உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 9 மார்ச், 2011

தனிமையில் நம் காதல்....

* நீ இல்லா அறையில் 
தனிமையில் நம் காதல்...

*  உருவம் இல்லாமல்,
உள்ளம் அறியாமல்,
உணர்வால் உயிர் நுழைத்து,
அதே உணர்வால்,
உயிருக்குள் உயிராய்
இருந்து, நீ  என் உணர்வில்
கலந்தவளானாய்...

* இன்று,
பேச வார்த்தைகளற்று,
விழி முழுங்கும்
மோகப் பார்வைகளற்று,
கொண்டு குலாவி
மகிழ்ந்த இடங்களின்
சுவடுகள் அற்று,
தனிமையில்...
கண்ணியம் காக்கிறது
நம் காதல்....

* உன் கொஞ்சல்கள் நிறைந்த
பொழுதையும்,
என் கெஞ்சல்கள் நிறைத்த 
 நம் இரவையும், 
மென்று முழுங்கி
மௌனமாய் இருக்கிறது
நம் காதல்.....

* உன் சுவாசத்தின்
சூட்டிலே  நான் கருக்கொண்ட
நேரத்தையும்,
உச்சி முகர்ந்து
அன்பாய் நீ தந்த
இச்சை முத்தத்தையும் ,
எனக்காய் நீ
உருமாறிய நேரத்தையும்,
கண்முன்னே காட்சியாக்கிக் 
கொண்டிருக்கிறது,
நம் காதல்..

* நான் சொல்ல நினைத்த
சோகத்தையும்,
சேர்த்து வைத்த கண்ணீரையும்
கானல் ஆக்கி,
எனை உன்னிடம்
கரைசேர்த்தது
நம் காதல்...

* பணமென்றும், பகையென்றும்,
நட்பென்றும், நடிப்பென்றும்,
அன்பென்றும், ஆலகால விஷமென்றும்
பிறக்க முடியா பொருள்தனில்
உறவென்று வந்து,
என் வாழ்வில் பிரியாப் பொருள்
தந்த என் காதலே...

* முதுமை எனும்
இன்னொரு இளமை
வரும்வரை
என்னைத் தொடரும்
என் நிழலானவளே...  

* இந்த இளமை
நீ இல்லாத கடைசி நாட்களை
உன் நினைவின் சுகங்களோடு
கடத்திக் கொண்டிருக்க,
நம் காதல் மட்டும்?...

*  ஆம் நீ இல்லா அறையில்,
எனைவாட்டும் 
வெயிலும் குளிரும் 
பெரிதாய்ப் படவில்லை..
 நலம் விசாரிக்க 
யாரும் மற்று
நானும், நம் காதலும் 
தனிமையில்..கிடக்கையில்...


******************

அன்புடன் 
பிரியத் தோழி 
ரேவா   


24 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

இந்த இளமை
நீ இல்லாத கடைசி நாட்களை
உன் நினைவின் சுகங்களோடு
கடத்திக் கொண்டிருக்க,
நம் காதல் மட்டும்?......


அழுத்தமான வரிகளுங்க நன்றி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

பெயரில்லா சொன்னது…

ஃபெண்டாஸ்டிக்! முதல் முறை ஒரே மூச்சாய், இரண்டாம் முறை நிதானமாய், மூன்றாம் முறை ரசித்து நினைத்து படித்தேன் ரேவா! :)

சக்தி கல்வி மையம் சொன்னது…

இந்தக் கவிதை மனதை ஏதோ செய்கிறது தோழி..

karthikkumar சொன்னது…

உன் கொஞ்சல்கள் நிறைந்த
பொழுதையும்,
என் கெஞ்சல்கள் நிறைத்த
நம் இரவையும்,
மென்று முழுங்கி
மௌனமாய் இருக்கிறது
நம் காதல்...../// super...sema lines..:))

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

///
நீ இல்லா அறையில்,
எனைவாட்டும்
வெயிலும் குளிரும்
பெரிதாய்ப் படவில்லை..
நலம் விசாரிக்க
யாரும் மற்று
நானும், நம் காதலும்
தனிமையில்..கிடக்கையில்... //////


காதல் வளப்படவும்..
காதல் பலா்ாடவும்..
காதல் கவிதை செய்யவும்..
காதல் காயம் செய்யவும்..
தனிமையே தேவை..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நெஞ்சத்தை தொடும் நெருடலான கவிதை..
வாழ்த்துக்கள் தோழி..

