உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

நீ இல்லாத உலகம்


**அன்னை முகம் பார்த்து
ஆசையாய் விடிந்த
பொழுதெல்லாம் இன்று
அன்னை அவள் அலுவலகம்
செல்ல, உன்முகம் பார்த்தே
உயிர் கொண்டோம்....
உன் உயிரோசையைத்தந்து
எம்மை உயிர்ப்பிக்கச்செய்யும்
என் உலகமே....
நீ இல்லையென்றால் .....
என் உலகம் நிசப்தமாய் போய்விடும்...


**விடியல் வரும் பொழுதினிலும்,
விடியலது விடை பெறும் வேளையிலும்,
என்னோடு நீ இல்லாத உலகம்
நரகமாகவே நீளும் ...

** என்னிரண்டாம் உறவே!!!

~தனிமைச் சிறையில் அறையப்படும்
நாட்கள் எவ்வளவு நரகமோ?
அவ்வளவு நரகம்,
நீ இல்லாத உலகம்...

~கடவுள் மனிதனைப் படைத்தான்,
எம் மனிதக்கடவுள் வரமாய்
உன்னைப் படைத்தான்...












ஆம்!

~வரமாய் வந்த கைப்பேசி நீ
வழங்கிய வரங்கள் தான் எத்தனையோ....

~உயிராய் நினைக்கும்
உறவையெல்லாம் ஊட்டி வளர்ப்பதும்
நீ தான்...

~ தீராத பகையெல்லாம்
தீர்த்து வைக்கும் சமாதான
தூதுவன் நீ தான்...

~கலங்கி நிற்கும் இதயத்திர்க்கெல்லாம்
இனிய கடவுள் நீ தான்...

~ என் இனிய கைபேசியே!!!
நீ கொடுத்த காலமாற்றம்
தான் கணக்கிலடங்கா~!~

நீ இல்லாத உலகை
கொஞ்சம் சுற்றி வந்து பயணிப்போம்
இந்த கவிதையில்....

~@~பெற்றோருக்கு:
















~ உன் வழியாய், தன் வழி
வந்த உறவின் குரலொலி
கேட்டு தன் வாழ்வின்
பசுமை நினைவுகளோடு
கதை பேசி திரியும் காலம்
இல்லாமல் போயிருக்கும்
நீ இல்லாத உலகத்தில்...

~@~நட்புக்கு:

அறுதல் சொல்லவும்
ஆனநதக்கூத்தாடவும்
அன்பு மொழியை
குறுந்தகவலாய்

பரிமாறிக்கொள்ளவும்.,
அன்னை மடியாய் அவன்
அமுத குரல் தரும்
அரவணைப்பும்
இல்லாமல் இருந்திருக்கும்
நீ இல்லாத உலகத்தில்...


~@~காதலர்க்கு:

காதலால் கசிந்துறிகி ,
காளையர் அன்புக்காதல்
கதை பேச, சிறு சிறு
கள்ளத்தனம் செய்ய,
விடியும் வரை உன்னை
உறங்கவிடாமல்
"தன்னுறவுக்காய்
உன்னுறவு கொண்டு
பரிமாறப்படும்
காதல் குறுந்தவகல்கள்
எனயாவும் காணமல்
போயிருந்திருக்குமே
நீ இல்லாத உலகத்தில்...

~@~தூரதேச இதயத்திற்கு:
உறவுகளை இதயத்தில்
சுமந்துகொண்டு, உயிர்
வாழ்வின் அடிப்படை
தேவைக்காய் கடல் கடந்து,
காலம் மறந்து,
தம் பொருளாதாரத்தை
வறுமையின்
எல்லைக்கோடில் இருந்து
விரட்ட பாடுபடும் இந்த
" இன்பச்சுமையாளிக்களுக்கு "
அறுதல் கதை கூற,
ஆனந்தக்கண்ணீரால்
அன்பை வெளிக்காட்ட
வாய்ப்பில்லாமல்
போயிருக்குமே,
நீ இல்லாத உலகத்தில்...

