விடிஞ்சும் விடியாததுமா இன்னைக்கு இந்த மனுஷனுக்கு லீவ் ஆச்சே... சரி இன்னைக்கு ஒரு நாளாவது அந்த பாவி மனுஷனுக்கு பிடிச்சத சமைக்கலாம்னு, என்ன சமைக்கனு அவர் கிட்ட கேட்டா , படுபாவி, நீ ஒன்னும் சமைக்க வேணாம், இன்னைக்காவது நான் நல்ல சாப்பாடு சாப்புடுறேன்னு அவரே சமைக்க போயிட்டருங்க...சரி நமக்கு சமைக்கிற வேலை மிச்சம்னு சொல்லி வீட்டு வேலைய கவனிக்க போனா... துவைக்க எடுத்து வச்ச துணி எல்லாத்தையும் நானே துவைக்கிறேன் நீ போ னு சொல்லிடாரு... என்ன ஆச்சு இந்த மனுசனுக்குனு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்..
டமால் னு ஒரு சத்தம், என்னனு போய் பாத்த........ என் வீட்டு மனுஷன் சமைக்கிறேன்னு சொல்லி, ஸ்டவ் ஆன் பண்றத்துக்கு பதிலா, இன்டெக்ஸ்டன் அட்டுப்புல குக்கர வச்சுருக்காறு...குக்கர் அக்செப்ட் ஆகாம வெடிச்சிருச்சு. நான் அடுப்படிக்குள்ள போனதும் அவரு பேய் முழி.முழிக்க .. எனக்கோ ஒரே கோவம்.... ஸாரி டி னு அவர் சொல்ல, எனக்குள்ள எப்படி அப்படி ஒரு காளியாத்தா ஒளிசுருந்தானே தெரியல, நீங்க ஆணியே புடுங்க வேணாம்... நான் நல்லா சமைக்காட்டியும் பரவா இல்ல... என் சமையலையே எப்போவும் போல சாப்பிடுங்கன்னு சொல்லி சமையல கவனிக்க போயிட்டேன்..
திடிருன்னு பாத் ரூம் ல இருந்து சத்தம் ஐய்யோ அம்ம்மானு, என்னடா இன்னும் தேர்தல் முடியலையே அதுக்குள்ள கலைஞர் கத்துறாரேனு பாத்தா, என் வீட்டு மவராசா துணி துவைக்க போயி, என் அப்பா சீதனமா கொடுத்த வாசிங் மெஸின பொகைய வச்சுட்டாறு..அவ்வ்வ்வவ்வ்வ் .அட பாவி மனுசா ஏன்யா உனக்கு இந்த வேண்டாத வேலைன்னு கேட்டா?.... சாரி ரேவா மா, நானும் உனக்கு ஒத்தாசையா இருக்கணும்னு நினச்சு தான் இப்படி பண்ணுனேன்.... தெரியாம மெஷின் பால்ட் ஆகிடுச்சு, இத மனசுல வச்சுகிட்டு என் அம்மா எனக்கு ஆசையா வாங்கித்தந்த என் பைக் அஹ ஒன்னும் பண்ணிடாதாடானு கெஞ்சிக் கேட்டாரா, எனக்கோ ஒரே சந்தோஷம் ஆகா இந்த ஐடியா நமக்கு தோணாம போயிடுச்சேனு, மனுஷன் அசந்த நேரம் வண்டி பிரேக் அஹ கலட்டிடலாம்னு நினைச்சேன்...
அப்பறம் கொஞ்சம் வேலை காரணமா என் வீட்டால கவனிக்க முடியல, சரி என்ன பண்ணுறாருனு பாக்கப் போனா, அட உங்அப்பன் , வலுக்கத் தலைக்கு சவுரி வைக்க, (ச்சே ச்சே என் மாமனார் அஹ சொல்லல, சும்மா பழமொழி) மாடில பக்கத்து வீட்டுல இலியான மாதிரியே ஒரு பொண்ணு இருக்கும்ங்க , இந்த மனுஷன் இலியானா போட்டோவையே சோறுதண்ணி இல்லாம பாப்பாரு, இதுல அந்த பொண்ணும் இவரையே பாக்க, எனக்கு ஒரே பீதி... அதுவும் சொல்லி வச்ச மாதிரி அவருக்கு பிடிச்ச புல் ஹான்ட் சுடி போட்டுருக்கா, இவருக்கோ புல் ஹான்ட் சுடி போட்டு வயசான பாட்டிப் போனாலே, அந்த பாட்டி வெட்க்க படுற அளவுக்கு பேசுவாரு, இதுல இந்த பொண்ணு இவரோட ரொமாண்டிக் லூக்குக்கே அவுட் ஆகிடுச்சு... (பாத்தாலே தெரிஞ்சது) இதுல பேசுனா அவளோ தான், என்னடா நம்ம தாலிக்கு வந்த சோதனைன்னு, தாலிய கண்ணுல ஒத்திக்கிட்டு, என் வீட்டு லூசு தலைல நறுக்குன்னு ஒரு கொட்டு, ஆனா என் புருஷன் ரொம்ப நல்லவங்க, நான் செல்லமா எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரு,(செல்லமா தாங்க )ஹி ஹி
ஆனாலும் அடிச்சது ஒரு பொண்ணு முன்னாடி அதுவும் இலியானா மாதிரி ஒருத்தி முன்னாடி, சாருக்கு வலிச்சாலும் வலிக்காத மாதிரியே ஸீன் போட்டார் நானும் விடுறதா இல்ல..ஒரு வேலையா அந்த மனுசன மாடில இருந்து தேத்திக் கூட்டிட்டு வந்துட்டேன், நான் போய் காபி போடுட்டுவரேன் இங்கயே இருங்கன்னு சொல்லி அந்த காபி பைத்தியத்துக்கு காபி போட போயிட்டேன், மறுபடியும் டமால்னு சத்தம் என்னடானு பாத்தா என் பொறந்த நாள் பரிசா என் சினேகிதி வாங்கித் தந்த மீன் தொட்டிய கழுவுறேன்னு உடசுட்டாறு...
