உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 18 ஜனவரி, 2016

ப்ரியத்திற்கு அப்பால்

* சொல்லொன்றால் தவறிவிழும் போது தாங்கிப் பிடிக்கிற உதடுகள் இரண்டென பிரிக்கிறது உச்சரித்த பாதைகளை நம்பிக்கையில் நுழைந்துகொள்கிற வழி தர்க்கத்திற்குரியதாய் இல்லாது போனது ஒருவகையான ஏற்பு இன்னொருவகையான ஏமாற்றம் எழுந்துகொள்கிற ஏற்பில் முளைக்கிற சத்தம் வியாபிக்கிறது பறந்தலைவதற்கான வாய்ப்பை சிறகுகள் அனுமதிக்கிறது பறப்பதற்கான வானத்தை தூரம் தொலைத்திடும் தொடக்கத்தை ஏற்றுக்கொள்ளும் இடம் ஒப்பனைக்குரிய...

யாசகம்

* யாருமற்ற என்ற சொல்லின் குரல்வளை நெறிக்கிறது உச்சரிக்க திணறும் தனதென்ற  இருப்பின் ஒலியை காற்றுப் பெருகி உடைந்திடும் தருணம் கண்கள் சிவக்க இருக்கிறேன் என்பது ஒருவகையான யாசகம் பாத்திரம் திருடு போவதில் ஏனித்தனை படபடப்பு கொண்டு வாழ்வதைப் போல் இனிப்பதில்லை உண்டு வாழ்வது -ரேவா ...

அலைவிளையாட்டு 9

    மோனா..   நானாய் ஏற்படுத்திக்கொண்ட இந்த ஒற்றைச் சொல்லின் பிம்பம் வளர்க்கிறது, நீரற்ற வேரின் பொழுதை. நீயற்ற பொழுதை வெயில் தீண்டுவதில்லை என்ற போதும், அதை சுவைக்கப் பழகியிருக்கும் இந்த நிழல் வெயில், காலத்தின் தீனி..   பெருந்தாகம் எடுக்கிற போதும், பசிக்கிற வேளைக்கு ஆட்படுகிற...

வெள்ளி, 15 ஜனவரி, 2016