
வலையுலக உறவுகளுக்கு வணக்கம்,
வருடத்தின் கடைசி நாள் வாழ்த்துச்சொல்லவோ இல்லை நன்றிகளை பரிமாறிக்கிறவோ எழுதப்பட்ட பதிவு இல்லை இது...ஒவ்வொரு வருட முடிவும் அதன் நியாபகங்களை தக்கவச்சிக்க, அழிக்க முடியா ஒரு சுவடை ஏற்படுத்திட்டு போகும், போன வருடம் தானே புயல் மூலம் தன் இருப்பை தக்கவச்சுட்டு போனது 2011.....

இருப்பிடங்களை வெற்றிடமாக்கி வெற்றிடங்களில் நுரைத்து தழும்பும் நினைவுகளில் கோலேச்சில் உன்னோடிருக்கிறேன்.. விடுவதாயும் இல்லை விடைபெறுவதாயும் இல்லையென்ற சமாதான சாஸ்திரங்களை காதல்
கட்டவிழ்க்கும் காலமதில்
உன்னோடிருக்கிறேன்
சோகத்தின் அடர் இருளிலின்
கோரமுகத்திற்கு பயந்து
காட்சிகொண்ட
காட்டிக்கொண்ட...

ஆழம் பார்க்காமல் அதிகம் தேடாமல் அவசரமாய் ஒரு திரைச்சீலை அவசியம் தேவைப்படுகிறது நமக்கு.. ப்ரியக்கண்கள் மத்தியில் பிரியாமல் நமைத்தொடரும் கேள்விகளை
பெரிதாய் - யாரும்
சட்டைசெய்யாத போதும்
சாட்டையடியாய் வந்துவிழும்
இப்பார்வைகளின் வீரியம்
விழித்திருப்பவனுக்கே
புரியுமாதலால்
இப்படியும்
அப்படியும்
எப்படியோ...

அவளைப்போலவே
நீங்களும் வரைந்திருக்கலாம்
உங்களின் எண்ணங்களிற்கான
ஒரு வட்டத்தை...
இதுவரை
அவள் வரைந்துகொண்ட
அவளின் கட்டுப்பாடுகளைக் குறித்த
கவலையோ
அதிலிருந்து மீளவேண்டுமென்ற
தவிப்போ
தோன்றவேயில்லை
அவளுக்கு
மேலும்
மேலும்
அவளை நெருங்கும் யாரும்
அவளை நெருங்காதிருக்க
கட்டுப்பாடுகளின் வட்டத்தை
நெருக்கிக்கொண்டே...

தொலைதலின் பொருட்டு மகிழ்ச்சி கொண்டால் # இதுவும் காதலே.......
அழுதலின் நிமித்தம் ஆனந்தமடைந்தால் # இதுவும் காதலே...
வாசல் வரை வந்துவிட்டு வானம் பார்த்து சிரித்துவைத்தால் # இதுவும் காதலே......
சின்ன சின்ன சிரிப்பிற்கும் சிறைபடுத்தமுடியா பொருள் கொண்டால் # இதுவும் காதலே...
தூக்கத்திலும்...

இது இப்படியே இருந்துவிடப்போவதில்லை
என்ற கேள்விக்கு பின் தான்
நீ எங்கோ ஒளிந்திருக்கிறாய்
சிறு பேச்சின் நடுவில்
கவனமீர்க்கிறாய்
கலையாதிருக்க வார்த்தை கோர்க்கிறாய்ஊருக்கு பதில் சொல்லி
உள்ளுக்குள் புதிர்வைக்கிறாய்
அவிழ்க்க முடியா முடிச்சொன்றிட்டுபரிசெனத் தருகிறாய்
அவ்வளவு...

என்னை கடந்த ஓராயிரம்
கேள்விகளைத்தான்
நீயும் கேட்கிறாய்
இக்கேள்விக்கான பதிலென்று
என்னிடம் எதுவுமில்லை என்பதை
அறிந்தும்...
ஒரு நேசத்தை மறுதலித்தலில்
உண்டாகும் வலி
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை..
ஆகப் பெரும் மகிழ்வின் பின்
ஆனந்தக்கூத்தாடவோ
ஒரு தோல்வியின் பொருட்டு
மண்டியிட்டு அழவோ
எனக்கென்று...

உன் முதல் பார்வை முழுதாய் தொலைத்தது என்னை.. என்னை முழுவதும் படி இல்லை முடித்ததைப்போல் நடி காதோடு காதுரசி காதல் மொழி பேசு, செல்லச்சண்டையில் சித்திரவதை செய் ஒரு முத்தத்தால் முழுமையாக்கு என் முந்தானைக்குள் மூழ்கிப்போ
காதல் பேசு
காமம் தாண்டு
இதயம் நுழை...
மெளனம் கொண்டு என் வார்த்தை உடை
உனக்கானவள்...

வாசித்தல் பழக்கம் நேசித்தலின் பொருட்டு வந்ததா என்று தெரியவில்லை ஆனாலும் நேசிக்கிறேன் இந்த வாசித்தலை......... # இதுவும் காதலே...
குறுகுறுக்கும் பார்வைதனில் ஒளிந்திருக்கும் குறும்புதனை ரசிக்கத்தெரிந்தவனே காதலிக்கிறான்.. # இதுவும் காதலே...
அடைப்புக்குள் வைக்கப்பட்ட அத்தனையையும் கடந்து என்னை...

உள்ளதைச்சொல்வதில் தொடங்கி உளறிக்கொட்டுவதில் ஆரம்பமாகிறது உன் குறும்புத்தனங்கள்... # அழகியல் விளையாட்டு......
ஆர்பரிக்கிறாய் என்னில், ஆழம் பார்க்கிறாய் கண்ணில்... # அழகியல் விளையாட்டு....
என் கவிதைக்கான அர்த்தம் புரிந்ததாய் நடிக்கும் வேளையில் தான் ஆரம்பமாகும் நம் அத்தனை சண்டைகளும்.......

உயிர்வாழ்வதற்கான ஒற்றைத் துளி
நீர் உன் நட்பு.....
*
என் எல்லாமுமாய் மாறிப்போன எனக்கான சுயம் நீ *
புரிதலின் நிமித்தம் பிரிதல் நட்பிலே சாத்தியம்....
*
காதலில் சிக்கிக்கிடக்கும் என் பெரும்பாலான கவிதைகளுக்கான உற்சாகம் உன்னிலிருந்தே ஆரம்பம்...... *
என் பிடிபடாத மெளனங்களை படிக்கத்தெரிந்த...

ஒரு பிரிவைத்தாங்கி வரும் கவிதையில் இருக்கும் வலியை எத்தனை பேர் அறிந்திட முடியும்...
சில கவிதை
பிறரின் அனுபவத்தில் முளைத்திடும்
சில கவிதை
தன் கண்ணீரின் பயனால் விளைந்திடும்
அல்லது
ஏதோ ஒன்றை தூக்கி
எப்போதும் அசைப்போடுதலின்
பொருட்டு கிடைத்திடும்.
எது எப்படியோ
ஒரு கண்ணீரையோ
...

எதற்கும் பொருந்தாத என் சுபாவத்தை அலுவல் நிமித்தமாய் அரிதாரமிட்டுக்கொள்கிறேன்... இப்போதே நடந்தேறிவிடும்
பிரசவமாய் பிதுங்கி நிற்கும் பேருந்தின் ஓரத்தில் நிறுத்திக்கொள்கிறேன் என்னை.. கையோடு கைதடவி கைமாறும் காசுகளில் கற்பை கட்டிவிட்டு கண்பார்க்கும் கூட்டத்தில் கண்ணகிகள் புன்னகைப்பர் இது புதிதல்லயென்பதுபோல்...

கயிறறுந்த பட்டமாகிறது
மனது
நீ பட்டாம்பூச்சியை துரத்திக்கொண்டு
ஓடுகையில் :)
உன்னிடமிருந்தே பெறப்படுகிறது
இந்த காதலும்
அதற்கீடான
எந்தன் கவிதையும்...
அடுக்கடுக்காய் சொல்லப்படும்
அத்தனை பொய்களிலும்
அழகாய் சிரித்து கொள்(ல்)கிறது
இந்த பொல்லாத கவிதை.........
நீயும் நானுமாய்
நடந்த...

சுற்றிலும் கொஞ்சம் சுடுவார்த்தைசாவகாசமாய் இளைப்பாரநீளும் வாழ்க்கையெனஒவ்வொருஇரவிலும்,அவசர அவசரமாய் அழிக்கப்படுகிறதுதோல்வியின் தடயங்கள்...அதிகார ஆளுமைக்கு பயந்து
பொருளில்லா வாழ்வால்இருளிடம் நயந்து,அவன் இருக்கையில் சிரித்து,இருக் கையால் அணைத்து,மென் முத்தமொன்றை புசிக்கையில் ரசிப்பதாய் நடித்து,சாத்தப்பட்ட...

விந்தின் வழி முளைக்கவில்லை
முலைப்பாலும் குடிக்கவில்லை,
ஏழு மலை தாண்டி
ஏழு கடல் தாண்டும்
என் உயிரில் பொருளில்லை...
பொறுப்பான மனிதனிடம்
இருப்பதெல்லாம்
என்னிடம் இருந்ததில்லை..
ஆனாலும்
பலர் விழிநீர் நான் துடைத்ததுண்டு
பலர் விதியோடு விளையாடியதும் உண்டு..
இருப்பவரிடம் இல்லாமலும்
இல்லாதவரிடம்...

எத்தனைமுறை
இறுக கட்டியும்
அவிழ்ந்துவிடுகிற மனதை
நானும்,
ஈர்க்கின்ற விழியை
நீயும்,
பெற்றிருக்கின்றோம்
காதலிடம்...
காட்டிக்கொடுத்த
கண்முன்-உன்னை
கட்டிப்போடுகிறது
காதல்...
நீயில்லா அறையில்
தனக்கு பிடித்தவாறு
உன்னை நிறைத்துக்கொள்கிறது
என் தனிமை....
ஜன்னலோர இருக்கையாய்
என்னை எப்போதும்
ஈர்த்துகொள்கிறது
உன்...