உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 18 மார்ச், 2011

உன் ஊடல்

* தோழனே!!!
நம் கண்கள் பார்பதற்குள்ளே
கருத்தொருமித்தோம்!!!!
கனவுகள் கொண்டோம்!!!
காரணமில்லா சிறு சிறு
கள்ளத்தனம் செய்தோம்!!!!

* விதிவழியே,
நமக்கு விதிக்கப்பட்ட
வழியை விளையாட்டாய்
படி படியாய் கடந்தோம்...

*எனக்கானவன் நீ என்றும்
உனக்கானவள் நான் என்றும்
(தயக்கத்துடன்) நம் உள் மனது 
சொன்னாலும்
நம்மை உறங்காமல் உளற
வைப்பது எது?

* இந்த சிறிய நாட்களில்
நமக்குள் உண்டான ஏதேச்சை
எண்ணங்கள் எத்தனையோ!!!!

* முட்டி மோதி நம்மிடம்
எட்டி பார்க்கும் நம்
ஒற்றுமைகள் எத்தனையோ!!!!

* ஆழ இருக்கும் மனதில்
நம்மை ஆளத்துடிக்கும்
ஆசைகள் எத்தனையோ!!!!

* தயக்கங்கள் எத்தனையோ!!!!
தவிப்புகள் எத்தனையோ!!!!
தடையில்லா என்னை
நெருங்கி வரும் உன்
தார்மீக உரிமைகள்
எத்தனையோ!!!!

* இப்படி எத்தனையோ,
இருந்தும் ஓர்
**எத்தனை** போல்
நம்மை ஆட்டுவிப்பது 
எது! தோழா??


* சுகமான ஒரு மாலை பொழுதில்
முதன் முதல் பார்வை பரிமாற்றம்...
என் இரண்டாம் தாய் நீயா?
என்று என்னுளே ஆயிரம் கேள்விகள்...!

ம்...ம்

* நம் வாழ்கை கேள்விகளுக்கெல்லாம்
விடை தெரிந்து விட்டால்
"விதி" என்ற ஓன்று
வீண் தானே!!!!!

* மாற்றங்கள் வாழ்கையில்
மாறாமல் இருக்க நம்மை
வந்தடையும் வாழ்வியல் 
மாற்றங்கள் தான்
எத்தனை!!! எத்தனை!!!!

* தினம் தினம் உன் குறுந்தகவல்களால்
நிறப்பப்படும் என் கைப்பேசி
இபோதெல்லாம் கணவனை
இழந்த கைம்பெண்ணாய்
மாறியதன் மாற்றம்
என்னடா?????

* என்னை வந்தடையும்
உன் அழைப்புகள்,
உன் அரவணைப்பு,
உன் தாய் உள்ளத்தின் கனிவுயாவும்
காற்றில் கிடத்திய கற்பூரமாய்
காணாமல் போனதன்
கரணம் என்னடா???

புரிந்துகொண்டேன்னடா!!!!

* மாற்றங்கள் வாழ்கையில்
மாறாமல் இருக்க நம் வாழ்வில்
நம்மை வந்தடையும் வாழ்வியல்
மாற்றங்கள் தான்
எத்தனை!!! எத்தனை!!!!

மாற்றங்கள் தரும்
மாற்றங்களோடு
ரேவா 

நண்பர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வணக்கம் வணக்கம் சாரி இப்போதைக்கு பதிவு எதுவும் எழுதல...அதுனால என் பழைய பதிவுகள் மீள் பதிவாக... வரட்டா...இப்போ பதிவுலகத்துல இதுதான் லேட்டஸ்ட்....ஹி ஹி  

 நண்பர்களா இது ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி எழுதுனது... அதனால நோ அழுவாச்சி கமெண்ட்ஸ்... என் சமத்துல்ல.... ஹி ஹி....
 
முந்தையப் பதிவு : என் டைரியில்

27 கருத்துகள்:

தீபிகா சொன்னது…

அப்படிஎங்கங்க போயிட்டார் அவர்.. ரொம்ப பீலிங்கா இருக்கு..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

புரிந்துகொண்டேன்னடா!!!!

* மாற்றங்கள் வாழ்கையில்
மாறாமல் இருக்க நம் வாழ்வில்
நம்மை வந்தடையும் வாழ்வியல்
மாற்றங்கள் தான்
எத்தனை!!! எத்தனை!!!!

மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாதது! விடுங்க ரேவா! நல்லதே நடக்கும்!!

பட் கவிதை அருமை

ரேவா சொன்னது…

தீபிகா said...

அப்படிஎங்கங்க போயிட்டார் அவர்.. ரொம்ப பீலிங்கா இருக்கு..

ஐயோ ஓவர் பீலிங் அஹ இருக்க தீபிகா... என்ன பண்றது... பழைய பதிவுல இது தான்
கொஞ்சம் படிக்கிற மாதிரி இருந்தது...ஹி ஹி..
////அப்படிஎங்கங்க போயிட்டார் அவர்.///..
அவரு இந்தியா வேர்ல்ட் கப் விளையாடுறதுக்கு பந்து பொறுக்கிப் போட போயிட்டாரு... அதான் பீலிங்கு................மாமா நீங்க எங்க இருக்கேங்க?............. ஹி ஹி... நன்றி தீபிகா வருகைக்கு...

