
கட்டிவைத்தக் கூட்டைத் தாண்டி
பறக்க நினைத்த பறவையின் சிறகுகளை
கூடுகள் வேயக் கொடுத்துவிட்ட பின்னும்
துளிர்க்கும் சிறகிற்கு
வண்ணமேற்றி
வாசலனுப்ப அதிகாரமில்லையென்பதை
அரிதாரப் பொய்களால் உரைக்கையில்
அக்கூட்டுப் பறவைகள்
சிறகடிப்பதைப் பார் என்கிறாய்
கூடுகளாவிட்ட குஞ்சுகளுக்காய்
பாலையை...

மொட்டு விட்டிருந்த ரோஜா இன்று மலர்ந்து சிரிக்க நாளை என்னவாகிப் போகுமென்ற நினைப்பில் சிறைபிடித்துக்கொண்டேன் புகைப்படத்தில் நெருங்குகின்ற இரவை நிறுத்துவதெப்படி என்ற யோசனையில் உறங்கிப்போக இரவை மென்று விழுங்கியபடி பகல் எட்டிப்பார்க்க நேற்றைய இடத்தை தொலைந்திருந்த ரோஜாவுக்காய் கனத்து தொலைந்தது மனம்...

தினமும் நினை நினைத்ததை மற மறந்ததை தேடு தேடுவதை கண்டெடு கண்டெடுத்ததை தொலை தொலைத்ததை விட்டுவிடு விட்டுவிட்டதை விடாமல் தொடர் தொடரவேண்டுமாயின் தினமும் நினை வாழ்வதற்கு வேறென்ன வேண்டும்.
-ரேவா
...

இதுவரை கவனமீர்க்கா இரவு நேரப்பாடலொன்று இன்று உந்தன் கவனம் ஈர்த்ததாய்
காரணம் சொல்கிறாய்
காரணங்களை அனுமானித்தலில் கிளர்ந்தெழுகிறது சுயத்தின்
உட்சுவர்
இன்மையின் உமிழ்தல்கள் வாயில் வரை எட்ட திறக்கப்பட்ட ஜன்னல்வழியே கரைந்துபோகிறது அப்பாடல்
காரணமில்லா அன்பைப்போல
-ரே...

மனமேறிக் கொண்ட பின் மாற்றமில்லாது போன ஒத்திகை நாளுக்கு நாள் அதிகரிக்க
அதிகாரத் தோரணையாய் பாவனை அரிதாரம் தனைப் பூசிக்கொள்ள நிலா சுடுவதை உணர்ந்த உம்மத்தப் பொழுதுகள் வாய்ப்பாடறியா கணக்கென வாழ்க்கை மாறிய நிமிடங்கள் நடுநிசி பொழுதையும் விட்டுவைக்கா நினைவுகளென நீ நீயாகவே நீக்கமற நிறைந்திருந்தாய் கனவுதனிலும்...

உதிரும் சருகின் ஞாபகப் பசுமையில்
நினைவின் சலசலப்புகள்
வேர்விட மறந்த சம்பாஷணையில்
துளிர்த்திருக்கும் நியாயங்கள்
ஆழப்பற்றுதலில் அறுந்துவிட்ட
விதைகளில்
முழிந்திருக்கும் விருட்சங்கள்
மீளாக்கணங்களை விரித்துப் போடும்
காலத்தின் கண்களை
நேராய்ப் பார்க்க திராணியற்ற
காயத்தின்...

வெற்று மைதானமென்னை
வெறுமை சூழத்தந்தாலும் ஆடிக்களைத்த நிகழ்வுக்குள் ஓடிவிளையாடுகின்ற ஒற்றை பந்து காதல் தோல்விகள் புரிந்தாலும் தொடர்ச்சியாய் முயற்சிகள் அயற்சியை மறைக்கும் நினைவுகள் வலிக்கு வலியென வழிகொண்டு தொடர வார்த்தைகொண்டு அடைக்கிறாய்
உரையாடல் பெருவெளியை உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு...

கோடுகள் வரைந்தாகிவிட்டது விட்டம் பார்க்க வசதியாய் இருக்கிறது இவ்வீடு சரிபார்ப்புகளில் சரணடைதல்களில் சாரணாலயங்களை கொண்டு வந்து வைக்கிறேன் பறத்தலின் நிமித்தமோ இளைப்பாறுதலின் பொருட்டோ இடம் தேடி வருகிறாய்
வசதியாய் இருக்கட்டுமென வளைத்தே தான் வைத்திருக்கிறேன் உனக்கு முன்னால் வைக்கப்படும் பிரியங்களின்...

யாருக்குத் தெரியுமென்பதைப்போல் தெரியாமலே இருக்கிறது
உன்னை பற்றிய என் பதில் எடுத்து வைத்தவைகளை எழுத்தில் வைப்பதை தவிர வேறேதும் தெரியவில்லை எனதிந்த காதலுக்கு பட்டாம்பூச்சியின் வண்ணங்களைச்
சுமந்து வரும் சிறகுபோலவே தூக்கிச்சுமத்தலின் சுகங்களை நினைத்து சுவைக்கிறது இவ்வுணர்வு ஆர்பரிக்க ஆரவாரம்...

சொல்லிக்கொள்ளாமல் பேசிக்கொள்ளுதலின் சுவரஸ்யங்கள் குறித்து உன்னிடம் கேட்டதில்லாது போயினும் அளவெடுக்கும் உந்தன் கண்களில் குறிப்பெழுதியே வைத்திருந்தாய் மழை நீர் தேக்கத்தில் கப்பல் விடும் சிறுவனாய் உன் நினைவுத் தேக்கத்தில் காதல்விட்டு விளையாண்டு கொண்டிருக்கிறேன் உனைக் கடக்கையில்லெல்லாம் நெஞ்சிலேறிக்கொள்கிற...

பெரும் காத்திருப்பில் சேமித்துவைத்திருக்கிறேன் வாழ்வின் மீதத்திற்கான ப்ரியங்களையும் இதுவரை பிடிக்காத சண்டைக்கான காரணங்களையும் பதற்றமிக்க இத்தனிமைபிரதேசத்தில் மெளனத்தீ கொழுந்துவிட்டெறிய கனவுச் சிறகசைத்து உன்னை அடைந்திடுவேன் தணிக்கைகளற்று இல்லா உருவமொன்றை அரூபமாய் ஏற்றாகிவிட்டது...

பயமெனும் சாத்தான் கோரமுகம் காட்டி கொடுக்கிறான் தொலைவுகளை எதிர்ப்படும் புன்னகையின் மணத்தில் புகைய கிளம்பியவன் பதிலாய் தருவது போலியென்றான பின் தோல்வியின் முகத்தில் தொங்கல் விழுந்தது எதுவும் தேவையில்லை என்ற பதிலின் தேவைக்கு பின்னும் சாத்தானுக்கான தேவையிருந்தது இனி அவசரமில்லை ஆர்ப்பாட்டமில்லை...

ஒளிந்து கொள்வது சுலபமில்லையெனும் போதும் மழைக்கு விரிக்கும் குடைத்தோகையில் பட்டுத்தெரிக்கும் வண்ணச்சிதறல்களால் வாசல் நிறைக்கும் நீர்கோலம் போல் நனைதலே நடக்கிறது நியாபகச்சூட்டை கிளப்பிவிடும் இதனிடம்
இத்தனை கடுமையை எதிர்பார்க்கவில்லையெனினும் திரும்ப திரும்ப இது நிகழ்கிறது ஒன்றிரண்டு துளிகளோடு...
எப்படியும் நீ சொல்லக்கூடும் அனுசரித்துக்கொள்லென என் வானம் நிலவைத் தொலைத்து வெகுநாட்களாகிறது மிச்சமிருப்பவைகளை மீட்டெடுக்க முடியாவிட்டாலும் மீண்டும் வளருமென்ற எண்ணத்தில் வரைந்து வைக்கிறேன் இவ்வாழ்க்கை பி(ழை)றைகளை......

தனியாக எழுதும் வேளையில் நான் தனியாக இல்லை
தனிமைக்காய் எழுதும் வேளையிலும் அது தனிமையில் இல்லை
யாருமில்லையென்று எடுத்துவைத்த வார்த்தையிலும்
தனிமையில்லை
உன்னைப் பற்றி என்னைப்பற்றிய நினைவெதுவும்
தனியாய் இல்லை
யாருக்கோ துணைபோகின்ற நேரத்தில் யாருமே தனிமையில் இல்லை
தனித்தனியே புழங்கிய...

தனித்த உலகொன்றில் பயணிக்கிற கால்கள் தனக்கென்ற பாதைதனை உருவாக்கியபடி நீள பேசவோ புன்னகைக்கவோ அழவோ ஆசுவாசம் பருகவோ ஏதுமற்ற வெற்றுகோப்பையில் தனக்கென்ற தனிமொழியொன்றை பொதுவெளியில் உண்டாக்கி உரையாட அசைவற்று கிடைக்கும் எதிலும் உயிரொன்றை உருவாக்கி உறவாடும் மழைத்துளியைப்போன்ற மனமொன்றை படித்தறியாதவர்களிடையே...

எதையும் சொல்லமுடியாமல் போவதற்கு எதையாவது சொல்லியது தான் காரணமென்று நாம் சொல்லத் தேவையில்லை
சமாதானத்திற்கோ சிறு புன்னகைக்கோ மன்னிப்பெனும் வலிமுறிவிற்கோ காத்திருக்கும் மனதும்
கொடூர மிருகமென அதன் மகுடிக்கு
நம்மை ஆட்டிவைக்கலாம் தவறை விழுங்க நினைக்கும் சரிகளும் சரிக்கு பின்னிருக்கும்...
பேசுவதற்காகத்தான் உன்னை வரச்சொன்னேன்
வரும் வழியெல்லாம் மனம் பேசிய
சொற்களின் அயற்சி
உன்னைப் பார்த்ததும் ஓய்ந்துவிடுமென்று
சத்தியமாய் நினைக்கவில்லை
மெளனமாய் இந்த நிமிடம்
துளி புன்னகை இல்லை
சினேக விசாரிப்பும் இல்லை
நம்மிடையே சூழ்ந்திருந்த அந்த உன்னத உணர்வும்
இந்நிமிடம் கிடைக்கவில்லை
பார்வை வழியே நினைவோட்டம்
கொஞ்சம் நிதானித்து இருந்திருக்கலாம்
என்ன செய்ய பேசமாலே...

இரவின் விரிப்பில்
ஒவ்வொருமுறையும் கச்சிதமாய் வந்தமர்கிறாய்
இந்த இடைவெளி அன்னியப்படுவதாய் நினைக்கையில்
ஆளுக்கொருமுறை அருகில் வர
அடைபட்டுப் போன இடைவெளி
அகம் மறைக்கா குணம் காட்ட
அளவெடுத்த நம் மெளனம்
ஆங்கே ஓர் இசை கொடுக்க
அளவின்றி வந்த அழுகுரல்
துளைத்தெழுப்பும் அடிமனதில்
விழித்துவிட்ட...

நண்பனென அறிமுகப்படுத்தியும் ஆணுக்கும், பெண்ணுக்குமான நட்பை சில உறவுகளிடம் நியாயப்படுத்தவே முடியவில்லை
அனைவரின் பயமும்
அவரவர் அனுபவங்களில் கிடைத்த
அவர்களாகவே இருக்கிறார்கள்.. ...

உன்னை யாரென்று சொல்ல உன்னைத் தொட்டே வரைகிறேன் எனதிந்த சித்திரத்தை
புள்ளியில் ஆரம்பமாகி பூகோளம அமைத்த இதனிடம் அத்தனை சுகந்தமில்லையென்றாலும் வெகு சிரத்தையோடு வரைகிறேன்
ப்ரியங்களுக்கென பச்சையையும் கோவங்களுக்கென சிவப்பையும் தாபங்களுக்கு நீலத்தையும் நட்புக்கென்று வெள்ளையையும் எனக்கேற்ப எடுத்துவைத்து...

எழுதப் படிக்கத் தெரியாத அப்பாவும் டிவித் திரைப்பார்த்து சரியாய் சொல்கிறார் உத்தம புத்திரனென்ற படத்தின் பெயரை
தன் பிறப்புப் பற்றி குறைபட்டுக் கொள்ளும் அம்மாவும் புதியாய் பிறக்கும் பூக்களை கண்டு கண்டு மகிழ்கிறாள்
இந்த ஆடையும் தனக்கு அழகாயில்லையென்று
சொல்லும்போதெல்லாம் கூடுதல் அழகாகிப் போகிறாள்...

நினைத்த ஒன்று நடக்கவேயில்லையெனும்போதும் நடக்குமென்று நம்பத்துவங்குகிறது மனம் நடக்காதென்ற ஆழ்மன அறிவித்தல்களை புறந்தள்ளியபடி ஆனாலும் நடக்காதவொன்று நடந்துகொண்டே இருக்கிறது நினைத்தவொன்றில் பாதையை கடந்தபடி இன்னும் காலமிருப்பதாய் சொல்லிக்கொள்ளும் பொய்பூசலிலும் அதுவே நடக்கிறது நடக்குமென்று நினைத்தவொன்றின்...

தீரா மழையும், தீரவே தீராத நினைவுகளும், கடந்த ஒரு வாரமாகவே பருவகாலத்தை
அழைத்து வந்து, அடித்துப் பெய்ததில் நிலம் இன்னும் தன் நிலைக்கு
வரவில்லையென்பதை, எழுந்து நிற்கும் இந்த பொழுதிலும் உணரமுடிகிறது.
எங்கிருந்தோ
வரும் குயிலின் குரலும், தட்டச்சு செய்கையில் வெளிப்படும் இந்த தனித்த
இசையும், தேவாலயமொன்றின்...

ஓர் அதிகாலைக் குளிர்ப்பொழுதில் உடல் சூட்டிற்காய் அருகில் வந்து
சுருண்டுகொள்ளும் ப்ரிய பூனைக்குட்டியைப் போல் துயில்கொள்ளும் உன்னை
பூனைக்குட்டியை அன்பு செய்வதைப் போன்றே தடவிக் கொடுக்கின்றேன்.. நீயும் உன்
ப்ரியமும் நடுச்சாமத்தில் பூனை உருட்டும் பால்கிண்ணங்களைப் போல். அதற்குள்
கொச்சை வாடையோ, பழையதின்...

உணர்வுகள் கொண்டு கட்டி எழுப்பப்படும் மாளிகைகள் அழகானவை. அதன் நாடி
நரம்பில் கலந்தோடும் இளஞ்சிவப்பின் சூடு தரும் செளகர்யம், உறவின்
உயிர்வாழ்தலை உள்ளபடிச் சொல்லிப்போவதில், உயிர்த்திருக்கும் இந்நாட்களின்
பச்சையுடம்பு பேறுகால தடத்தை தடவி தடவி இன்புறும் தாயைப் போல் மனதின்
முகத்தை அழகேற்றுகிறது..
வழித்தடங்கள்...

சட்டென்று ஒட்டிக்கொண்டு விட முடியா சுபாவத்தின் பின், மனம் ஓர்
உறவோடு விளையாண்டு பார்க்கும் உரிமையின் அளவீட்டில் உருமாறும் குணத்தில்,
சாத்வீகத்தை தக்கவைத்துக் கொள்ளுதலும், நம்மை நாமாய் அப்படியே ஓர் உறவில்
வைத்திருப்பதில் காலம் மேற்கொள்ளும் நிலையாமையையும், ஓர் ஒப்பீடு
ஓப்பிட்டளவில் மட்டும்...

தொலைவுகளில் நெருக்கத்தையும், நெருக்கத்தில் தொலைவையும் அனுபவிக்கும்
பயணம் என்றைக்கும் திகில் நிறைந்தது. அதன் ஏற்ற இறக்க வளைவுகளின்
கவனச்சிதறல், கொண்டு நிறுத்தும் அதளப்பாதாளம், வழித்துணியற்ற
காட்டுப்பாதையை கண் முன் விரிப்பதாகவே இருக்கிறது.
யாருக்காகவோ
துணையாகும் பயணமும், துணைவருவதாய் உடன் சேர்ந்த...

காலார நடந்துபார்ப்பதைப் போன்று நமக்குள் நாமே பேசிப் பார்க்கும்
சுவரஸ்யமான உருமாற்றத்தில், உருவம் ஏற்கும் நிலைக்கொள்ளாமையை
புரிந்துகொள்ளவும், அதன் பின்னான சமநிலைக்கு மனதை கொண்டுசெல்வதும் ஒரு
தனிப்பயிற்சி தான்..
நான்கு சுவர்களுக்கு மத்தியிலும் ஒரு
குட்டி வானம் நமக்கே நமக்கென்று ஒரு வாசலை...

ஒரு பனிக்காலத்து மலர் சூடும் துளி நீரின் வாசம் சட்டென்றா பூத்து
விடும்? பருவங்கள் தாங்கி நிற்கும் இயற்கையோடு, இயங்கும் எதன்
பின்னனியிலும் சூடிக்கொள்ள ஏதாவது ஒன்றை புறக்காட்சியில் அரூபமாய் ஒளித்து
வைத்திருப்பதே இக்காலங்கள் நமக்கு கற்றுத்தரக் காத்திருக்கும்
கவனிப்புகளின் ஆகப்பெரிய சூட்சுமம்...

எழுத வாய்ப்பளித்த காலத்திலும், எழுத்து மட்டுமே நம்மை பிடித்துவைத்திருக்கும் காலத்திலும், எழுந்து கொள்ள ஏற்ற இடமாய் இருந்த இந்த இடம் சமீபங்களின் கவனமின்மையாலோ அல்லது மற்ற சமூகதளங்களின் மீதுள்ள தாக்கத்தாலே கவனிக்காமல் விட்டதில் போன வருடத்தில் வெறும் 30 கவிதைகளைத் தான் பதிய முடிந்ததென்ற வருத்தமும்,...