ரேவா சொன்னது…

♔ம.தி.சுதா♔ said...

இந்த இளமை
நீ இல்லாத கடைசி நாட்களை
உன் நினைவின் சுகங்களோடு
கடத்திக் கொண்டிருக்க,
நம் காதல் மட்டும்?......


அழுத்தமான வரிகளுங்க நன்றி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா

நன்றி சகோதரரே உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு...

ரேவா சொன்னது…

Balaji saravana said...

ஃபெண்டாஸ்டிக்! முதல் முறை ஒரே மூச்சாய், இரண்டாம் முறை நிதானமாய், மூன்றாம் முறை ரசித்து நினைத்து படித்தேன் ரேவா! :)

நன்றி நன்றி நன்றி நண்பா...மீண்டும் மீண்டும் படித்தமைக்கும், பின்னூட்டம்
இட்டதற்கும்... தொடர்ந்து வாருங்கள்.........

ரேவா சொன்னது…

வேடந்தாங்கல் - கருன் said...

இந்தக் கவிதை மனதை ஏதோ செய்கிறது தோழி..

அப்படியா?.... தனிமை எப்பவும் மனதை ஏதோ செய்யத்தான்
செய்யும் நண்பா...நன்றி உங்கள் மறுமொழிக்கு...

Chitra சொன்னது…

உருவம் இல்லாமல்,
உள்ளம் அறியாமல்,
உணர்வால் உயிர் நுழைத்து,
அதே உணர்வால்,
உயிருக்குள் உயிராய்
இருந்து, நீ என் உணர்வில்
கலந்தவளானாய்...


......அருமையாக எழுதுறீங்க.... ரசிக்கிறேன்.

ரேவா சொன்னது…

karthikkumar said...

உன் கொஞ்சல்கள் நிறைந்த
பொழுதையும்,
என் கெஞ்சல்கள் நிறைத்த
நம் இரவையும்,
மென்று முழுங்கி
மௌனமாய் இருக்கிறது
நம் காதல்...../// super...sema lines..:))

அட அட வாங்க வாங்க ஆணி பிரதர்... சௌக்கியமா.. ஹ ஹ...அயராத வேலைப் பளுவிலும்
பின்னூட்டம் இட்டதற்கு நன்றி சகோ

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

///
நீ இல்லா அறையில்,
எனைவாட்டும்
வெயிலும் குளிரும்
பெரிதாய்ப் படவில்லை..
நலம் விசாரிக்க
யாரும் மற்று
நானும், நம் காதலும்
தனிமையில்..கிடக்கையில்... //////


காதல் வளப்படவும்..
காதல் பலா்ாடவும்..
காதல் கவிதை செய்யவும்..
காதல் காயம் செய்யவும்..
தனிமையே தேவை..


உண்மைதான் நண்பா தனிமை சிலருக்கு விருந்தாகும் சிலருக்கு மருந்தாகும், சிலருக்கோ
உயிர் குடிக்கும் விஷமாகும்... நன்றி நண்பா உங்கள் வாழ்த்துக்கு

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

நெஞ்சத்தை தொடும் நெருடலான கவிதை..
வாழ்த்துக்கள் தோழி..
நன்றி நண்பா உங்கள் வாழ்த்துக்கு

ரேவா சொன்னது…

Chitra said...

உருவம் இல்லாமல்,
உள்ளம் அறியாமல்,
உணர்வால் உயிர் நுழைத்து,
அதே உணர்வால்,
உயிருக்குள் உயிராய்
இருந்து, நீ என் உணர்வில்
கலந்தவளானாய்...


......அருமையாக எழுதுறீங்க.... ரசிக்கிறேன்.

நன்றி தோழி சித்ரா.... உங்க கிட்ட இருந்து பாராட்டு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி....

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோதரம், தனிமையில் இருக்கும் ஒரு இதயத்தின் வலி நிறைந்த நினைவுகளை கவிதையாக்கியுள்ளீர்கள். கவிதை பிரிவினையும், வஞ்சிக்கப்பட்ட உள்ளத்திற்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் பின்னரான வாழ்வியல் யதார்த்தத்தினையும் உணர்த்தி நிற்கிறது. விமர்சன அடிப்படையில் பார்க்கும் போது கவிதை பொருள் தந்து, அருமையாக படிப்போரை கவரும் வகையில் இருந்தாலும் கவிதையில் ஒரே மாதிரியான உணர்வுகள், அதுவும் பிரிவினால் பாதிக்கப்ப்ட உள்ளத்தின் உணர்வலைகள் திரும்பத் திரும்ப வருகின்றன. கொஞ்சம் கவனம் எடுத்தால், கவிதையின் நீண்ட வரிகளில் அமையும் உணர்வுகளை குறுகிய வடிவில், பார்ப்போர் மனதில் பளிச்செனப் பதியும் வண்ணம் கவிதையினை யாக்கலாம்.

