உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 27 ஜூன், 2011

திமிருக்கு அவனென்று பேர்


      நீ என்னைக் காதலிப்பதாய் சொல்லி, வெகு நாட்கள் ஆகிவிட்டது தெரியுமா என்றேன்...
 

உன்னைக் காதலிப்பதாய் சொன்னவன் நான் தானே..!!

"பிறகு எப்படி மறப்பேன்" என்றான்.. 

பிறகு "ஏன் எனக்கு அன்பாய் எதுவும் வாங்கித் தரவில்லை" என்றால்

"உன் காதல் மொத்தமும் என்னக்காய் இருக்கட்டும் என்று தான், பாகுபடுத்தும் பரிசுப் பொருள்களை வாங்கித் தரவில்லை" என்றான் திமிராய்.... 

பரிசுப் பொருட்கள் வாங்கித்தந்தால் , அன்பு கூடும் என்று தானே என் நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள்....என்று கேட்டால்,

 
"அட அசட்டுப் பெண்ணே, போன மாதம் உன் பிறந்த நாளுக்காய் பரிசளித்த, கரடி பொம்மை உன் படுக்கை அறையை அழகுபடுத்துகிறது என்று நீ தானே சொன்னாய்"...
 

"ஆம் நான் தான் சொன்னேன்"....

"உன் இரவை அழகு படுத்த, அழகாய் நான் இருக்கையில், என்னைவிட அதிக முத்தம் வாங்கிய  அந்த கரடி பொம்மை, உன் அன்பை என்னிடம் இருந்து பிரித்தது உண்மை தானே" என்றான்....

"நீ கொடுத்த பொருள் என்றதால், கூடுதல் பிரியம் கொண்டேன் அந்த கரடி பொம்மையுடன் இதில் என்ன தவறு" இருக்கிறதென்றேன் வழக்கம் போல,

"இருக்காத பின்னே, நான் இருக்கிற இடத்தில், அந்த பொம்மை இருக்கையில்"......என்று அவன் தொடங்கிய வார்த்தையின் அர்த்தம் புரிந்தவளாய், அதட்டினேன் செல்லமாய்... 

 

        ஒரு மாலையில், அழகுப் பொருட்கள் வாங்க செல்வதாய் தீர்மானித்திருந்தேன், "நீயும் வருகிறாயா" என்று அவனை அழைத்தேன்....அமைதியாய் வந்தவன், கொஞ்சம் அமைதி கலைத்து, 

"எதற்கு இத்தனையும் வாங்குகிறாய்" என்றான்..."

அழகுப் பொருட்கள், என்னை அழகுபடுத்திக் கொள்ளத்தான்" என்றால்,
அதெல்லாம், அழகா இருக்கிறவங்க போட்டாத்தான் அழாகா இருக்கும்...நீ போடதே"....என்றவன், என் விழி நீரின் அர்த்தம் புரிந்தவனாய், "உன்னை அழகுபடுத்தும், உன் அழகு சாதனம் நான் இல்லையா" என்றான் அனைவர் முன்பும்.....

"உனக்கு வரவர திமிர் அதிக மாகிடுச்சு டா"...என்றால்
 

"அழகு சேர்ந்தால் திமிர் வரத்தானே செய்யும்"
 

"ஆமா இவரு பெரிய ஆண் அழகன்", என்று சொல்லி முடிப்பதுக்குள்

"என் அழகி நீயும், என்னுள் கலந்து விட்டதால், கொஞ்சம் எனக்கும் திமிர் பிடித்து விட்டது தான்" என்றான் திமிராய்...
             இணையத்தில் உலாவி கொண்டு இருக்கையில், அவன் இருப்பது தெரிந்து, அவனை தொடர்பில் அழைத்தேன்......வெகு நேரம் ஆகியும் ஒரு பதிலும் இல்லை...கோபம் கொண்டு, "இனி என்னோடு பேசாதே" என்று இணைப் துண்டித்தால்..


"பேசாட்டி போடி" என்று பதில் அளித்தான் திமிராய்.....
"போடா பிசாசே".... என்றால்,
 

"என் தூக்கத்தை களவாடிய குட்டி பிசாசு நீ தான்"... என்றான் வழக்கம் போல காதலோடு....
 

"ஏன் ஆன்லைன் ல இருந்த பேசமாட்டியா?"....
 

"பேசுவேனே"...
 

"அப்பறம் ஏன் என் கூட பேசல"......
 

"இல்லை நீ எவ்வளவு தூரம் எனக்காய் துடிக்குறேனு, பார்க்க இது போல செய்தேன்"...
"பரவா இல்லை...இந்த மெசேஜ் ஓட சேர்த்து 108 ஆகிடுச்சு".....

"உனக்கு திமிரா, இந்நேரம் ஸ்ரீ ராம ஜெயம் எழுதுனா ஒரு புண்ணியமாவது கிடைச்சிருக்கும்....போயும் போயும் உன் பேர போய், உனக்கே மெசேஜ் பண்ணிருக்கேன் பாரு, என்ன என்ன சொல்லுறதுன்னு எனக்கே தெரியல"...

"அதனால என்ன உனக்கு தான் நான் காதல் வரம் கொடுத்திருக்கேன்ல...இந்த 108 காதல் ஜெயத்துக்கும், நான் ஒவ்வொரு முத்தம் பரிசளிக்கிறேன்...சம்மதமா" என்றான்....

