* வானம் போர்த்திய
பூமிக்குள்..
பலகோடி
சாயம் பூசிய போலி
முகங்கள்....
* முகவரி தந்த தாயிடம் கடிந்து கொண்டு ,
முகவரி இல்லா இணைய
நட்பிடம் சிரித்து சிரித்து
பேசும் சில முகங்கள்..
* தங்கையின் வேண்டுகோளை
நிராகரித்து, எதிர்வீட்டு நங்கைக்காய்
காத்துகிடக்கும் சில முகங்கள்..
* நலம் விசாரிப்பதாய் தொடங்கி
நண்பனின் சட்டைப்பையில்
ஒளிந்து கிடக்கும் சில முகங்கள்..
* உள்ளொன்று வைத்து,
புறம்தனில் இனிக்க இனிக்க
பேசி கழுத்தறுக்கும்
சில முகங்கள்...
* பிறர் உணர்வுகளை புரியாமல்,
உள்ளம் கொள்ளும் சில முகங்கள்
* காதலை வகைப்படுத்தி,
நாகரிகப்பெயர்சொல்லி
இளமையை தொலைக்கும்
சிலமுகங்கள்...
* விடியலில் கட்டிய மனைவியிடம்
கர்ஜனை செய்து விட்டு,
பெட்டிப் பாம்பைப் போல்
பிறர் பேச்சுக்குள் அடங்கிப் போகும்
சில முகங்கள்...
* சிரிக்க மறந்து, சிந்திக்க மறந்து
பிறர் உணர்வு மறந்து
தன் சுயம் எதுவென்று
அறியாத சில முகங்கள்
* சுற்றியுள்ள சமூகம்
வித விதமாய் நமைமாற்ற
நம் சுயம் மாறவும் முடியாமல்,
மீளவும் முடியாமல்,
போட்ட சாயத்தில் ஒன்றிப்போன
முகங்கள்
* வெளியில் ஒரு முகம்,
வீட்டில் ஒரு முகம்மென,
மாறிமாறி,
தன் முகம்
எதுவென தானே அறியாமல்
தன் முகவரி தானே
தொலைத்த முகங்கள்...
* வானம் போர்த்திய
பூமிக்குள்..
பலகோடி
சாயம் பூசிய போலி
முகங்கள்....
அன்புடன்
ரேவா
முந்தய கவிதை : திரும்பிப் பார்க்கிறேன்
19 கருத்துகள்:
நல்லா இருக்கு தோழி.
அப்ப எல்லாமே போலி முகம் தானா???? :-)
எவனோ ஒருவன் said...
நல்லா இருக்கு தோழி.
அப்ப எல்லாமே போலி முகம் தானா???? :-)
இம்ம்ம் எல்லாமே போலி முகம்னு சொல்ல முடியாது சமுதாயத்துக்காக போட்டு தன் முகம் என்னனு தனக்கே மறந்து போன முகங்கள் தன் முகவரித்தொலைத்த முகங்கள் நண்பா
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா
//சிரிக்க மறந்து, சிந்திக்க மறந்து
பிறர் உணர்வு மறந்து
தன் சுயம் எதுவென்று
அறியாத சில முகங்கள் ///
இன்னைக்கு முக்கால்வாசி மனுஷனுவ இப்பிடித்தான் சுத்திட்டு இருக்கான்......
சுற்றியுள்ள சமூகம்
வித விதமாய் நமைமாற்ற
நம் சுயம் மாறவும் முடியாமல்,
மீளவும் முடியாமல்,
போட்ட சாயத்தில் ஒன்றிப்போன
முகங்கள்
* வெளியில் ஒரு முகம்,
வீட்டில் ஒரு முகம்மென,
மாறிமாறி,
தன் முகம்
எதுவென தானே அறியாமல்
தன் முகவரி தானே
தொலைத்த முகங்கள்...
நல்ல வரிகள் வாழ்த்துக்கள்
சிறந்த படைப்பு. ஏறக்குறைய எல்லோருடைய முகமும்
ஏதாவதொன்றில் அடங்கித்தான் ஆகவேண்டும்
வேறுவழியில்லை.எல்லோருடய முகங்களும்
ஒருவகையில் முகவரி தொலைத்த முகங்கள்தான்
வாழ்த்துக்கள்
வானம் போர்த்திய
பூமிக்குள்..
பலகோடி
சாயம் பூசிய போலி
முகங்கள்....