காதலே!

**எம் மனிதக்கடவுள்
கொடுத்த வரத்தால்...
தினமும் உன் முகம்
பார்த்தே
எழுந்து,
உன்னை
கையோடே வைத்து
கண்ணுறக்கம் கொண்டு
நகரும்
இந்த நாட்கள்
எல்லாம்
வளமாய்,
வரமாய்
நீள்கிறது...
அப்படி
நீ
இன்று இல்லையென்றால்
இனி நகரும் நாட்கள்
எல்லாம் நரகமாய்
போகுமே...



***அன்னை முகம் பார்த்து
ஆசையாய் விடிந்த
பொழுதெல்லாம் இன்று
அன்னை அவள் அலுவலகம்
செல்ல, உன்முகம் பார்த்தே
உயிர் கொண்டோம்....
உன் உயிரோசையைத்தந்து
எம்மை உயிர்ப்பிக்கச்செய்யும்
என் உலகமே....
நீ இல்லையென்றால் .....
என் உலகம் நீச்சப்தமாய் போய்விடும்...


~தனிமைச் சிறையில் அறையப்படும்
நாட்கள் எவ்வளவு நரகமோ?
அவ்வளவு நரகம்,
நீ இல்லாத உலகம்...

அன்புடன்
ரேவா

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

யாதுமாகி நின்றாய்!!!!



~.. ~ "அகரம் தொடங்கி
சிகரம் அடைய துடிக்கும்
எல்லோர் வாழ்விலும்,
ஆசை துறந்து, கர்வம் மறந்து
சுயம் மறைத்து, நாம் வளர
வேராய் நம்மை தாங்கி பிடிக்கும்
ஓர் உன்னத உயிராய்
யாதுமாய் நிறைந்திருக்கும் தந்தைக்காய்
இந்த கவிதை....

~~கருவான உரு, உயிராகும்
வரை கண்ணுறக்கம் தான்
மறந்து தாய்க்கு சமமாய்
பிரசவவலி கண்டு நம் எல்லார்
வாழ்விலும் விடியல் கொடுத்து
யாதுமாய் நீக்கமற நிறைந்திருக்கும்
நம் வாழ்வியல் ஆசானுக்காய்
இந்த கவிதை...









~~தந்தையே,
பூமி வந்து உன்
பூமுகம் கண்ட முதல் நாள்
உன் (ஆண்மையின்) முழு நாள்....

~~ தவழும் வயதிலும், தடை மீறி
உன் விரல் பிடித்து நடை பயின்ற
நாட்களிலும்,
மழலையின் மடியினில்
கிடந்த பொழுதுகளிலும்,,
நீயே என் தலைவனாய் நின்றாய்...

~~ நீ காணாத உலகம்,
நான் காணவேண்டி,
என் அடையாளம் தனை
நான் பெற, பள்ளி சென்ற அந்த
நாட்களில் எல்லாம் பாடச்சுமையை விட- உன்
பாசச்சுமையே எனக்கு உயர வேண்டும்
என்ற அழுத்தத்தை தந்தது...

~~பெண்ணியம் பேசும் பலர்
இந்த பூமியில் இருந்தாலும்,
பெண்ணை பிறந்த காரணத்தால்
தடை படும் பல உரிமை நான் பெற
காரணமாய் இருந்து
பெண்ணியம் போற்றிய
தந்தையே!!!!

~~ பெண்மையின் முதல் படியை
அடைந்த நாட்களிலிருந்து,
உன் அன்பு மடியில் இருந்து
விலகி நின்ற வேலைகள்.,
உன் தோள் மீது அம்பாரி
போகும் பொழுதுகள்.,
உன் மார்பில் தலை வைத்து
தூங்கும் இரவுகள்.,
என் எல்லாவற்றிற்கும் என்
தாய் தடை போட்டாலும்,
உண்மையை பக்குவமாய் விளக்கி
உனக்குமெனக்குமென இடையே
இடைவேளிதனை இல்லாமல்
என்னை வளர்த்த என் தந்தையே !!!

