* ரவிவர்மன் ஓவியம் போல்
என் மனதில் நான் வரைந்த
கற்பனைக் காவியமே...
கண்ணிறைந்த காதலனே...
* காலங்கள் கரைந்தோட,
கனவுகளும் எனையாள,-என்
கற்பனை நாயகனே,
என் காத்திருக்க வைப்பதேனோ?...
* அன்னையாக வருவாயோ?
எனையாளும் தந்தையாக வருவாயோ?
தோள்கொடுத்து அரவணைக்கும்
தோழனாக வருவாயோ?
மாயங்கள் தான் புரிந்து,
என் வாழ்வில் மாற்றங்கள் தருவாயோ?
மருமகனாய் வந்து மகனாகிப் போவாயா?
இல்லை,
இருக்கின்ற கூட்டத்தில்
நீயும் ஒன்றாகிப் போவாயோ?
என் கற்பனை வாழ்விற்க்கு
தூரிகையாய் இருப்பாயா?
இல்லை,
துயர்கொண்டு நிறைக்கும்
துன்பமாய் போவாயோ?...
தூங்காமல் நான் சேர்த்துவைத்த
இரவெல்லாம்
காதல் கொண்டு நிறைப்பாயா?
இல்லை,
தூக்கத்தை தூக்கிலேற்றி
துயர் கொண்டு நிறைப்பாயோ?
இதுவரை வாழ்ந்த வாழ்க்கை
வீணென்று சொல்வாயா?
இல்லை,
உனைப் பார்க்காமல் இருந்திருந்த
காலமே மேல்
என்று சொல்வாயோ?
நம் குடும்பத்தின்
வேராய் அன்போடு படர்வாயா?
இல்லை,
உன் குடும்பம் வேறு,
நம் குடும்பம் வேறு என்று
வேறு வேறாய்ப் பிரிப்பாயோ?
எனக்கென்ற என் திறமைதனை
தட்டிகொடுத்து வளர்ப்பாயா?
இல்லை,
தனித் திறமை என்பதெல்லாம்
தனக்கு ஒத்துவாராதென்று,
தார்மீக தடைதனை
விதிப்பாயோ?
சண்டைகள் வரும்போதெல்லாம்
சமாதனம் செய்வாயா?
இல்லை,
" சனியன் " வந்த வேளையென,
தாய்வீடு அனுப்புவாயோ?
அந்திநேரம் என் மடிசாய்ந்து
உன் அலுவலக கதைதனைச்
சொல்வாயா?
இல்லை,
ஆண்மகன் நானென்று
ஆணாதிக்கம்
புரிவாயோ?
எது எப்படியோ ...
முகம் தெரியா என் காதல்
கணவனே...
வருகின்ற காலத்தில்,
காதலோடு நானிருப்பேன்...
உனக்கொரு துயர் என்றால்
என் உயிர்க்கொண்டு
உன் துயர் துடைப்பேன்...
உன் தாரமாக இல்லாமல்
உனக்கொரு தாயாக நானிருப்பேன்..
என் அன்னைக்கு மேல்
இவள் என்ற பெயர் எடுப்பேன்...
காதல் கொண்டே
நம் காலம் முடிப்பேன்..
ரவிவர்மன் ஓவியம் போல்
என் மனதில் நான் வரைந்துவைத்த
கற்பனைக் காவியமே...
கண்ணிறைந்த காதலனே..
முகம் தெரியா தூயவனே
உனக்கே தான் இக்கவிதை..
உனக்கே தான் இக்கவிதை..
காத்திருக்கு காதலோடு...
அன்புடன்
ரேவா
முந்தய கவிதை : முகவரி தொலைத்த முகங்கள்
42 கருத்துகள்:
உங்கள் எண்ணம் போல் கணவர் வருவாங்க. விடுங்க சகோ .....:)
ரீசண்டா படிச்சதுல இந்த காதல் கவிதை காதலியின் வடிவில் இருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கு தனக்கு வரப்போகிறவன் எப்படியிருப்பான் என்கிற ஏக்கம் பயமாய் மாறி கவிதையாய் வந்திருக்கு...
நல்லாருக்கு பாஸ் கீப் இட் அப்...
//நம் குடும்பத்தின்
வேராய் அன்போடு படர்வாயா?
இல்லை,
உன் குடும்பம் வேறு,
நம் குடும்பம் வேறு என்று
வேறு வேறாய்ப் பிரிப்பாயோ?//
அப்போ இப்பவே சண்டைய ஆரம்பிச்சாச்சா....
karthikkumar said...
உங்கள் எண்ணம் போல் கணவர் வருவாங்க. விடுங்க சகோ .....:)
ஹ ஹ ஹ சகோ இது என் நண்பன் எனக்கு கொடுத்த கட்டளைப் படி எனக்கு வரவங்கள பத்திய எதிர்பார்ப்பும் அதே சமயத்துல பயம் கலந்தும் எழுத சொன்னான் அத எழுதுனேன்.. அவ்வளவே...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ
ப்ரியமுடன் வசந்த் said...
ரீசண்டா படிச்சதுல இந்த காதல் கவிதை காதலியின் வடிவில் இருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கு தனக்கு வரப்போகிறவன் எப்படியிருப்பான் என்கிற ஏக்கம் பயமாய் மாறி கவிதையாய் வந்திருக்கு...
நல்லாருக்கு பாஸ் கீப் இட் அப்...
நண்பா நான் இளம் பெண் தான் எனக்கு வரப்போரவங்கள தான் நான் நினச்சு எழுதுனேன்... நீங்க ஆரம்பத்துல இருந்து ஒரு ஆணாகவே என்னை நினைகிறேங்கனு நினைக்கிறேன்... ஹஹாஹா.. மத்தபடி உங்கள் மறுமொழி எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது... தொடர்ந்து வாருங்கள்..
MANO நாஞ்சில் மனோ said...
//நம் குடும்பத்தின்
வேராய் அன்போடு படர்வாயா?
இல்லை,
உன் குடும்பம் வேறு,
நம் குடும்பம் வேறு என்று
வேறு வேறாய்ப் பிரிப்பாயோ?//
அப்போ இப்பவே சண்டைய ஆரம்பிச்சாச்சா....
ஹஹாஹா ஆமாம் நண்பா.. சின்ன சின்ன சண்டைகள் இல்லாத உறவுகள் ஏது நண்பா
//நீங்க ஆரம்பத்துல இருந்து ஒரு ஆணாகவே என்னை நினைகிறேங்கனு நினைக்கிறேன்//
இல்லீங் அம்மிணி பாஸ்ன்றது ஆண்களுக்கு மட்டும் உரியது இல்லை என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ரேவதி
ப்ரியமுடன் வசந்த் said...
//நீங்க ஆரம்பத்துல இருந்து ஒரு ஆணாகவே என்னை நினைகிறேங்கனு நினைக்கிறேன்//
இல்லீங் அம்மிணி பாஸ்ன்றது ஆண்களுக்கு மட்டும் உரியது இல்லை என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ரேவதி....
அப்பாடா இது எல்லாருக்கும் புரியும்னு நினைக்கிறன்... பாஸ் னு பொண்ணுகளையும் சொல்லுவாங்க... ஹஹாஹ் நன்றி வசந்த்...நன்றி பாஸ்
m..... meaningful expectations. congratulations! i too thought that you are a boy.anyway mybest wishes to come true all your dreams!
நல்லாருக்குங்க சகோ,
நல்ல எதிர்பார்ப்போடு சூப்பரா எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள்...
// எது எப்படியோ ...
முகம் தெரியா என் காதல்
கணவனே...
வருகின்ற காலத்தில்,
காதலோடு நானிருப்பேன்...
உனக்கொரு துயர் என்றால்
என் உயிர்க்கொண்டு
உன் துயர் துடைப்பேன்...
உன் தாரமாக இல்லாமல்
உனக்கொரு தாயாக நானிருப்பேன்..
என் அன்னைக்கு மேல்
இவள் என்ற பெயர் எடுப்பேன்...
காதல் கொண்டே
நம் காலம் முடிப்பேன்..//
மிகவும் கவர்ந்த வரிகள்....
வசந்த் அண்ணன் கமெண்ட்ஸ் அருமை...
:))
Romba nalla ezhuthi irukkinga... anupava ezhuththtukkal.
காதலனின் இரண்டு நிலைகளையும்
சரியாகச் சொல்லி வந்த நீங்கள்
எப்படியோ என்ற வார்த்தைக்குப்பின்
நம் பெண்களுக்கே உரிய நேர்மறைத்தன்மையை
மட்டும் சொல்லிப்போனதை ரசித்துப் படித்தேன்
நல்ல படைப்பு வாழ்த்துக்கள்
ங்க
ல்
ந்
ங்களுக்கே உரிய
Thozhssss :) :)
மாத்தி யோசி said...
m..... meaningful expectations. congratulations! i too thought that you are a boy.anyway mybest wishes to come true all your dreams!
நன்றி நன்றி நன்றி நண்பா...உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்...
மாணவன் said...
நல்லாருக்குங்க சகோ,
நல்ல எதிர்பார்ப்போடு சூப்பரா எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள்...
நன்றி மாணவன்..........
மாணவன் said...
// எது எப்படியோ ...
முகம் தெரியா என் காதல்
கணவனே...
வருகின்ற காலத்தில்,
காதலோடு நானிருப்பேன்...
உனக்கொரு துயர் என்றால்
என் உயிர்க்கொண்டு
உன் துயர் துடைப்பேன்...
உன் தாரமாக இல்லாமல்
உனக்கொரு தாயாக நானிருப்பேன்..
என் அன்னைக்கு மேல்
இவள் என்ற பெயர் எடுப்பேன்...
காதல் கொண்டே
நம் காலம் முடிப்பேன்..//
மிகவும் கவர்ந்த வரிகள்....
நன்றி மாணவன் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ
மாணவன் said...
வசந்த் அண்ணன் கமெண்ட்ஸ் அருமை...
:))
ஹி ஹி :-) :-)
சே.குமார் said...
Romba nalla ezhuthi irukkinga... anupava ezhuththtukkal.
நன்றி தோழரே....உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்...
Ramani said...
காதலனின் இரண்டு நிலைகளையும்
சரியாகச் சொல்லி வந்த நீங்கள்
எப்படியோ என்ற வார்த்தைக்குப்பின்
நம் பெண்களுக்கே உரிய நேர்மறைத்தன்மையை
மட்டும் சொல்லிப்போனதை ரசித்துப் படித்தேன்
நல்ல படைப்பு வாழ்த்துக்கள்.....
நன்றி திரு.ரமணி அவர்களே...விட்டுக்கொடுப்பது நாமாக இருந்தால், அன்பு தாமாக வரும் என்பது என் உள்ளக்கருத்து, அதற்கே இந்த நேர்மறை எண்ணம்.... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
அருண் K நடராஜ் said...
Thozhssss :) :)
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பா
Ennam pola vazhakkai amaiya vazhthugal..
hayyoda..
kavithai romba azhaga irukku.
logu.. said...
Ennam pola vazhakkai amaiya vazhthugal..
நன்றி நண்பா...உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்...
logu.. said...
hayyoda..
kavithai romba azhaga irukku.
அப்படியா நன்றி நன்றி நன்றி நண்பா...உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்...
மனத்தின் ஏக்கங்கள், வாழ்வில் பார்த்திட்ட சில தாக்கங்கள், கனவுகள், நினைவுகள் என எல்லாம் கலந்து ஓர் (க)விதையாய் இங்கே கணவனை எதிர்பார்த்து விதைக்கப்பட்டு....
விதை விருட்சமாக என் வாழ்த்துகள் தோழி...
Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...
மனத்தின் ஏக்கங்கள், வாழ்வில் பார்த்திட்ட சில தாக்கங்கள், கனவுகள், நினைவுகள் என எல்லாம் கலந்து ஓர் (க)விதையாய் இங்கே கணவனை எதிர்பார்த்து விதைக்கப்பட்டு....
விதை விருட்சமாக என் வாழ்த்துகள் தோழி...
நன்றி நண்பரே... உங்கள் முதல் விதைக்கும் வாழ்த்துக்கும்...இனி தொடர்ந்து வாருங்கள்
அன்பின் ரேவா, அனைத்து இந்தியப் பெண்களின் வரப்போகும் கணவர் பற்றிய உள்ளக் கிடக்கையை மிக எளிமையாக கவிதை மாலை தொடுத்திருக்கிறீர்கள்.
"மருமகனாய் வந்து
மகனாகிப் போவாயா?
இல்லை,
இருக்கின்ற கூட்டத்தில்
நீயும் ஒன்றாகிப் போவாயோ?"
இந்த விடயத்தில் சன் இன் லா மாறி சன் இன் லவ்வாகவும், டாட்டர் இன் லா மாறி டாட்டர் இன் லவ்வாக மாறினால் அனைத்தும் சுகமாகும். கவிதை அருமை. தோழமையுடன்
உங்கள் கவிதை மிகவும் அருமையாக உள்ளதுங்க. மனம் போல கணவர் அமைவாராக!
////எது எப்படியோ ...
முகம் தெரியா என் காதல்
கணவனே...
வருகின்ற காலத்தில்,
காதலோடு நானிருப்பேன்...
உனக்கொரு துயர் என்றால்
என் உயிர்க்கொண்டு
உன் துயர் துடைப்பேன்...
உன் தாரமாக இல்லாமல்
உனக்கொரு தாயாக நானிருப்பேன்..
என் அன்னைக்கு மேல்
இவள் என்ற பெயர் எடுப்பேன்...
காதல் கொண்டே
நம் காலம் முடிப்பேன்..////
எது எப்படியோ ...
முகம் தெரியா என் காதல்
கணவனே...
வருகின்ற காலத்தில்,
காதலோடு நானிருப்பேன்...
உனக்கொரு துயர் என்றால்
என் உயிர்க்கொண்டு
உன் துயர் துடைப்பேன்...
உன் தாரமாக இல்லாமல்
உனக்கொரு தாயாக நானிருப்பேன்..
என் அன்னைக்கு மேல்
இவள் என்ற பெயர் எடுப்பேன்...
காதல் கொண்டே
நம் காலம் முடிப்பேன்..
உங்களுக்கு மிகவும் அன்பான காதல் கணவன் அமைய வாழ்த்துக்கள் தோழி :-)
உங்களுக்கு மிகவும் அன்பான காதல் கணவன் அமைய வாழ்த்துக்கள் தோழி :-)
Feroz said...
அன்பின் ரேவா, அனைத்து இந்தியப் பெண்களின் வரப்போகும் கணவர் பற்றிய உள்ளக் கிடக்கையை மிக எளிமையாக கவிதை மாலை தொடுத்திருக்கிறீர்கள்.
"மருமகனாய் வந்து
மகனாகிப் போவாயா?
இல்லை,
இருக்கின்ற கூட்டத்தில்
நீயும் ஒன்றாகிப் போவாயோ?"
இந்த விடயத்தில் சன் இன் லா மாறி சன் இன் லவ்வாகவும், டாட்டர் இன் லா மாறி டாட்டர் இன் லவ்வாக மாறினால் அனைத்தும் சுகமாகும். கவிதை அருமை. தோழமையுடன்
உண்மைதான் நண்பரே...லவ் இருந்தால் எல்லாம் சுகமாய்ப் போகும்...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
பாலா said...
உங்கள் கவிதை மிகவும் அருமையாக உள்ளதுங்க. மனம் போல கணவர் அமைவாராக!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாலா
///எது எப்படியோ ...
முகம் தெரியா என் காதல்
கணவனே...
வருகின்ற காலத்தில்,
காதலோடு நானிருப்பேன்...
உனக்கொரு துயர் என்றால்
என் உயிர்க்கொண்டு
உன் துயர் துடைப்பேன்...
உன் தாரமாக இல்லாமல்
உனக்கொரு தாயாக நானிருப்பேன்..
என் அன்னைக்கு மேல்
இவள் என்ற பெயர் எடுப்பேன்...
காதல் கொண்டே
நம் காலம் முடிப்பேன்..////
உங்களுக்கு மிகவும் அன்பான காதல் கணவன் அமைய வாழ்த்துக்கள் தோழி :-)
நன்றி தோழா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
//* இதுவரை வாழ்த்த வாழ்க்கை
வீணென்று சொல்வாயா?//
இதில் பிழை உள்ளதா தோழி. (இல்லை என் பிழையா??)
//* இதுவரை வாழ்த்த வாழ்க்கை
வீணென்று சொல்வாயா?//
இதில் பிழை உள்ளதா தோழி. (இல்லை என் பிழையா??)
கவிதை அருமை.....♥♥♥
* மருமகனாய் வந்து
மகனாகிப் போவாயா?
இல்லை,
இருக்கின்ற கூட்டத்தில்
நீயும் ஒன்றாகிப் போவாயோ?
கற்பனைகள்
நிஜம் ஆகும்
வாழ்த்துக்கள் தோழி..
//கண்ணிறைந்த காதலனே..
முகம் தெரியா தூயவனே//
(கடவுளே அந்த நண்பரை காப்பது உன்கடமை )
:)))
பலே பிரபு said...
//* இதுவரை வாழ்த்த வாழ்க்கை
வீணென்று சொல்வாயா?//
இதில் பிழை உள்ளதா தோழி. (இல்லை என் பிழையா??)
நண்பா எனக்கு தெரிந்தவரை இது சரியாகவே தெரிகிறது...தவறு எனில் எனக்கு சுட்டிக்காட்டுங்கள்... என் பிழையை மாற்றிக்கொள்கிறேன்...
FARHAN said...
* மருமகனாய் வந்து
மகனாகிப் போவாயா?
இல்லை,
இருக்கின்ற கூட்டத்தில்
நீயும் ஒன்றாகிப் போவாயோ?
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே..தொடர்ந்து வாருங்கள்
siva said...
கற்பனைகள்
நிஜம் ஆகும்
வாழ்த்துக்கள் தோழி..
//கண்ணிறைந்த காதலனே..
முகம் தெரியா தூயவனே//
(கடவுளே அந்த நண்பரை காப்பது உன்கடமை )
:)))
ஹ ஹ நண்பரே...கடவுளாலும் என்னவரை காப்பாற்ற முடியாதே வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே..தொடர்ந்து வாருங்கள்
How i doin?, Make fancy the way in which oughout constructed the subject… you could possibly could possibly link up with my very own site and give me a small number of tipps. thanks a ton prior to
கருத்துரையிடுக