உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 23 மார்ச், 2011

வாழ்க்கை வழக்கு....

* கடவுளால்
ரச்சிக்கப் பட்ட திருமண வாழ்க்கை,
ரத்து செய்யப்பட்டது
சட்டத்தால்...

* புரிகின்ற நிஜங்களையும்
புரியாத பொய்களையும்
பெரிது படித்தியதால்
பிரிவினை கண்டது
அவர்கள் வாழ்க்கை...

* இணைக்கப்பட்ட இதயங்கள்

பிரிந்து கொள்ள,
இருவரால் பிறந்த
இதயம் மட்டும்
தனிமையில்....

* வழக்குகள் வாழ்க்கையை
முடிவுக்கு கொண்டுவர,
மழலையின்
வாழ்க்கை மட்டும்
வழக்காய்...
அவர்கள்
காணாமல் போன காதல்
முன்னே ....

முந்தையக் கவிதை : காதல் மழை

44 கருத்துகள்:

Unknown சொன்னது…

நீசித்த உள்ளத்தின் வரிசையில் நானும் இடன் பிடித்துவிட்டேன்....
ஒருமுறை மட்டுமே வரும் இந்த திருமணத்தை வடிக்கையாக்கி விட்ட சிலரால் நம்மிடையே அதைக் கண்டால் பயம் தான் தோன்றுகிறது
நானும் அதை கண்டு அஞ்சி...................
எங்கே பிறந்திக்கிறாலோ என் :(

சக்தி கல்வி மையம் சொன்னது…

அருமையான கவிதை தோழி...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

யாதார்த்த கவிதை.. வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நாட்டில் பல்வேறு குடும்பங்களில் நிகழும் பிரச்சனை இது...
குழந்தைகளின் நிலைதான் பரிதாபம்...

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

///வழக்குகள் வாழ்க்கையை
முடிவுக்கு கொண்டுவர,
மழலையின்
வாழ்க்கை மட்டும்
வழக்காய்...///

இன்றைய பலரின் நிலை இப்படித்தான் உள்ளது.. பாவம் அந்த பிஞ்சுகளை பற்றி நினைப்பது இல்லை.

எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//மழலையின்
வாழ்க்கை மட்டும்
வழக்காய்...//

ஒ......வலி..........

logu.. சொன்னது…

இயல்பாய் இருக்கு..

வாழ்த்துகள்..

Yaathoramani.blogspot.com சொன்னது…

புரிகிற நிஜங்களையும்
புரியாத பொய்களையும்
மிகச் சரியாக புரிந்துகொள்ளாததுதான்
அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்
அதை மிகச் சரியாகச் சொல்லிப்போகிறது
உங்கள் படைப்பு
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

ரேவா சொன்னது…

Maheswaran.M said...

நீசித்த உள்ளத்தின் வரிசையில் நானும் இடன் பிடித்துவிட்டேன்....
ஒருமுறை மட்டுமே வரும் இந்த திருமணத்தை வடிக்கையாக்கி விட்ட சிலரால் நம்மிடையே அதைக் கண்டால் பயம் தான் தோன்றுகிறது
நானும் அதை கண்டு அஞ்சி...................
எங்கே பிறந்திக்கிறாலோ என் :(

மிக்க நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கு...பயம் வேண்டாம் நல்லதே நடக்கும் நன்றி உங்கள் மறுமொழிக்கு இனி தொடர்ந்து வாருங்கள்...

ரேவா சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அருமையான கவிதை தோழி...

நன்றி கருண் உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

யாதார்த்த கவிதை.. வாழ்த்துக்கள்..

நன்றி # கவிதை வீதி # சௌந்தர் உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

நாட்டில் பல்வேறு குடும்பங்களில் நிகழும் பிரச்சனை இது...
குழந்தைகளின் நிலைதான் பரிதாபம்...

உண்மைதான் நண்பரே, இந்த மாதிரி பெற்றோர்களால் பிள்ளைகள் பாடு தான் கொஞ்சம் வேதனை...உங்கள் வருகைக்கு நன்றி..

