* வெற்றியும் தோல்வியும் மாறிமாறி
நம்மை உருமாற்ற
நம் உயர்வுக்குத்தான் எதுவும் என்பதை
அனுபத்தில் கற்றுக்கொண்டோம்
* விழிநீர் வடிந்தாலும் உமிழ்நீர் கொட்டி உரசிப்பாக்கும்
சதைபிண்டங்கள் மத்தியில்...
விழுகின்ற நீரை துடைக்கின்ற கரங்களும்
உண்டென்பதை புரிதலில் கற்றுக்கொண்டோம்
* தோற்றிடும் போதெல்லாம் தேற்றுவோர்
நான் என்று மார்தட்டி,
நாம் தோற்றதை சொல்லிச் சொல்லி
தூற்றுவோர் மத்தியில்,
நம் தோல்வியின்
வேர்தனை தூர்வாரும் உறவும்
உண்டென்று கற்றுக்கொண்டோம்
* கூர்கொண்ட ஆயுதமின்றி,
கூர்மளிங்கிய நாவும் கூட காயப்படுத்துமென்பதை
கூறுகெட்ட நம் நாவின் வழியே கற்றுக்கொண்டோம்
* இறந்திடும் மனிதனும், இருந்திடும் மனிதனும்
விதைத்திடும் விதைதான்
இனிவருவோர் வளர்ச்சிக்கு உதவிடும்
என்பதை வித்தகர்கள் விதைத்திட
விதையின் வழியே கற்றுக்கொண்டோம்
* உள்ளொன்று வைத்து புறம் ஒன்று
பேசுவோர் தன்னை புன்னகையின் துணைகொண்டு
புறம் தள்ள கற்றுக்கொண்டோம் .
* அன்பாய் பேசி ஆலகால விஷம் கக்கும்
கொடியோரிடமும் அமுதுண்டு என்பதை
அவரருகிலிருந்து கற்றுக்கொண்டோம் .
* அவனவனாய் இருக்க தோற்றுப்போய்
முகமூடி தனை அணித்து முகவரிதொலைத்த
மூடர்கள் முகத்திரைகளைய கற்றுக்கொண்டோம் ..
* காதலில் விழுந்து விழி நீர் தேங்கி
தவிக்கும் நேரத்திலெல்லாம்,
காதல் என்பது பொறுமையாய் பொருத்தரிதலில்
உண்டென்பதை நட்பின் மூலம் கற்றுக்கொண்டோம்
* பேய்மழையாய் இருந்தாலும்
கடைசி துளி வந்தே நின்று போகும்...
போராட்டமே வாழ்வென்றாலும்
சின்ன சின்ன சந்தோசங்கள் நம்மை கரைசேர்க்கும்
என்பதை பொறுமையோடு கற்றுக்கொண்டோம்
* உயிர்சக்தியை ஒன்றாய் குவித்து
உண்மையும், உழைப்பையும் ஒன்றாய் திரட்ட
கிடைத்திடும் வெற்றி என்பதை
உன் சக்தி கொண்டு கற்றுக்கொண்டோம்....
ஆம் எம் உயர்வுக்கு உயிர் சேர்த்த
" மனமே" ... உன்னால் கற்றுக்கொண்டோம் ..
(நல்லோர் மனதிற்கும் , தன் பிம்பம் இதுவென அறிந்திடும்
மனதிற்கும் , என் கவியில் காதலை கடந்து பயணப்பட என்னை உந்திய மனதிற்க்குமாய் இக்கவிதை.... புது முயற்சி பிடித்திருந்தால் மனம் விட்டு பாராட்டலாமே...)
அன்புடன்
ரேவா
11 கருத்துகள்:
கவிதை அருமை சகோதரி... :) கொஞ்சம் நீளம் குறைக்கலாமே.....
இறந்திடும் மனிதனும், இருந்திடும் மனிதனும்
விதைத்திடும் விதைதான்
இனிவருவோர் வளர்ச்சிக்கு உதவிடும்///
இந்த வரிகளும் இன்ன பிற வரிகளும் அருமை. இரண்டு பதிவுகளாக எழுதி இருக்கலாமே....
//இறந்திடும் மனிதனும், இருந்திடும் மனிதனும்
விதைத்திடும் விதைதான்
இனிவருவோர் வளர்ச்சிக்கு உதவிடும்
என்பதை வித்தகர்கள் விதைத்திட
விதையின் வழியே கற்றுக்கொண்டோம் //
Wow...!
karthikkumar said...