எனக்கு காதுல இருந்து ஒரே புகையா வர .... உனக்கு இன்னைக்கு சோறும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது, ஒழுங்கா போய் பதிவு போடுறேன் பதிவு போறேன்னு என் மானத்த வாங்குவேங்கள்ள அதயாவது பண்ணித்தொலைங்க, இங்க இருக்கிறதா ஒன்னு ஒன்ன ஒடச்சு என்ன கடுப்ப கெளப்பாதிங்கனு சொன்னது தான் தாமசம்... மனுஷன் குட்டி போட்டா பூனையாட்டம் போய் அவர் லேப்டாப் கிட்ட உட்காந்துகிட்டாறு...ஆளு அட்ரசே தெரியாத அளவுக்கு அமைதியா இருந்துருக்காரு...இதுல அப்போ அப்போ சிரிப்பு சத்தம் வேற என்னடா இந்த மனுசன தலைல அடிச்சோமே சித்தம் கலங்கிடுச்சானு பாத்தா, மாத்தி மாத்தி யோசிக்கிற நம்ம ரஜீவன் பதிவ படிச்சிடு இருக்காரு..ஹி ஹி..
அப்பறம் கொஞ்சம் நேரம் கழிச்சு பசிக்குது ரேவா சோறு போடுறையா இல்ல என் மீசைய வச்சே உனக்கு ஊசி குத்தவானு ரொமாண்டிக் அஹ பேச, உனக்கு இதெல்லாம் வராதே எப்டி நீங்க இப்படி ஆனேங்கனு கேட்டா ஒன்னும் இல்லா இப்போதான் வசந்த சார் ஓட வெட்கத்தை அடைகாக்கும் காதலி அப்டேட்ஸ் படிச்சேன்னு சொன்னாரு..எனக்கோ கோவம் வர கடைசில நம்ம நாற்று நண்பன் அதாங்க நம்ம நிரூபன் பாணில விளக்கமா....ஹி ஹி என் பாணில என்னவரை வாழ்த்திட்டு வந்து உக்காந்தேன்...
கடைசில எங்க வீட்டுல இருந்து அம்மா போன், பேசிட்டே இருக்கும்போது, என் போன் அஹ பிடிங்கி நான் அடிச்சது, சாப்பாடு போட மாட்டேன் னு சொன்னது எல்லாத்தையும் ப்ளாக் அஹ போஸ்ட் அஹ போட்டாராம் அது இன்னைக்கு ஹிட் ஆம்...என் அம்மாகிட்ட சொல்லி சொல்லி சிரிக்கிறாரு.... அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்... இந்த பாவி மனுசன கட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே ... அப்பப்பாஆஆஆஆஆ முடியல...யாராவதும் ஒரு வழி சொல்லுங்களேன்...
( என்ன நண்பர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நேத்து மீள்பதிவுன்னு போட்ட என் பழைய கவிதை கொஞ்சம் அழுகாச்சிய போயிடுச்சு அதான் சும்மா கொஞ்சம் மொக்கையா ட்ரை பண்ணலாம்னு... ஹி ஹி அப்பறம் பாவம் ரேவா உங்களவர்னு கமெண்ட் போடா கூடாது ஏன்னா என் இளவரசன் இன்னும் கண்ணுல மாட்டல... ஹி ஹி..அதோட நல்ல வாய் பேசுறே கொஞ்சம் நகைச்சுவையா எழுதலாம்னு ஒருத்தர் ஐடியா கொடுத்தார் அதன் விளைவே இது ..நாங்களும் மொக்கையா எழுதுவோம்...ஹி ஹி ........யாரையாவது இந்த பதிவு காயபடுத்தி இருந்தால் மனிக்கவும். சும்மா ஒரு பேச்சுக்கு போட்டுவைப்போம்.சரி நண்பர்ஸ் வரட்டுமா.. அப்பறம் அப்டியே படிக்காதவங்க என்னோட முந்தய பதிவு : உன் ஊடல் இதையும் படிச்சிடுங்க...)
65 கருத்துகள்:
முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாக
படித்தேன்..ரசித்தேன்...சிரித்தேன்..சிரிக்கிறேன்...சிரிப்பேன்
கவிதையை எதிர்பார்த்து வந்தேன்... கட்டுரை .. இதுவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கு....
டக்கால்டி said...
முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாக...
உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே, ஹி ஹி உங்கள் முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றிங்கனோ....
ஹ்ம்ம் அருமையான கதை
நல்ல தொரு எதிர்காலம் இருக்கின்றது
டக்கால்டி said...
படித்தேன்..ரசித்தேன்...சிரித்தேன்..சிரிக்கிறேன்...சிரிப்பேன்
சிரிங்க சிரிங்க நல்லா சிரிங்க... சிரிக்க தான் இந்த பதிவு... சமந்தப் பட்டவரு பாத்தாத்தான் பீதியாகிடுவாறு ஹ ஹ..
இந்த பதிவை படிக்கும்போது இனிமே போஸ்டே போடகூடாதுன்னு தோன்றியது ஒரு கணம்
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
கவிதையை எதிர்பார்த்து வந்தேன்... கட்டுரை .. இதுவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கு....
ஹ ஹ என்ன பண்ண நம்மளும் கொஞ்சம் மாற்றம் காட்டனும்ல...நன்றி கருண் உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்.........
உங்கள் முதல் மொக்கை பதிவிற்கு வாழ்த்துக்கள்
ஏன்னா என் இளவரசன் இன்னும் கண்ணுல மாட்டல... ///
i like these line verymuch....:)
siva said...
ஹ்ம்ம் அருமையான கதை
நல்ல தொரு எதிர்காலம் இருக்கின்றது
நல்லதொரு எதிர்காலமா?.... இதுல எதோ உள்க்குத்து இருக்கு போல... ஹி ஹி..
siva said...
இந்த பதிவை படிக்கும்போது இனிமே போஸ்டே போடகூடாதுன்னு தோன்றியது ஒரு கணம்
பாத்தியா சிவா, நம்ம பதிவுலக நண்பர்களுக்கு நான் எவ்ளோ பெரிய நல்லது செஞ்சுருக்கேன்...நீ அப்டிலாம் மனச விட்டுறாத.. ஹி ஹி
sulthanonline said...
உங்கள் முதல் மொக்கை பதிவிற்கு வாழ்த்துக்கள்
ஹி ஹி... நன்றி நன்றி.....
siva said...
ஏன்னா என் இளவரசன் இன்னும் கண்ணுல மாட்டல... ///
i like these line verymuch....:)
:-))))) ஹ ஹ
ம் என்ன சிரிப்பு சரி எப்படித்தான் சந்தோசமா இருக்க வேணும்
உங்கட வீட்டில் நீங்கள் தான் கடைசி பிள்ளைய?nalla,,
கவிதை எழுதறீங்க
கட்டுரை எழுதி கலக்குறீங்க
வாழ்த்துக்கள் சொல்ல வயது இருக்கா தெரிய வில்லை
இருந்தலும் வாழ்த்துக்கள்
siva said...
ம் என்ன சிரிப்பு சரி எப்படித்தான் சந்தோசமா இருக்க வேணும்.......
ஹி ஹி இப்படித் தான் :-)
siva said...
உங்கட வீட்டில் நீங்கள் தான் கடைசி பிள்ளைய?nalla,,
கவிதை எழுதறீங்க
கட்டுரை எழுதி கலக்குறீங்க
வாழ்த்துக்கள் சொல்ல வயது இருக்கா தெரிய வில்லை
இருந்தலும் வாழ்த்துக்கள்.......
நாசமா போச்சு போ... எங்க வீட்டுல நான் தான் மொதோ கொரங்கு... ஹி ஹி வாழ்த்த வயது தேவை இல்லை சிவா மனம் இருந்தால் போதும்... அதான் உங்கிட்ட நிறையவே இருக்கே.அவ்வ்வ்வவ்வ்வ் .....நன்றி சிவா உன் மறுமொழிக்கு
எங்க வீட்டுல நான் தான் மொதோ கொரங்கு....நோ நோ அப்படி எல்லாம் சொல்ல கூடாது குரங்கு...(summa kovam venam..:) ...ok nandri yenda enga kummi adikranu pasanga enna kumarhtukula na kilambrren..
nijama nalla erukku..eluthunga..

ஹோ இதுக்கு பேரு தான் கும்மியா... பரவா இல்ல நல்லாவே அடிக்கிறேங்க பா... கும்மி. ஹி ஹி.. நன்றி சிவா உன் கும்மிக்கு..:-))
மொக்கை போல் இனிதாவது எங்கும் காணோம்....! மொக்கை வாழ்க...:)
நகை பட அசத்திட்டிங்க அருமையிலும் அருமை...
ரொம்ப நகைச்சுவையாத்தான் இருக்கு,.. இருந்தாலும் லூசு'ங்கிறது என்னவோ கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது.
//இந்த புருஷன்ல்லாம் ரொம்ப நல்லவங்க, எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க//
பெண்ணுக்கு மாற்றியோ (alternate) இல்லை ஆணுக்கு மாற்றியோ இப்போது இல்லை,
இல்லையென்றால்,..(என்ன சொல்றது ம்ம்ம்?)
நல்லாவே ஃபீல் பண்ணி எழுதியிருக்கீங்க.. வர்றதுக்கு முன்னவே நல்லா திட்டு வாங்கறார்.. :-)
இம்புட்டு நீள கவிதையா ஹி ஹி ஹி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
சூப்பராதேன் இருக்கு....
என்ன இன்னைக்கு டாபிக் புதுசா இருக்கே இப்படியும் கவிதை யோனு நெனைச்சு வந்தேன் ...
இதுவும் நல்லா தான் இருக்கு ஆனால் பாவம் ரொம்ப வாரீட்டீங்க .........வர்றவர் பார்த்துகிட்டு இருக்க போறார் ... ?!
karthikkumar said...
மொக்கை போல் இனிதாவது எங்கும் காணோம்....! மொக்கை வாழ்க...:)
ஹி ஹி.. எழுதச் சொன்ன நல்ல உள்ளமும் வாழ்கனு சொல்லுக் கார்த்திக்...
நேசமுடன் ஹாசிம் said...
நகை பட அசத்திட்டிங்க அருமையிலும் அருமை...
நன்றி.நேசமுடன் ஹாசிம் .. மிகுந்த தயக்கத்திற்க்கு இடையே எழுதினேன்... தங்கள் மறுமொழி மகிழ்ச்சியை தந்தது...வருகைக்கு நன்றி நேசமுடன் ஹாசிம் அவர்களே
jothi said...
ரொம்ப நகைச்சுவையாத்தான் இருக்கு,.. இருந்தாலும் லூசு'ங்கிறது என்னவோ கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது.
//இந்த புருஷன்ல்லாம் ரொம்ப நல்லவங்க, எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க//
பெண்ணுக்கு மாற்றியோ (alternate) இல்லை ஆணுக்கு மாற்றியோ இப்போது இல்லை,
இல்லையென்றால்,..(என்ன சொல்றது ம்ம்ம்?)
முதலில் மிக்க நன்றி உங்கள் முதல் வருகைக்கும், மறுமொழிக்கும்... உங்கள் பின்னூட்டம் கண்டேன்... என் பிரியமானவனை ரொம்ப பிரியமா லூசுன்னு குறிப்பிட்டு இருந்தேன்... கொஞ்சம் ஓவர் அஹ இருக்கோணு நானும் பீல் பண்ணுனேன்... உங்கள் பின்னூட்டம் கண்டதும் மாற்றி விட்டேன்....
//இந்த புருஷன்ல்லாம் ரொம்ப நல்லவங்க, எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க//
இந்த இடம் எனக்கு வரப்போறவர் மீது நானும், அவரும் கொண்ட அன்பின் வெளிப்பாடாகவே நான் கருதுகிறேன்... ஏனெனில் ஆண்கள் கணவனாக மட்டும் இல்லாமல் நல்ல தோழனாகவும் மாறிவிட்டனர் என்பது என் கருத்து...
சோ ஒரு தோழனாக என்னவனை எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாருனு எழுதி இருந்தேன்..ஆனால் உங்கள் பன்மைக் காண காரணம் தான் தெரியவில்லை... நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கு... இனி தொடர்ந்து வாருங்கள்...
பதிவுலகில் பாபு said...
நல்லாவே ஃபீல் பண்ணி எழுதியிருக்கீங்க.. வர்றதுக்கு முன்னவே நல்லா திட்டு வாங்கறார்.. :-)
அவர் வந்ததுக்கப்பறம் நான் தானே திட்டு வாங்கணும்.. அதான் இப்போவே ஆசை தீர திட்டிக்கிறேன்... ஹி ஹி... நன்றி நண்பா உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் :-)
MANO நாஞ்சில் மனோ said...
இம்புட்டு நீள கவிதையா ஹி ஹி ஹி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
சூப்பராதேன் இருக்கு....
வாங்க மக்கா... நன்றி உங்கள் வருகைக்கு.......அவ்வ்வ்வவ்வ்வ்வவ் இது கவிதை இல்லையே... சூப்பராதேன் இருக்கு...... ஹ ஹ நன்றி மனோ
வேங்கை said...
என்ன இன்னைக்கு டாபிக் புதுசா இருக்கே இப்படியும் கவிதை யோனு நெனைச்சு வந்தேன் ...
இதுவும் நல்லா தான் இருக்கு ஆனால் பாவம் ரொம்ப வாரீட்டீங்க .........வர்றவர் பார்த்துகிட்டு இருக்க போறார் ... ?!
ஐயோ பாவம் ரொம்ப வாரீட்டேனா...இப்ப கொஞ்சம் பதிவ மாத்தியும் எழுதிட்டேன்... நீங்க சொன்ன மாதிரி எனக்கு வரவர் பதிவ படிச்சுட்டா அதான் பயத்துல ஹி ஹி :-) நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்...
// உங்கள் பின்னூட்டம் கண்டதும் மாற்றி விட்டேன்....//
ஏதோ குறை சொல்ல வேண்டும் என எழுதவில்லை சகோதரி,அது படைப்பின் தன்மையை குறைத்து ஒரு மாதிரி நெருடலாக இருந்தது அதான்,..
// ஏனெனில் ஆண்கள் கணவனாக மட்டும் இல்லாமல் நல்ல தோழனாகவும் மாறிவிட்டனர் என்பது என் கருத்து...//
உண்மைதான் இன்றைக்கு ஆண்களுக்கு வேறு வழியில்லை,.. மதிக்காத கணவனிடம் இன்றைய பெண்கள் வாழ தயாரக இல்லை. சின்ன வயதில் என் அப்பா அடுக்களைல உனக்கென்னடா வேலை எனைத் திட்டுவார்,. ஆனால் இன்றைக்கு அவரே அடுக்களையில் டீ போடுகிறார். ஆண்கள் மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
//ஆனால் உங்கள் பன்மைக் காண காரணம் தான் தெரியவில்லை...//
என்னதான் பிணக்குகள் வந்தாலும் ஆணை விட்டால் பெண்ணுக்கும் பெண்ணை விட்டால் ஆணுக்கும் வேறு வழியில்லை என்பதற்காக அதை பன்மையாக்கினேன்,..
நான் சொல்ல வந்தது பொதுவாக.
வேறுரொன்றுமில்லை

அன்பு சகோதரனுக்கு நானும் உங்கள் பின்னூட்டத்தை குறையாய் நினைக்கவில்லை... என் எழுத்தில் உள்ள கருப்பு பிழையை சுடிக்காட்டினீர்கள் நான் அதை வெட்டி எறிந்தேன்...அதற்கு நன்றி...
உண்மைதான் இன்றைக்கு ஆண்களுக்கு வேறு வழியில்லை,.. மதிக்காத கணவனிடம் இன்றைய பெண்கள் வாழ தயாரக இல்லை. சின்ன வயதில் என் அப்பா அடுக்களைல உனக்கென்னடா வேலை எனைத் திட்டுவார்,. ஆனால் இன்றைக்கு அவரே அடுக்களையில் டீ போடுகிறார். ஆண்கள் மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
சகோதரனே... ஒரு பெண் என்றால் இப்படித் தான் வளர வேண்டும் என சொல்லிச்சி சொல்லி வளர்க்கபடுகிறோம்..ஆனால் ஒரு ஆணுக்கு அந்த கட்டுபாடுகள் கிடையாது..அதனாலே ஆணுக்கென்று சில வரையறைகள் வகுத்துக் கொண்டு வாழ்கின்றோம்... உதாரணம்...////சின்ன வயதில் என் அப்பா அடுக்களைல உனக்கென்னடா வேலை எனைத் திட்டுவார்////.... கணவன், மனைவி உறவு அல்லது ஒரு ஆண், பெண்ணின் உறவு பகிர்தலிலும், புரிதலிலும் உள்ளது.. உ(எ)மது தந்தையார் அதை புரிந்து கொண்டார் (இன்றைக்கு அவரே அடுக்களையில் டீ போடுகிறார்) சின்ன சின்ன பகிர்தலில் தானே அன்பு பலப்படும்...////ஆண்கள் மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.////.... மாற்றம் என்ற வார்த்தையை தவிர எல்லாமே இங்கு மாறும் இதில் ஆண்னென்ன, பெண்ணென்ன, ...ஆணும் பெண்ணும் தன்கானவர்க்காய் மாறுவதில் தவறில்லையே..உடன் பிறந்த சகோதரனாய் உங்களை பாவித்தே இந்த பின்னூட்டத்தை இடுகிறேன்.... சிறிதேனும் இந்த பின்னூட்டம் உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்...
அய்யயோ என்னங்க நீங்க பெரிசால்லாம் எழுதிக்கிட்டு,.. நீங்க தப்பாவும் எழுதலை,. தேவையே இல்லாமல் மன்னிப்பும் கேட்க வேண்டிய அவசியமில்லை,..
தொடர்ந்து வர முயற்சி செய்கிறேன் சகோதரி,. ஓ நீங்களும் மதுரையா??
jothi said...
//ஆனால் உங்கள் பன்மைக் காண காரணம் தான் தெரியவில்லை...//
என்னதான் பிணக்குகள் வந்தாலும் ஆணை விட்டால் பெண்ணுக்கும் பெண்ணை விட்டால் ஆணுக்கும் வேறு வழியில்லை என்பதற்காக அதை பன்மையாக்கினேன்,..
நான் சொல்ல வந்தது பொதுவாக.
வேறுரொன்றுமில்லை...
அது என்னமோ உண்மை தான் சகோ..வழி இல்லை என்பதை விட நம் வாழ்க்கைக்கான வழியே எதிர்மறைப் பாலினத்தில் தான் உள்ளது ... ஆண் என்பவன் பெண்ணுக்காகவும், பெண் என்பவள் ஆணுக்காகவும் படைக்கப்பட்ட வரம்.... வரம் சில நேரங்களில் சாபமாய்ப் போவாது அவரர் கையாளலில் உள்ளது உண்மை தானே சகோ....உங்கள் பன்மைக் காண காரணம் புரிந்தது சகோ....நானும் இதை பொதுவான பின்னூட்டமாகவே இடுகின்றேன்.... மிக்க மகிழ்ச்சி உங்கள் பின்னூட்டம் கண்டதில்... இனி தொடர்ந்து வாருங்கள் சகோ....:-)
jothi said...
அய்யயோ என்னங்க நீங்க பெரிசால்லாம் எழுதிக்கிட்டு,.. நீங்க தப்பாவும் எழுதலை,. தேவையே இல்லாமல் மன்னிப்பும் கேட்க வேண்டிய அவசியமில்லை,..
தொடர்ந்து வர முயற்சி செய்கிறேன் சகோதரி,. ஓ நீங்களும் மதுரையா??
அப்படியா, நன்றி வேண்டி யாரும் பின்னூட்டம் இடுவதில்லை. என்னைப் பொறுத்தவரை பதில் சொல்லப்படா பொறுப்பான பின்னூட்டங்கள் அவமானமே. இன்றைக்கு பதிவுலகம் இருக்கும் ஸ்டைலிற்கு இது வேலைக்கு ஆகாது எனத்தெரியும். இருந்தாலும் மனம் ஒப்புக்கொள்ளவில்லை....எங்கயோ படிச்சா மாதிரி இருக்கா என் சகோதரன் உணர்வுக்கு செவி சாய்த்தே அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்ளோ நீளமான பின்னூட்டம்... ஓ நீங்களும் மதுரையா?? அப்டினா நீங்களும் மதுரையா... oh god beautiful oh god beautiful..........ஹி ஹி வரேன் சகோ... இன்னைக்கு எனக்கு நீங்க தான் மாட்டுனேங்க.... அதான் ஹி ஹி... வரட்டுமா?.........
அருமையா எழுதியிருகிங்க....சூப்பர்
எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு
:-)))))))
தமிழ்வாசி - Prakash said...
அருமையா எழுதியிருகிங்க....சூப்பர்
எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு
நன்றி நண்பரே.... உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்
ப்ரியமுடன் வசந்த் said...
:-)))))))
ஹி ஹி நன்றி தல வருகைக்கு
நீ ஒன்னும் சமைக்க வேணாம், இன்னைக்காவது நான் நல்ல சாப்பாடு சாப்புடுறேன்னு அவரே சமைக்க போயிட்டருங்க...//
வணக்கம் சகோதரி, உங்களின் சமையல் கைப் பக்குவம் சரியில்லையோ?
சரி நமக்கு சமைக்கிற வேலை மிச்சம்னு சொல்லி வீட்டு வேலைய கவனிக்க போனா... துவைக்க எடுத்து வச்ச துணி எல்லாத்தையும் நானே துவைக்கிறேன் நீ போ னு சொல்லிடாரு... என்ன ஆச்சு இந்த மனுசனுக்குனு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்..//
அட பெண்ணிற்கு ஒத்தாசையாக இருக்கும் ஒரு ஆணை முதன்மையாக்கிக் கதையைத் தொடங்குகிறீர்கள்.
டமால் னு ஒரு சத்தம், என்னனு போய் பாத்த........ என் வீட்டு மனுஷன் சமைக்கிறேன்னு சொல்லி, ஸ்டவ் ஆன் பண்றத்துக்கு பதிலா, இன்டெக்ஸ்டன் அட்டுப்புல குக்கர வச்சுருக்காறு...குக்கர் அக்செப்ட் ஆகாம வெடிச்சிருச்சு. நான் அடுப்படிக்குள்ள போனதும் அவரு பேய் முழி.முழிக்க .. எனக்கோ ஒரே கோவம்.... ஸாரி டி னு அவர் சொல்ல, எனக்குள்ள எப்படி அப்படி ஒரு காளியாத்தா ஒளிசுருந்தானே தெரியல, நீங்க ஆணியே புடுங்க வேணாம்... நான் நல்லா சமைக்காட்டியும் பரவா இல்ல... என் சமையலையே எப்போவும் போல சாப்பிடுங்கன்னு சொல்லி சமையல கவனிக்க போயிட்டேன்.. //
அட புதுச் சமையல் காரரு.. இதைப் படிக்கும் போது சிரிப்புத் தான் வருகிறது. ஏன் கொஞ்சம் சொல்லிக் கொடுக்கக் கூடாதோ?
திடிருன்னு பாத் ரூம் ல இருந்து சத்தம் ஐய்யோ அம்ம்மானு, என்னடா இன்னும் தேர்தல் முடியலையே அதுக்குள்ள கலைஞர் கத்துறாரேனு பாத்தா, என் வீட்டு மவராசா துணி துவைக்க போயி, என் அப்பா சீதனமா கொடுத்த வாசிங் மெஸின பொகைய வச்சுட்டாறு..அவ்வ்வ்வவ்வ்வ்//
இலக்கியத்தை வெளிப்படையாகக் காட்டும் உவமையணி.. நகைச்சுவையிலும் ஒரு ரசனையினைத் தருகிறது. ஹ...ஹ...
இவருக்கோ புல் ஹான்ட் சுடி போட்டு வயசான பாட்டிப் போனாலே, அந்த பாட்டி வெட்க்க படுற அளவுக்கு பேசுவாரு, இதுல இந்த பொண்ணு இவரோட ரொமாண்டிக் லூக்குக்கே அவுட் ஆகிடுச்சு... (பாத்தாலே தெரிஞ்சது) இதுல பேசுனா அவளோ தான், என்னடா நம்ம தாலிக்கு வந்த சோதனைன்னு, தாலிய கண்ணுல ஒத்திக்கிட்டு, என் வீட்டு லூசு தலைல நறுக்குன்னு ஒரு கொட்டு, ஆனா என் புருஷன் ரொம்ப நல்லவங்க, நான் செல்லமா எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரு,(செல்லமா தாங்க )ஹி ஹி//
உள் வீட்டு ரகசியத்தை இப்படிப் புட்டுப் புட்டு வைக்கிறீங்களே..
இந்தக் கதையில் வரும் நவீன ஆண்மகனை நாமெல்லோரும் கையெடுத்துக் கும்பிட வேண்டும். ஐயா பெரியவரே,( ஒரு மரியாதைக்காக சொல்றேன்) உங்களைக் காணக் கண் கோடி வேண்டுமய்யா.. சொன்ன சொல் கேட்கும் உங்களைப் போல நாட்டிலை எல்லோரும் இருந்தால் இந்த மாதர் சங்களிற்கே வேலை இல்லாது போய் விடும். பிறகெப்படி ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என்று போர்க் கொடி தூக்க முடியும்:)))))
இதுல அப்போ அப்போ சிரிப்பு சத்தம் வேற என்னடா இந்த மனுசன தலைல அடிச்சோமே சித்தம் கலங்கிடுச்சானு பாத்தா, மாத்தி மாத்தி யோசிக்கிற நம்ம ரஜீவன் பதிவ படிச்சிடு இருக்காரு..ஹி ஹி..//
என்ன உங்க ஆளு, பன்னிக் குட்டி ராமசாமியோடை பன்னி எப் எம்மை படிச்சாரா? அது செம காமெடி... நினைச்சு நினைச்சு சிரிச்சேன் நான்.