ரேவா சொன்னது…

தமிழ்வாசி - Prakash said...

///வழக்குகள் வாழ்க்கையை
முடிவுக்கு கொண்டுவர,
மழலையின்
வாழ்க்கை மட்டும்
வழக்காய்...///

இன்றைய பலரின் நிலை இப்படித்தான் உள்ளது.. பாவம் அந்த பிஞ்சுகளை பற்றி நினைப்பது இல்லை.

எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

உண்மை தான் தமிழ் வாசி தான் நிலைக்காய், தன்னில் வளர்ந்த உயிரை தவிர்க்கத் தான் செய்கின்றனர் சிலர்..உங்கள் வருகைக்கு நன்றி..

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//மழலையின்
வாழ்க்கை மட்டும்
வழக்காய்...//

ஒ......வலி..........

:-(

நன்றி மனோ உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

logu.. said...

இயல்பாய் இருக்கு..

வாழ்த்துகள்..

நன்றி logu. உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

Ramani said...

புரிகிற நிஜங்களையும்
புரியாத பொய்களையும்
மிகச் சரியாக புரிந்துகொள்ளாததுதான்
அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் அதை மிகச் சரியாகச் சொல்லிப்போகிறது உங்கள் படைப்பு
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

கண்டிப்பாக எந்த பிரச்சனையையும் புரிந்து கொள்ளாததுதான் பிரிவுக்கு காரணம்...உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி திரு. ரமணி அவர்களே.

Unknown சொன்னது…

ஹிலோ 1 2,3.

321..

மைக் டெஸ்டிங் என்னப்பா

கேட்கின்றதா...:)

Unknown சொன்னது…

ஹிலோ 1 ௨ ௩ மைக் டெஸ்டிங் என்னப்பா கேட்கின்றதா...

Unknown சொன்னது…

me the first

neenga thiripi post podunga...

ரேவதி கட்டம் போட்டு பதில் சொல்லி கலக்குறீங்க வாழ்த்துக்கள்
....:)

test சொன்னது…

அருமை! அதிலும் முதலாவது அசத்தல்!

karthikkumar சொன்னது…

:))

Chitra சொன்னது…

புரிகின்ற நிஜங்களையும்
புரியாத பொய்களையும்
பெரிது படித்தியதால்
பிரிவினை கண்டது
அவர்கள் வாழ்க்கை...

....... பல பிரச்சனைகளின் மூல காரணங்களை, தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.

sulthanonline சொன்னது…

விட்டுக்கொடுக்கும் மனோபாவம் , புரிந்துணர்வு இல்லாதது போன்ற சிறு பிரச்சினைகளுக்காக கண்மூடித்தனமாக விவாகரத்து போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுடைய வாழ்க்கை மட்டுமல்லாது குழந்தையின் எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றது. என்னைப் பொருத்தவரை விவாகரத்திற்கு முன் நல்ல மனோதத்துவ ஆலோசகரிடம் கவுன்சிலிங் சென்றால் நல்லது.

கவிதை யதார்த்தமாக இருந்தது. superb

சௌந்தர் சொன்னது…

மழலையின்
வாழ்க்கை மட்டும்
வழக்காய்...
அவர்கள்
காணாமல் போன காதல்
முன்னே ....////

இந்த லைன் செம....ரேவா..

எனக்கு உங்க கிட்ட பிடித்ததே இது தான் காதல் கவிதை மட்டும் இல்லாமல் அனைத்து விதமான கவிதை எழுதுறீங்க சூப்பர்

ரேவா சொன்னது…

siva said...

me the first

neenga thiripi post podunga...

ரேவதி கட்டம் போட்டு பதில் சொல்லி கலக்குறீங்க வாழ்த்துக்கள்
....:)

திருப்பினா எப்படி துபாய், துபாய் குறுக்கு சந்து, அந்த மாதிரியா ஹ ஹ

ஹி ஹி நாங்க கட்டம் போட்டு கலக்குவோம்... நன்றி சிவா உன் வருகைக்கு

ரேவா சொன்னது…

ஜீ... said...

அருமை! அதிலும் முதலாவது அசத்தல்!

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

karthikkumar said...

:))

:-(

ரேவா சொன்னது…

Chitra said...

புரிகின்ற நிஜங்களையும்
புரியாத பொய்களையும்
பெரிது படித்தியதால்
பிரிவினை கண்டது
அவர்கள் வாழ்க்கை...

....... பல பிரச்சனைகளின் மூல காரணங்களை, தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.

நன்றி சித்ரா உங்கள் கருத்துக்கு

ரேவா சொன்னது…

விட்டுக்கொடுக்கும் மனோபாவம் , புரிந்துணர்வு இல்லாதது போன்ற சிறு பிரச்சினைகளுக்காக கண்மூடித்தனமாக விவாகரத்து போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுடைய வாழ்க்கை மட்டுமல்லாது குழந்தையின் எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றது. என்னைப் பொருத்தவரை விவாகரத்திற்கு முன் நல்ல மனோதத்துவ ஆலோசகரிடம் கவுன்சிலிங் சென்றால் நல்லது.

கவிதை யதார்த்தமாக இருந்தது. superb

உண்மைதான் நண்பரே..
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நன்றி நன்றி.........

ரேவா சொன்னது…

சௌந்தர் said...

மழலையின்
வாழ்க்கை மட்டும்
வழக்காய்...
அவர்கள்
காணாமல் போன காதல்
முன்னே ....////

இந்த லைன் செம....ரேவா..

எனக்கு உங்க கிட்ட பிடித்ததே இது தான் காதல் கவிதை மட்டும் இல்லாமல் அனைத்து விதமான கவிதை எழுதுறீங்க சூப்பர்...

நன்றி சகோ...இப்பொழுதே காதல் தவிர்த்தும் எழுத முயன்றேன்... நன்றி உன் வருகைக்கும் மறுமொழிக்கும்...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

குழந்தைகள் பாடுதான் பெரும்பாடு ரேவா யார் அதை நினைக்கிறார்கள்?
`

நல்ல கவிதைகளை சொந்தமாக்கிகொண்டுவருகிறீர்கள் பாராட்டுகள்..!

தல தளபதி சொன்னது…

பீலிங்க்ஸ்......
ரூட்ட மாத்து...

தல தளபதி சொன்னது…

ரேவா மேடம், அந்த கமெண்ட்ஸ் அப்ரூவல எடுங்க...

ரேவா சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் said...

குழந்தைகள் பாடுதான் பெரும்பாடு ரேவா யார் அதை நினைக்கிறார்கள்?
`

நல்ல கவிதைகளை சொந்தமாக்கிகொண்டுவருகிறீர்கள் பாராட்டுகள்..!

நன்றி வசந்த் உங்கள் மனமார்ந்த பாராட்டுதலுக்கு...:-)))

ரேவா சொன்னது…

தல தளபதி said...

பீலிங்க்ஸ்......
ரூட்ட மாத்து...

அட வாங்க தல என்ன இன்னைக்கு இந்த பக்கம்.. ஹ ஹ

ரேவா சொன்னது…

தல தளபதி said...

ரேவா மேடம், அந்த கமெண்ட்ஸ் அப்ரூவல எடுங்க...

maaten po..........

தல தளபதி சொன்னது…

//அட வாங்க தல என்ன இன்னைக்கு இந்த பக்கம்.. ஹ ஹ//

எப்டி மேடம் இருக்கீங்க? பிரபல பதிவர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் மேடம்...

ரேவா சொன்னது…

தல தளபதி said...
//அட வாங்க தல என்ன இன்னைக்கு இந்த பக்கம்.. ஹ ஹ//

எப்டி மேடம் இருக்கீங்க? பிரபல பதிவர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் மேடம்...

