உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 14 ஜூன், 2010

இப்படிக்கு என் காதல்

அன்பே!

உன் ஆழப்பார்வையால்
ஆஜகுபவனாய் அன்பால்
என் நெஞ்சில் அரியாசனம்
விற்றிருக்கும் என்னுயிரே!
கேளடா என் காதல் பற்றி....

முதல் பார்வை பரிமாற்றத்திலே
என்னுள் பதியம் போட்ட என் காதல்
(தாழ்வாய் ) போன என் மனதால்,
ஆழத்தாழ்ப்பாள் போட்டுக்
கொண்டதென்னவோ உண்மைதான்.....!

பிரம்மாண்டமாய் நீ நின்ற அந்த
அரங்கில் ஓர் மூலையில் உன்
சிறுபிள்ளைத்தனத்தை வியந்து
உன் விளையாட்டை விளையாட்டாய்
ரசித்தததென்னவோ உண்மைதான்.....!


உன்னால் உண்டான என்
காதல் எண்ணங்கள் வலிமையானதுதான்
கல்லாய் போன நீ கொஞ்சம்
எனக்காய் வளைந்து கொடுத்தாய்...
உன் வர்ணங்களை கொஞ்சம்
என் வாசலில் தெளித்தாய்

எனதுயிரே:-

உன்னைப்பற்றி இந்த என்
கவிதைத் தொகுப்பில் எப்படி
எழுதுவது? தெரியவிலையே!

சரி...உன்னை என் நண்பன்
என்று எழுதவா?
இல்லை இல்லை என் நண்பன்
எனக்காய் துடிப்பவன்...-அதனால்
நீ என் நண்பன் இல்லை....

உன்னை என் பகைவன்
என்று எழுதவா?
இல்லை இல்லை என் பகைவன்
என் நிறை குறைகளை நான்
அறிவதற்கு காரணமானவன்.....அதனால்
நீ என் பகைவன் இல்லை....

உன்னை என் தந்தையின் வடிவம்
என்று எழுதவா?
இல்லை இல்லை என் தந்தை
எனக்காய் தன சுயவேர்களை
சில கிளைகளில் படராமல் வெட்டிக்
கொண்டவர்....- அதனால்
நீ என் தந்தையின் வடிவம் இல்லை....

உன்னை வழிபோக்கன் என்று
எழுதவா?
இல்லை இல்லை வழிபோக்கர்கள்
முகமறியா, முகவுரையறியா,
நம்மோடு கொஞ்சம் அன்பு பாராட்டிச்
செல்பவர்கள்....- அதனால்
நீ என் வழிபோக்கன் இல்லை....

பின் நீ யார் எனக்கு???!
சொல்லடா?

இறுதியாய் உன்னை என் காதல்
என்று எழுதவா?
இல்லை இல்லை என் காதல் என்பவன்
என் நண்பனாய், என் பகைவனாய்
என் ஆசானாய், என் தந்தையாய்
தன்னை, எனக்காய் பிரதிபலிப்பவன்...-அதனால்
நீ என் காதல் இல்லை....

அன்பே!

எல்லாப் பெண்களைப் போல
நானும் என் காதலை காதலித்த
தென்னவோ உண்மைதான்.....!

உயிராய் உன்னையே நினைத்து
என் உயிருக்குள் கருவாய் உன்
நினைவுகளை சுமந்து திரிந்த
அந்த நாட்கள் என்னவோ உண்மைதான்....

உனக்காய் வடித்த என்
கவிதைகள், கனவுகள், உன்
காலடித்தடம் நாடி ஓடி வர வேண்டும் என்று
நான் நினைத்த தென்னவோ உண்மைதான்.....!


புரியவில்லை உன்னோடான
என் காதல்,

சில நேரம் விரும்பி வருகிறாய் ....
சில நேரம் விலகிச்செல்கிறாய்.....
புரியாத புதிராய் புலம்பிச்செல்கிறாய்....
என் தாய்மைக்கு அடுத்து நீயே
என்கிறாய்....

ஆனால்? காதல் சுயனலமானதுதான்!!!!!

எதிர்பார்புகளையும் அதனால் உண்டான
ஏமாற்றங்களையும் தாண்டி வந்து
உனக்காய் நானும், எனக்காய் நீயும்
உணர்வுகள் என்னும் உரிமைத்தீயில்
எரிவதுதானடா காதல்...


ஆனால் இந்த காதலால் நான் அடைந்தது
என்ன? இழந்தது என்ன?
கணக்கு போட விரும்பவில்லை....
கரணம் நான் இன்னும்
உன்னைக் காதலிக்கிறேன்...

காதலே!

எனக்காய் எதையுமே பிரதிபலிக்காத
உன் கண்ணாடி காதலில் என்றேனும்
என் பிம்பம் படுமோ என்று காத்திருக்கிறேன்
உன் காதலாக.......

என்றேனும் என் காதல் உன்
நினைவோரம் வந்து செல்லும்,
அன்று என் காதல் உன் கண்களை
நனைத்தால் தயங்காமல் சொல்லடா.....
உன் கண்ணீர் துடைக்க
இரு கரம் நீட்டி காத்திருக்கிறேன்.....
இன்று காதலாக!!!!! நாளை ?????

(ஒரு மாலை ரயில் பயணத்தில் நான் சந்தித்த ஒரு தோழியின் பயண பரிமாற்றம் இங்கே என் இப்படிக்கு என் காதலாக!!!!)

அன்புடன்
ரேவா

2 கருத்துகள்:

எவனோ ஒருவன் சொன்னது…

////என்றேனும் என் காதல் உன்
நினைவோரம் வந்து செல்லும்,
அன்று என் காதல் உன் கண்களை
நனைத்தால் தயங்காமல் சொல்லடா.....
உன் கண்ணீர் துடைக்க
இரு கரம் நீட்டி காத்திருக்கிறேன்.....
இன்று காதலாக!!!!! நாளை ?????////

நான் மிகவும் ரசித்த வரிகள்....

ரேவா சொன்னது…

////என்றேனும் என் காதல் உன்
நினைவோரம் வந்து செல்லும்,
அன்று என் காதல் உன் கண்களை
நனைத்தால் தயங்காமல் சொல்லடா.....
உன் கண்ணீர் துடைக்க
இரு கரம் நீட்டி காத்திருக்கிறேன்.....
இன்று காதலாக!!!!! நாளை ?????////

நான் மிகவும் ரசித்த வரிகள்....

நன்றி நண்பா.... உங்கள் பொறுமைக்கும் உங்கள் மறுமொழிக்கும்