Unknown சொன்னது…

......அருமையாக எழுதுறீங்க.... ரசிக்கிறேன்....:)REPEATU....

மாணவன் சொன்னது…

வரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனை....

வாழ்த்துக்கள் சகோ, தொடரட்டும் உங்கள் கவிதைப்பணி :)

சித்தாரா மகேஷ். சொன்னது…

நன்றாக இருக்கிறது.............
"சோகமான பொழுதுகளை சுகமாய் கழித்தேன் உன்னுடன் சேர்ந்து
சோகமான நிகழ்வுகளை சுகமாய் கழித்தேன் உன்னை நினைத்து
இதனால் சோகமும் சுகமாய்த்தான் இருந்தது.........."

ரேவா சொன்னது…

வணக்கம் சகோதரம்...

/////////பிரிவினால் பாதிக்கப்ப்ட உள்ளத்தின் உணர்வலைகள் திரும்பத் திரும்ப வருகின்றன.////////
இனி என் கவிதையின் போக்கை மாற்ற முனைகிறேன்...
/////குறுகிய வடிவில், பார்ப்போர் மனதில் பளிச்செனப் பதியும் வண்ணம் கவிதையினை யாக்கலாம். ////
கண்டிப்பாக அடுத்த பதிவில் நீங்கள் காணலாம் சகோ...
நன்றி உங்கள் மறுமொழிக்கு....தொடர்ந்து வாருங்கள்..

ரேவா சொன்னது…

siva said...

......அருமையாக எழுதுறீங்க.... ரசிக்கிறேன்....:)REPEATU....

நன்றி சிவா...

ரேவா சொன்னது…

மாணவன் said...

வரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனை....

வாழ்த்துக்கள் சகோ, தொடரட்டும் உங்கள் கவிதைப்பணி :)
நன்றி சகோ உன் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

சித்தாரா மகேஷ். said...

நன்றாக இருக்கிறது.............
"சோகமான பொழுதுகளை சுகமாய் கழித்தேன் உன்னுடன் சேர்ந்து
சோகமான நிகழ்வுகளை சுகமாய் கழித்தேன் உன்னை நினைத்து
இதனால் சோகமும் சுகமாய்த்தான் இருந்தது.........."
உண்மை தான் சகோ... நன்றி உன் மறுமொழிக்கு இனி தொடர்ந்து வாருங்கள்

எவனோ ஒருவன் சொன்னது…

////* இந்த இளமை
நீ இல்லாத கடைசி நாட்களை
உன் நினைவின் சுகங்களோடு
கடத்திக் கொண்டிருக்க,
நம் காதல் மட்டும்?...

* ஆம் நீ இல்லா அறையில்,
எனைவாட்டும்
வெயிலும் குளிரும்
பெரிதாய்ப் படவில்லை..
நலம் விசாரிக்க
யாரும் மற்று
நானும், நம் காதலும்
தனிமையில்..கிடக்கையில்...////

அருமை தோழி.

தாமதத்திற்கு மன்னிக்கவும்....

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

////* இந்த இளமை
நீ இல்லாத கடைசி நாட்களை
உன் நினைவின் சுகங்களோடு
கடத்திக் கொண்டிருக்க,
நம் காதல் மட்டும்?...

* ஆம் நீ இல்லா அறையில்,
எனைவாட்டும்
வெயிலும் குளிரும்
பெரிதாய்ப் படவில்லை..
நலம் விசாரிக்க
யாரும் மற்று
நானும், நம் காதலும்
தனிமையில்..கிடக்கையில்...////

அருமை தோழி.

தாமதத்திற்கு மன்னிக்கவும்....

நண்பா நீ எப்டியும் என் கவிதைக்கு மறுமொழி இட வருவாய் என நன்கு தெரியும்... மிக்க மகிழ்ச்சி நண்பா உன் வருகைக்கும் வாழ்த்துக்கும்..