~~கல்லூரி காலங்களில் பரிசுகள்
பல நான் பெற வெற்றியின் களிப்பு
என்னை விட உனக்கே அதிகம்..
நான் வென்ற பரிசுகளை கொண்டு
ஊருக்குள் ஊர்கோலம் நடத்தும்
என் தந்தையே!!!

~~ உன்னைப்போல் தந்தையே
வேண்டுமென என் தோழிகள்
என்னிடம் சொல்ல, அதை
என் தோழனாய் நான் உன்னிடம் சொல்ல
அனுமதித்த என் தந்தையே!!!

~~ என் வாழ்வில் வளர்பிறை
தந்த நாயகனே!
ஆசை, எதிர்பார்ப்பு ஏமாற்றம்
என்னும் தேய்பிறை எனை
நெருங்காமல், என் விருப்பம்
தனை முழுதாய் செய்து முடிக்கும்
என் தந்தையே!!

~~விடியல் வரும் வேளையிலும்
விதி என் வழி வந்து
விளையாடிய வேளையிலும்
என்னை விட்டு நீங்க
என்னிரண்டாம் நிழலே!!

~`~தந்தையே
* ன்பின் பிறப்பிடமாய்
என் வாழ்வினில் நின்றாய்...
*ற்றலின் ஆசானாய்
என் அறிவினில் நின்றாய்...
* யல்பின் இருப்பிடமாய்
என் இதயத்தில் நின்றாய்...
* கையின் விளக்கமாய்
என் இயல்பினில் நின்றாய்...
* ண்மையின் உருவமாய்
என் உயிரினில் நின்றாய்..
* க்கத்தின் உத்வேகனாய்
என் உள்ளத்தில் நின்றாய்...
* ளிமையின் திருவுருவாய்
என் வாழ்வினில் நின்றாய்...
* ற்றத்தின் படிகளாய்
எனக்கு வளர்பிறை தந்தாய்...
* ஐயத்தின் போது காப்பாளானாய்
என்னருகில் நின்றாய்...
* ழுக்கத்தின் பிறப்பிடமாய்
எனக்கு படிப்பினை தந்தாய்...
*ய்வின்றி உழைக்கும்
யுக்தியால் உயர்ந்து நின்றாய்
* ஒளவை தமிழாய்
வாழ்வில் அர்த்தங்கள் தந்தாய்...
* எகின் உறுதியாய்
என் வாழ்வில் யாதுமாய் நின்றாய்...

என் தந்தையே,
என் வாழ்வில் நீக்கமற
நிறைந்திருக்கும்
என் நீஜ நாயகனே.,
உன்னோடு இனி நகரும் நாட்களிலும்
என் கணவன் கைப்பற்றி
உன் விழி பார்த்து நான்
நடக்கும் நாட்களிலும் என் வாழ்வியல்
எல்லா நிகழ்வுகளிலும்
யாதுமாய் நீயே நின்றாய்...

~.. ~ "அகரம் தொடங்கி
சிகரம் அடைய துடிக்கும்
எல்லோர் வாழ்விலும்,
ஆசை துறந்து, கர்வம் மறந்து
சுயம் மறைத்து, நாம் வளர
வேராய் நம்மை தாங்கி பிடிக்கும்
ஓர் உன்னத உயிராய்
யாதுமாய் இருக்கும் தந்தைக்காய்
இந்த கவிதை....

அன்புடன்
அன்பு மகள்
..ரேவா..

சனி, 28 ஆகஸ்ட், 2010

காதல் செய்தால் பாவம்


** காதலால்,
உயிர் வலிக்கும்,
உண்மையும் வலிக்கும்,
உருக்கமாய் அவனோ, அவளோ
இருக்கமாய் அவர்களுக்குள்
இருந்தாலும், காலம் மறந்து,
காட்சிகள் மறந்து,
"நம் முகவரி நாமே தொலைக்கும் "
இந்த காதல் செய்தால் பாவம்....


