உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

நடக்குமொன்றில் நடக்காதவைநினைத்த ஒன்று நடக்கவேயில்லையெனும்போதும்
நடக்குமென்று நம்பத்துவங்குகிறது
மனம்
நடக்காதென்ற ஆழ்மன அறிவித்தல்களை
புறந்தள்ளியபடி

ஆனாலும்
நடக்காதவொன்று நடந்துகொண்டே இருக்கிறது
நினைத்தவொன்றில் பாதையை கடந்தபடி
இன்னும் காலமிருப்பதாய்
சொல்லிக்கொள்ளும் பொய்பூசலிலும்
அதுவே நடக்கிறது
நடக்குமென்று நினைத்தவொன்றின்
நடக்காதது

0 கருத்துகள்: