
அடுக்களை வேலை அத்தனையும் முடித்து அலுப்பென சொல்லி அயர்ந்து படுக்கையில் கனவுக்குள் வந்து சென்றாள் நேற்றைய கதை நாயகி வைத்த இடம் தேடி கைவசம் கிடைக்கையில் துளிர்ந்திடும் கதை நாடி வேகமாய் ஓடி விட்ட இடம் பிடிக்கையில் ஆண் முகத்தில் திலகமிட்டும் பெண் முகத்தில் மீசை வைத்தும் பூக்களுக்கு சிறகு வரைந்தும்...

பேருந்து நிறுத்தம் ஏற இறங்கவென ஆட்கள் எல்லோருக்கும் பயணப்பட காரணங்கள் எதேட்சயான உரையாடல் எல்லோருக்குள்ளும் ஏதோவொரு தேடல் எனைக் கடக்கும் கூட்டம் எடையளக்கும் நோட்டம் எதிலும் கவனமில்லை இருந்தும் மறுக்கவில்லை எதிரினில் தேனீர் கடை சுற்றியபடியே ஒருவன் இரண்டாவது சுற்றில் கோப்பை தேனீர் அத்தனையும் பருகிட...

பார்வை மழை பார்த்ததும் துளிர்விட
குட்டி நடனமொன்று கொட்டையில் ஆட
மழைக்கு இசையோ இல்லை இசைக்கேற்ற மழையோ
அறியாது நானும் அறிந்திட்டே பிழை செய்ய
தவறிவிழுந்த வார்த்தையில் கிடைத்தவை அனைத்தும் உன் ப்ரிய பெருமழை தானோ
...

பிரியத்தின் மதிப்புணர்ந்து திறந்தே வைக்கிறேன் இக்கவிதை வாசலை வந்தமர்ந்து கொள் கொன்றொழித்த விரதங்கள் பேசக்கற்றறிந்த வேளையிது வாஞ்சையின் மொழியிழந்து வஞ்சனை குணம் புரிந்து தப்பிப் பிழைத்த தருணத்தில் சிறு ஆட்டின் தலையசைப்பாய் வெட்டப்பட்ட கனவுகள்
சின்னதாய் சிரிப்போ சினேகப் பார்வையோ...

யாருக்குத் தெரியுமென்பதைப் போல் தெரியாமலே இருக்கிறது உன்னை பற்றிய என் பதில் எடுத்து வைத்தவைகளை எழுத்தில் வைப்பதைத் தவிர
வேறேதும் தெரியவில்லை எனதிந்த காதலுக்கு பட்டாம்பூச்சியின் வண்ணங்களை சுமந்து வரும் சிறகு போலவே தூக்கிச்சுமத்தலின் சுகங்களை
நினைத்து சுவைக்கிறது இவ்வுணர்வு.....

ஆளுக்கொரு பிரியம்
அடுக்க அடுக்கத் தொடரும் அடுக்களை மட்டுமே உலகமென விரியும் பாரதியும், ஷெல்லியும், கல்கியும் சாண்டில்யனும் கூட்டு பொரியலுக்கு இடையே கூடவே இருக்கும் பெண்ணிய சிந்தனைகள் பெண் விடுதலை பேசிய கவிகளென அத்தனையும் ஓரு மூலைக்குள் இருக்க மூளையற்ற இவரன்பில் அத்தனையும் மூச்சிரையாகிக்கிடக்கும்...

எதையாவது பற்றிக்கொள்ளுதல் தேவையாய் இருக்கிறது பல நேரங்களில் கனவுகளின் வாசத்தை வசப்படுத்தும் நிமிடங்களில், காத்திருப்பின் மூலம் அலைக்கழிக்கப்படும் நேசத்திடம், ஒரு தோல்வியின் போது நொருங்கி உடைகின்ற மனதிடம், அனுதாபங்களின் பிடியில் சிக்கிக் கிடக்கின்ற சுயத்திடம் எதைச் சொல்லவேண்டுமோ அதைச்சொல்லாது...

வாழத் தொடங்குவதற்கான வாய்த்தலை
கோடிட்டு காட்டா காலத்தின் முன் திராணியற்று நிற்கிற கனவுக்குள் நீயுண்டு நெஞ்சம் நிறைய நிகழ்வுசார்
காதலுண்டு உணர்வுக்கு சிக்கா உடையணிந்து கொண்டு உனைத் தேடுதல் அசெளகர்யமெனப்பட்டாலும் மெல்ல மெல்ல அருகமர்ந்து தலைகோதிவிடுகிற விரலினைத்தருகிறாய் கால்முளைக்கா...

ஒரு பாலைவனத்தை யாருமற்று கடப்பது போன்றிருக்கிறது இந்நாட்கள் தனிமை தகிப்புகளுக்குள் கிளையுயர்த்தி ஆறுதல் தருகிற நிழலுக்குள் நீயிருக்க எப்போது வருமென்று வானம் பார்க்க தொடங்கியிருக்கிறது வார்த்தைக்குள் சிக்காத மேகக்கூட்டமொன்று...

ஒரு விசாரிப்பில் உன் இருப்பை உறுதிசெய்து கொள்கிறாய்
எல்லோரிடமும் உரக்க பேசுகிறாய் என் செவிகேட்கும்படியான சத்தத்தில்
உனை மெளனமாக்க ஒரு வார்த்தை போதுமென்ற போதும் அதைச்செய்யாதே முடித்துக்கொள்ளும் இக்கவிதைக்குள்ளும் நேசமில்லாமல் இல்லை...

ஒரே வார்த்தைதான் வேறு வேறு குரல்களில் வாளெடுத்து வீசிப்போகிறது நேற்றையவனின் வார்த்தை இரவினைத் தொட்டு இன்றும் தன்னை எழுதிக்கொண்டிருக்க
ஏதோ ஒரு பிழையில் தப்பித்து வெளியேறுகிறது கொடுக்கப்பட காத்திருந்த
முத்தங்களுக்கான மன ஒத்திகை நிதானித்து திரும்புவதற்குள் இன்னுமொரு புன்னகை அதே போலொரு...

பார்வை கத்தி குத்தி கிழித்து ரத்தம் வழிய சதை பிண்டமாகும் வரை வழிய விடுகிறாய் உன் ஆண்மையை
துயர் தரும் பார்வைதான் உன்னை வெளிக்காட்ட ஒரு குண்டூசி எடுக்கும் அவகாசம் போதுமானது ...

நிலைத்திருத்தலைப்பற்றிய கவலையின்றி பறந்தலைகின்ற வண்ணத்துப்பூச்சிக்கு வாழவொரு ஏற்றயிடம் எனதறையில்லையென்று எப்படிச்சொல்வது வர்ணம் ஆட்சிசெய்யும் அதனிடத்தில் எடுத்துக்கொள்ள எனகேற்ற நிறம் எதுவுமில்லையென்பதை விளக்கணைத்து உறுதிசெய்தேன்
மின்விசிறியின் கூர்நாக்குகளதை எப்படியும் காவுவாங்குமென உயிர்கொடுக்காது...

இப்படி ஒரு முடிவு ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான் என்பதால் பெரிதாய் ஏமாற்றமில்லை.... ஏற்றம் கொண்டு வரும் எந்த ஒரு நாளின் நிமிடமும் தொடங்கி வைத்ததில் தானே வந்து வி(மு)டியும்.. கிட்டாது போதலின் அசெளகர்யங்கள் பற்றி கவலையில்லாது போயினும் நினைவின் தடத்திலிருந்து நீங்காது இருப்பது தான் பேரிழபபை அவ்வவ்போது...