கவிதை அருமை சகோதரி... :) கொஞ்சம் நீளம் குறைக்கலாமே.....
karthikkumar said...
இறந்திடும் மனிதனும், இருந்திடும் மனிதனும்
விதைத்திடும் விதைதான்
இனிவருவோர் வளர்ச்சிக்கு உதவிடும்///
இந்த வரிகளும் இன்ன பிற வரிகளும் அருமை. இரண்டு பதிவுகளாக எழுதி இருக்கலாமே....
சகோதரருக்கு உங்கள் விருப்பபடி இரண்டு பத்திகள்
நீக்கிவிட்டேன்... தங்கள் கருத்துக்கு நன்றி....
ப்ரியமுடன் வசந்த் said...
//இறந்திடும் மனிதனும், இருந்திடும் மனிதனும்
விதைத்திடும் விதைதான்
இனிவருவோர் வளர்ச்சிக்கு உதவிடும் என்பதை வித்தகர்கள் விதைத்திட விதையின் வழியே கற்றுக்கொண்டோம் //
Wow...!
உங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி ப்ரியமுடன் வசந்த் அவர்களே....
புது முயற்சி மிகவும் அருமையாக வந்திருக்கிறது.. கவிதை முழுவதுமே மிகவும் ரசித்து படித்தேன்.. சில உணர்வுகளை சொன்ன விதம் ரொம்பவே அருமை.. உதாரணத்திற்கு..
//கூர்கொண்ட ஆயுதமின்றி,
கூர்மளிங்கிய நாவும் கூட காயப்படுத்துமென்பதை//
//அவனவனாய் இருக்க தோற்றுப்போய்
முகமூடி தனை அணித்து முகவரிதொலைத்த
மூடர்கள்//
//காதலில் விழுந்து விழி நீர் தேங்கி
தவிக்கும் நேரத்திலெல்லாம்,
காதல் என்பது பொறுமையாய் பொருத்தரிதலில்
உண்டென்பதை//
ஆனால் எல்லாவற்றையும் விட நான் மிக மிக ரசித்த வரிகள் கீழ்காணும் வரிகள் தான்.. ரொம்ப அழகு.. பின்னிடீங்க..!! என் மனதை மிகவும் பாதித்து விட்டன கீழ்காணும் வரிகள்.. ரேவா..! சொன்ன விதம் மிக மிக அருமை..
//விழிநீர் வடிந்தாலும் உமிழ்நீர் கொட்டி உரசிப்பாக்கும்
சதைபிண்டங்கள் மத்தியில்..//
பொங்கல் வாழ்த்துக்கள் தோழி..
பால் [Paul] said...
புது முயற்சி மிகவும் அருமையாக வந்திருக்கிறது.. கவிதை முழுவதுமே மிகவும் ரசித்து படித்தேன்.. சில உணர்வுகளை சொன்ன விதம் ரொம்பவே அருமை.. உதாரணத்திற்கு..
//கூர்கொண்ட ஆயுதமின்றி,
கூர்மளிங்கிய நாவும் கூட காயப்படுத்துமென்பதை//
//அவனவனாய் இருக்க தோற்றுப்போய்
முகமூடி தனை அணித்து முகவரிதொலைத்த
மூடர்கள்//
//காதலில் விழுந்து விழி நீர் தேங்கி
தவிக்கும் நேரத்திலெல்லாம்,
காதல் என்பது பொறுமையாய் பொருத்தரிதலில்
உண்டென்பதை//
ஆனால் எல்லாவற்றையும் விட நான் மிக மிக ரசித்த வரிகள் கீழ்காணும் வரிகள் தான்.. ரொம்ப அழகு.. பின்னிடீங்க..!! என் மனதை மிகவும் பாதித்து விட்டன கீழ்காணும் வரிகள்.. ரேவா..! சொன்ன விதம் மிக மிக அருமை..
//விழிநீர் வடிந்தாலும் உமிழ்நீர் கொட்டி உரசிப்பாக்கும்
சதைபிண்டங்கள் மத்தியில்..//
உங்கள் பின்னூட்டம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.....
நன்றி நண்பா...
ஜெ.ஜெ said...
பொங்கல் வாழ்த்துக்கள் தோழி..
நன்றி தோழி..
ம் நல்லா இருக்கு
நிறைய கற்றுக் கொண்டிருக்கீங்க வாழ்க்கையில். உங்கள் கவிதை அதை பிரதிபலிக்கிறது....
கருத்துரையிடுக