உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 25 ஏப்ரல், 2011

இனிக்க இனிக்க காதல் செய்யும் காதல் தோழன் அப்டேட்ஸ்....(காதல் + ரொமான்ஸ்)





மாலையில் ஓர் நாளில், குளிர் காற்று அழகி அவள்  தேகம் தொட, மண்வாசம் சுவாசம் தொட, வானவில் கொஞ்சம் வளைந்து வந்தே அவள் அழகைப் பார்க்க ஆயத்தமாகும் முன் விரைந்து வந்த வானமகன்,அனுமதி இன்றே அவள் மேனி நனைக்க, இருக்கைகள் நீட்டி அவன் அன்பை மழைத்துளியாய் வாங்கிய நேரம், அவள் கோலம் கலைத்தது அந்த குறும்செய்தி,

ஹாய் செல்லம் என்னடி பண்ற?....   

புன்னைகைத்து  விட்டு பதில் அனுப்பினாள்

மழையில நனைஞ்சுகிட்டு இருக்கேன் டா?.....

மீண்டும் சிறு குருவி போல் பறந்து சென்று, சிறகை விரித்து மழைத்துளியை முத்தம் மிட்டு கொண்டிருக்க,

எப்போடா உன்ன பார்ப்பேன், எப்போடா என் பேச்சை கேட்ப  பையா என அவள் கைபேசி அலற, அழகி அவள் பறந்தே வந்து அவன் அழைப்பை எடுக்க,
அழைப்பின் முனையில் அவன்:

என்ன டி பண்ணுற?...

அப்போவே சொன்னேன்ல டா, மழைல நனைஞ்சு கிட்டு இருக்கேன்....

ஏன் டி என் அத்தை இல்ல,

ஏன் டா அவங்களையும் கூட சேர்த்துட்டு நனையவா?.........

அடி என் லூசே, மழைல நணையிரையே, அதான் உங்க அம்மா உன்ன எதுவும் சொல்லலையானு கேட்டேன்....

ஓஹ...சாரி டா...அம்மா இல்ல, நான் மட்டும் தான் வீட்டுல இருக்கேன்... 

ஓஓஓஓ....இத முதலையே சொல்லி இருக்க கூடாதா?

சொல்லிருந்தா, என்ன பண்ணிருப்ப,
மழைக் கம்பிகள்
உன் மேனி தொடுவதற்குள்,
குடைக் கம்பியாய்
உன்னுள் படர்ந்திருப்பேன்னு .
. மொக்கையா எதாவது கவிதை சொல்லிருப்ப,
தெரியாதாடா உன்னப் பத்தி.... 

ஹ ஹ...நல்லாவே என்ன புரிஞ்சு வச்சு இருக்கடி....

ஆமாம் ஆமாம்....அங்க அங்க சாமியாருங்க எல்லாம், கதவ திற கமலா வரட்டும்னு கவிபாடுதுங்க...நீயும் தான் இருக்கையே.......

ஓவரா பேசுறடி நீ.... 

சரி செல்லம் நான் ஒன்னு கேப்பேன் தருவியா?

என்னடி கேக்குற தோனியே சரி இல்லையே...சரி கேளு..
இல்ல......................

என் காதல் வாழ்க்கைக்கு
அழகு சேர்க்க, உன் இதழ் தூரிகையால் அழகான ஓவியம்  என் கன்னத்தில் வரையனும் .........முடியுமா? ..

ஏய்ய்ய்ய்ய்ய்...............ச்சே ஏன் டி இப்படி பேசுற?...

என்னடா ?.பேசுனேன் ?......

சரி நான் நாளைக்கு ஆபீஸ் ல கொடுக்க வேண்டிய கணக்கெல்லாம் கரெக்ட் அஹ முடிச்சிட்டயா?......

உன் ஆபீஸ் கணக்கெல்லாம் முடிச்சாச்சு, உன் மெயில்க்கும் அனுப்பியாச்சு, உன் கணக்கு தான் இன்னும் முடிக்க முடியாம இருக்கு...

என் கணக்கா?... என்ன கணக்கு புதுசா சொல்லுற....