சமுத்ரா சொன்னது…

நன்றாக இருக்கிறது ரேவா..

ரேவா சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

புரிந்துகொண்டேன்னடா!!!!

* மாற்றங்கள் வாழ்கையில்
மாறாமல் இருக்க நம் வாழ்வில்
நம்மை வந்தடையும் வாழ்வியல்
மாற்றங்கள் தான்
எத்தனை!!! எத்தனை!!!!

மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாதது! விடுங்க ரேவா! நல்லதே நடக்கும்!!

பட் கவிதை அருமை...

ஹி ஹி...வாங்க நண்பா...நடக்கட்டும்
நடக்கட்டும்...நல்லது நடக்கட்டும்..
நல்லது எப்படி நடக்கும்... சூ போட்டா? போடாமையா.. ஹி ஹி சும்மா உங்க பதிவு எல்லாம் படிக்கிறேன் ல அதான் நகைச்சுவை உணர்வு பொங்கி வழியுது... ஹி ஹி... சும்மா விளையாண்டேன்... டோன்ட் டேக் இட் சீரியஸ்...
நன்றி ரஜீவன் உங்கள் வருகைக்கு

ரேவா சொன்னது…

சமுத்ரா said...

நன்றாக இருக்கிறது ரேவா..

வாங்க சமுத்ரா ரொம்ப நாள் ஆகிடுச்சு நீங்க வந்து.... நன்றி நண்பா உங்கள் வருகைக்கு, அடிக்கடி வாருங்கள்...

வேங்கை சொன்னது…

//புரிந்துகொண்டேன்னடா!!!!

* மாற்றங்கள் வாழ்கையில்
மாறாமல் இருக்க நம் வாழ்வில்
நம்மை வந்தடையும் வாழ்வியல்
மாற்றங்கள் தான்
எத்தனை!!! எத்தனை!!!//

புரிந்தால் சரி, நல்லது தானே !?...என்ன பீளிங்க்சச்ச்ச்ஸ்.......ம்ம்ம் ..

கவிதையும் ஆழமும் அழகோ அழகு ...

Prabu Krishna சொன்னது…

எத்தனையோ எத்தனை...

பந்து பொறுக்கிப் போட போனவர் சீக்கிரம் வரட்டும்.....

ரேவா சொன்னது…

வேங்கை said...

//புரிந்துகொண்டேன்னடா!!!!

* மாற்றங்கள் வாழ்கையில்
மாறாமல் இருக்க நம் வாழ்வில்
நம்மை வந்தடையும் வாழ்வியல்
மாற்றங்கள் தான்
எத்தனை!!! எத்தனை!!!//

புரிந்தால் சரி, நல்லது தானே !?...என்ன பீளிங்க்சச்ச்ச்ஸ்.......ம்ம்ம் ..

கவிதையும் ஆழமும் அழகோ அழகு ...
சும்மா பீலிங்க்ஸ்......ஹ ஹ நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

பலே பிரபு said...

எத்தனையோ எத்தனை...

பந்து பொறுக்கிப் போட போனவர் சீக்கிரம் வரட்டும்.....

வரவே வேணமே... நான் இன்னும் கொஞ்சம் நாள் ஹாப்பி அஹ இருந்துக்கிறேன் நண்பா...அதோட அவரு இந்திய வேர்ல்ட்கப் ல வின் ஆணாத்தான் வருவாராம்... ஹி ஹி

RAJA RAJA RAJAN சொன்னது…

மீள் பதிவயினும் அருமை. நல்ல புரிதல்.

ரேவா சொன்னது…

ராஜ ராஜ ராஜன் said...

மீள் பதிவயினும் அருமை. நல்ல புரிதல்.
நன்றி நண்பா உங்கள் புரிதலுக்கான மறுமொழிக்கு... இனி தொடர்ந்து வாருங்கள்...

Unknown சொன்னது…

தினம் தினம் உன் குறுந்தகவல்களால்
நிறப்பப்படும் என் கைப்பேசி
இபோதெல்லாம் கணவனை
இழந்த கைம்பெண்ணாய்
மாறியதன் மாற்றம்
என்னடா?????...//

ஏன் என்றல் மெசேஜ் கார்டு முடிந்து இருக்கும்..எம்புட்டுதான் சிலவு பண்ண...:)

Unknown சொன்னது…

தீபிகா said...
அப்படிஎங்கங்க போயிட்டார் அவர்.. ரொம்ப பீலிங்கா இருக்கு.//



ஏன் ஏன் ஒருத்தர் சந்தோசமா இருக்கிறது பிடிக்காத உங்களுக்கு...கொஞ்ச நாள் நிம்மதியா இருக்க விடமாட்டேன்கலே..