உண்மைதான் அனைத்து முகங்களும்
முகமூடிகளால்தான் மூடப்பட்டிருக்கிறது..
கவிதை அருமை
நிறைய முகங்கள் பற்றி...........
அருமை !!!
இந்த முகமூடிக்குள் எல்லாவற்றிலும் என்னைப் பொருத்திப் பார்க்கிறேன். எல்லாவற்றிலும் இருக்கிறேன், சமயங்களில் எதிலும் இல்லை.
MANO நாஞ்சில் மனோ said...
//சிரிக்க மறந்து, சிந்திக்க மறந்து
பிறர் உணர்வு மறந்து
தன் சுயம் எதுவென்று
அறியாத சில முகங்கள் ///
இன்னைக்கு முக்கால்வாசி மனுஷனுவ இப்பிடித்தான் சுத்திட்டு இருக்கான்......
ஆமாம் நண்பா உண்மைதான், வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பா
bala said...
சுற்றியுள்ள சமூகம்
வித விதமாய் நமைமாற்ற
நம் சுயம் மாறவும் முடியாமல்,
மீளவும் முடியாமல்,
போட்ட சாயத்தில் ஒன்றிப்போன
முகங்கள்
* வெளியில் ஒரு முகம்,
வீட்டில் ஒரு முகம்மென,
மாறிமாறி,
தன் முகம்
எதுவென தானே அறியாமல்
தன் முகவரி தானே
தொலைத்த முகங்கள்...
நல்ல வரிகள் வாழ்த்துக்கள்
நன்றி பாலா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.. தொடர்ந்து வாருங்கள்
Ramani said...
சிறந்த படைப்பு. ஏறக்குறைய எல்லோருடைய முகமும்
ஏதாவதொன்றில் அடங்கித்தான் ஆகவேண்டும்
வேறுவழியில்லை.எல்லோருடய முகங்களும்
ஒருவகையில் முகவரி தொலைத்த முகங்கள்தான்
வாழ்த்துக்கள்
உண்மைதான் திரு. ரமணி அவர்களே... ஏறக்குறைய நாம் எதாவது ஒன்றில் அடங்கித் தான் ஆகவேண்டும்..வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
# கவிதை வீதி # சௌந்தர் said...
வானம் போர்த்திய
பூமிக்குள்..
பலகோடி
சாயம் பூசிய போலி
முகங்கள்....
உண்மைதான் அனைத்து முகங்களும்
முகமூடிகளால்தான் மூடப்பட்டிருக்கிறது..
கவிதை அருமை
நன்றி # கவிதை வீதி # சௌந்தர் அவர்களே..உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.. தொடர்ந்து வாருங்கள்
பலே பிரபு said...
நிறைய முகங்கள் பற்றி...........
அருமை !!!
நன்றி பிரபு வருகைக்கும் வாழ்த்துக்கும்
சிவகுமாரன் said...
இந்த முகமூடிக்குள் எல்லாவற்றிலும் என்னைப் பொருத்திப் பார்க்கிறேன். எல்லாவற்றிலும் இருக்கிறேன், சமயங்களில் எதிலும் இல்லை.
உங்கள் முதல் வருகைக்கும் உங்கள் மறுமொழிக்கும் நன்றி சிவகுமாரன் அவர்களே.. இனி தொடர்ந்து வாரு(சியு)ங்கள்
கவிதை அருமை சகோ :))
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் உங்களை சந்தோஷம் சுற்றி வரட்டும், சந்தோஷம் என்பது இரு கைகளால் சாதிக்கக் கூடியதல்ல இதயத்தால் ஏந்திச் செல்வது........
//
என்ன சொல்ல..
எப்படி
வரிகளால் வருடி செல்றீங்க ..நல்ல இருக்கு ஒரு முகமும்
karthikkumar said...
கவிதை அருமை சகோ :))
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ :))
siva said...
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் உங்களை சந்தோஷம் சுற்றி வரட்டும், சந்தோஷம் என்பது இரு கைகளால் சாதிக்கக் கூடியதல்ல இதயத்தால் ஏந்திச் செல்வது........
//
என்ன சொல்ல..
எப்படி
வரிகளால் வருடி செல்றீங்க ..நல்ல இருக்கு ஒரு முகமும்
நன்றி சிவா...ஆனா வரிகள் படித்ததில் பிடித்தது தான்... என்னுடையது அல்ல..வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தொடர்ந்து வாருங்கள்
karthikkumar said...
கவிதை அருமை சகோ :))
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ :))
கருத்துரையிடுக