உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 14 ஜூன், 2010

போராடு மனமே- போராடு

போராடு மனமே- போராடு
வாழ்கையின் அர்த்தம்
என்னவென்று அறியும்
வரை போராடு.....

@ இருட்டில் வெளிச்சத்தையும்
வெளிச்சத்தில் இருளையும்
காணும் வரை போராடு....

@ சப்தத்தில் நிசப்தத்தையும்
நிசப்தத்தில் சப்தத்தையும்
இனம் காணும் வரை போராடு....

@ பூவிற்குள் பூகம்பம்மும்
பூகம்பத்தில் பூமணமும்
காணும் வரை போராடு....

@ தோல்வியில் வெற்றியையும்
வெற்றியில் தோல்வியின்
மனநிலை என்னவென்று
காணும் வரை போராடு...

@ வாழ்ந்துகொண்டே சாபவர்களையும்
இறந்தபிறகும் வாழ்பவர்களின்
உண்மை எதுவரை என
அறியும் வரை போராடு....

@ துன்பத்தில் இன்பத்தையும்,
இன்பத்தில் துன்பத்தையும்
இனம் பிரிக்கும் வரை
போராடு....

@ மனதின் குழப்பத்திற்கும்
குழப்ப மனதிற்கும் அர்த்தம்
காணும் வரை போராடு...

@ போராடு மனமே- போராடு

உன்னை நீயே அறிந்த
பிறகு, வாழ்கையின்
அர்த்தம் புரிவதற்கு
போராடு மனமே- போராடு.....

^ இது தான் வாழ்கை என்று
அறியும் வரை போராடு.....^


போராட்டங்களுடன்

ரேவா

2 கருத்துகள்:

எவனோ ஒருவன் சொன்னது…

////^ இது தான் வாழ்கை என்று
அறியும் வரை போராடு.....^////

அப்ப போராட்டம் நிற்கவே நிற்காது போல இருக்கே :-)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

////^ இது தான் வாழ்கை என்று
அறியும் வரை போராடு.....^////

அப்ப போராட்டம் நிற்கவே நிற்காது போல இருக்கே :-)

நம்மோட வாழ்க்கை முடியுற வரைக்கும் நமக்கான போராட்டம் இருந்துகிட்டே தான் இருக்கும் நண்பா... வருகைக்கு நன்றி