உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 25 மார்ச், 2014

நேசமில்லாமல் இல்லை.

ஒரு விசாரிப்பில்
உன் இருப்பை உறுதிசெய்து கொள்கிறாய்


எல்லோரிடமும் உரக்க பேசுகிறாய்
என் செவிகேட்கும்படியான சத்தத்தில்


உனை மெளனமாக்க
ஒரு வார்த்தை போதுமென்ற போதும்
அதைச்செய்யாதே முடித்துக்கொள்ளும்
இக்கவிதைக்குள்ளும் நேசமில்லாமல் இல்லை0 கருத்துகள்: