உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 25 மார்ச், 2014

கானல் தகிக்கும் பொழுது


ஒரு பாலைவனத்தை யாருமற்று
கடப்பது போன்றிருக்கிறது
இந்நாட்கள்

தனிமை தகிப்புகளுக்குள்
கிளையுயர்த்தி ஆறுதல் தருகிற
நிழலுக்குள் நீயிருக்க

எப்போது வருமென்று வானம் பார்க்க
தொடங்கியிருக்கிறது
வார்த்தைக்குள் சிக்காத மேகக்கூட்டமொன்று0 கருத்துகள்: