
காதலுக்கென்றுதனிமொழியேதுமில்லாமல்
போனாலும் போய்விடும்கொஞ்சம் வாய் திறந்து பேசிவிடு....
விதைத்தவனாய்
நீ இருக்க
தன்னை தானாய்
வளர்த்துக்கொள்கிறது
இந்த காதல்.....
ஆணியம் பேசிய உன்னையும்
பெண்ணியம் பேசிய என்னையும்
பார்த்து சிரித்துகொள்கிறது
இந்த காதலியம்...
தீர்ந்துவிடுமோ
என்ற...

ஊரெல்லாம் உறங்கிப்போன
ஓர் இரவில்
உறக்க மறந்த நிமிடங்களினால்
உறைந்து போய் நானிருக்க,
அறையின் ஓரத்தில் யாரோ
அழுவதுபோன்ற குரல்
அடித்துப்போட்டது
என் கவனத்தை..
கவனமீர்த்த திசைநோக்கி
நடந்துசெல்கிறேன்,
மீதமாய் மிதந்தலையும்
அவன் நினைவுகள்
கழுத்தை நெறிக்க
கண்ணீரோடு...

என் நண்பனின் நண்பனாய்
முன்பொரு தருணத்தில்
நீ
எனக்கு அறிமுகமானதாய்
ஞாபகம்....
இன்று
பரஸ்பர அறிமுகத்துக்குபின்
சிக்கன சிரிப்பில்
சிறைபிடித்துக்கொண்டேன்
உன் சிநேகத்தை..
உள்ளுக்குள் ஒர் உராய்வு
உந்தன் விழிகள்
என்னை நோக்குகையில்..
வெளிகாட்டா வகையில்
கடந்து சென்றேன்
அவ்விழியிடம்...
பேசிக்கொண்டே...

புழுதிமண் பரக்க
நாம்
விளையாண்ட விளையாட்டில்
விளையாட்டாய் விடப்பட்ட
வார்த்தைகளில் விரிசல்கண்ட
பிரியமது....
உண்மைக்கும் பொய்மைக்கும்
சரிக்கும் தவறுக்கும்
வித்தியாசம் பெரிதாய் விளங்கிடாத
வயதுமது...
இருந்த பிரியங்களையும்
புரிந்த சண்டைப்புதைமணலில்
புதைத்துக்கொண்ட
பருவமது...
கிட்டகிடைந்த...

வணக்கம் உறவுகளே... அனைவரும் நலமா?.... கவிதை தளத்தில் பயணங்கள் பற்றி பகிர்ந்திட நினைத்ததின் நோக்கம், சில பயணங்கள் நாம் நினைத்ததையும் தாண்டி ஏதோ ஒரு மாற்றத்தை நிகழ்த்திவிட்டு போகும், அப்படி எனக்குள்ளான மாற்றங்களை எழுத்தில் ஏற்றிடத்தான் இந்த பதிவு... ஏற்கனவே என் சென்னை வாழ்க்கையை பற்றி தொடர ஆரம்பிச்சு...

உனக்காக எங்கு காத்திருந்தாலும்
அவ்விடத்தையெல்லாம்
விட்டுவிட்டு
நீ இருக்கும் இடத்தை நோக்கியே
இழுத்துவருகிறது
மனது...
உன் தோள்களில்
சாய்ந்துகொள்வதற்காவே
பேருந்து பயணத்தையே
தேர்வு செய்கின்றேன்யென்பதை
நீ அறிவாயா?........
உன் அழகு சுமந்துவரும்
இந்த கவிதையை
இறக்க இடம் காணாமல்
தேடுகிறேன்
இப்புவி...

இவன்என் வரையறுக்கப்பட்ட வார்த்தைவாழத்தூண்டும் அனுபவம்கூடவே இருக்கும் அறை நிலா..
எந்த புள்ளியில் தொடங்கினாலும்அது உன்னையேவந்து சேர்கின்றது..
எழுதா பக்கங்களைப்போலஒரு அழகான் கவிதைஇருந்துவிடுமாஉன்னை பற்றி சொல்ல...
தனிமையில் துணைக்குவரும்நிலவை போலநிழலைப்போல எனக்கு...

வார்த்தை வர சக்தியற்று கிடக்கும்
இந்நாட்களின் வலிகளைப்போல்
இனிவரும் நாள் இருந்திடாது....
உடம்பெங்கும் இல்லாக்காயம்
உயிரில் வலிகொடுக்க
கண்ணீரில் கரைக்க நினைத்து
கவிதையில் முடிக்கிறேன்
இத்துயரை...
உள்ளுணர்வும்
உயிர்க்கூடும்
செயலற்றுக்கிடக்க,
செத்துகிடக்கும்
என்...