உன்னை பத்திரப்படுத்திய குறிப்பு தான் காயந்த ரோஜாவின் வண்ணத்தோடு மிச்சமிருக்கிறது என்னிடம் இவையே போதுமானது தான் நான் தனிமையில்லை எனும் நிலையை எடுத்துரைக்க காத்திருந்த தருணங்களில்லாம் காண முற்படுகின்ற பிம்பம் என்னை அனுமதிப்பதில்லை இது நானென்று ஆனாலும் தனிமையுடைத்து உருவாகிவிடுகிறது இப்படியாக...

உன்னை யாரென்று சொல்ல உன்னைத் தொட்டே வரைகிறேன் எனதிந்த சித்திரத்தை
புள்ளியில் ஆரம்பமாகி பூகோளம அமைத்த இதனிடத்தில் அத்தனை சுகந்தமில்லையென்றாலும் வெகு சிரத்தையோடு வரைகிறேன்
ப்ரியங்களுக்கென பச்சையையும் கோவங்களுக்கென சிவப்பையும் தாபங்களுக்கென நீலத்தையும் நட்புக்கென்று வெள்ளையையும் எனக்கேற்ப எடுத்துவைத்து...

என்னக்கொடுத்துவிட போகிறாய் உன்னைக்கொடுத்து.... நேசத்தையா தோள்சாய்தலில் கிடைக்கும் இன்பத்தையா ஆண் முன் அழுகையை மறைக்காது அழவிடும் நம்பிக்கையையா? நான் காணாத உலகையா கனாக்காணும் கனவையா நண்பனையா கணவனையா இல்லை ஓர் ஆணையா
என்னக்கொடுத்துவிட போகிறாய் உன்னைக்கொடுத்து
...

அந்திவானம் அத்தனை அழகில்லை இதுவரை வரையறை வைத்து வரைந்திட்ட வாழ்வில் உன் வர்ணம் கொண்டு புதுவர்ணம் கொடுத்தாய்
உயிர்கிளியின் கூண்டுகள் தன்னை வான்நோக்கி பறந்திட திறந்திட்டாய்
சிறகசைப்பின் வெகுதூரக்கவனிப்பில் வந்துசேர கிடைத்திட்ட இடமதில் சலசலக்கிற ஆறும் சந்தமாய் பேசும் காடும் மெளனமாய் உன்னை என்னிடம்...

இணைந்துவிட்டதாய் இறுமாப்புகொள்கிறோம் நானென்றவற்றை எடுத்து நாமென்று திருத்தம் செய்கிறோம் அடிக்கொருமுறை அலைபேசியில் சொல்லும் ஐ லவ் யூவில் அன்பை அளக்கிறோம் அப்படியே வார இறுதிகளில் இடம் மாறிப் போகிற சமையலும் மாதமொரு சினிமா தோணும் பொழுதில் காலாற நடை தோழமையைப்போல் பாவித்தலில் சுயம் தொலையாத நிர்பந்தம்...

தொலைந்த நாட்குறிப்பு
சினேகத்தின் குறிப்புகளை
உள்வைத்தபடியே ரகசியம் காக்க
ஆண் நட்பு என்பதால்
அதிகம் கவனிக்கபட்டாய்
என் தோழிகள் வட்டத்தில்
விட்டில் பூச்சிகள் மொய்க்கும்
வெளிச்சமென உனைச்சுற்றியே பேச்சுகள் அத்தனை பூசிமொழுகளிலும் உருக ஆரம்பித்தது சினேகத்தின் மெழுகு உன் அப்பா அப்பாவாய் அறிமுகமானார்...

நினைவுச் சாலை உன் பெயர் பதாகை தாங்கியே வரவேற்க அடைதலைப் பற்றிய குறிப்புகள் எண்களில் அடைபட ஆசுவாசப்படுத்த கோப்பை தேனீரோ வேகம் கூட்டும் நினைவுந்தோ போதுமென்றாலும் இதே சாலை உனக்கு எதைக்கொடுத்துச்சென்றிருக்குமென குறிப்பில் அடைபட்டுப்போன இந்நாளில் தான் கண்டு தெளிந்தேன் நினைவு நெடுச்சாலைகள் விபத்...