எனக்கோ கோவம் வர கடைசில நம்ம நாற்று நண்பன் அதாங்க நம்ம நிரூபன் பாணில விளக்கமா....ஹி ஹி என் பாணில என்னவரை வாழ்த்திட்டு வந்து உக்காந்தேன்...//
இதில் உள்ள சிலேடையை ரசித்தேன். சிரித்தேன்..
என் பாணில என்னவரை..
என்னுடைய பாணியிலை என்னவரை வாழ்த்திட்டு வந்தேன்..
என் பாணில என்னவரை வாழ்த்திட்டு வந்தேன்.
கடைசில எங்க வீட்டுல இருந்து அம்மா போன், பேசிட்டே இருக்கும்போது, என் போன் அஹ பிடிங்கி நான் அடிச்சது, சாப்பாடு போட மாட்டேன் னு சொன்னது எல்லாத்தையும் ப்ளாக் அஹ போஸ்ட் அஹ போட்டாராம் அது இன்னைக்கு ஹிட் ஆம்...என் அம்மாகிட்ட சொல்லி சொல்லி சிரிக்கிறாரு.... அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்... இந்த பாவி மனுசன கட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே ... அப்பப்பாஆஆஆஆஆ முடியல...யாராவதும் ஒரு வழி சொல்லுங்களேன்... //
அட யாரய்யா அந்த மனுசன், அதாங்க உங்க ஆளு பதெவெழுதுறாரே என்று கூகிள் பண்ணுவோம் என்றால் அடுத்த பந்தியிலை ஒரு அணு குண்டையே போட்டு விட்டிட்டீங்க்..
இளவரசன் கண்ணிலை மாட்டலையா:))
இதென்ன வலை விடு தூதா... ஆவ்...இதுவும் நல்லா இருக்கே. இவ் இடத்தில் உங்கள் நேர்மையை நான் பாராட்டுறேன்.
சகோதரி ரசித்தேன். உங்கள் பதிவினூடாக நீங்கள் சொல்ல வரும் யதார்த்தத்தையும் உணர்ந்தேன். இன்றைய கால கட்டத்தில் ஆணும் பெண்ணும் நட்புடன் பழகி பெண்ணினது சுக துக்கங்கள், வேலைப் பளுக்களில் ஆணும் பங்கெடுத்தால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக அமையும் என்பதை இக் காலத்திற்கேற்ற வகையில் அதாங்க நம்ம பதிவுலகிற்கேற்ற வகையில் நகைச்சுவையாக நச்சென்று மனதில் பதியும் வகையில் ஒரு சிறுகதை வடிவில் தந்திருக்கிறீர்கள்.
இப் பதிவு, இன்றைய காலத்தில் நிறையப் பேர் வாழ்வில் உணர்ந்து தெளிய வேண்டிய விழிப்புணர்வாகவும், முன்னுதாரணப் பதிவாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
///வணக்கம் சகோதரி, உங்களின் சமையல் கைப் பக்குவம் சரியில்லையோ?
அட பெண்ணிற்கு ஒத்தாசையாக இருக்கும் ஒரு ஆணை முதன்மையாக்கிக் கதையைத் தொடங்குகிறீர்கள். ////
முதன்மைக் கடவுளே ஆண் தானே சகோ... அதான் என் கற்பனை நாயகனை முதன்மைப் படுத்தி இந்த பதிவு
அட புதுச் சமையல் காரரு.. இதைப் படிக்கும் போது சிரிப்புத் தான் வருகிறது. ஏன் கொஞ்சம் சொல்லிக் கொடுக்கக் கூடாதோ?
நம்ம சமைக்கிற வள்ளல பாத்துட்டு அவரே கத்துக்குவாறு... கிடைச்சதும் மொத வேல அது தான் :-)
இலக்கியத்தை வெளிப்படையாகக் காட்டும் உவமையணி.. நகைச்சுவையிலும் ஒரு ரசனையினைத் தருகிறது. ஹ...ஹ...
ஹி ஹி ஏதோ புதுசா சொல்லுறேங்க.. நீங்க சொன்ன சரியாத்தேன் இருக்கும் ஹ...ஹ..
உள் வீட்டு ரகசியத்தை இப்படிப் புட்டுப் புட்டு வைக்கிறீங்களே..
இந்தக் கதையில் வரும் நவீன ஆண்மகனை நாமெல்லோரும் கையெடுத்துக் கும்பிட வேண்டும். ஐயா பெரியவரே,( ஒரு மரியாதைக்காக சொல்றேன்) உங்களைக் காணக் கண் கோடி வேண்டுமய்யா.. சொன்ன சொல் கேட்கும் உங்களைப் போல நாட்டிலை எல்லோரும் இருந்தால் இந்த மாதர் சங்களிற்கே வேலை இல்லாது போய் விடும். பிறகெப்படி ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என்று போர்க் கொடி தூக்க முடியும்:)))))
ஹி ஹி சகோ அப்போ நீங்க முதல பிரம்மன் கிட்ட தான் மனு கொடுக்கணும்... ஏன்னா இப்போதைக்கு என்னவர் கற்பனைக் காதாபாத்திரம்..ஆனாலும் உங்கள் மறுமொழியை வழிமொழிகிறேன்... இதுபோல ஆண்கள் இருந்துட்ட பிரச்சினையே இருக்காதுல.. ஹ ஹ
என்ன உங்க ஆளு, பன்னிக் குட்டி ராமசாமியோடை பன்னி எப் எம்மை படிச்சாரா? அது செம காமெடி... நினைச்சு நினைச்சு சிரிச்சேன் நான்.
ரஜீவன் ( சும்மா காமெடிக்கு ) புகைப்படமே சிரிப்ப வரவைக்கும்... இதுல அவரோட எந்த பதிவா இருந்தா என்ன எல்லாமே நகைச்சுவை களஞ்சியம் தானே,,,,, ஹி ஹி
இதில் உள்ள சிலேடையை ரசித்தேன். சிரித்தேன்..
என் பாணில என்னவரை..
என்னுடைய பாணியிலை என்னவரை வாழ்த்திட்டு வந்தேன்..
ஹி ஹி புரிஞ்சிருச்சா..பின்ன நிரூபனுக்கு புரியாமலா.. என்ன சகோ ஹி ஹ
///அட யாரய்யா அந்த மனுசன், அதாங்க உங்க ஆளு பதெவெழுதுறாரே என்று கூகிள் பண்ணுவோம் என்றால் அடுத்த பந்தியிலை ஒரு அணு குண்டையே போட்டு விட்டிட்டீங்க்..
இளவரசன் கண்ணிலை மாட்டலையா:))///
நகைச்சுவை பதிவு எழுதும் போதே தெரியலையா என்னவர் இன்னும் அகப்படலன்னு...ஹ ஹ
///இதென்ன வலை விடு தூதா... ஆவ்...இதுவும் நல்லா இருக்கே. இவ் இடத்தில் உங்கள் நேர்மையை நான் பாராட்டுறேன்.//
ஹி ஹி நன்றி சகோ
இப் பதிவு, இன்றைய காலத்தில் நிறையப் பேர் வாழ்வில் உணர்ந்து தெளிய வேண்டிய விழிப்புணர்வாகவும், முன்னுதாரணப் பதிவாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சகோ உங்கள் ஆழமான கருத்துக்கும், அழகான மறுமொழிக்கும் என் அன்பான நன்றிகள்... டண்டணக்கா ஏய் டணக்கு
நக்கா.. நன்றி நன்றி நன்றி... உங்கள் பின்னோட்டம் கண்டு மகிழ்தேன் நெகிழ்ந்தேன் நன்றி நிரூபன்...
சுவாரஸ்யமாக இருக்கு...
ஓ நீங்களும் மதுரையா?? அப்டினா நீங்களும் மதுரையா... oh god beautiful oh god beautiful..........//
aaga onnu sernthugaley...oorru kaaravanga ellam...:)
சே.குமார் said...
சுவாரஸ்யமாக இருக்கு...
நன்றி நண்பரே.... உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்
siva said...
ஓ நீங்களும் மதுரையா?? அப்டினா நீங்களும் மதுரையா... oh god beautiful oh god beautiful..........//
aaga onnu sernthugaley...oorru kaaravanga ellam...:)
ஹ ஹ... நாங்களும் மதுரைகாரங்க தான்...
உங்கள் இளவரசரின் பதிவு முகவரியைத் தாருங்கள் :-) அவரும் பதிவு எழுதிகிறவர் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்களே ;-)
எவனோ ஒருவன் said...
உங்கள் இளவரசரின் பதிவு முகவரியைத் தாருங்கள் :-) அவரும் பதிவு எழுதிகிறவர் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்களே ;-)
ஹ ஹ நண்பா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது... இந்த கதையே கற்பனை இதுல ஏங்க இருந்து என் இளவரசனோட முகவரியை தர... ஹி ஹி... தான் கெட்ட கொரங்கு தன்னோட வனத்தையும் சேர்த்து கெடுக்குமாம்.. அதுமாதிரி நான் பதிவு எழுதுறத, நான் என்னவன் எழுதுறதா மாத்தி யோசிச்சு எழுதினேன்... அவ்வளவே.. ஹி ஹி நன்றி நண்பா உன் வருகைக்கும் மறுமொழிக்கும்..........
ரேவா மேடம் சொல்லவே இல்ல!!!!
இந்தப் பதிவை வலைச்சரத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன் சகோதரி. நேரமிருப்பின் பார்வையிடவும்.நன்றி
//சாரி ரேவா மா, நானும் உனக்கு ஒத்தாசையா இருக்கணும்னு நினச்சு தான் இப்படி பண்ணுனேன்.... தெரியாம மெஷின் பால்ட் ஆகிடுச்சு, இத மனசுல வச்சுகிட்டு என் அம்மா எனக்கு ஆசையா வாங்கித்தந்த என் பைக் அஹ ஒன்னும் பண்ணிடாதாடானு கெஞ்சிக் கேட்டாரா, எனக்கோ ஒரே சந்தோஷம் ஆகா இந்த ஐடியா நமக்கு தோணாம போயிடுச்சேனு,//
நகைச்சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது..
//என் இளவரசன் இன்னும் கண்ணுல மாட்டல//
இதைதான் நம்ப முடியவில்லை..!
கருத்துரையிடுக