* சுற்றம் ஒரு புறம்
சுயநல கொடி விரிக்க...
உடன்பிறந்தோர் வாழ்வில்
நம்மால் பிழை வரும் என,
நம் பெற்றோர் உரைக்க..
போட்டுக் கொண்டோம்
புதிய முகமூடி
நீயும் நானும்
இனி "எதிரிகள்" என்று...
* நீயும் நானும் வேறு வேறாய்
இருக்க நம்மில் வேர் விட்ட
நம் காதலுக்கு
சொல்லிவிடு
இனி நீயும் நானும்
"எதிரிகள்"
* நம் காதல் வளர்த்த
கடற்க்கரை மணலுக்கும்,
காதல் பேசி நம் காலடி வந்த
கடற்க்கரை அலைகளுக்கும்
சொல்லி விடு
இனி நீயும் நானும்
"எதிரிகள்"
* குற்றவாளிகள் போல்
நம்மை குத்திக் கூடையும்
நம் சொந்தங்களின்
பார்வைக்கு பட்டென்று
சொல்லிவிடு
இனி நீயும் நானும்
"எதிரிகள்" என்று..
* விலகிப் போகிறோம்
என்று தெரிந்தும்,
விலகாமல் நமைத்தடுக்கும்
நம் நட்புக்கு
சொல்லிவிடு
இனி நீயும் நானும்
"எதிரிகள்"
ஆம் !!!!
* எதிர்ப்படும் வாழ்க்கை
நமக்காய் இருந்தும்,
திருமணமாக உன் தங்கைக்கும்,
மணமாக காத்திருக்கும்
என் சகோதரிக்குமாய்
நம் காதல் போட்டுக்கொண்டது
ஒரு முகமூடி..
* உனைப்பிரிந்து என்
நலம் விசாரிப்புகளும்
நலமற்று போக...
எனைத் தீண்டும் உன் பார்வையின்
ஆளுமை எனை விட்டு போக,
நடை பிணமென அலைந்துகொண்டிருக்கிறேன் ,
நீ நலமாய் இருப்பாய்
என்ற நம்பிக்கையில்
எனைத்தேற்றிக் கொள்கிறேன்,
காரணம்
நீயும் நானும்
இனி "எதிரிகள்"
* நம் காதல் தோல்வியைத்
தழுவியது என்று யாரேனும்
சொன்னால், தயங்காமல்
சொல், உன்னை நானும்,
என்னை நீயும், உயிர் இருக்கும்வரை
நம் உயிரில் கருவாய் சுமப்போம்...
ஏன்னென்றால்
நீயும் நானும்
இனி "எதிரிகள்"
* எதிர்படும் எல்லாரும் நமக்கு
எதிரியாய்ப்போக, காதலை
சுமந்துகொண்டு,காலத்தின் முன்
நீயும் நானும்
இனி "எதிரிகள்"
* சுற்றம் ஒரு புறம்
சுயநல கொடி விரிக்க...
உடன்பிறந்தோர் வாழ்வில்
நம்மால் பிழை வரும் என,
பெற்றோர் உரைக்க..
போட்டுக் கொண்டோம்
புதிய முகமூடி
நீயும் நானும்
"எதிரிகள்" என்று...
(இதற்க்கு முந்தய என் தமிழன் என்ற தமிழக மீனவர் படுகொலைக்கு எழுதிய கண்டன கவிதையையும் படித்து உங்கள் கருத்துக்களை சொல்லலாமே!!!!)
அன்புடன்
உன் எதிரி
ரேவா