உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 மார்ச், 2011

யார் நீ?....

* முகம் தெரியாமல்
முகவரி புரியாமல்,
இணையத்தில்
நட்பாய்  இணைந்தோம்...

* சில உரையாடல்களில் 
சிரிக்க வைத்தாய்...
சில உரையாடல்களில்
சிந்திக்க வைத்தாய்..

* பகலிரவு புரியாமல்,
பசித்தூக்கம் அறியாமல்,,
உன்  பேச்சால் 
என் உலகம் மறக்கவைத்தாய்.. 

* நட்பாய் அறிமுகமாகி,
நாளடைவில்
  நட்பின் முகவுரையை
ஏற்க மறுத்தாய்...

 
* வளம் தேடும் இடத்தில் இருந்து
என் நலம் நாடினாய்...
கண்ணுறக்கம் தான் கெடுத்து
உரையாடினாய்...

* இனிக்க இனிக்க பேசி 
என் இரவை 
இனிதாக்கினாய்...
* இது  காதலா?, நட்பா? 
என்று விளையாட்டாய்
கேட்டதற்கு 
என் நட்பைக்  கனவாக்கி,
என் நாட்களை நரகமாக்கி
ஓடி மறைந்தாய்...

* உறைமேல் இட்ட விலாசத்திற்க்கே
சரியாய் போய் சேராத அன்பு...
எப்படி உன்னிடம் கிடைக்கும்
என்று எதிர்பார்த்தேன்...

* மழை விட்டுச் செல்லும்,
ஈரக்காற்றாய்,
உன் இனிமையான பேச்சு
அடிமனதில் இன்னும்
தூரலாய் .இருக்குதடி.

* இருப்பது இருக்கட்டும்
என் தோழியே ...
தேனொழுக பேசி,
கொட்டும் தேளென
நீ மாறியதன் நோக்கம்?.... 

* உன் அன்பின் வெளிப்பாடு
வெறும் தோற்றம் சார்ந்ததா?...
புரியவில்லை...
அன்பைத் தாங்கி நிற்கும்
நம் எல்லை கோட்டில்,
பாதுகாப்புக்கு நிற்பது
நம் நட்பு..
புரியவில்லையா?....
உனக்கு...

* எல்லைத்தாண்டும் பயங்கரவாதம்
என்னில் இருக்காது...
ஆனாலும் என் தோழியே ,
நீ விட்டுச் சென்ற
வார்த்தைகளில்,
எனைக் கொத்திச்செல்லும்
உன் அன்பு
கானலாய் இருந்தாலும்,
கனவிலாவது  தொடரட்டும்...
ஆம் தோழி 
கனவிலாவது நம் 
நட்பு தொடரட்டும்... 

* முகம் தெரியாமல்
முகவரி புரியாமல்,
இணையத்தில்
இணைந்தோம்...
(என்  இணைய நண்பனின் வேண்டுதலுக்காய் இந்தக் கவிதை....

47 கருத்துகள்:

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோ, இணைய நட்பினைப் பற்றிய ஒரு இனிய கவிதையினை எளிமையான வடிவில் வரைந்திருக்கிறீர்கள். கவிதை பிரிவின் துயரத்தைச் சொல்லி உண்மையான நட்பினைக் குறிப்பால் உணர்த்தி நிற்கிறது.

Chitra சொன்னது…

அருமையாக எழுதி இருக்கீங்க... இணைய நட்பு, சூதாட்டம் மாதிரி என்று தோழி ஒருத்தி விளையாட்டாக சொல்வாள்...

பெயரில்லா சொன்னது…

நட்பில், காதல் தூறல் விழ நேரும்போது வரும் புரியாத விரிசல்..
இது நீங்கள் எழுதியா? இல்லை உங்கள் நண்பரா?

வேங்கை சொன்னது…

வணக்கம்

நல்ல கவிதை

// உறைமேல் இட்ட விலாசத்திற்க்கே
சரியாய் போய் சேராத அன்பு...
எப்படி உன்னிடம் கிடைக்கும்
என்று எதிர்பார்த்தேன்... //

எதிர்பார்ப்பு என்றுமே ஏமாற்றம் தான்

logu.. சொன்னது…

\\முகம் தெரியாமல்
முகவரி புரியாமல்,
இணையத்தில்
இணைந்தோம்...\\

????????????

logu.. சொன்னது…

கவிதை சூப்பர்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

* எல்லைத்தாண்டும் பயங்கரவாதம்
என்னில் இருக்காது...
ஆனாலும் என் தோழியே ,
நீ விட்டுச் சென்ற
வார்த்தைகளில்,
எனைக் கொத்திச்செல்லும்
உன் அன்பு
கானலாய் இருந்தாலும்,
கனவிலாவது தொடரட்டும்...
ஆம் தோழி
கனவிலாவது நம்
நட்பு தொடரட்டும்...

நல்லவரிகள்! நட்பின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றது!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

(என் இணைய நண்பனின் வேண்டுதலுக்காய் இந்தக் கவிதை....//////////////////////

நமக்காகவும் ஒரு கவிதை எழுதுங்களேன் ரேவா!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//இது காதலா?, நட்பா?
என்று விளையாட்டாய்

கேட்டதற்கு
என் நட்பைக் கனவாக்கி,
என் நாட்களை நரகமாக்கி
ஓடி மறைந்தாய்... ///

அடடடடா அருமை அருமை மக்கா....

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

என்னை நெகிழ வைக்கிறது தங்கள் கவிதை...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அனைத்தையும் பரிமாரிக் கொள்ள இன்றைக்கு உறுதுணையாக இருப்பது.. இணையங்களே..

அதில் அன்புக்காக ஏங்கும் பலகோடி தமிழ்ர்களின் ஏக்கம் கவிதையில் தெரிகிறது..

Unknown சொன்னது…

நமது நண்பனுக்கு
நண்பா
ஒரே தோழி உலகில் இல்லையடா .....
(எனது அண்ணன் அட்வைஸ் இது)

கவிதை எல்லாம் சோகமா இருக்கே ஏன் ஏன் ஏன் ???
(ஒரு இணைய தோழி கிடைக்க மாற்றான்கப்பா :)

மாலதி சொன்னது…

இடுக்கைக்கு
பயனுள்ள செய்தி பாராட்டுகள் .

Unknown சொன்னது…

நண்பா உனக்காக
ஒரு கவிதை
நண்பா நண்பா
நாளை நமதே...

எறிந்த பந்தும்
பிரிந்த அன்பும்
சென்று திரும்பி வரும் ...

எதிர்பாத்தால்
சோகம் வரும்
எதிர்பாராமல்
இருந்தால்
இன்பம்
மேகமாய் வரும்

மெய்
நட்பு
பொய்க்காது

(ரேவதி வர வர உன் கவிதை படித்து எப்படி ஆகி விட்டேன்:)

karthikkumar சொன்னது…

nice sister....:))

ரேவா சொன்னது…

நிரூபன் said...

வணக்கம் சகோ, இணைய நட்பினைப் பற்றிய ஒரு இனிய கவிதையினை எளிமையான வடிவில் வரைந்திருக்கிறீர்கள். கவிதை பிரிவின் துயரத்தைச் சொல்லி உண்மையான நட்பினைக் குறிப்பால் உணர்த்தி நிற்கிறது.


நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்துக்கும்.... இன்று முதல் பின்னூட்டமே உங்களுடையது மகிழ்ச்சி

ரேவா சொன்னது…

Chitra said...

அருமையாக எழுதி இருக்கீங்க... இணைய நட்பு, சூதாட்டம் மாதிரி என்று தோழி ஒருத்தி விளையாட்டாக சொல்வாள்...


உங்கள் தோழி சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள் தோழி... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி :-)

ரேவா சொன்னது…

Balaji saravana said...

நட்பில், காதல் தூறல் விழ நேரும்போது வரும் புரியாத விரிசல்..
இது நீங்கள் எழுதியா? இல்லை உங்கள் நண்பரா?

என் இணைய நண்பனின் வேண்டுதலுக்காய் நான் எழுதியக் கவிதை... உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி... தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

வேங்கை said...

வணக்கம்

நல்ல கவிதை

// உறைமேல் இட்ட விலாசத்திற்க்கே
சரியாய் போய் சேராத அன்பு...
எப்படி உன்னிடம் கிடைக்கும்
என்று எதிர்பார்த்தேன்... //

எதிர்பார்ப்பு என்றுமே ஏமாற்றம் தான்...

சிலநேரங்களில் ஏமாற்றம் பல நேரங்களில் பாடம்.... நன்றி நண்பா

ரேவா சொன்னது…

logu.. said...

\\முகம் தெரியாமல்
முகவரி புரியாமல்,
இணையத்தில்
இணைந்தோம்...\\

????????????

என்ன நண்பா?...

ரேவா சொன்னது…

logu.. said...

கவிதை சூப்பர்.

ஹ ஹ நன்றி நன்றி நன்றி லோகு...

ரேவா சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

* எல்லைத்தாண்டும் பயங்கரவாதம்
என்னில் இருக்காது...
ஆனாலும் என் தோழியே ,
நீ விட்டுச் சென்ற
வார்த்தைகளில்,
எனைக் கொத்திச்செல்லும்
உன் அன்பு
கானலாய் இருந்தாலும்,
கனவிலாவது தொடரட்டும்...
ஆம் தோழி
கனவிலாவது நம்
நட்பு தொடரட்டும்...

நல்லவரிகள்! நட்பின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றது!!


அட அட, வாங்க, வாங்க, நண்பா... என்ன உங்கள இந்த பக்கமே காணாம்... நன்றி நண்பா

ரேவா சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

(என் இணைய நண்பனின் வேண்டுதலுக்காய் இந்தக் கவிதை....//////////////////////

நமக்காகவும் ஒரு கவிதை எழுதுங்களேன் ரேவா!

ஹ ஹ சொல்லிடேங்கள்ள எழுதிட்டாப் போச்சு..

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//இது காதலா?, நட்பா?
என்று விளையாட்டாய்

கேட்டதற்கு
என் நட்பைக் கனவாக்கி,
என் நாட்களை நரகமாக்கி
ஓடி மறைந்தாய்... ///

அடடடடா அருமை அருமை மக்கா....


நன்றி மனோ

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

என்னை நெகிழ வைக்கிறது தங்கள் கவிதை...

.. கவிதைகளால் இளைப்பாறவைக்கும் கவிதை வீதியில், என் கவிதைகள் தங்களை நெகிழ வைக்கிறதா ?.... நன்றி நன்றி நன்றி # கவிதை வீதி # சௌந்தர்...

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

அனைத்தையும் பரிமாரிக் கொள்ள இன்றைக்கு உறுதுணையாக இருப்பது.. இணையங்களே..

அதில் அன்புக்காக ஏங்கும் பலகோடி தமிழ்ர்களின் ஏக்கம் கவிதையில் தெரிகிறது..


கண்டிப்பாக நண்பா, இருக்கிற உடலில் துடிக்கின்ற இன்னொரு இதயமாய், இந்த இணையம் மாறிப் போனதும் , அதற்குள் உண்மை அன்பை நாடி நாம் ஏங்கித் தவிப்பதும், இன்று பெரும்பாலானோர் வாழ்வில் நடக்கின்ற ஒன்றே.. நன்றி நண்பா உங்கள் வருகைக்கு வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

siva said...

நமது நண்பனுக்கு
நண்பா
ஒரே தோழி உலகில் இல்லையடா .....
(எனது அண்ணன் அட்வைஸ் இது)

நல்ல அட்வைஸ் சிவா.. கீப் இட் அப்

கவிதை எல்லாம் சோகமா இருக்கே ஏன் ஏன் ஏன் ???
(ஒரு இணைய தோழி கிடைக்க மாற்றான்கப்பா :)

ஹி ஹி

ரேவா சொன்னது…

malathi in sinthanaikal said...

இடுக்கைக்கு
பயனுள்ள செய்தி பாராட்டுகள் .

நன்றி உங்கள் முதல் வருக்கைக்கும் மறுமொழிக்கும் ...

ரேவா சொன்னது…

siva said...

நண்பா உனக்காக
ஒரு கவிதை
நண்பா நண்பா
நாளை நமதே...