Unknown சொன்னது…

இப்படி எத்தனையோ,
இருந்தும் ஓர்
**எத்தனை** போல்
நம்மை ஆட்டுவிப்பது
எது! தோழா??//

வெயில் அதிகமா ஆகிவிட்டது கொஞ்ச நாள் அப்டித்தான் இருக்கும்

Unknown சொன்னது…

.மாமா நீங்க எங்க இருக்கேங்க?.//

அத்தை பொண்ணு :)

நான் இங்க இருக்கேன்.
நான் இங்க இருக்கேன்.
நான் இங்க இருக்கேன்......:)

...........அப்படி எல்லாம் சொல்லி மாட்டிக்க மாட்டேன்..ஹஹா

மயாதி சொன்னது…

கொடுத்து வைத்தவன் .....உங்களுக்கு கிடைத்தவன் அல்லது கிடைக்கப் போகிறவன் ...

ரேவா சொன்னது…

siva said...

தினம் தினம் உன் குறுந்தகவல்களால்
நிறப்பப்படும் என் கைப்பேசி
இபோதெல்லாம் கணவனை
இழந்த கைம்பெண்ணாய்
மாறியதன் மாற்றம்
என்னடா?????...//

ஏன் என்றல் மெசேஜ் கார்டு முடிந்து இருக்கும்..எம்புட்டுதான் சிலவு பண்ண...:)

ஹே சிவா கரெக்ட் அஹ புரிஞ்சுகிட்டயே, :-)

ரேவா சொன்னது…

siva said...

தீபிகா said...
அப்படிஎங்கங்க போயிட்டார் அவர்.. ரொம்ப பீலிங்கா இருக்கு.//



ஏன் ஏன் ஒருத்தர் சந்தோசமா இருக்கிறது பிடிக்காத உங்களுக்கு...கொஞ்ச நாள் நிம்மதியா இருக்க விடமாட்டேன்கலே..

ஹி ஹி ஆமாம் சிவா.... பாவம் கொஞ்ச நாள் சந்தோசமா இருந்துட்டு போகட்டும்..

ரேவா சொன்னது…

siva said...

இப்படி எத்தனையோ,
இருந்தும் ஓர்
**எத்தனை** போல்
நம்மை ஆட்டுவிப்பது
எது! தோழா??//

வெயில் அதிகமா ஆகிவிட்டது கொஞ்ச நாள் அப்டித்தான் இருக்கும்

:-)ஓஹ அப்டியா... ஐயோ இது தெரியாம போயிடிச்சே

ரேவா சொன்னது…

siva said...

.மாமா நீங்க எங்க இருக்கேங்க?.//

அத்தை பொண்ணு :)

நான் இங்க இருக்கேன்.
நான் இங்க இருக்கேன்.
நான் இங்க இருக்கேன்......:)

...........அப்படி எல்லாம் சொல்லி மாட்டிக்க மாட்டேன்..ஹஹா...

ஹஹா...ஹஹா...ஹஹா...

ரேவா சொன்னது…

மயாதி said...

கொடுத்து வைத்தவன் .....உங்களுக்கு கிடைத்தவன் அல்லது கிடைக்கப் போகிறவன் ...

அப்டியா சொல்லுறேங்க.. ஹே ஹே நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும்... பாப்போம் எப்டி கிடைக்கிறாருனு.. நன்றி மயாதி உங்க முதல் வருகைக்கும் மறுமொழிக்கும்... தங்கள் தளம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது

கவிதை பூக்கள் பாலா சொன்னது…

தோழியே அருமையா எழுதறீங்க என்னாலத்தான் தெடர்ச்சிய வந்து படிக்க முடியல . படித்த வரை அருமையா அர்த்தங்கள் நிறைந்திருக்கு வாழ்த்துக்கள்

எவனோ ஒருவன் சொன்னது…

ஏற்கனவே இந்த வரிகளை படிச்ச ஞாபகம் இருந்துச்சு. நல்லா வேளை
கடைசில நீங்களே சொல்லிட்டீங்க இது பழைய பதிவு தான்னு :-) நான் பழைய பதிவிற்கே கருத்து சொன்னதுனால இதற்கு பின்னூட்டமிட மாட்டேன் :-)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

ஏற்கனவே இந்த வரிகளை படிச்ச ஞாபகம் இருந்துச்சு. நல்லா வேளை
கடைசில நீங்களே சொல்லிட்டீங்க இது பழைய பதிவு தான்னு :-) நான் பழைய பதிவிற்கே கருத்து சொன்னதுனால இதற்கு பின்னூட்டமிட மாட்டேன் :-)

ஹி ஹி அப்போ இது மட்டும் என்னவாம் நன்றி நண்பா

ரேவா சொன்னது…

bala said...

தோழியே அருமையா எழுதறீங்க என்னாலத்தான் தெடர்ச்சிய வந்து படிக்க முடியல . படித்த வரை அருமையா அர்த்தங்கள் நிறைந்திருக்கு வாழ்த்துக்கள்..

நேரம் கிடைக்கும் போது வாருங்கள் நண்பா... நன்றி உங்கள் மறவாத வருகைக்கும் வாழ்த்திய மறுமொழிக்கும்

தல தளபதி சொன்னது…

போட்டோல அந்த பாப்பா ஏன் டல்லா இருக்கு?