உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 25 மார்ச், 2014

அடையாளம்
இணைந்துவிட்டதாய் இறுமாப்புகொள்கிறோம்
நானென்றவற்றை எடுத்து
நாமென்று திருத்தம் செய்கிறோம்
அடிக்கொருமுறை அலைபேசியில்
சொல்லும் ஐ லவ் யூவில்
அன்பை அளக்கிறோம்
அப்படியே வார இறுதிகளில்
இடம் மாறிப் போகிற சமையலும்
மாதமொரு சினிமா

தோணும் பொழுதில் காலாற நடை
தோழமையைப்போல் பாவித்தலில்
சுயம் தொலையாத நிர்பந்தம்
இத்தனையையும் தாண்டி
தன்மானம் தேடிடும் மனதிடம்
இன்னும் மிச்சமிருக்கிறது
சக மனுஷிக்கான அடையாளம் 


1 கருத்துகள்:

sathish prabu சொன்னது…

அருமை.. சின்ன வேண்டுகோள்.. read more கிளிக் செய்தால் new tab இல் திறப்பது போல் இருந்தால் படிக்க வசதியாக இருக்கும் என நினைக்கிறேன்..