உயிருக்குள் உயிர் கொடுத்து,
உதிரத்தில் உன்னை நனைத்து
உன் உயர்வுக்காய், தன்னை
உருக்கும் தாயை
மறந்தோ (மறுத்தோ)
நாம் காதல் செய்தால் பாவம்....


விந்தில் உன்னை வைத்து ,
விதையாய் உன்னில்
அன்பு வைத்து, விருச்சமாய்
வரும் உன் வளர்ச்சியின்
வேராய் இருக்கும்
தந்தையை மறந்தோ (மறுத்தோ)
நாம் காதல் செய்தால் பாவம்....




முகவரியும் தெரியாது,
உன் முகவுரையும் அறியாது,
உயிர் வழி பாசம் துளியும்
கிடையாது..ஆனால்,
உனக்கொன்றென்றால் அவன்
உயிர் வலிக்கும், உன் துக்கம்
அவன் தொண்டையடைக்கும்,
இப்படிப்பட்ட உண்மை
நட்பை மறந்தோ (மறுத்தோ)
நாம் காதல் செய்தால் பாவம்....













** காதலால்,

@ புரியாத வலியோ
தொண்டை அடைக்கும்...

@ அழுகையின் அவலம்
தெரிந்தும் அழுவோம்...

@ தாயிடம் சிரிப்போம்,
தனிமையில் அழுவோம்..

@ கூட்டமாய் இருந்தாலும்
கூட்டுக்குள் உயிராய் அவனோ,
அவளோ கூடவே இருப்பதாய் நினைப்போம்

@ மௌனமாய் இருந்தாலும்
மனதிற்குள்ளே பேசிக்கொள்வோம்...

@ நித்திரையில் நித்தமும் ஒரு
யுத்தமும் கொள்வோம்...

இப்படி காரணமின்றி,
காரணம் தேடி,, கனவுடனே
காலம் கழித்து, நம்
எதிர்காலம் புதைத்து,
உண்மை மறுத்து,
உயிரை அறுக்கும்
இந்த காதல் செய்தால் பாவம்....

ஆம்....
காதலால்,
உயிர் வலிக்கும்,
உண்மையும் வலிக்கும்,
உருக்கமாய் அவனோ, அவளோ
இருக்கமாய் அவர்களுக்குள்
இருந்தாலும், காலம் மறந்து,
காட்சிகள் மறந்து,
"நம் முகவரி நாமே தொலைக்கும் "
இந்த காதல் செய்தால் பாவம்....

அன்புடன்
ரேவா

புதன், 25 ஆகஸ்ட், 2010

இரு மனங்கள்

இணைய துடிக்கும்
இரு இதயங்கள்
பரிமாறும்
உணர்வுகளின்
உரிமை
வரிகள்....
கைபேசி பேசிய
காதல் வரிகள்.....


ஆண்:

யாரடி நீ எனக்கு
துன்பத்தில் தோள் கொடுக்கும்
தோழியா?
இல்லை நான் தோற்றாலும்
என் தோள் சாயும்
என் மனைவியா?????????
பெண் :
தோள் கொடுக்கும்
தோழனாய் இன்று
என்னோடு இருக்கின்றாய்...
இருந்தாலும்,
என் வாழ்க்கைக்கு
வளம் சேர்க்கும்
வரமாய் என்னோடு
வருவதெப்போது????

ஆண்:
வரத்துடிகிறேன் ,
விருப்பங்கள் பல...
வாழ துடிக்கிறேன்
வருடங்கள் பல....
தரத்துடிகும்
தருணங்கள் பல..
இருந்தாலும் வெறுப்புக்கள் பல
இவையாவும் விதி வலி எனும் போது...

