது…

நல்ல பதிவு சகோ. சரியான நேரத்தில் மிக சரியான பதிவு...வார்த்தை பிரயோகம் அருமை :)

பாட்டு ரசிகன் சொன்னது…

இலங்கை ராணுவத்திற்கு எப்போதும் தமிழர்களை கொள்வது தான் வேலையா..
இலங்கையில் அனைவரையும் கொன்று குவித்ததாயிற்று அதனால்தான் இங்கு வந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறோன்..
கண்டிப்பாக அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் தமிழினம் தரைமட்டாகும்...
இதையும் படி தலைவா..

Harini Resh சொன்னது…

அற்புதமான கவிதை, ஒன்றுபடுவோம், உரிமையை மீட்போம்!

ரேவா சொன்னது…

karthikkumar said...

நல்ல பதிவு சகோ. சரியான நேரத்தில் மிக சரியான பதிவு...வார்த்தை பிரயோகம் அருமை :)
நன்றி சகோ

மதுரை சரவணன் சொன்னது…

//ஒன்று படு தமிழா
நம் தமிழனுக்காய்...
நம் தலைமுறைக்காய்..
இனி ஒரு விதி செய்வோம்..
சாட்டையை சுழற்றி மாற்றம் செய்வோம்
புறப்படு என் தமிழா..... //

கவிதை அருமை. வாழ்த்துக்கள். பார்வையிடவும்..http://veeluthukal.blogspot.com/2011/01/blog-post_29.html

S Maharajan சொன்னது…

ஒன்றுபடுவோம், உரிமையை மீட்போம்!

ரேவா சொன்னது…

பாட்டு ரசிகன் said...

இலங்கை ராணுவத்திற்கு எப்போதும் தமிழர்களை கொள்வது தான் வேலையா..
இலங்கையில் அனைவரையும் கொன்று குவித்ததாயிற்று அதனால்தான் இங்கு வந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறோன்..
கண்டிப்பாக அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் தமிழினம் தரைமட்டாகும்...
இதையும் படி தலைவா..

கண்டிப்பாக அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம்... வருகைக்கு நன்றி

ரேவா சொன்னது…

Harini Nathan said...

அற்புதமான கவிதை, ஒன்றுபடுவோம், உரிமையை மீட்போம்!

அனைவரும் ஒன்று படுவோம், உரிமையை மீட்போம் தோழி ... வருகைக்கு நன்றி

ரேவா சொன்னது…

மதுரை சரவணன் said...

//ஒன்று படு தமிழா
நம் தமிழனுக்காய்...
நம் தலைமுறைக்காய்..
இனி ஒரு விதி செய்வோம்..
சாட்டையை சுழற்றி மாற்றம் செய்வோம்
புறப்படு என் தமிழா..... //

கவிதை அருமை. வாழ்த்துக்கள். பார்வையிடவும்..http://veeluthukal.blogspot.com/2011/01/blog-post_29.html

நிச்சயமாக நாம் அனைவருமே நம்மால் முடிந்தவரையும் பங்கெடுத்துகொண்டு உதவியாய் இருப்போம்...வருகைக்கு நன்றி

ரேவா சொன்னது…

S Maharajan said...

ஒன்றுபடுவோம், உரிமையை மீட்போம்!

அனைவரும் ஒன்று படுவோம், உரிமையை மீட்போம் ... வருகைக்கு நன்றி S Maharajan

தறுதலை சொன்னது…

சிங்கள நாட்டுப் பொருட்கள் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும். சிங்கள நாட்டுடன் வணிகத் தொடர்பு வைத்திருக்கும் நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும். புறக்கணிக்க வேண்டிய பொருட்கள் / நிறுவணிங்களின் பெயர்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பரவலாக்க வேண்டும்.

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் -ஜன'2011)

arasan சொன்னது…

சகோதரி வலிகளை அப்படியே கவிதையாய் வடிதிருக்கின்றிர் ...
நிச்சயமா நாம் ஒன்று பட்டு தீரவேண்டும் .. இதுதான் கடைசி சந்தர்ப்பம் ...

ரேவா சொன்னது…

tharuthalai said...

சிங்கள நாட்டுப் பொருட்கள் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும். சிங்கள நாட்டுடன் வணிகத் தொடர்பு வைத்திருக்கும் நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும். புறக்கணிக்க வேண்டிய பொருட்கள் / நிறுவணிங்களின் பெயர்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பரவலாக்க வேண்டும்.

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் -ஜன'2011)

ஒன்றுபடுவோம், உரிமையை மீட்போம்!வருகைக்கு நன்றி

ரேவா சொன்னது…

அரசன் said...

சகோதரி வலிகளை அப்படியே கவிதையாய் வடிதிருக்கின்றிர் ...
நிச்சயமா நாம் ஒன்று பட்டு தீரவேண்டும் .. இதுதான் கடைசி சந்தர்ப்பம் ..

ஒன்றுபடுவோம், உரிமையை மீட்போம்!வருகைக்கு நன்றி சகோ

Prabu Krishna சொன்னது…

தமிழன் என்றால் யார் என்பதை காட்டும் நேரமிது.

இணையதமிழர்கள் இணைந்ததில் பெருமை.

எவனோ ஒருவன் சொன்னது…

காதல், நட்பு சார்ந்த கவிதைகளை மட்டுமே வாசித்த என்னை இக்கவிதை மூலம் ஏழை மீனவத்தமிழன் படும் துயரங்களை உணர வைத்து விட்டீர்கள். வலிமிக்க வரிகள்....

ரேவா சொன்னது…

பலே பிரபு said...

தமிழன் என்றால் யார் என்பதை காட்டும் நேரமிது.

இணையதமிழர்கள் இணைந்ததில் பெருமை.
ஆம் நண்பா...ஒன்றுபடுவோம், உரிமையை மீட்போம்! வருகைக்கு நன்றி

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

காதல், நட்பு சார்ந்த கவிதைகளை மட்டுமே வாசித்த என்னை இக்கவிதை மூலம் ஏழை மீனவத்தமிழன் படும் துயரங்களை உணர வைத்து விட்டீர்கள். வலிமிக்க வரிகள்....

நன்றி நண்பரே

Unknown சொன்னது…

mee too present..