உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 14 ஜூன், 2010

***உனக்கான ஓர் கவிதை***

அன்பே,

*முத்தத்தின் சத்தத்தை கொடுத்து,
எனக்குள் ஒரு யுத்தத்தை
அரம்பம்மாக்கிய
என் அன்பு உறவுக்காய்
இந்த கவிதை.....

* எனக்குள் ஒரு வலியை கொடுத்து
அந்த வலியோடு என் வாழ்க்கை வழியை
வகுத்துக்கொடுத்த
என் வானத்து சூரியனுக்காய்
இந்த கவிதை.....

* பார்வைகள் பழக்கமாகும்
பழக்கங்கள் உறவாகும்- ஆனால்
பார்க்காமல் பழகாமல்
பரிமாற்றங்களிலே
என்னை பரிதவிக்கவிட்ட
என் பாசதிற்குரியவனுகாய்
இந்த கவிதை.....

* விழி மூடும் போதெல்லாம்
விழிதிரைக்குள் விளையாடும்
என்னுள் இருக்கும் என்
இரண்டாம் உலகை எனக்கு
அடையாளம் கட்டிய, நான்
இரண்டாம் நினைத்த
என் தாயுமானவனுக்காய்
இந்த கவிதை.....

* உன் எண்ணங்கள் மலரும்
போதெல்லாம் விரிவடையும்
உன் விசித்திர வாழ்கையை எனக்கு
விளையாட்டாய் விளக்கி காட்டிய
என் வித்தகனுக்காய்
இந்த கவிதை.....

* உன் வாழ்வில் ஓர் ரசிகனாய்
இருந்து, நீ ரசித்த பொருளுக்கெல்லாம்
என்னை ரசிகையாக்கி என்னுள்
ரசாயன மாற்றம் ஏற்படுத்தியவனுக்காய்
இந்த கவிதை.....

* கற்பனையில் கவிதை அரங்கேறும்
ஆனால், ஆளரவமில்லாமல் பரிமாற்றங்களிலே
ஓர் கற்பனை வாழ்க்கையை அரங்கேற்றம்
செய்த என் அரங்கநாதனுக்காய்
இந்த கவிதை.....

* நவீன உலகத்தில் மாயமாகி போகிவிட்ட
உள்ளத்தின் உணர்வுகளையெல்லாம்,
ஒருமித்து காட்டிய
என் உண்மையுள்ளவனுக்காய்
இந்த கவிதை.....

* உறவுகளால் உதறப்பட்டு உடைந்து
போன என்னை, உன் உண்மை உறவுகளை
அறிமுகப்படுத்தி, அடுத்த உறவுக்கு என்னை
அழைத்துச்சென்ற
என் நட்பின் உறவிற்காய்
இந்த கவிதை.....

* தினமும் உன் அழைப்புக்காய்
காத்திருந்து, அந்த உரையாடலுக்காய்
என்னுள் ஒத்திகை பார்த்து
உன் அழைப்பால் அனைத்தையும் மறந்து
உன் பேச்சை மட்டுமே ரசிக்கவைத்த
என் அன்பு பேச்சானுக்காய்
இந்த கவிதை.....

* ஓர் அன்னையாய், தந்தையாய்
உடன்பிறவாய், ஆசானாய், நண்பனாய்
காதலனாய், எதிரியாய், என்னவனாய்
நீ வேண்டும் என்ற வேண்டுகோளிற்க்கு
தற்காலிக வரமளித்த
என் மனதளந்த என் வாமனனுக்காய்
இந்த கவிதை.....

* வலிகளை பழக்கப்படுத்தினால்
தீராத வலியை கொடுக்கும் என்று
உன்னோடான என் கனவுகளுக்கெல்லாம்
ஒரே கவிதையில் முற்றுப்புள்ளி
வைத்த முடிந்து போன
என் கவிதையின் நாயகனுக்காய்
இந்த கவிதை.....

* கவிதைகள் எல்லாம் கற்பனைகள் தான்....
என் கற்பனைக்கும் புது விடியல் தந்த
என் விடியலுக்காய்
இந்த கவிதை.....

* ஆறடுக்கு மாளிகையில் நீ இருக்க
ஆளவே ஆளில்லை என்று நான் இருக்க
பணம் வந்து பகடியாடிய என் பரமபத
வாழ்க்கை ஆரம்பித்த இடத்திலேயே
அடங்கி போனதன் மாற்றத்தை
புரிந்துகொண்டவனுக்காய்
இந்த கவிதை.....

* மாற்றங்கள் நமக்குள் ஏற்படுத்திய
மாற்றத்தால் வந்த நம் உறவு,,,,
இன்று .....
உனக்கான ஒரு உறவின் வருகையால்
உறைந்து போன போது எனக்கு
இது தான் வாழ்க்கை என்று
எதார்த்தத்தை எதார்த்தமாய்
சொன்னவனுக்காய்
இந்த கவிதை.....

* முடிக்க முடியாமல் தவிக்கும்
என் மனதிற்கு முடிந்து போன
என் இந்த கவிதை நியாபகப்படுத்திகிறது
தோழா!!!!!!!!!!!!!!!!?
இந்த கவிதை..... உனக்கானது என்று!!!


அன்பே,

*முத்தத்தின் சத்தத்தை கொடுத்து,
எனக்குள் ஒரு யுத்தத்தை
ஏற்படுத்திய என் முடிந்து போன
என் உறவிற்க்காய்
இந்த கவிதை.....


இப்படிக்கு
உனக்கான இந்த கவிதையுடன்
ரேவா

3 கருத்துகள்:

div சொன்னது…

touching lines

எவனோ ஒருவன் சொன்னது…

தங்களின் அன்பானவரை எவ்வளவு நேசித்தீர்கள் என்பது நன்றாகப் புரிகிறது தோழி தங்கள் கவிதைகள் மூலம்.

எப்பொழுதும் பாட்டு கேட்டுக்கொண்டே பணிபுரிவேன் என் பணிச் சுமையையும் மனச் சுமையையும் குறைக்க. இன்று தங்கள் கவிதைகள் அந்த இரு சுமைகளை குறைத்து விட்டன :-)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

தங்களின் அன்பானவரை எவ்வளவு நேசித்தீர்கள் என்பது நன்றாகப் புரிகிறது தோழி தங்கள் கவிதைகள் மூலம்.

எப்பொழுதும் பாட்டு கேட்டுக்கொண்டே பணிபுரிவேன் என் பணிச் சுமையையும் மனச் சுமையையும் குறைக்க. இன்று தங்கள் கவிதைகள் அந்த இரு சுமைகளை குறைத்து விட்டன :-)

என் சுமை உங்கள் சுமையை குறைத்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பா..வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆனந்த்