பெண் :
விதி வலியது தான்
வாழ்க்கை நம்மை நெருங்க
வலியோ என்னை தெரியாமல்
விலக.... எட்ட நின்ற
என்னை கிட்ட அழைத்தது
உன் அன்னை சிரிப்பின்
அரவணைப்புத்தான்....
ஆண் :

உன் சிரிப்பில்
என் இதயத்தின் வலி
உணர்கின்றேன்..- என் அன்பே!!!
இது புது வலி தான்
பொறுத்துக்கொள்வேன்
ஆனால்?
உன் மௌனம் என்னை
கொன்று விடாதே....
பெண் :

மௌனமும் புது மொழி
தான் போகிற போக்கில்
புரிதல்கள்
நமக்கு புகட்டும்
மொழி இந்த மௌனம்
.....
ஆண் :

மௌனனமாய் இருந்து
என் மனதினில் வந்தாய்...
மனதினில் வந்து
வன்முறை செய்தாய்....
வாடிய பொழுதில்
வளங்கள் தந்தாய்
என் வான் நிலவே!
நீ என் வாழ்விற்குள்
வசந்தம் வீசும் குளிர்
நிலவாய் வருவாயா?



அன்புடன்
ரேவா

நீ தானே!!!


** உருகும் மெழுகாய்
" நீ " இருந்தாலும்
ஒளிரும் இந்த உலக
வாழ்க்கை எனக்கு
நீ தந்தது தானே!!!

** தனக்குள்ளே உயிர் சுமந்து
கருவான உரு, உயிராகும் வரை
உருகுவது உன் உயிர் தானே!!!!!

** பெற்ற நாள் முதல் கண்ணுறக்கம்
தான் மறந்து, கருத்தாய்
உயிர் வளர்க்கும் உன்னத மகள்
நீ தானே!!!!

** ஆண்டியாகும் பித்தன் எல்லாம்
ஆசை கொண்டு அலையும்
உலகில், உன்னுள் வளர்ந்த
உயிர்க்காய் ஆசை அனைத்தும்
துறந்து பிறர்க்காய் வாழ்வதும்
நீ தானே!!!

** வெற்றியில் களித்தாலும்,
தோல்வியில் துவண்டாலும்,
அன்பால் அரவணைக்கும்
குணம் கொண்டவள்
நீ தானே!!!

** சுற்றும் உலகம் சற்று
நின்று போனாலும் போகும்...
கொண்ட உறுதியில் உயிரை
வைத்து என் உயிர் வளர்க்கும்
என் பாசத்தலைமகள்
நீ தானே!!!




** உருகும் மெழுகாய்
" நீ " இருந்தாலும்
ஒளிரும் இந்த உலக
வாழ்க்கை எனக்கு
நீ தந்தது தானே!!!
என் தாயே!!!!!


அன்புடன்
ரேவா

(இந்த கவிதை என் இணைய நண்பனின்
இணையில்லா இனிய தோழி "ஸ்ரீ" க்காய் மற்றும் என் அன்னைக்காய்)

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

பாதுகாப்போம் பத்திரமாய்

** பண்தொட்ட காலம் முதல்
பழமை மாற எம்
தாய் மொழி தான்
தமிழ்மொழியை தரணி எங்கும்
தவழவிட்டு தமிழர்களாய்
வீறுநடைபோட்டு வந்தோம்

** நம் அடையாளத்தின்
ஆணிவேர்களாய் திகழும்
எம் தமிழன்னையின் அணிகலன்களை
அவனியெங்கும் அணியதந்தோம்,

மறந்தே, ஏனோ!!!
அதை

மீண்டும் அந்நியனிடம்
அடகுவைத்தோம்......

** ஆம்,மறந்தே,
அதை
அந்நியனிடம்
அடகுவைத்தோம்.....

நாம் தமிழ் மொழியை
ஆங்கிலேயன் உச்சரிக்க
நாம் உச்சிக்குளிர்ந்து பரிசு தந்தோம்...,
உள்ளத்தால் தமிழன் என்று
மகிழ்ந்து கொண்டோம் .....

** தோழா,

எல்லா வளமும் இங்கிருக்க,
படையெடுத்தோம் அந்நிய தேசத்திற்கு!!!!

நம் நேசம் மறைத்து ,
பந்த பாசம் என்னும்
உயிர் கால்களை நம்
மண்ணில் உயிர்ப்பிக்க
பறந்தோம் பத்திரமாய்
அந்நிய தேசத்திற்கு.....

** தாய் முகம் தான் நினைவில் வந்தால்
தலையணையில் முகம் புதைத்து,
தாரமவள் நினைவில் வந்தால் ,
தன் பந்தத்தின் ஆதார நினைவுகளை கையில் கொண்டு,
உடன்பிறப்பின் நினைவுதனை
உடமையோடு உடன் கொண்டு...
நாட்கள் மறந்து, நலன்கள் தொலைத்து,
ஆசை துறந்து,
தெரிந்தே நாம் தொலைந்து
கொண்டிருக்கிறோம் அந்நியனிடம்.....

** நம் பண்பாடு பத்திரமாய் உள் தூங்க,
பார் எங்கும் வலம்வரும்
அன்னியதேசத்தின் அழுக்குகள்
அட்டையாய் நம்மில் ஒட்டி
நம் கலாச்சாரம் என்னும் ரத்தம்
குடிக்க நாமே காரணமானோம் ....

** உணவில்லிருந்து ,உடுத்தும்
உடையிலிருந்து, உச்சி முதல்
உள்ளங்கால் வரை நம் அடையாளம்
நாமே தொலைத்து
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
ஓர் இந்திய ஆங்கிலேயனாய்....

தோழா!!!

இந்நிலை நீடித்தால்....

இந்திய அந்நியமாய் போகும்
இந்தியர் சுயம் மறந்து அடிமையாய்
போவோம் இந்த கலாச்சார மாற்றத்தால்....

விருந்துண்ணும் பழக்கம்,
உபசரிப்பு, பாசப்பிணைப்பு
கீழ்படிதல், இல்லறம் காத்தல்
என யாவும் இனி, " ஒருகாலத்தில் இந்தியா"
என ஒரு தலைப்புக்குள்
முடிந்து விடலாம்....




என் தேசமே!!!!

என் தேசத்தின் ஜீவனே!!!
விழித்துக்கொள்!!!
விழித்திருக்கையிலே
விழி பிடுங்கும் காலமிது ....

ஆதனால், என் தேசமே ,

என் தேசத்தின் ஜீவனே!!!

****பண்தொட்ட காலம் முதல்
பழமை மாற எம்தாய் மொழி தான்
தமிழ்மொழியை, தமிழ் தந்த,
தமிழர் தந்த பண்பாட்டையும்
நமக்குளே முதலில் விதைதுக்கொள்வோம்
பெற்ற சுதந்திரத்தையும், தமிழர்
தன் பண்பாட்டையும்
பாதுகாப்போம் பத்திரமாய்!!!!!!!!









(தவறுகள் இருந்தால் தோழர்கள் மன்னிக்கவும்)
இந்த கவிதைக்காக எனக்குதவிய என் இணைய
நண்பனுக்கும், எனக்கான கவிதை மாற்றத்தை
எதிர்பார்த்து காத்திருக்கும் என் நண்பர்களுக்குமாய்
இந்த கவிதை,.....

இப்படிக்கு,
அன்னையின் அன்போடும்
அன்னை தந்த
தமிழோடும்
உங்கள்
ரேவா

நமக்காய்

தோழா!
நம் காதலும்,
கொண்டு குலாவிய
அந்த ஆனந்த பொழுதும்
கனலாய் காணாமல் போக
நாம் அமர்ந்து பேசிய
அந்த ஒற்றை மேஜை நாற்காலி
மட்டும் நமக்காய்
காதலோடு காத்திருக்கின்றது

அன்புடன்
ரேவா

உன்னோடு நான்...


