உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 31 டிசம்பர், 2013

போய் வா நண்பா

ஒவ்வொரு வருடத்தின் இறுதியும் அச்சுறுத்துவதாய் இருக்கும் மாயக் குகையின் கைவிளக்காய் இருக்கிறது.. கடந்து வந்த கரடுமுரடான பயணங்கள் பலவற்றிலும் கை சேர்ந்த அனுபவம், துணிச்சலின் துணையோடு புத்தாண்டிற்குப் போக பணிக்க, இன்னுமொரு குகை, புரியாத குகை வாழ்க்கை, வாழ்க்கை அங்கே நிறுத்தி வைத்திருக்கும் புலனாகா...

சனி, 7 டிசம்பர், 2013

நான் என்பவள்

பூங்கொத்து நின் பார்வை களி நடனம் உன் சிரிப்பு ஊழிக்கூத்து உன் கோவம் மேகக்கூட்டம் உன் ஊடல் மழைச்சாரல் நின் தீண்டல் கோப்பை தேனீர் உன் அணைப்பு பெருங்கடல் உன் நேசம் நான் என்பவள் உன் வரைக்கும்... ...

சனி, 9 நவம்பர், 2013

சடங்கு

இறுதியாய் முகம் பார்க்கும் மயான சடங்கிற்கும் அழைத்தே செல்கிறாய் அதுவரை அறியாத உயிர் பயமொன்று உள்ளுக்குள் உதறலெடுக்க கனவுகளை எரியூட்டி கண்ணிர் குடமுடைத்து திரும்பிப்பார்க்கமலே அங்கிருந்து கடக்கிறாய் பழக்கப்பட்ட கையசைப்பிற்கும் தோள் சாய்தலுக்கும் வழியின்றி மறைய வரைந்து போகிறாய் சிறு புள்ளியை...

புதன், 23 அக்டோபர், 2013

Wall ஆல் வந்தது

  ரொம்ப நாள் கழித்து மனது சொன்ன ஒரு விசயத்தை எழுத்தில் ஏற்றுவது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாவும், நிறைவாவும் இருக்கு..முகனூல் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை தருது.. சிலருக்கு தன் துயரங்களின் வடிகாலாகவும், சிலருக்கு துயரங்கள் ஆரம்பமாகும் இடமாகவே கூட முகநூல் இருக்கு..ஆக யார் எங்க...

வியாழன், 3 அக்டோபர், 2013

தினசரி கவிதை

இன்றைக்கான நாள் எப்போதும் போல புன்னகை தவழ எதிரினில் இருக்கும் எவருக்கும் புரிந்திடா உதட்டுசாயமென மாறின பழக்கம் அலுவலக தொடர்பு மாலை தாண்டிய களைப்பு தவறவிட்ட வாய்ப்பு தட்டிக்கழிக்க காரணம் தடுமாற்றம் தந்த அவமானம் பதிலடி கொடுத்த வன்சொல் பேருந்து நெரிசல் எதிரினில் எரிச்சலென ஏகபோகமாய் இந்நாள் கழிய இன்றைக்கு...

புதன், 2 அக்டோபர், 2013

என்ன செய்ய?

பேசுவதற்காகத்தான் உனை வரச்சொன்னேன் வரும்வழியெல்லாம் மனம் பேசியச்சொற்களின் அயற்சி உனைபார்த்ததும் ஓய்வெடுத்துகொள்ளுமென சத்தியமாய் நினைக்கவேயில்லை மெளனமாய் இந்த நிமிடம் துளி புன்னகையில்லை சினேக விசாரிப்புகள் இல்லை நம்மிடையே சூழ்ந்திருந்த அந்த உன்னத உணர்வும் இந்நிமிடம் கிடைக்கவில்லை உன் பார்வையின்...

செவ்வாய், 1 அக்டோபர், 2013

ஒற்றைச்சிறகு

காதலெனும் சிறகெடுத்து நானுனக்கு மாட்டிவிட்டபின் இலக்கின்றி பறந்தலைந்த பொழுதொன்றில் தான் எங்கோ தொலைத்திருந்தேன் என் ஒற்றைச்சிறகை சில்லு சில்லாய் சிதறிக்கிடக்கும் பிரியங்களின் வார்த்தைகளிலெல்லாம் நிறைந்து கிடக்கின்ற முகம் இறைத்து போட்டபடியிருக்கிறது சபையேறா பேச்சுகளை கதைசொல்லி களைத்து போகின்ற இடம்...

திங்கள், 30 செப்டம்பர், 2013

குரல்

ஊமையின் கனவில் நித்தம் வருகிறது ஒரு குரல் முற்றிலும் பழக்கப்பட்டதாய் மாறிப்போன நாளொன்றின் துவக்கத்திலிருந்து உறக்கம் கெடுக்கிறது அக்குரல் பேசத்தெரிந்தவாறு பேசிச்சிரித்தவாறு அழுகையின் அந்தம் சொன்னவாறு அவனோடே உரையாடலைத்தொடர்ந்தவாறு தன்னை நிலைத்து வைக்கிறது அக்குரல் பசிக்கு உணவாய் பழக்கத்தின் நட்பாய்...

புதன், 18 செப்டம்பர், 2013

நான் என்பவள் பைத்தியக்காரி

அனேகப்பெயர் வைத்தாகிவிட்டது அதனாலென்ன ஆண்டொன்று கூடும்பொழுதெல்லாம் அவசரப்பிரிவு நோயாளியின் வாழ்வை குறித்த பயமென தொற்றிக்கொண்டே வருகிறது நாட்களின் நகர்வை பற்றிய இருள்... இன்னதென்று சொல்லாமல் இதனாலென தள்ளாமல் தட்டப்படும் கதவுகளை திறந்தே வைத்திருக்க சலிப்புற்ற வார்த்தைகள் சருகுகளாய் பெருநிலத்தில்...

திங்கள், 16 செப்டம்பர், 2013

ரகசிய அறை

திறவுகோலது கையிலே இருக்க திறந்திடும் முன்னே நின்றிடு வார்த்தைகளாலான அறையெனது உனக்கு பிடித்தச்சொற்களை உருவுவதில் தொடங்கி நீடித்துகொள் எனதறையில் தொடர்ந்தென்னை வார்த்தைகளால் தோற்கடி தோற்பதில் தான் ப்ரியத்தின் உயிருள்ளதென்பதை நானுணர்ந்ததைப் போல் நீ உணர் உணவாகும் வரை உயிர் தேடலென்பது தொடருமென்பது...

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

தேவைப்படுவதெல்லாம் காரணங்களே...

  உன் முகம் தேவையில்லையெனக்கு அப்படியே என்னுடையதும் பெயர் மொழிதொலைபேசி எண் எனஎல்லாமே தேவையற்றது தான்நீ போலியென சந்தேகித்தாலும் கூடநிமிர்ந்து கிடக்குமிடத்தில் குனிதல்உன் குணமென சொல்லிவேஷம் போடுவதை தவிர்சாயம் வெளுத்த கூட்டங்கள்நானறிவேன்..உனக்குள்ளிருக்கும் எதிர்பார்ப்பைசூன்யப் பெருவெளியில்...

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

என்ன செய்ய

பேசுவதற்காகத்தான் உனை வரச்சொன்னேன் வரும்வழியெல்லாம் மனம் பேசியச்சொற்களின் அயற்சி உனைபார்த்ததும் ஓய்வெடுத்துகொள்ளுமென சத்தியமாய் நினைக்கவேயில்லை மெளனமாய் இந்த நிமிடம் துளி புன்னகையில்லை சினேக விசாரிப்புகள் இல்லை நம்மிடையே சூழ்ந்திருந்த அந்த உன்னத உணர்வும் இந்நிமிடம் கிடைக்கவில்லை உன் பார்வையின்...

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

நண்பனாகவே இருந்திருக்கலாம்

காதலெனும் சிறகெடுத்து நானுனக்கு மாட்டிவிட்டபின் இலக்கின்றி பறந்தலைந்த பொழுதொன்றில் தான் எங்கோ தொலைத்திருந்தேன் என் ஒற்றைச்சிறகை சில்லு சில்லாய் சிதறிக்கிடக்கும் பிரியங்களின் வார்த்தைகளிலெல்லாம் நிறைந்து கிடக்கின்ற முகம் இறைத்து போட்டபடியிருக்கிறது சபையேறா பேச்சுகளை கதைசொல்லி களைத்து போகின்ற இடம்...

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

மெளனப்பாடல்

  மெளனம் ஒரு பாடலாகவே இருந்தது நமக்கு.. இசைக்குறிப்புகள் பற்றிய கவலையின்றி தாளம் பற்றிய தயங்கங்களின்றி சுதி சுத்தமாய் பாடப்படுமோவென்ற பயங்களின்றி ப்ரியத்தின் வரிகள் சரியாய் படிக்கப்பட்டதன் பொருட்டு இந்த மெளனம் ஒரு பாடலாகவே இருந்தது ந ம க் கு..... -ரேவா ...

திங்கள், 29 ஜூலை, 2013

முத்தவழிச்சாலை

  இருபக்கமும் அடர்ந்திருக்கும் அவ்வசீகர சாலை ஆரம்பத்தில் குறுகளாகி ஆரம்பித்ததன் வேகத்தின் கணக்கில் லாவக ஓட்டம் பிடிக்க அழுத்தம் நிறைந்த பகுதிக்குள் தடையின்றி செல்ல நீலியின் கைகள் ஏதுவாய் அமைய தூரமாய் செல்லச்செல்ல செல்ல கைகளாய் மாறிய நிழல் உதிர்ந்த காரணங்களையெல்லாம் கிளையேற்றி பார்க்கும்...

சனி, 27 ஜூலை, 2013

என் டைரிக்குறிப்பில் நீ...

காலத்தின் முகம் அணிந்துகொண்டவனுக்கு,  நானிருக்கும் வரை நலமாய் இருப்பாய் என்ற எண்ணத்திலே எழுத்துகளின் ஊடே உனக்கொரு வலை பின்கிறேன்...எழுத்தில் உன் முகம் பார்க்க, எழுதிட சுகம் சேர்க்கும் உன் நினைவுகளே உற்சாகமெடுத்து ஓடவைக்கட்டும் இனி வரும் வரிகளை..எழுத மறந்து போன நாட்களில்...

வெள்ளி, 26 ஜூலை, 2013

வீட்டுக்கதவு

  எல்லோர் வீட்டின் கதவுகளும் திறந்தே தான் கிடக்கிறது உள்ளே வருவதற்கான அனுமதி மட்டும் உரிமையாளறென்ற பெயரில் நிறுத்தற்குறிவைக்க குறியுடைத்து உள் நுழைபவர்களைப்பற்றிய கவலையோ நம் குறிப்புகளை அவர்கள் படிப்பதில் கிடைத்த சிலாகிப்பை அறிவதில் ஆர்வமோ அந்தரங்கமென ஆட்டிவிக்கும் ரகசியங்களின்...

செவ்வாய், 16 ஜூலை, 2013

ஜோடி தூரிகை

  எதை எதையோ கொடுத்து பேச வைக்கிறாய் யாருமற்ற இவ்வெளியில் சொற்கள் சூரியனாகி சுட்டெரிக்க நீ கொடுத்துப்போன குரல் ஆன்மாவில் பெருங்குரலெடுத்து பாடிக்கொண்டே திரிய கைவிளக்குகளாகிப்போன காரணங்கள் காத்திருப்பதை நியாயமென்றுணர்த்த காதலது காத்திருப்பில் கரைய மிச்சமிருக்கும் காலத்தை காட்சிபடுத்த...

செவ்வாய், 2 ஜூலை, 2013

பயணங்கள் முடிவதில்லை......

                      பயணங்கள் எப்போதும் அழகானவை அதை ஏதாவது ஒரு விதத்தில் கூடுதல் அழகாக்கிப்போக  நம் எல்லாப்பயணத்திலும் ஏதோவொன்று சேர்ந்தே நம்மோடு பயணிக்கிறது. பயணங்களில் ஜன்னலோரத்து மழைதூரலாய் சிலிர்ப்பை ஏற்படுத்தும் சுகானுபவம்...

திங்கள், 1 ஜூலை, 2013

காதலியல்

யாருமற்ற இடம் ஏதுமற்ற மொழி எப்போதும் பிடிக்கும் உனக்கு. உன் மொழி உடைக்க நீட்டித் தருகின்றேன் சிறு இடைவெளியை.. கைகோர்த்துக்கொள்கின்ற இருளுக்குள் இரவல் வாங்கிக் கொள்கிறாய் என் கைகளை... மெளனம் நிறைந்த பாதையை கடந்து வெகுதூரம் பயணிக்கிறது உன் பார்வை இப்போது மழை வேண்டுமென்று உன் மொழி உடைய குடைவேண்டுமென்ற...

புதன், 5 ஜூன், 2013

நிழல்

  உன் குற்றப்பத்திரிக்கையின் கூர்முனையிலிருந்து வெளிவரத்துடிக்கிறதொரு நிழல் உன் புறக்கணிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் எனதிந்த உடலை திண்ணத் தொடங்க கொடூரத்தின் கோரத்திலும் புன்னகித்தபடியே கடக்கிறது வன்முறையொன்று ப்ரியத்தின் பொருட்டு வழக்கொழிந்து போவதாய் வழமை போலவே நினைக்கிறது அது புலங்கப்படா பாதையில்...

திங்கள், 3 ஜூன், 2013

என் வீட்டு ரோஜா

  பதியமிட்டு வளர்க்காமல்பாதுக்காத்து வைக்காமல்நாளுக்கு இருமுறையெனநிரூற்ற வேண்டாமல்தெருவோரக்கடையொன்றில்வாங்கிவந்தேன் பல வண்ண ரோஜாதினச்செயலாக ஒவ்வொரு இடமாய்இடம் மாறும்அப்பாவின் பேப்பர் வெயிட்டாகதம்பியின் வாகனச்சாவி அறையாகஅம்மாவின் பலசரக்கு சீட்டை தாங்கிய ஒன்றாகவெனபலவாறு உருமாறினாலும்தனக்கான...

திங்கள், 27 மே, 2013

முத்தபுராணம்

  சத்தமில்லாமல்நம் சரித்திரம் சொல்லட்டும்இந்த முத்தபுராணம்... உயிர் ஒப்பந்தமொன்றைஉதடுகள் எழுதுகிறதுமுத்தமெனும் மையிட்டு*சொர்க்கமென்பதைஇரண்டாய் பிரித்துஉன் இதழாய் படைத்தானோஇறைவன்... *ஒரு துளியாய் விழுந்துபிரவாகமாய்உருவெடுக்கும் வித்தையைஎப்படி கற்றதுஉன் முத்தம்...*உனக்காக ஒன்றுஎனக்காக...

ஞாயிறு, 26 மே, 2013

வெற்று மைதானம்

வெற்று மைதானமென வெறுமை சூழத்தந்தாலும் ஆடிக்களைத்த நிகழ்வுக்குள் நிதானமாய் ஓடிவிளையாடுகிற ஒற்றை பந்து காதல்... தோல்விகள் புரிந்தாலும் தொடர்ச்சியாய் முயற்சிகள், அயற்சியை மறைக்க அவ்வவ்போது நினைவுகள்.. வலிக்கு வலியென வழிகொண்டு தொடர வார்த்தைகொண்டு அடைக்கிறாய் இப்பெருவெளியை... உடலுக்கும் உயிருக்குமான...

வெள்ளி, 3 மே, 2013

சரிபாதியானவளுக்காய் என் வாழ்த்து

வாழ்க்கை குறித்து பல வினாக்களுக்கு பதில் தெரியாது போனாலும் வாழ்தலுக்கான பிடித்தமென்பது நட்பைத்தொட்டுத்தான் ஆரம்பமாகிறது..சமயங்களில் பதில் இருந்தும் சொல்ல முடியா பல கேள்விகள், சூன்யவெளியொன்றை உருவாக்கி சுயம் தன்னை சுட்டெறிக்கும் நிமிடங்களில் வசந்தங்களை வாசலுக்கு கொண்டு வரும் வித்தையை கற்றுத்தான்...

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

உற்சாக துள்ளல் உங்களாலே

வணக்கம் என் வலையுலக உறவுகளே.. அனைவரும் நலமா? வலைப்பக்கம் விட்டு வெகுவாய் ஒதுங்கி இருந்த இவ்வேளையில்,மெயிலிலும், முக நூலின் வாயிலாகவும் என்னை எழுதத்தூண்டி, மீண்டும் புதிதாய் என்னை பயணப்படுவதற்கான உத்வேகத்தை கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... என்ன ரேவா திடீர்ன்னு கவிதையில்லாம வலைப்பக்கம்...

திங்கள், 22 ஏப்ரல், 2013

அவ்வளவே

ஒன்று இரண்டாக இரண்டு நூறாக கூடிக்கொண்டே போகிறது உன்னைக் குறித்த என் கேள்விகள், எல்லாக் கேள்விக்கும் ஒற்றைப் புன்னகையை பதிலெனக் கொடுத்தாலும் போதுமானதாய் இல்லை கேள்வியின் கோரப்பசிக்கு. கொஞ்சமாய் அதை -நீ மென்று விழுங்க பதில் தொண்டை நெறிக்கும் முன் துடித்து விழிக்குதுன் சுயமுகம் இதுவரை காட்டியவை கூட்டிச்சென்ற...

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

தேடல்

பெரும் காத்திருப்பில் சேர்ந்துவைத்திருக்கிறேன் வாழ்வின் மீதத்திற்கான ப்ரியங்களையும் இதுவரை பிடிக்காத சண்டைகளுக்கான காரணங்களையும்.. பதற்றமிக்க இத்தனிமைபிரதேசத்தில் மெளனத் தீ கொழுந்துவிட்டெறிய கனவுச் சிறகசைத்து உனை அடைந்திடுவேன் தணிக்கைகளற்று... இல்லா உருவமொன்றை அருவமாய் ஏற்றாகிவிட்டது இல்லாமைக்குள்...

திங்கள், 8 ஏப்ரல், 2013

ஒரு சொல்...

யாருக்கும் கேட்காதபடி தனக்கானதொரு மொழியெடுத்து விழியறுக்கிறது உனதிந்த மெளனம் பிடித்த அத்தனையிலும் பிடித்தமற்று நீள்கிறது எனதிந்த நாட்கள் ஒரே நேரத்தில் சொல்லத்துணிந்த சொற்களின் நகர்வுக்கான இக்காத்திருப்பென்பது காட்சிபடுத்தமுடியா ஏதோ ஒரு அழிவை கண்முன்னே நிறுத்துகிறது பார்வைகளில் கடந்து போவது...

திங்கள், 1 ஏப்ரல், 2013

ஒரு துளி

இருப்பின் வாயிலை உடைத்து வெளியேறுகிறது நம்பிக்கையின் விருட்சம் இன்னதென்று சொல்லத்தெரிய ஓப்பீடுகளால் உடைந்த மெளனத்தின் கணத்தை உதடுகளால் கடந்து செல்வது அவ்வளவு சுலபமில்லாது போயினும் வெறித்து தொடரும் எல்லோரின் பார்வைக்கு பின்னும் இன்னும் பருகப்படாமலே இருக்கிறது நீங்களறியா உண்மையின் ஒரு துளி...

வெள்ளி, 8 மார்ச், 2013

இதுவோ(வே) யாம்

ஆளுக்கொரு பிரியம் அடுக்க அடுக்கத் தொடரும் அடுக்களை மட்டுமே உலகமென விரியும் பாரதியும், ஷெல்லியும் கல்கியும் சாண்டில்யனும் கூட்டு பொரியலுக்கு இடையே கூடவே இருக்கும்.. பெண்ணிய சிந்தனைகள் பெண் விடுதலை  பேசிய கவிகளென ஓரு மூலைக்குள் இருக்க மூளையற்ற இவரன்பில் அத்தனையும் மூச்சிரையாகிக் கிடக்கும்...

வெள்ளி, 25 ஜனவரி, 2013

புரியாக்காலமது

இன்றோடு வருடம் ஆறாக, என் நினைவுதனில் வற்றாது ஓடும் ஒரு பிரவாகமாய்  நீ உருவெடுத்திருக்கிறாய், இன்னும் இன்னும் ஆழமாய். ஒரே பார்வையில் பருகிவிட முடியா ஆழத்தில்  நீ இருக்கிறாய் என்பது மட்டும் திண்ணம்..எப்படி ஆரம்பம் என்ற புள்ளியில் தெளிவில்லையென்றாலும் அமர்களமாய் நீ மனதமர்ந்த காலம்...

செவ்வாய், 15 ஜனவரி, 2013

ஒளித்துக்கொள்கிறேன்

இது இப்படித்தான்.. ப்ரியத்தின் பொருட்டு தள்ளிவைத்து பார்க்கப்படுகின்ற இந்நிமிடங்கள் சொல்லமுடியா மலட்டு தாயின் பாசம் போன்றது... பகிர்தலில் பழக்கப்பட்ட என் பாஷைகள் மொழியறியாது ஸ்வரம்புரியாது இசைத்துக்கொண்டே கிடக்கிறது ஈனஸ்வரத்தில் இந்த மெளனத்திற்கு எத்தனையோ காரணமிருக்கலாம் எடுத்துவைக்கும் காரணம்...

வியாழன், 3 ஜனவரி, 2013

தனித்திருத்தலென்பது

மதிப்பீடற்ற விசயங்களைக் கடந்து விஷமங்கள் அரங்கேறும் இத்தருணத்தில் விஷமேறிய பற்களோடு காத்திருக்கிற கடுச்சொல்லிருந்து... துரத்திவிடுதலை துணைக்கழைத்து தன்னை விடுவித்துகொள்கிற கணத்தில் உயிர் உணர்கிற தவிப்புகளிலிருந்து எப்படியோ மென்மரணமொன்று இனி மெல்ல மெல்ல நடக்குமென்பதை உணர்ந்தும் அந்திசாமத்து...

செவ்வாய், 1 ஜனவரி, 2013

யாருக்கும் தெரியாமல்

சட்டென்று நீயெனை கடந்திருக்கலாம் ஆனால் கூடவே வந்த்தில் கூடுதல் மகிழ்ச்சிதான் எனக்கு ஏதேதோ பேசுகிறாய் எல்லா பேச்சுலும் உணர்கிறேன் உன் நேசத்தை கைகளை நீட்டுகிறாய் நட்பென்று சொல்லி பற்றுதல் சுகமெனினும் ஏதோ ஒன்று தடுக்கிறது விடியல் மறந்த பேச்சுகளில் விட்டுக்கொடுத்த சுபாவங்களில் தட்டிக்கேட்கும் ஆளுமையில்...