Friday, March 25, 2011

என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே.. ஐ ஆம் பாவம் ப்ளீஸ்

நிரூபன் சொன்னது…

கடவுளால்
ரச்சிக்கப் பட்ட திருமண வாழ்க்கை,
ரத்து செய்யப்பட்டது
சட்டத்தால்...//

விவாகரத்தை வர்ணமடித்துச் சொல்லுகிறீர்கள்.

நிரூபன் சொன்னது…

வழக்குகள் வாழ்க்கையை
முடிவுக்கு கொண்டுவர,
மழலையின்
வாழ்க்கை மட்டும்
வழக்காய்...
அவர்கள்
காணாமல் போன காதல்
முன்னே ....//

சகோ யதார்த்த நடையில் இன்றைய வாழ்வியல் யதார்த்தத்தை கவிதை எனும் கமரா மூலம் படம் பிடித்துள்ளீர்கள்.

கவிதையில் கொஞ்சம் கவனமெடுத்திருந்தால் இன்னும் வார்தைகளால் வாழ்க்கையின் வாழ்வியலை விளக்கியிருக்கலாம்.

டெம்பிளேட் பின்னூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்பதால் கொஞ்சம் லேட்.

ரேவா சொன்னது…

நிரூபன் said...

கடவுளால்
ரச்சிக்கப் பட்ட திருமண வாழ்க்கை,
ரத்து செய்யப்பட்டது
சட்டத்தால்...//

விவாகரத்தை வர்ணமடித்துச் சொல்லுகிறீர்கள்.

சாயம் போன வாழ்க்கையை வர்ணம் கொண்டே வரைந்து பாத்தேன்.... சகோ இருந்தாலும்
சோகம் தான் மிஞ்சுகிறது இந்த சாயம் இழந்த (வெளுத்த ) பலர் வாழ்க்கையை பார்க்கும் போது

ரேவா சொன்னது…

நிரூபன் said...

வழக்குகள் வாழ்க்கையை
முடிவுக்கு கொண்டுவர,
மழலையின்
வாழ்க்கை மட்டும்
வழக்காய்...
அவர்கள்
காணாமல் போன காதல்
முன்னே ....//

சகோ யதார்த்த நடையில் இன்றைய வாழ்வியல் யதார்த்தத்தை கவிதை எனும் கமரா மூலம் படம் பிடித்துள்ளீர்கள்.

கவிதையில் கொஞ்சம் கவனமெடுத்திருந்தால் இன்னும் வார்தைகளால் வாழ்க்கையின் வாழ்வியலை விளக்கியிருக்கலாம்.

டெம்பிளேட் பின்னூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்பதால் கொஞ்சம் லேட்.

இனி வரும் பதிவுகளில் முயற்ச்சிக்கிறேன் சகோ... நன்றி சகோ... காலம் தாழ்த்தி வந்தாலும் தூவானம் என்றும் அழகு தானே...
--

எவனோ ஒருவன் சொன்னது…

////இணைக்கப்பட்ட இதயங்கள்
பிரிந்து கொள்ள,
இருவரால் பிறந்த
இதயம் மட்டும்
தனிமையில்....////

அருமை தோழி. எப்படி நீங்க மட்டும் இப்படி எல்லாம் யோசிச்சு எழுதுறீங்க? நல்லா இருக்கு. விவாகரத்தின் வலியை தெளிவாக சொல்லி இருக்கீங்க....

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

////இணைக்கப்பட்ட இதயங்கள்
பிரிந்து கொள்ள,
இருவரால் பிறந்த
இதயம் மட்டும்
தனிமையில்....////

அருமை தோழி. எப்படி நீங்க மட்டும் இப்படி எல்லாம் யோசிச்சு எழுதுறீங்க? நல்லா இருக்கு. விவாகரத்தின் வலியை தெளிவாக சொல்லி இருக்கீங்க....

நன்றி நண்பா... உங்கள் வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கும்... நீங்கள் தரும் உற்சாகமே எனை எழுதத் தூண்டுகிறது...