சில நேரம்,
சில பொழுது
உன்னோடு நான்...
என்றுமே என் நெஞ்சில்
எதிர்கால கணவாய் நீ,
பொருந்தா எதிர்காலத்திற்கு
விடைதேட நினைக்கையில்
புரியாமலே போகிறது
உன் நட்பு?
புரிய நினைக்கையில்
புதுப்பிக்க முடியாமல்
செய்கிறது காலம்.....

அன்புடன்
ரேவா

புதன், 11 ஆகஸ்ட், 2010

உன்னை விட்டு பிரிகிறேன்....


அன்பே!!!!

என் காதலின் கண்ணியத்தை
புரிந்து கொல்லாத
தூயவனே!!!
உன் கண்ணாடி இதயம்
இனியும் என்னை
பிரதிபலிக்காது என்ற
எண்ணத்தில் உன்னை
விட்டு பிரிகிறேன்....

உன்னால் எனக்குள்
உண்டான தனிமை
பொழுதுகள் தணியாத
பகைமையை உன்னிடத்தில்
உண்டாக்குவதால்,
உண்மை காதலோடு உன்னை
விட்டு பிரிகின்றேன்....,

காதலே!!!!

விதி வலியது.....
நீ கொடுத்த வலி
அதனினும் கொடியது....

உன்னை விட்டு பிரிந்தாலும்
என்றும் என்னை தொடரும்
உன் காதல் நினைவுகளை
பத்திரமாய் எனக்குள்
விதைத்துக்கொள்கின்றேன்....
உன் கண்ணாடி இதயம்
இனியும் என்னை
பிரதிபலிக்காது என்ற
எண்ணத்தில் உன்னை
விட்டு பிரிகிறேன்....


அன்புடன்
ரேவா

புதன், 4 ஆகஸ்ட், 2010

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

சிறகுகள் வேண்டும்


பறக்க எனக்கும் கொஞ்சம்
சிறகுகள் வேண்டும்...
பகல் பொழுதாகியும்,
பகலவன் பல் காட்டியும்,
இன்னும் அவனிடம் இருந்து
எந்த குறுந்தகவலும் வரவில்லையே....
விரைந்து அவன் இருப்பிடம்
சேர்ந்து என் நினைவுகளை
முழுதாய் அவனிடம் சேர்க்க
பறக்க எனக்கும் கொஞ்சம்
சிறகுகள் வேண்டும்

அன்புடன்
ரேவா

காதல்

இந்த காதலால்,
உயிர் வலிக்கும்...
உண்மையும் வலிக்கும்....
உருக்கமாய் அவனோ, அவளோ
இருக்கமாய் அவர்களுக்குள்
இருந்தாலும்,
காலம் மறந்து, காட்சிகள் மறந்து
நம் முகவரி,
நாமே தொலைக்கும்
இந்த காதல் செய்தால் பாவம்...

அன்புடன்
ரேவா

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

என் நண்பனுக்காய்


அன்பு நண்பனே!!!!

***எனக்கான என் மாற்றுத்தாயே,


**இந்த கவிதை முற்றும் வரையிலும்
நம் நட்பின் பயணம் மரணம்
தொட்டு முடியும் வரையிலும்
என்னை விட்டு பிரியா
என் அன்பு தேசமே!!!!!
இந்த கவிதை உனக்காய்......

**ஆயிரம் முறை தோற்றாலும்
மீண்டும் தொடருவேன் நான்,
உன் நட்பின் கரம்
எனக்காய் காத்திருக்கும் என்ற நம்பிக்கையில்....

**வழிமாறிய பொழுதுகளில் எல்லாம்
தடம் மாறாமல் நான் செல்ல
தவியாய் தவித்தது
என்னை வழிநடத்திச் செல்லும் ஆசானே....

**வெற்றியில் நான் திளைத்தாலும்,
தோல்வியால் தோற்கடிக்கப்பட்டாலும்
என்னை ஒரே வார்த்தையில்
உயிர்ப்பிக்கச் செய்யும்
என் உண்மையானவனே.......

**எனக்குள் உள்ள திறமை என்னென்று
நானே அறியாத போதும்,
என் திறமைதனை உக்குவித்த
என் உத்வேகனே.......

**அழுது புரண்ட காலத்திலும்,
கரை தெரியாமல் கண்பிதிங்கிய வேளையிலும்,
வறுமையில் வடிய பொழுதினிலும்,
தாழ்வு மனப்பான்மையால் தயங்கி
நின்ற வேளையிலும்,
உன்னால் முடியும் முயற்சி செய்
என்ற ஒற்றை மந்திரம் கொடுத்த
வெற்றி இது உன் வெற்றி....

என் அன்பு நட்பே!!!

**
கருவறை சுமந்த காலம் பத்து
என்றால், என் மழலை குணம்
கொண்ட நட்பு நீ
என்னை சுமந்த நாள் அதிகமென்று
உனக்கும் புரியும் ஊருக்கும் தெரியும்....

**ஆயிரம் கவிதை நான் வடிக்க
வழக்கமாய் அதன் பிழைகள்
நீ திருத்த, விளையாட்டாய் கேட்டாய்
என்னை பற்றி ஒரு கவிதை சொல்
என்று....

உன்னை பற்றி என்ன கவிதையடா
சொல்வது
நான் காணும் என் கவியுலகமே
நீயாய் இருக்கும் போது,

இருந்தாலும் தோழனே
இந்த கவிதை உனக்கானது.......

**தவம் இருக்கின்றேன் தோழா
வரும் பிறப்பிலும் உன் நட்பாக
நம்பிக்கையுடன் வலம் வர
தவம் இருக்கின்றேன்....

என் அன்பு நட்பே!!!

**ஆண்டவன் எனக்காய்
கொடுத்த என் இரண்டாம் கருவறையே,
கருவறை சுமந்த காலம் பத்து
என்றால், என் மழலை குணம்
கொண்ட நட்பு நீ
என்னை சுமந்த நாள் அதிகமென்று
உனக்கும் புரியும்,
ஊருக்கும் தெரியும்....

அன்பு நண்பனே!!!!
**இந்த கவிதை முற்றும் வரையிலும்
நம் நட்பின் பயணம் மரணம்
தொட்டு முடியும் வரையிலும்
என்னை விட்டு பிரியா
என் அன்பு தேசமே!!!!!
இந்த கவிதை உனக்காய்......














என் நட்பின் பாதையில்
ஒரு படிக்கல்லாய் இல்லாமல்
நான் மேல்லேற காரணமாய் இருந்த
என் அசோக நண்பனுக்கும்,
குணத்தையே பேராய் கொண்டவனுக்கும்....
நாகத்தின் துணையானவனுக்கும்,
எழுத்தாளரை பெயரில் கொண்டவனுக்கும்
என் முகவரி அறியா
என் வெற்றிக்காய் வேண்டுதல் செய்து
முரசு கொட்டும் நண்பனுக்காய்
இன்னும் என் அந்தனை
நட்பிற்கும்
இந்த கவிதை சமர்ப்பணம்


நட்பின் துணையுடன்
உங்கள்
ரேவா

என் நிழலானவன்


அன்பே!

நிழலென எப்போதும்
நீ என் நினைவினில்
நிற்கின்றாய்.....

*
இரவொன்று(பிரிவு) வருமென்று
அறியாமல் தொடர்கின்றாய்....

*விட்டு விலகும் போதெல்லாம்
தட்டி கொடுத்து செல்கின்றாய்....

*தட்டி உன்னை கேட்டாலோ,
எட்டி விட்டு போய்கின்றாய்.....


என் காதல் கணவனே!!!!

கலக்கங்கள் எனக்குண்டு,
புரிவாயா எனைக்கண்டு

காதலே,

நிழலென எப்போதும்
நீ என் நினைவினில் நிற்கின்றாய்

இரவொன்று(பிரிவு)வருமென்று
புரியாது நிற்கின்றாய்....


அன்புடன்
ரேவா