உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 12 ஜனவரி, 2011

உன்னால் கற்றுக்கொண்டோம்

* வெற்றியும் தோல்வியும் மாறிமாறி 
நம்மை உருமாற்ற
நம் உயர்வுக்குத்தான் எதுவும் என்பதை 
அனுபத்தில் கற்றுக்கொண்டோம் 

* விழிநீர் வடிந்தாலும் உமிழ்நீர் கொட்டி உரசிப்பாக்கும்
சதைபிண்டங்கள் மத்தியில்...
விழுகின்ற நீரை துடைக்கின்ற கரங்களும் 
உண்டென்பதை புரிதலில் கற்றுக்கொண்டோம்

* தோற்றிடும் போதெல்லாம் தேற்றுவோர் 
நான் என்று மார்தட்டி,
நாம் தோற்றதை சொல்லிச் சொல்லி 
தூற்றுவோர் மத்தியில், 
நம் தோல்வியின் 
வேர்தனை தூர்வாரும் உறவும் 
உண்டென்று கற்றுக்கொண்டோம் 

* கூர்கொண்ட ஆயுதமின்றி,
கூர்மளிங்கிய நாவும் கூட காயப்படுத்துமென்பதை
கூறுகெட்ட நம்  நாவின்  வழியே கற்றுக்கொண்டோம் 

 * றந்திடும் மனிதனும், இருந்திடும் மனிதனும்  
விதைத்திடும் விதைதான்
இனிவருவோர் வளர்ச்சிக்கு உதவிடும்
என்பதை வித்தகர்கள் விதைத்திட 
விதையின் வழியே கற்றுக்கொண்டோம் 

* ள்ளொன்று வைத்து புறம் ஒன்று 
பேசுவோர் தன்னை புன்னகையின் துணைகொண்டு
 புறம் தள்ள கற்றுக்கொண்டோம் .

* ன்பாய் பேசி ஆலகால விஷம் கக்கும்
 கொடியோரிடமும் அமுதுண்டு என்பதை 
அவரருகிலிருந்து கற்றுக்கொண்டோம் .

* வனவனாய் இருக்க தோற்றுப்போய்
முகமூடி தனை அணித்து முகவரிதொலைத்த 
மூடர்கள் முகத்திரைகளைய கற்றுக்கொண்டோம் ..

* காதலில் விழுந்து விழி நீர் தேங்கி
தவிக்கும் நேரத்திலெல்லாம்,
காதல் என்பது  பொறுமையாய் பொருத்தரிதலில் 
உண்டென்பதை நட்பின் மூலம்  கற்றுக்கொண்டோம்

* பேய்மழையாய் இருந்தாலும் 
கடைசி துளி வந்தே நின்று போகும்...
போராட்டமே வாழ்வென்றாலும் 
சின்ன சின்ன சந்தோசங்கள் நம்மை கரைசேர்க்கும் 
என்பதை பொறுமையோடு கற்றுக்கொண்டோம்

* யிர்சக்தியை ஒன்றாய் குவித்து
உண்மையும், உழைப்பையும் ஒன்றாய் திரட்ட
கிடைத்திடும் வெற்றி என்பதை
உன் சக்தி கொண்டு கற்றுக்கொண்டோம்....
ஆம் எம்  உயர்வுக்கு உயிர் சேர்த்த 
" மனமே" ... உன்னால் கற்றுக்கொண்டோம் ..

(நல்லோர் மனதிற்கும் , தன் பிம்பம் இதுவென அறிந்திடும் 
மனதிற்கும் , என் கவியில் காதலை கடந்து பயணப்பட என்னை உந்திய மனதிற்க்குமாய் இக்கவிதை.... புது முயற்சி பிடித்திருந்தால் மனம் விட்டு பாராட்டலாமே...)
அன்புடன் 
ரேவா 

11 கருத்துகள்:

karthikkumar சொன்னது…

கவிதை அருமை சகோதரி... :) கொஞ்சம் நீளம் குறைக்கலாமே.....

karthikkumar சொன்னது…

இறந்திடும் மனிதனும், இருந்திடும் மனிதனும்
விதைத்திடும் விதைதான்
இனிவருவோர் வளர்ச்சிக்கு உதவிடும்///
இந்த வரிகளும் இன்ன பிற வரிகளும் அருமை. இரண்டு பதிவுகளாக எழுதி இருக்கலாமே....

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//இறந்திடும் மனிதனும், இருந்திடும் மனிதனும்
விதைத்திடும் விதைதான்
இனிவருவோர் வளர்ச்சிக்கு உதவிடும்
என்பதை வித்தகர்கள் விதைத்திட
விதையின் வழியே கற்றுக்கொண்டோம் //

Wow...!

ரேவா சொன்னது…

karthikkumar said...

கவிதை அருமை சகோதரி... :) கொஞ்சம் நீளம் குறைக்கலாமே.....

karthikkumar said...

இறந்திடும் மனிதனும், இருந்திடும் மனிதனும்
விதைத்திடும் விதைதான்
இனிவருவோர் வளர்ச்சிக்கு உதவிடும்///
இந்த வரிகளும் இன்ன பிற வரிகளும் அருமை. இரண்டு பதிவுகளாக எழுதி இருக்கலாமே....

சகோதரருக்கு உங்கள் விருப்பபடி இரண்டு பத்திகள்
நீக்கிவிட்டேன்... தங்கள் கருத்துக்கு நன்றி....

ரேவா சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் said...

//இறந்திடும் மனிதனும், இருந்திடும் மனிதனும்
விதைத்திடும் விதைதான்
இனிவருவோர் வளர்ச்சிக்கு உதவிடும் என்பதை வித்தகர்கள் விதைத்திட விதையின் வழியே கற்றுக்கொண்டோம் //

Wow...!

உங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி ப்ரியமுடன் வசந்த் அவர்களே....

Paul சொன்னது…

புது முயற்சி மிகவும் அருமையாக வந்திருக்கிறது.. கவிதை முழுவதுமே மிகவும் ரசித்து படித்தேன்.. சில உணர்வுகளை சொன்ன விதம் ரொம்பவே அருமை.. உதாரணத்திற்கு..

//கூர்கொண்ட ஆயுதமின்றி,
கூர்மளிங்கிய நாவும் கூட காயப்படுத்துமென்பதை//
//அவனவனாய் இருக்க தோற்றுப்போய்
முகமூடி தனை அணித்து முகவரிதொலைத்த
மூடர்கள்//
//காதலில் விழுந்து விழி நீர் தேங்கி
தவிக்கும் நேரத்திலெல்லாம்,
காதல் என்பது பொறுமையாய் பொருத்தரிதலில்
உண்டென்பதை//

ஆனால் எல்லாவற்றையும் விட நான் மிக மிக ரசித்த வரிகள் கீழ்காணும் வரிகள் தான்.. ரொம்ப அழகு.. பின்னிடீங்க..!! என் மனதை மிகவும் பாதித்து விட்டன கீழ்காணும் வரிகள்.. ரேவா..! சொன்ன விதம் மிக மிக அருமை..

//விழிநீர் வடிந்தாலும் உமிழ்நீர் கொட்டி உரசிப்பாக்கும்
சதைபிண்டங்கள் மத்தியில்..//

Unknown சொன்னது…

பொங்கல் வாழ்த்துக்கள் தோழி..

ரேவா சொன்னது…

பால் [Paul] said...

புது முயற்சி மிகவும் அருமையாக வந்திருக்கிறது.. கவிதை முழுவதுமே மிகவும் ரசித்து படித்தேன்.. சில உணர்வுகளை சொன்ன விதம் ரொம்பவே அருமை.. உதாரணத்திற்கு..

//கூர்கொண்ட ஆயுதமின்றி,
கூர்மளிங்கிய நாவும் கூட காயப்படுத்துமென்பதை//
//அவனவனாய் இருக்க தோற்றுப்போய்
முகமூடி தனை அணித்து முகவரிதொலைத்த
மூடர்கள்//
//காதலில் விழுந்து விழி நீர் தேங்கி
தவிக்கும் நேரத்திலெல்லாம்,
காதல் என்பது பொறுமையாய் பொருத்தரிதலில்
உண்டென்பதை//

ஆனால் எல்லாவற்றையும் விட நான் மிக மிக ரசித்த வரிகள் கீழ்காணும் வரிகள் தான்.. ரொம்ப அழகு.. பின்னிடீங்க..!! என் மனதை மிகவும் பாதித்து விட்டன கீழ்காணும் வரிகள்.. ரேவா..! சொன்ன விதம் மிக மிக அருமை..

//விழிநீர் வடிந்தாலும் உமிழ்நீர் கொட்டி உரசிப்பாக்கும்
சதைபிண்டங்கள் மத்தியில்..//

உங்கள் பின்னூட்டம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.....
நன்றி நண்பா...

ரேவா சொன்னது…

ஜெ.ஜெ said...

பொங்கல் வாழ்த்துக்கள் தோழி..


நன்றி தோழி..

Unknown சொன்னது…

ம் நல்லா இருக்கு

எவனோ ஒருவன் சொன்னது…

நிறைய கற்றுக் கொண்டிருக்கீங்க வாழ்க்கையில். உங்கள் கவிதை அதை பிரதிபலிக்கிறது....