உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
மதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

மதுரையின் சித்திரைத் திருவிழா உங்களுக்காக...தொடர்ச்சி

வணக்கம் நண்பர்களே, இன்று

எங்கள் மதுரையின் சித்திரைத் திருவிழா உங்களுக்காக.....பகுதியின் தொடர்ச்சியினை நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தொடர்கின்றேன்...


ஆறாம் நாள் :  ரிஷப(காளை) வாகனம் 


சித்திரைத் திருவிழாவின் ஆறாம் நாள்,


அம்மனும், சொக்கரும், பிரியாவிடை தாயாரும்  ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வார்கள்...இந்த காட்சியின் நோக்கம், காளை (ரிஷப )வாகனம் தர்மத்தை குறிக்கும் ..
காளையின் உடல் போல் திடமான மனமும், அதிக சுமையைத் தாங்கும் காளைப் போல தன்னம்பிக்கை,  மனிதர்க்கு வேண்டும் என்பதையும், செவிகள் இறவன் நாமத்தையும், கண்கள் நல்லதையே பார்க்கவேண்டும். காளையின் வாழ் போல் தீயவையை  புறம் வைக்க வேண்டும் என்று உணர்த்தவே இந்த காட்சி...

ஏழாம் நாள் : யாளி மற்றும் நந்தி வாகனம்


சித்திரைத் திருவிழாவின் ஏழாம் நாள்,

அம்மன் யாளி வாகனத்திலும், சுவாமியும் பிரியாவிடையும் நந்தி வாகனத்திலும் காட்சி தருவர்...

இந்தக் காட்சியின் நோக்கம், 

அன்னை பவனி வரும் யாளி வாகனம் சிங்கம் மற்றும் யானை கலந்த உருவம்... மதம் பிடிக்கும் யானையும், தான் என்றும் கோவம் கொண்டு அலையும் சிங்கமும், அன்னையின் முன் அமைதியாய் இருப்பதைப் போல,  ஆணவம், தான் என்ற அகந்தை போன்ற கீழான குணங்களைக் கொண்ட மனிதனும், அன்னை அருளால் நற்பெயர் அடைவான் என்பதே இந்த காட்சியின் நோக்கம்...


எட்டாம் நாள் : ஊடல் உற்சவம் மீனாச்சி  பட்டாபிஷேகம்



சித்திரைத் திருவிழாவின் எட்டாம் நாள்,

அம்மனுக்கு பரிவட்டம் சாத்தப்படும், மன்னர் திருமலை நாயக்கர் வழங்கிய இரத்தின கிரீடத்திர்க்கும் அபிஷேகம் நடைபெறும்..இன்று இரவு அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் மாசி வீதிகளில் உலா வருவாள்.இன்று மாலையில் இருந்து மீனாச்சி அம்மனின் அரசாட்சி துவங்கி, ஆவணி மாதம் வரை அன்னையின் அரசாட்சி தான்..இதன் அடையாளமாக அன்னைக்கு செங்கோல் வழங்கப்படும்.. 

ஒன்பதாம் நாள் : திக்கு விஜயம் இந்திர வாகன விமானம் 


 

சித்திரைத் திருவிழாவின் ஒன்பதாம் நாள்,
மீனாச்சியம்மன் இந்திர விமானத்தில் திக்விஜயம் புரிகிறாள். பட்டம் கட்டிய மன்னர்கள் தமது ஆட்சியை நிலைநிறுத்த நாலாபுறம் படியெடுத்துச் செல்வது போல்,பட்டாபிஷேகம் நடனத்த மறுநாள் மீனாஷி அம்மன் இனி இங்கு தன் ஆட்சி என்பதை பாக்களுக்கு அருவிக்கவே இந்த பவனி 
பத்தாம் நாள் : திருக்கல்யாணம், மாலை பூப்பல்லக்கு உலா  


  
 

சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாள்,

உலகை வென்ற அம்மன்,  இறுதியாய் இறைவனையும் வென்றாள்...மீனாச்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண, விண்ணுலகமே, மண்ணுலகிற்கு வந்து, தம்பதியரை வாழ்த்துவதாய் ஐதீகம். இறைவன் திருமணத்தைக் காண கண் கோடி வேண்டும்.. திருமணம் முடிந்த இரவு சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும், அம்மன் பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள்  

பதினோராம் நாள் : திருத்தேரோட்டம், சப்தாவர்ணச்சப்பர உலா


 


சித்திரைத் திருவிழாவின் பதினோராம் நாள்,
வரலாற்றி மூன்று திரிபுர அசுரர்கள் ஆணவம் கொண்டு 
மூவுலகத்தை துன்புறுத்தியதாகவும் அவர்களை வதம் செய்யவே    சிவபெருமான் தேரேறிப் புறப்பட்டார் . இப்புராண நிகழ்வை நினைவூட்டும் விதத்தில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் மாசிவீதிகளில் பவனி வருகின்றனர்.
 இரவில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும்  சப்தாவர்ண சப்பரத்தில் பவனி வருவர். 

 பன்னிரெண்டாம் நாள் : தீர்த்தம் தேவேந்திர பூஜை, ரிஷப வாகன உலா.. 


சித்திரைத் திருவிழாவின் பனிரெண்டாம் நாள், 

அம்மன் ரிஷப வாகனத்தில் எழுத்தருள்வார்.. ஆறாம் நாள் ரிஷப வாகன காட்சியைத் தவற விட்டவருக்கெல்லாம், இந்த காட்சி பெறும் பேறு...சித்திரைத் திருவிழாவின் பனிரெண்டாம் நாள், அம்மன் ரிஷப வாகனத்தில் எழுத்தருள்வார்.. ஆறாம் நாள் ரிஷப வாகன காட்சியைத் தவற விட்டவருக்கெல்லாம், இந்த காட்சி பெறும் பேறு...
இதோடு மீனாக்ஷி அம்மன் சித்திரைத் திருவிழா இனிதே நிறைவு பெறும்... இதைத் தொடர்ந்து 

--   மதுரை- சித்திரைத் திருவிழா... ஸ்ரீ மீனாக்ஷியம்மை- சொக்க்நாதர் 
திருக்கல்யாணத்துடன் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும்  சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று துவங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும். 
நூபுர கங்கையில் நீராடி, பூஜையில் மூழ்கியிருந்த சுதபஸ் முனிவர், அங்கு வந்த துர்வாச
முனிவரைக்  கவனிக்கவில்லை இதனால்  கோபம் கொண்ட துர்வாசர், தவளையாகப் போகக்கடவது. என்று சுதபஸ் முனிவரைச் சபித்தார். மறுகணம் தவளையான முனிவர், சாப விமோசனத்தை வேண்டிக் கேட்க... வைகை கரையில்  தவம் இருந்து வா, சித்திரா பௌர்ணமிக்கு மறுநாள் கள்ளழகர்  வைகைக்கு வந்து உனக்கு சாபவிமோசனம் தருவார்’’  என்று  துர்வாச முனிவர் கூறியாதாகவும், அதனால் சுதபஸ் முனிவருக்கு சாப விமோசனம் வழங்கவே கள்ளழகர் வைகைக்கு எழுந்தருள்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.  
இது ஒருபுறம் இருக்க,

 தன் தங்கை, மீனாக்ஷியின் கல்யாணத்துக்கு சீர்வரிசையுடன் புறப்பட்ட அழகர் மதுரை செல்வதற்கு தாமமானது, அதற்குள் தன் தங்கையின் கல்யாணம்  முடிந்து விட்டதால், கோவம் கொண்டு மதுரைக்குள் செல்லாமல் வைகையில் சென்று, தன் கோவம் குறைய நீராடினார் என்றும் ஒரு காரணக் கதை உண்டு. 

கள்ளழகர் ஆற்றில் இருக்குதல் 
 
Kallazhagar enters river Vaigai in Madurai - Tamilnadu News Headlines in Tamil
 
 
 
நண்பர்களே எனக்கு தெரிந்தவரை, மீனாச்சி அம்மன் வைபவத்தையும், அழகர் திருவிழாவையும் நான் கேட்டும், படித்தும் தெரிந்த விசயங்களை தொகுத்துள்ளேன்... தவறெனில் சுட்டிக் காட்டவும்...சித்திரைத் திருவிழாபற்றி  விரும்பி கேட்டவர்களுக்காகவே இந்த பதிவு...விரும்பாதவர்களுக்கு அல்ல (ஹ ஹ )
படங்கள்: நன்றி கூகிள் நன்றி : தினமலர்

புதன், 20 ஏப்ரல், 2011

எங்கள் மதுரையின் சித்திரைத் திருவிழா உங்களுக்காக.....






வணக்கம் நண்பர்களே... நான் நேசிக்கும் என் மதுரையைப் பற்றியும் , மதுரையின் சிறப்பாய் இருக்கும் மீனாக்ஷி அம்மன் சித்திரைத் திருவிழா நாட்களைப் பற்றியும்  பதிவு போடுவதில் மகிழ்ச்சியும்,  தாயின் மடியில் தவழும் நிம்மதியும் அடைகின்றேன்...



மதுரையின் சிறப்பாய் மதுரையே இருக்கும் போது, மதுரை சித்திரை திருவிழா மதுரைக்கு பெறும் சிறப்பு....எங்கள் மதுரையில் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி மிகவும் விசேஷம் பெற்றது... ஆம் நண்பர்களே ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில், கொடி ஏற்றத்துடன்  மதுரை திருவிழா தொடங்கும்..


.
இந்த சித்திரைத் திருவிழா பத்து நாட்கள் மிக விமர்சையாக நடக்கும். சைவமும், வைணவமும், இணைந்து கொண்டாடும்  ஒரு பெருவிழா என்றால், அது மதுரை சித்திரைத் திருவிழா தான்.. 

சைவமும் வைணவமும் போட்டிப் போட்டுக்கொண்டிருந்த நேரத்தில்,  இருவரையும் இணைக்கும் விதத்தில் ,வேறு வேறு காலங்களில் நடந்து கொண்டிருந்த,  மதுரை மீனாக்ஷி அம்மனின் திருவிழாவையும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையும் ,திருமலை நாயக்கர் மன்னர், ஒன்றாய் இணைத்து  கொண்டாடும் வழக்கத்தை உருவாக்கினார் என்பது வரலாறு...


படங்கள் : என் சகோதரன் எடுத்தது 

படங்கள் : என் சகோதரன் எடுத்தது 
  
அதோடு மட்டும் அல்லாது மீனாக்ஷி அம்மன் கோவிலில் மாதந் தோறும் திருவிழாக்கள் நடக்கும்...வருடத்தில் எங்கும் இல்லாத படி இங்கு தான் 294  நாட்களில் திருவிழாக்கள் நடைபெறும்...இது வேறு எங்கும் காணப் பெறாத ஒன்று எனபது இக் கோவிலின் சிறப்பு..


சித்திரைத் திருவிழா நடைபெறும் பத்து நாளும் அம்மனும் சுந்தரேஸ்வரரும் வித விதமாய் பல்வேறு வாகனத்தில் காட்சி தருவார்கள்


முதல் நாள்: கர்ப்பக விருட்சம் மற்றும்  சிம்ம வாகனம்



சித்திரை திருவிழாவின் முதல் நாள், சொக்கர் கர்ப்பக விருச்சத்திலும், அம்மன் : சிம்ம வாகனத்திலும் காட்சி தருவார்கள்....

இந்த காட்சியின் நோக்கம் இறைவன் உலகத்தின் ஆதாரமாய் இருப்பவன் என்பதைக் குறிக்கும் பொருட்டு...கற்பக விருட்சம் கேட்டதை எல்லாம் கொடுக்கும் என்ற பொதுவான கருத்துக்கு, உயிர் சேர்க்க, மக்கள் எந்த வரம் வேண்டி நின்றாலும் இங்கு கிடைக்கும் என்பதை குறிக்க ஐயனும், கேட்டது எல்லாம் கிடைத்து விட்டால் மனித உயிர்கள் ஆணவப் பேய்கொண்டு ஆடுவார் என்பதால் அதை அடக்க அம்மன் சிம்மவாகனத்திலும் வருவதாய் பொருள்,


இரண்டாம் நாள் : அன்ன வாகனம் மற்றும் பூத வாகனம்






 


சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள், 


மீனாச்சியும், சொக்கரும், அன்ன மற்றும் பூத வாகனத்தில் எழுந்தருள்வர்..ஐம் பூதங்களையும், மனிதன் அடக்கி வாழ்வில் முக்தி பெறவேண்டும், என்பதற்காய் அய்யன் பூத வாகனத்திலும், நல்லது கெட்டதும் கலந்திருக்கும் இந்த உலகத்தில் நல்லதை மட்டும்   நாம் கருத்தில் வைக்க வேண்டும் என்பதற்காய் மீனாக்ஷி அம்மன் அன்ன வாகனத்திலும் காட்சி தருவார்கள்...


மூன்றாம் நாள் : இராவண கைலாச பர்வதம் - கேட்டதை தரும் காமதேனு







சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாள் மீனாச்சியும், சொக்கரும், இராவண கைலாச பர்வதம் - கேட்டதை தரும் காமதேனுவாகனத்தில் எழுந்தருள்வர்...




நான்காம் நாள்  : தங்கப் பல்லக்கில் பவனி


 

சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாள், 

மீனாச்சியும் சொக்கரும் தங்கப் பல்லக்கில் உலா வருவார்கள்..இந்தப் பவனியின் நோக்கம், இந்தப் பலக்கில் சாமியின் திருவுருவங்களை திரைச்சீலை மறைத்திருக்கும்... நம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று இறைவன் அன்றி யாவரும் அறியோர்.நல்லதும்,கெட்டதும்  கலந்திருக்கும்  உலகத்தில்,  நல்லவைகளுக்கு மட்டுமே மனதில் இடம் கொடுத்து நெறியோடு மனிதர்கள் வாழவேண்டும்  என்பதை  உணரத்தவே இந்த பவனி...
ஐந்தாம் நாள்    : குதிரை வாகனம் 


 


சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாள், 


அம்மனும், சுந்தரேஸ்வரரும் குதிரை வாகனத்தில் உலாவருவார்கள்..அறம், பொருள், இன்பம், வீடு பேறு, என்பவை குதிரையின் நான்கு கால்களைக் குறிக்கும் தம் மனக் குதிரையை அடக்கி சரியான வழியில் செல்பவன், இறைவனை அடைவான் என்பதே இந்த காட்சியின் நோக்கம்..



வணக்கம் நண்பர்களே, நம்ம சகோ சித்ரா கேட்டு கொண்டதன் பெயரில் இந்த சித்திரைத் திருவிழா பதிவை வாய்மொழியாக கேட்டும், நான் படித்தும், தெரிந்தும் இருந்த விசயங்களை பதிவாய் வடித்திருக்கின்றேன்.. மொத்தம் பத்து நாள் நடக்கும் திருவிழாக்களில் ஐந்து நாட்களின் விழாக்களை பதிவாய் தொகுத்து விட்டேன்... மீதம் நாளையப் பதிவில்... இந்த பதிவில் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்.. திருத்திக் கொள்கின்றேன் நண்பர்களே....


படங்கள் : நன்றி கூகிள், நன்றி தினமலர்