பார் டா....

எறிந்த பந்தும்
பிரிந்த அன்பும்
சென்று திரும்பி வரும் ...

ஐ நல்லா இருக்கே...

எதிர்பாத்தால்
சோகம் வரும்
எதிர்பாராமல்
இருந்தால்
இன்பம்
மேகமாய் வரும்

மறுபடியும் பார்டா

மெய்
நட்பு
பொய்க்காது

(ரேவதி வர வர உன் கவிதை படித்து எப்படி ஆகி விட்டேன்:)

ஒய் இந்த குசும்பு தானே ஆகாது... நல்லா தானே இருக்கு...
அவ்வ்வ்வ் எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. நன்றி சிவா உன் வருகைக்கும், அழகான நட்புகொண்ட உன் நட்பின் கவிதைக்கும் :_)

ரேவா சொன்னது…

karthikkumar said...

nice sister....:))

நன்றி நன்றி நன்றி சகோ............
--

தல தளபதி சொன்னது…

ஒய் பீலிங்க்ஸ்??
த்ரிஷா இல்லைன்னா திவ்யான்னு உங்க நண்பர்கிட்ட எடுத்து சொல்லுங்க மேடம்.

jothi சொன்னது…

எளிமையான‌ ந‌டையில் எழுத‌ப்ப‌ட்ட‌ அழ‌கான‌ க‌விதை ரேவா,..

சௌந்தர் சொன்னது…

இப்போ அந்த நண்பர் இருக்காரா இல்ல போய்ட்டாரா..???? இந்த கவிதை நீங்கள் போல் இல்லை...உங்கள் நண்பர் எழுதியது போல் தான் இருக்கிறது...இந்த கவிதையில் வரும் வரிகள் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது இதில் பாதி வரிகள் எனக்கும் பொருந்தும் :)

Ram சொன்னது…

ஏற்க்க மறுத்தாய்...//

ஏற்'க்'க.. இதில் 'க்' தேவையா.?

Ram சொன்னது…

//(என் இணைய நண்பனின் வேண்டுதலுக்காய் இந்தக் கவிதை....//

ஓ.. அவரது இடத்தில் இருந்து எழுதியிருக்குறீர்கள் அல்லவா.???

சரி இணையம் ஒரு பூச்சாண்டி.. அதை சீண்டி விளையாடும் குழந்தைகள் நாம்.. இப்படி அப்படி தான் காலை வாறும்.. அவரிடத்து சொல்லிடுங்கள் மாற்றாள் காதல் ஒரு பகுதியே என்று..

அவருக்கு சமாதானம் சொல்த விட்டுபுட்டு அவருக்காக அவரின் வருத்தத்தை கவிதையாக வடித்து அவரின் வருத்தத்தை மேலும் தூண்டியதுக்கு வாழ்த்துக்கள்..

ரேவா சொன்னது…

தல தளபதி said...

ஒய் பீலிங்க்ஸ்??
த்ரிஷா இல்லைன்னா திவ்யான்னு உங்க நண்பர்கிட்ட எடுத்து சொல்லுங்க மேடம்.

நீ சொல்லிட்டேல, உன் சார்புல நீங்க சொன்னதா நான் சொல்லிடுறேன்........ஓகே யா...

ரேவா சொன்னது…

jothi said...

எளிமையான‌ ந‌டையில் எழுத‌ப்ப‌ட்ட‌ அழ‌கான‌ க‌விதை ரேவா,..

நன்றி சகோ உங்கள் வாழ்த்துக்கு

ரேவா சொன்னது…

சௌந்தர் said...

இப்போ அந்த நண்பர் இருக்காரா இல்ல போய்ட்டாரா..???? இந்த கவிதை நீங்கள் போல் இல்லை...உங்கள் நண்பர் எழுதியது போல் தான் இருக்கிறது...இந்த கவிதையில் வரும் வரிகள் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது இதில் பாதி வரிகள் எனக்கும் பொருந்தும் :)


நண்பர் இருக்கிறார்.சகோ... உன் உள்ளக் கருத்தை உள்ளபடியே சொன்னதற்கு... நன்றி சகோ

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

ஏற்க்க மறுத்தாய்...//

ஏற்'க்'க.. இதில் 'க்' தேவையா.?

பிழைகள் நீக்கப்பட்டது நன்றி உங்கள் முதல் வருகைக்கு...

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

//(என் இணைய நண்பனின் வேண்டுதலுக்காய் இந்தக் கவிதை....//

ஓ.. அவரது இடத்தில் இருந்து எழுதியிருக்குறீர்கள் அல்லவா.???

ஆமாம் அவர் இடத்தில் இருந்து தான் எழுதினேன்...

சரி இணையம் ஒரு பூச்சாண்டி.. அதை சீண்டி விளையாடும் குழந்தைகள் நாம்.. இப்படி அப்படி தான் காலை வாறும்.. அவரிடத்து சொல்லிடுங்கள் "மாற்றாள் காதல் ஒரு பகுதியே என்று""..

எப்படியும் என் நண்பன் இந்த கமெண்ட் படிச்சிருப்பார்.. உங்கள் மறுமொழி அவரிடம் சென்றிருக்கும் நண்பரே....நல்லா உரைக்கிற மாதிரி சொல்லுங்க...

அவருக்கு சமாதானம் சொல்த விட்டுபுட்டு அவருக்காக அவரின் வருத்தத்தை கவிதையாக வடித்து அவரின் வருத்தத்தை மேலும் தூண்டியதுக்கு வாழ்த்துக்கள்..

கவிதையை எழுத்தில் வடிக்க சொன்னதே என் நண்பன் தான்... இந்த கவிதையின், முதல் கருத்தை, எனக்கு மெயிலில் தெரிவித்தும் என் நண்பன் தான்... அவன் வருத்தப் பட்டதாக தெரியவில்லை....மாறாக சில பிழைகள் நீக்கச்சொன்னான் நீக்கினேன்.. உங்கள் மறுமொழிக்கும், வருகைக்கும், மிக்க நன்றி
நன்றி........:-)

Ungalranga சொன்னது…

:))))))))


நல்ல கவிதை.. !!

எவனோ ஒருவன் சொன்னது…

மிகவும் ரசித்தேன் தோழி. Superb!

குறிப்பாக இந்த வரிகள்,
////உறைமேல் இட்ட விலாசத்திற்க்கே
சரியாய் போய் சேராத அன்பு...
எப்படி உன்னிடம் கிடைக்கும்
என்று எதிர்பார்த்தேன்...////

ரேவா சொன்னது…

ரங்கன் said...

:))))))))


நல்ல கவிதை.. !!

நன்றி நண்பரே... உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்...

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

மிகவும் ரசித்தேன் தோழி. Superb!

குறிப்பாக இந்த வரிகள்,
////உறைமேல் இட்ட விலாசத்திற்க்கே
சரியாய் போய் சேராத அன்பு...
எப்படி உன்னிடம் கிடைக்கும்
என்று எதிர்பார்த்தேன்...////


இதைத் தான் நீங்கள் மறுமொழியாக இடுவீர்கள் என்று நான் நினைத்தேன் நண்பா... நன்றி நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்..

சித்தாரா மகேஷ். சொன்னது…

"சில உரையாடல்களில்
சிரிக்க வைத்தாய்...
சில உரையாடல்களில்
சிந்திக்க வைத்தாய்.."
கவிதை அருமை..........

என்றும் உங்கள்
சித்தாரா மகேஷ்
தேனின் மகிமை

மும்தாஜ் சொன்னது…

இணையத்தில் நல்ல நட்புகளும் இருக்கத்தான் செய்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை...இந்த அளவுக்கு துயர்படும் நட்பு இருக்குமா என்பதும் சந்தேகமே ..உங்கள் கற்பனைக்கு வாழ்த்துக்கள் தோழி !!!!!!!!!!

மும்தாஜ் சொன்னது…

இணையத்தில் நல்ல நட்புகளும் இருக்கத்தான் செய்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை...இந்த அளவுக்கு துயர்படும் நட்பு இருக்குமா என்பதும் சந்தேகமே ..உங்கள் கற்பனைக்கு வாழ்த்துக்கள் தோழி !!!!!!!!!!