உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 5 ஜனவரி, 2016

இட்டு நிரப்பும் நம்பிக்கையின் பருவநிலை


*

தொடக்கங்கள் தேங்கிவிடுவதில்லை
அது
குடைபிடிக்கிறது
ஈர நிலத்தின் மேல்


மழைக்காலமெல்லாம் பனிக்கூடி உறையும் 
பொழுதில்
வந்திருக்கிறாய்


எதிர்படும் பிம்பங்கள் பற்றிய தெளிவில்லாத தேக்கத்தின் 
உறைதல்
வெயில் பூத்து மலர்கையில்

நீ மணம் வீசுவாய்
மாரிக் காலமாய்


இன்னொரு பனிக்காலம்
இட்டு நிரப்பட்டும்
நீர்த் தேக்கத்தை


-ரேவா