ஒய் அன்னைக்கு, காத்து வாக்குல, நீ போறப்போ  நான் கொடுத்த பறக்கும் முத்தத்தை பத்திரமா
எடுத்து பதியம் போட்டேன்னு போன் ல சொன்ன...

ஆமாம் சொன்னேன்...

எனக்கு திருப்பி வேணும்..

முடியாது...கிடைக்கிறப்போ வட்டியோட கிடைக்கும்...இப்போ ஆளவிடு...

சரி அழுது தொலைக்காத, வேற எதாவது பேசு...

சரி, உனக்கு எந்த புத்தகம் படிக்க பிடிக்கும்டி சொல்லேன் நான் மறந்துட்டேன்...

இப்போதைக்கு,

உன் இதழ் என்னும்
இருவரி புத்தகம் தான் படிக்க ஆசைப் படுறேன்...

பாத்தியா?....என்னையவே வாருற பாரேன்...

டேய்...அங்க அங்க போய் பாருடா...அவன் அவன், பார்க்குக்கும் பீச்சுக்கும் அவங்க காதலிய எப்படி கூட்டிட்டு போறங்கனு?.....

ஹி ஹி அதான் பாத்தோம்ல....
டெபாசிட் இழந்த அரசியல்வாதி தலைல துண்டப் போட்டு, போறமாதிரி தானே போராங்க....

.ச்சிப் போ நீ வேஸ்ட் டா....

சரி நான் வேஸ்ட் அஹ வே இருக்கேன்...உனக்கு என்ன என்ன விஷயம்  பிடிக்கும்...

எனக்கா, உன் காதல் பேசுற கண்கள் பிடிக்கும்...
கர்வத்தையும், காமத்தையும் ஒளிச்சி வச்சு சிரிக்கிற உன் இதழும், உன் இதழ் குழந்தையை, இப்போதைக்குஎன்கிட்ட கொடுக்காம ஒளிச்சி வச்சி இருக்காளே, என் சக்காளத்தி?... அதான் அந்த மீசை, அதுவும் ரொம்ப பிடிக்கும்...அப்பறம், எப்பவும் நான் மட்டுமே சாய்ந்து கொள்ளும், உன் சந்தன நிறத் தோள்கள் பிடிக்கும்...

ஏய்ய் ய் ய்ய்...இரு இரு நான் உனக்கு பொதுவா என்ன பிடிக்கும்னு தான் கேட்டேன்.. நீ என்ன பத்தி சொல்லிட்டே இருக்கே...

இம்ம்ம்... பொதுவாவா ?... என்ன எதப்பத்தியும் யோசிக்க விடாம, ஒன்னப் பத்தி மட்டுமே யோசிக்க வச்ச உன்ன பிடிக்கும்....

என்னடி நீ... என்ன தவிர்த்து என்ன பிடிக்கும்...

உன்ன தவிர்த்து எதுவும் பிடிக்காது டா...

சரி டி நீ தான் கவிதை எல்லாம் எழுதுறயே, எங்க என்னப் பத்தி இப்போ ஒரு கவிதை சொல்லேன்...

கவிதையா?...உனக்கு நான் கவிதை சொல்லனும்னா?...இந்த மாலை மறஞ்சு இரவு வரணும் பரவா இல்லாயா?..

நீ எங்க வரேன்னு தெரியுது...
சரி ராது, அம்மா இல்லையே நீ என்ன சாப்பிட்ட?....

உன்னோட போடோவையும், தொட்டுக்க உன் குரும்செய்தியையும் தான் சாப்டேன்...

கடிக்காதடி....சரி உன் அம்மாவீட்டுக்கு போய் இத்தன நாள் ஆகுதே, இந்த புருசன வந்து பாக்கனும்னு உனக்கு தோனுச்சாடி?....

கொன்னுடுவேன் உன்ன, நீ தானே நான் மாட்டேன் மாட்டேன் னு சொல்லியும், இது தலப் பிரசவம், அம்மா வீட்டுக்கு போ னு சொல்லி அனுப்பி வச்ச, இப்போ வந்து மூணு நாலு தான் ஆகுது அதுக்குள்ளே இப்படி பேசுற?....

இல்ல ராதுமா (ராதா), நீ இல்லாத இந்த மூணு நாளும், மூன் அஹ பாக்க கூட பிடிக்கலடி...உன்ன ரொம்ப மிஸ் பண்ணறேன்....சீக்கிரம் என் குழந்தைய எப்போ பாப்பேன்னு இருக்கு...

பாத்தியா, நான் அழுவேன், இப்போதானே என்ன மிஸ் பண்றேன்னு சொன்ன, அதுக்குள்ள, உன் குழந்தய பாக்கனும்னு சொல்லுற, போடா,நான் இனிமேல் அங்க வர மாட்டேன்....

அட பைத்தியமே, நான் கொழந்தைன்னு சொன்னதே உன்னைத்தாண்டி...

ஹி ஹி அப்படியா?.....ஐ லவ் யூ சோ மச் டா.....

மீ டூ செல்லம்...நீ நம்ம குழந்தைய பெத்துக்க போற நேரம், நம்மக்குள்ள இருக்கிற அழகான காதல் குழந்தைய, பத்திரமா பாத்துக்கோ ராது....

நான் பாத்துகிறேன்...இது தான் சாக்குன்னு, நீ எதிர் வீட்டு பொண்ண பத்து பல் இளிச்சதா தெரிஞ்சது, மவனே கொன்னுடுவேன்...

சரி டா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்...சரி உடம்ப பாத்துக்கோ...டைம் க்கு சாப்புடு....உன் டெலிவரி டைம் அப்போ நான் வந்துறேன்.....

இமம் ஓகே மை டியர்..யூ டூ டேக் கேர்....

இரண்டு மாதங்களுக்கு பிறகு...............

 வாடிய மலர் போல, வாட்டத்துடன் ராதா மருத்துவமனையில் இருக்க, ராகேஷ் விரைந்து வந்து அவள் கரம் பற்ற, தன் காதல் குழந்தை,தன் கரம் பற்றிய மகிழ்ச்சியில், அல்லி மலர் போல் கண் விழித்தால் ராதா....

எப்படி மா இருக்க,

டாக்டர் இன்னும் ஒன் அவர் ல டெலிவரி நடந்துரும்னு சொன்னங்க,

இம்மம்ம்ம்....

ஏதாவது பேசுடி...எப்பவும், வாய் மூடாம பேசிட்டே இருப்பயே, இப்போ பேசு...

என்ன பேச, எனக்கு தெரியல டா, உன்ன மிஸ் பண்ணிடுவேனோனு  பயமா இருக்கு....

ச்சீ...லூசே அப்படிலாம் பேசாத....

இம்.....அம்மாஆஆஆஆ...

டாக்டர்.......ராதாவுக்கு வலி வந்துருச்சு...விழி நீரைத் துடைத்துக் கொண்டே, அவள் கை பற்றியபடி பிரசவ அறைக்குள் நுழைந்தான்...

சாரி ஜென்டில் மேன், ஜென்ட்ஸ் நாட் அலோவ்ட்....

பயப்படாத டா...நான் நம்ம குழந்தையோட பத்திரமா திரும்பி வருவேன்....

இம்ம்ம்....

பிரசவ வலியில் துடிதுடித்து கொண்டிருந்த ராதாவிற்கும், அவள் வலியின் துடிப்பதைப் பார்த்து, மனதில் துடித்து கொண்டிருந்த ராகேஷின்காமம் மறைத்து, அவள் மீதான, அழகான காதல் குழந்தையை அவன் பிரசவிக்க.....
மறுமுனையில் ராதா அழகானா ஆண் குழந்தை பிரசவித்தாள்.....



ராதா...இம்ம்ம் இப்போ எப்படி பீல் பண்ணற....

இம்ம்ம் ஐ பீல் பெட்டெர் நொவ்..

 .உன் குழந்தைய பாரு....

நோ டாக்டர் நான் என் கண்வர பாக்கணும்.....

இம்ம்ம் ஓகே.....

ராகேஷ், உங்க குழந்தை உங்கள மாதிரியே இருக்கான்,

நோ டாக்டர்...என் ராது மாதிரியே இருக்கான்...

இம்ம்ம்..குட்...நைஸ் கப்பில்ஸ்

தேங்யூ டாக்டர்....

டாக்டர்...

இம் சொல்லுங்க ராகேஷ்..

 .இல்ல ஆபரேஷன் தேட்டர்ல, ஜென்ட்ஸ் நாட் அலோவ்ட் னு சொன்னேங்க,

ஆமாம் சொனேன்....

இப்போ என் பையன  மட்டும் எப்படி விட்டேங்க....
யூ நாட்டி.................

 .just for fun ...thankyou  so much டாக்டர்....

டேய்....இங்க நான் ஒருத்தி குத்துக் கல்லாட்டம் இருக்கேன்ல, அங்க என்ன அந்த டாக்டர் கிட்ட பேச்சு வேண்டி கிடக்கு....

இல்ல ராது, நான் நம்ம அடுத்த கொழந்த டெலிவரிக்கும், இந்த ஹோஸ்பிடல் தான் வருவோம்...கொஞ்சம் பாத்து பண்ணுங்க னு அந்த டாக்டர் கிட்ட சொன்னேன்....

ச்சீ....லூசு டா நீ.....திருந்தவே மாட்ட....

ஹ ஹ ஹ....................தேங்யூ செல்லம்......
சுபம் 


( சின்ன சின்ன சீண்டலிலும், ஊடலிலும், அதன் பின் வரும் சமாதானத்திலும் தானே அன்பு பலப்படும்...கொஞ்ச நாளா ரொம்ப சீரியஸ் அஹ, எல்லாத்தையும் அழவைக்கிற மாதிரியே பதிவு போட்டாச்சு...அதான் ஒரு சேஞ்சுக்கு காதல் + ரொமான்ஸ் கலந்த பதிவு...இந்த பதிவ எழுத சொன்ன நல்லவருக்கு நன்றிகள் பல..... வழக்கம் போல உங்கள் கருத்துகளை நோக்கி, பதிவை சமர்பிக்கிறேன்....இந்த பதிவை என் இணையநண்பன் எவனோ ஒருவனுக்காவும்.....)

சனி, 23 ஏப்ரல், 2011

ஓசைகள் அற்ற ஓர் இரவில்....


* மௌனம் கலைத்து
விட்டிருந்த
அந்த வீட்டில்,
நடை பிணமாய் யார் யாரோ
வருகிறார்கள்,

* ரத் தழுவி
அடக்க நினைக்கும்
சோகத்தையெல்லாம்
கட்டவிழ்த்து விடுகிறார்கள்...

* ழாதவர்கள்
அன்பற்றவர்களாய்
பெயர் சூட்டப்படுகிறார்கள்... 

* மாதனம் செய்வதாய்,
சட்டை  கிழிக்கிறது,
சொந்தம்...

*ம்மந்த சாப்பாடென்று,
சந்தி சிரிக்க வைக்கிறது
பிறிதொரு  கூட்டம்..

* சில சடங்குகளுக்குப்
பின் பிடி சாம்பலாய்
போகிறது
இ(ரு)றந்தவர்  கோலம்...

* றக்கம்மேதும் இன்றி,
வந்திட்ட மரணத்தின் 
வலியில்
சிக்கித் தவிக்கிறது,
இ(ரு)றந்தவர் குடும்பம்...

* கையோடு கை பொருத்தி
ஆறுதல் சொல்லிவிட்டு
சலனமே இல்லாமல்,
வந்தவர் களைகிறார்கள்...

* பின் ஓசைகள் அற்ற ஓர்
இரவில்,
விழி வாசல் வந்து நிற்கிறது
இ(ரு)றந்தவர் நினைவாய்
கண்ணீர்த்துளிகள்..

***********

அன்புடன் 
ரேவா

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

மதுரையின் சித்திரைத் திருவிழா உங்களுக்காக...தொடர்ச்சி

வணக்கம் நண்பர்களே, இன்று

எங்கள் மதுரையின் சித்திரைத் திருவிழா உங்களுக்காக.....பகுதியின் தொடர்ச்சியினை நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தொடர்கின்றேன்...


ஆறாம் நாள் :  ரிஷப(காளை) வாகனம் 


சித்திரைத் திருவிழாவின் ஆறாம் நாள்,


அம்மனும், சொக்கரும், பிரியாவிடை தாயாரும்  ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வார்கள்...இந்த காட்சியின் நோக்கம், காளை (ரிஷப )வாகனம் தர்மத்தை குறிக்கும் ..
காளையின் உடல் போல் திடமான மனமும், அதிக சுமையைத் தாங்கும் காளைப் போல தன்னம்பிக்கை,  மனிதர்க்கு வேண்டும் என்பதையும், செவிகள் இறவன் நாமத்தையும், கண்கள் நல்லதையே பார்க்கவேண்டும். காளையின் வாழ் போல் தீயவையை  புறம் வைக்க வேண்டும் என்று உணர்த்தவே இந்த காட்சி...

ஏழாம் நாள் : யாளி மற்றும் நந்தி வாகனம்


சித்திரைத் திருவிழாவின் ஏழாம் நாள்,

அம்மன் யாளி வாகனத்திலும், சுவாமியும் பிரியாவிடையும் நந்தி வாகனத்திலும் காட்சி தருவர்...

இந்தக் காட்சியின் நோக்கம், 

அன்னை பவனி வரும் யாளி வாகனம் சிங்கம் மற்றும் யானை கலந்த உருவம்... மதம் பிடிக்கும் யானையும், தான் என்றும் கோவம் கொண்டு அலையும் சிங்கமும், அன்னையின் முன் அமைதியாய் இருப்பதைப் போல,  ஆணவம், தான் என்ற அகந்தை போன்ற கீழான குணங்களைக் கொண்ட மனிதனும், அன்னை அருளால் நற்பெயர் அடைவான் என்பதே இந்த காட்சியின் நோக்கம்...


எட்டாம் நாள் : ஊடல் உற்சவம் மீனாச்சி  பட்டாபிஷேகம்



சித்திரைத் திருவிழாவின் எட்டாம் நாள்,

அம்மனுக்கு பரிவட்டம் சாத்தப்படும், மன்னர் திருமலை நாயக்கர் வழங்கிய இரத்தின கிரீடத்திர்க்கும் அபிஷேகம் நடைபெறும்..இன்று இரவு அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் மாசி வீதிகளில் உலா வருவாள்.இன்று மாலையில் இருந்து மீனாச்சி அம்மனின் அரசாட்சி துவங்கி, ஆவணி மாதம் வரை அன்னையின் அரசாட்சி தான்..இதன் அடையாளமாக அன்னைக்கு செங்கோல் வழங்கப்படும்.. 

ஒன்பதாம் நாள் : திக்கு விஜயம் இந்திர வாகன விமானம் 


 

சித்திரைத் திருவிழாவின் ஒன்பதாம் நாள்,
மீனாச்சியம்மன் இந்திர விமானத்தில் திக்விஜயம் புரிகிறாள். பட்டம் கட்டிய மன்னர்கள் தமது ஆட்சியை நிலைநிறுத்த நாலாபுறம் படியெடுத்துச் செல்வது போல்,பட்டாபிஷேகம் நடனத்த மறுநாள் மீனாஷி அம்மன் இனி இங்கு தன் ஆட்சி என்பதை பாக்களுக்கு அருவிக்கவே இந்த பவனி 
பத்தாம் நாள் : திருக்கல்யாணம், மாலை பூப்பல்லக்கு உலா  


  
 

சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாள்,

உலகை வென்ற அம்மன்,  இறுதியாய் இறைவனையும் வென்றாள்...மீனாச்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண, விண்ணுலகமே, மண்ணுலகிற்கு வந்து, தம்பதியரை வாழ்த்துவதாய் ஐதீகம். இறைவன் திருமணத்தைக் காண கண் கோடி வேண்டும்.. திருமணம் முடிந்த இரவு சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும், அம்மன் பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள்  

பதினோராம் நாள் : திருத்தேரோட்டம், சப்தாவர்ணச்சப்பர உலா


 


சித்திரைத் திருவிழாவின் பதினோராம் நாள்,
வரலாற்றி மூன்று திரிபுர அசுரர்கள் ஆணவம் கொண்டு 
மூவுலகத்தை துன்புறுத்தியதாகவும் அவர்களை வதம் செய்யவே    சிவபெருமான் தேரேறிப் புறப்பட்டார் . இப்புராண நிகழ்வை நினைவூட்டும் விதத்தில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் மாசிவீதிகளில் பவனி வருகின்றனர்.
 இரவில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும்  சப்தாவர்ண சப்பரத்தில் பவனி வருவர். 

 பன்னிரெண்டாம் நாள் : தீர்த்தம் தேவேந்திர பூஜை, ரிஷப வாகன உலா.. 


சித்திரைத் திருவிழாவின் பனிரெண்டாம் நாள், 

அம்மன் ரிஷப வாகனத்தில் எழுத்தருள்வார்.. ஆறாம் நாள் ரிஷப வாகன காட்சியைத் தவற விட்டவருக்கெல்லாம், இந்த காட்சி பெறும் பேறு...சித்திரைத் திருவிழாவின் பனிரெண்டாம் நாள், அம்மன் ரிஷப வாகனத்தில் எழுத்தருள்வார்.. ஆறாம் நாள் ரிஷப வாகன காட்சியைத் தவற விட்டவருக்கெல்லாம், இந்த காட்சி பெறும் பேறு...
இதோடு மீனாக்ஷி அம்மன் சித்திரைத் திருவிழா இனிதே நிறைவு பெறும்... இதைத் தொடர்ந்து 

--   மதுரை- சித்திரைத் திருவிழா... ஸ்ரீ மீனாக்ஷியம்மை- சொக்க்நாதர் 
திருக்கல்யாணத்துடன் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும்  சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று துவங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும். 
நூபுர கங்கையில் நீராடி, பூஜையில் மூழ்கியிருந்த சுதபஸ் முனிவர், அங்கு வந்த துர்வாச
முனிவரைக்  கவனிக்கவில்லை இதனால்  கோபம் கொண்ட துர்வாசர், தவளையாகப் போகக்கடவது. என்று சுதபஸ் முனிவரைச் சபித்தார். மறுகணம் தவளையான முனிவர், சாப விமோசனத்தை வேண்டிக் கேட்க... வைகை கரையில்  தவம் இருந்து வா, சித்திரா பௌர்ணமிக்கு மறுநாள் கள்ளழகர்  வைகைக்கு வந்து உனக்கு சாபவிமோசனம் தருவார்’’  என்று  துர்வாச முனிவர் கூறியாதாகவும், அதனால் சுதபஸ் முனிவருக்கு சாப விமோசனம் வழங்கவே கள்ளழகர் வைகைக்கு எழுந்தருள்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.  
இது ஒருபுறம் இருக்க,

 தன் தங்கை, மீனாக்ஷியின் கல்யாணத்துக்கு சீர்வரிசையுடன் புறப்பட்ட அழகர் மதுரை செல்வதற்கு தாமமானது, அதற்குள் தன் தங்கையின் கல்யாணம்  முடிந்து விட்டதால், கோவம் கொண்டு மதுரைக்குள் செல்லாமல் வைகையில் சென்று, தன் கோவம் குறைய நீராடினார் என்றும் ஒரு காரணக் கதை உண்டு. 

கள்ளழகர் ஆற்றில் இருக்குதல் 
 
Kallazhagar enters river Vaigai in Madurai - Tamilnadu News Headlines in Tamil
 
 
 
நண்பர்களே எனக்கு தெரிந்தவரை, மீனாச்சி அம்மன் வைபவத்தையும், அழகர் திருவிழாவையும் நான் கேட்டும், படித்தும் தெரிந்த விசயங்களை தொகுத்துள்ளேன்... தவறெனில் சுட்டிக் காட்டவும்...சித்திரைத் திருவிழாபற்றி  விரும்பி கேட்டவர்களுக்காகவே இந்த பதிவு...விரும்பாதவர்களுக்கு அல்ல (ஹ ஹ )
படங்கள்: நன்றி கூகிள் நன்றி : தினமலர்