உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 2 ஜனவரி, 2016

விதிமீறல் தந்திரங்களின் சிலந்தி வலை

*

தொடங்கிய ஆட்டம்
தோற்றிடும் போதெல்லாம்
நிதானிக்க மறுக்கிறோம்

சூதாட்டத்தின் குழு ஒற்றுமை குறித்து
எப்போதும் கேள்விகள் உண்டு
அது நேர்மையின் மீது கல்லெறிகிற
துணிச்சல்
ஒரு விழுப்புண்

காட்டிக்கொள்ளா காயத்தின் ரசவாதம்
கட்டமைக்கிற தொலைவில்
இன்னொரு ஆட்டம்
இன்னொரு புதிய விதிமுறை
பழைய சூழ்ச்சியில் புதிய நிறம்

விதிகள்
திருத்தப்படும் வாக்குறுதிகளால்
வலைபின்னப்படுவது பற்றி
ஏன் யோசிக்க வேண்டும்

சூதாட்டத்தின் குழு ஒற்றுமை குறித்து
இப்போது கேள்விகள் உண்டு


ஆட்டம் சூடு பிடிக்கட்டும்..

-ரேவா
 
0 கருத்துகள்: