விடிஞ்சும் விடியாததுமா இன்னைக்கு இந்த மனுஷனுக்கு லீவ் ஆச்சே... சரி இன்னைக்கு ஒரு நாளாவது அந்த பாவி மனுஷனுக்கு பிடிச்சத சமைக்கலாம்னு, என்ன சமைக்கனு அவர் கிட்ட கேட்டா , படுபாவி, நீ ஒன்னும் சமைக்க வேணாம், இன்னைக்காவது நான் நல்ல சாப்பாடு சாப்புடுறேன்னு அவரே சமைக்க போயிட்டருங்க...சரி நமக்கு சமைக்கிற வேலை மிச்சம்னு சொல்லி வீட்டு வேலைய கவனிக்க போனா... துவைக்க எடுத்து வச்ச துணி எல்லாத்தையும் நானே துவைக்கிறேன் நீ போ னு சொல்லிடாரு... என்ன ஆச்சு இந்த மனுசனுக்குனு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்..
டமால் னு ஒரு சத்தம், என்னனு போய் பாத்த........ என் வீட்டு மனுஷன் சமைக்கிறேன்னு சொல்லி, ஸ்டவ் ஆன் பண்றத்துக்கு பதிலா, இன்டெக்ஸ்டன் அட்டுப்புல குக்கர வச்சுருக்காறு...குக்கர் அக்செப்ட் ஆகாம வெடிச்சிருச்சு. நான் அடுப்படிக்குள்ள போனதும் அவரு பேய் முழி.முழிக்க .. எனக்கோ ஒரே கோவம்.... ஸாரி டி னு அவர் சொல்ல, எனக்குள்ள எப்படி அப்படி ஒரு காளியாத்தா ஒளிசுருந்தானே தெரியல, நீங்க ஆணியே புடுங்க வேணாம்... நான் நல்லா சமைக்காட்டியும் பரவா இல்ல... என் சமையலையே எப்போவும் போல சாப்பிடுங்கன்னு சொல்லி சமையல கவனிக்க போயிட்டேன்..
திடிருன்னு பாத் ரூம் ல இருந்து சத்தம் ஐய்யோ அம்ம்மானு, என்னடா இன்னும் தேர்தல் முடியலையே அதுக்குள்ள கலைஞர் கத்துறாரேனு பாத்தா, என் வீட்டு மவராசா துணி துவைக்க போயி, என் அப்பா சீதனமா கொடுத்த வாசிங் மெஸின பொகைய வச்சுட்டாறு..அவ்வ்வ்வவ்வ்வ் .அட பாவி மனுசா ஏன்யா உனக்கு இந்த வேண்டாத வேலைன்னு கேட்டா?.... சாரி ரேவா மா, நானும் உனக்கு ஒத்தாசையா இருக்கணும்னு நினச்சு தான் இப்படி பண்ணுனேன்.... தெரியாம மெஷின் பால்ட் ஆகிடுச்சு, இத மனசுல வச்சுகிட்டு என் அம்மா எனக்கு ஆசையா வாங்கித்தந்த என் பைக் அஹ ஒன்னும் பண்ணிடாதாடானு கெஞ்சிக் கேட்டாரா, எனக்கோ ஒரே சந்தோஷம் ஆகா இந்த ஐடியா நமக்கு தோணாம போயிடுச்சேனு, மனுஷன் அசந்த நேரம் வண்டி பிரேக் அஹ கலட்டிடலாம்னு நினைச்சேன்...
அப்பறம் கொஞ்சம் வேலை காரணமா என் வீட்டால கவனிக்க முடியல, சரி என்ன பண்ணுறாருனு பாக்கப் போனா, அட உங்அப்பன் , வலுக்கத் தலைக்கு சவுரி வைக்க, (ச்சே ச்சே என் மாமனார் அஹ சொல்லல, சும்மா பழமொழி) மாடில பக்கத்து வீட்டுல இலியான மாதிரியே ஒரு பொண்ணு இருக்கும்ங்க , இந்த மனுஷன் இலியானா போட்டோவையே சோறுதண்ணி இல்லாம பாப்பாரு, இதுல அந்த பொண்ணும் இவரையே பாக்க, எனக்கு ஒரே பீதி... அதுவும் சொல்லி வச்ச மாதிரி அவருக்கு பிடிச்ச புல் ஹான்ட் சுடி போட்டுருக்கா, இவருக்கோ புல் ஹான்ட் சுடி போட்டு வயசான பாட்டிப் போனாலே, அந்த பாட்டி வெட்க்க படுற அளவுக்கு பேசுவாரு, இதுல இந்த பொண்ணு இவரோட ரொமாண்டிக் லூக்குக்கே அவுட் ஆகிடுச்சு... (பாத்தாலே தெரிஞ்சது) இதுல பேசுனா அவளோ தான், என்னடா நம்ம தாலிக்கு வந்த சோதனைன்னு, தாலிய கண்ணுல ஒத்திக்கிட்டு, என் வீட்டு லூசு தலைல நறுக்குன்னு ஒரு கொட்டு, ஆனா என் புருஷன் ரொம்ப நல்லவங்க, நான் செல்லமா எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரு,(செல்லமா தாங்க )ஹி ஹி
ஆனாலும் அடிச்சது ஒரு பொண்ணு முன்னாடி அதுவும் இலியானா மாதிரி ஒருத்தி முன்னாடி, சாருக்கு வலிச்சாலும் வலிக்காத மாதிரியே ஸீன் போட்டார் நானும் விடுறதா இல்ல..ஒரு வேலையா அந்த மனுசன மாடில இருந்து தேத்திக் கூட்டிட்டு வந்துட்டேன், நான் போய் காபி போடுட்டுவரேன் இங்கயே இருங்கன்னு சொல்லி அந்த காபி பைத்தியத்துக்கு காபி போட போயிட்டேன், மறுபடியும் டமால்னு சத்தம் என்னடானு பாத்தா என் பொறந்த நாள் பரிசா என் சினேகிதி வாங்கித் தந்த மீன் தொட்டிய கழுவுறேன்னு உடசுட்டாறு...
எனக்கு காதுல இருந்து ஒரே புகையா வர .... உனக்கு இன்னைக்கு சோறும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது, ஒழுங்கா போய் பதிவு போடுறேன் பதிவு போறேன்னு என் மானத்த வாங்குவேங்கள்ள அதயாவது பண்ணித்தொலைங்க, இங்க இருக்கிறதா ஒன்னு ஒன்ன ஒடச்சு என்ன கடுப்ப கெளப்பாதிங்கனு சொன்னது தான் தாமசம்... மனுஷன் குட்டி போட்டா பூனையாட்டம் போய் அவர் லேப்டாப் கிட்ட உட்காந்துகிட்டாறு...ஆளு அட்ரசே தெரியாத அளவுக்கு அமைதியா இருந்துருக்காரு...இதுல அப்போ அப்போ சிரிப்பு சத்தம் வேற என்னடா இந்த மனுசன தலைல அடிச்சோமே சித்தம் கலங்கிடுச்சானு பாத்தா, மாத்தி மாத்தி யோசிக்கிற நம்ம ரஜீவன் பதிவ படிச்சிடு இருக்காரு..ஹி ஹி..
அப்பறம் கொஞ்சம் நேரம் கழிச்சு பசிக்குது ரேவா சோறு போடுறையா இல்ல என் மீசைய வச்சே உனக்கு ஊசி குத்தவானு ரொமாண்டிக் அஹ பேச, உனக்கு இதெல்லாம் வராதே எப்டி நீங்க இப்படி ஆனேங்கனு கேட்டா ஒன்னும் இல்லா இப்போதான் வசந்த சார் ஓட வெட்கத்தை அடைகாக்கும் காதலி அப்டேட்ஸ் படிச்சேன்னு சொன்னாரு..எனக்கோ கோவம் வர கடைசில நம்ம நாற்று நண்பன் அதாங்க நம்ம நிரூபன் பாணில விளக்கமா....ஹி ஹி என் பாணில என்னவரை வாழ்த்திட்டு வந்து உக்காந்தேன்...
கடைசில எங்க வீட்டுல இருந்து அம்மா போன், பேசிட்டே இருக்கும்போது, என் போன் அஹ பிடிங்கி நான் அடிச்சது, சாப்பாடு போட மாட்டேன் னு சொன்னது எல்லாத்தையும் ப்ளாக் அஹ போஸ்ட் அஹ போட்டாராம் அது இன்னைக்கு ஹிட் ஆம்...என் அம்மாகிட்ட சொல்லி சொல்லி சிரிக்கிறாரு.... அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்... இந்த பாவி மனுசன கட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே ... அப்பப்பாஆஆஆஆஆ முடியல...யாராவதும் ஒரு வழி சொல்லுங்களேன்...
( என்ன நண்பர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நேத்து மீள்பதிவுன்னு போட்ட என் பழைய கவிதை கொஞ்சம் அழுகாச்சிய போயிடுச்சு அதான் சும்மா கொஞ்சம் மொக்கையா ட்ரை பண்ணலாம்னு... ஹி ஹி அப்பறம் பாவம் ரேவா உங்களவர்னு கமெண்ட் போடா கூடாது ஏன்னா என் இளவரசன் இன்னும் கண்ணுல மாட்டல... ஹி ஹி..அதோட நல்ல வாய் பேசுறே கொஞ்சம் நகைச்சுவையா எழுதலாம்னு ஒருத்தர் ஐடியா கொடுத்தார் அதன் விளைவே இது ..நாங்களும் மொக்கையா எழுதுவோம்...ஹி ஹி ........யாரையாவது இந்த பதிவு காயபடுத்தி இருந்தால் மனிக்கவும். சும்மா ஒரு பேச்சுக்கு போட்டுவைப்போம்.சரி நண்பர்ஸ் வரட்டுமா.. அப்பறம் அப்டியே படிக்காதவங்க என்னோட
முந்தய பதிவு : உன் ஊடல் இதையும் படிச்சிடுங்க...)