இது அதன் பெயரால் அப்படியே அழைக்கப்படும்
தனக்கான அந்தரவெளிகளோடு தனித்தே தான் இருக்கும்
துயரத்தின் காட்சியையும் பாவத்தின் நீட்சியையும் துரத்தும் பாவனையை தொடர்ந்தே தான் கொடுக்கும்
தப்பிக்கும் நேரமும் தப்பிழைக்கும் காலமும் தப்பாமல் தவறுக்குள் வரவொன்றை வைக்கும்
இருப்பின் ஓடமதும் சுழல் காற்றின்...

இதுவே இறுதியாக இருக்கட்டுமென எண்ணிக்கொள்கிறேன் எண்ணிக்கை பிடித்து மெளனம் தான் என் வீடு வார்த்தைகளின் வழி நீ வந்து சேரும் வலி கொஞ்சம் தூரம் தான் சொற்களற்ற இப்பெரு நிலம் உண்ட களைப்பை உனக்கு கொடுக்கலாம் அல்லது திரும்பிப்போதலின் சாத்தியத்தை விதைக்கலாம் எதையாயினும் எடுத்துச் செல் எதிர்ப்புக்காட்டாமலிருக்கத்தான்...

நேற்றைய பொழுதை உண்டு களைப்பதற்குள் தயாரகிவிட்டது
இன்று இன்றை மென்று செரிப்பதற்குள் விடிந்து விடுகிறது
நாளை நாளை வாழ்ந்து பார்ப்பதற்குள் வந்து விழுகிறது
மற்றொரு நாளை இப்படியே தான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது இந்த நாளை...

வட்டத்தில் வரையப்பட்ட ஒன்றை மாற்றுகையில் ஆதாரப்புள்ளி மட்டும்
அரைவட்டம் எடுத்துக்கொள்ள
எஞ்சியவற்றை எடுத்துத்தின்னத் தொடங்கிய தனிமை பார்ப்பவற்றையெல்லாம் கேட்டு அடம்பிடிக்க எதைக்குறித்து இத்தேர்வென்று தெரியாமலே விட்டுவைத்தேன்
நாற்சுவராயினும் நான் மட்டும் இருக்கும்
இவ்வுலகம் யாவரும் வந்தமர...

எனக்கே எனக்காக உன்னிடம் எதையும் கேட்கபோவதில்லை நான் யாராகவோ நானாகிவிட்ட போதிலும் யாருக்காகவோ காத்திருக்கும் இந்நிமிடத்திலும் எதையும் கேட்க போவதில்லை நான் காத்திருத்தலில் கிடைத்த கவிதையும் காயம் படுகையில் கிடைத்த நிமிர்தலும் வாழ்தலுக்கு வழி செல்லிப்போகும் இந்நேரத்திலும் எதையும் கேட்கபோவதில்லை...

உன் அமர்தலுக்கு காத்திருந்த நாற்காலியொன்றில் அமர நேர்ந்தது இன்று அதுவரை உயிரற்றதென்று நினைத்த அதன் குறிப்பில் கிடைத்தது உன் நினைவு நாற்காலி பேசுவதென்பது நம்பமுடியாதவை தான் மறந்து போனதை பேசுவதென்பது அதைவிட சாத்தியமில்லாததும் தான் அதனால் தான் உன் அமர்தலுக்காக காத்திருந்த நாற்காலியிடம் சொல்லாமலே...

என் சொற்களை எங்கோ ஒளித்துவைத்திருக்கிறது உன் கடல் ஒரு அலை அல்லது ஒற்றை படகு குறைந்தபட்சம் கானலாவதன் சாத்தியங்களையாவது குறைக்கட்டும்
...