"போ"....என்றேன் திமிராய்...
                  "எதுக்காக என்ன காதலிக்கனும்னு உனக்கு தோனுச்சுன்னு" விளையாட்டாய் அவனிடம் கேட்டேன் ஒரு நாள்,

"முதலில் உன்னை சும்மா தான் பாத்தேன்...அப்பறம் சும்மா சும்மா பாத்தேன்...நீயும் என்ன பார்க்கிறேன்னு தெரிஞ்சதுக்கப்பறம் உன்ன தான் காதலிக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்" என்று சொன்னவனை, இடைமறித்து, 

"நான் உன்ன பாக்கவே இல்லையே"

"நடிக்காத டி....என் அத்தைகிட்ட, அதான் உன் அம்மாகிட்ட நான் உன் வீட்டுக்கு வராதது குறித்து, பேசுனியே" ...
 
"ஆமா  நீ என் அத்த பையன் ஆச்சே....எங்க வீட்டுக்கு வராம இருக்கேனு கிட்டேன்" இதுல என்ன தப்பு இருக்கு...
 

"இம்ம்ம் அப்போ ஏன் சாய் னு என் பேரோட உன் பேரையும் உன் டைரி ல எழுதி வச்சயாம்"...

"ஒய் நான் உன் பேர எழுதுனது உனக்கு எப்படி தெரியும்",

"என் அத்தை அத பாத்து, என்கிட்ட சொல்லிட்டாங்க"...

ஐயோ இது அம்மாவுக்கு தெரியுமா?...
 

தெரியும்...என் மாமாவுக்கும் தெரியும்...

என்ன குண்டப் போடுற?...என் அப்பாவுக்கும் தெரியுமா?

"ஆமா தெரியும்....ஒரு ஞாயிறு  உங்க வீட்டுக்கு சாப்பிட வந்த போது, உன் அம்மாகிட்டயும், உன் அப்பாகிட்டயும் உன்ன காதலிக்கிறேன்னு சொல்லி சம்மதம் வாங்குனதுக்கப்பறம் தான், என் காதலை  உங்கிட்ட சொன்னேன்"...  

"எனக்கு தலைய சுத்துது...ஒரு குடும்பமே, என் கிட்ட இருந்து இதை மறைச்சிடுச்சே"...சரி அம்மா அப்பா நீ என்ன காதலிக்கிறேன்னு சொன்னவுடனே என்ன சொன்னங்க...?" என்று அவன் தரும் பதிலுக்காய் ஆவலோடு காத்திருந்தேன்...

அவனோ, "உன் நிலமைய நினைச்சா பாவாமா இருக்கு சாய் னு சொன்னங்க"...   

"இப்படிலாம் பேசுனா, நான் அழுவேன்" என்றால்...
 

"அழு இனி காலம் காலத்துக்கும் நான் தானே உன்ன கட்டிக்கிட்டு அழனும் என்று
கண் சிமிட்டி" சொன்னான் திமிராய்.....

அவன் திமிரும்...அவனின் திமிரும் அழகும் என்றுமே அழகுதான்....
LOVE IS A COMMITMENT...NOT JUST AN ENTERTAINMENT.............

புதன், 22 ஜூன், 2011

காதலோடு நான்...


நீ பேசிவிட்டு போனதிலிருந்து
இருப்புக் கொள்ளவில்லை
இதயம்....
மறுபடி ஒருமுறை
உன் குரல் கேட்க
காத்திருக்கிறது ஆவலோடு..
.

நான் சொல்லவருவதை
சொல்லி முடிப்பதற்குள்,
சிக்கிகொண்ட என் வார்த்தைகளை,
அழகாய் கண்டெடுத்து
விடுகிறது,
உன் வெட்க்கச் சிரிப்பு...
.
அனைவரிடமும் நட்பாய்
பழகும் நீ,
என்னிடம் என் எண்ணம்
அறிய, சாமர்த்தியமாய்,
வார்த்தைகளில்  வேவு
பார்ப்பது ஏன்?....   
.

அளவின்றி பேசுபவள் நான்,
உன் , பார்வை
தாக்கத்திருக்கு பிறகு
அளந்து அளந்தே  பேசிகின்றேன்...
 .

சத்தம் இல்லாமல் யுத்தம்
செய்வது காதலாம்...
கற்றுத் தந்தது,
நீ கொடுத்த ஓற்றை 
முத்தம்...
.

நீ விரும்பி கேட்கும் 
பாடல்கள் யாவும்,
நான் கேட்கையில்
இரட்டை அழகு கொள்கிறது...
உன் நினைவோடு....
. 

உன் விசாரிப்புகளுக்கு
பிறகு,
சுகமாய் தெரிகிறது
என் காய்ச்சல்.....
 .

மழையில் உன் குடைக்குள்,
வரவேண்டும்
என்ற எண்ணத்தில்,
நான் மறைத்து வைத்த குடையை,
என்னைப் போல்
நீயும் மறைத்து வைத்ததால்,
மழையில் நனைந்த,
நம் காதலை என்ன செய்வது....
 .

எண்ணிக்கை முக்கியமில்லை
என்று,  மிட்டாய்க் கேட்க்கும்
பிள்ளைபோல்,
அழுது வடித்து,
நீ முத்தம்
கேட்க்கும்  அழகுக்கே
ஆயிரம் முத்தம் கொடுக்கலாம்....
  .  

நம் காதலை மறைக்க
ஆயிரம் பொய்கள் 
சொல்லியாகிவிட்டது,
என்றால்,
அரைக் கல்யாணம் முடிந்து
விட்டதா என்று,
கண் சிமிட்டி காதல் செய்கிறாய்....
.  

காதல் அவஸ்த்தையானது தான்,
காத்திருக்க சொல்லிவிட்டு,
வேலைப் பளு என்று
நீ அனுப்பும்
குறுந்தகவலை எரிச்சலோடு
பார்க்கும் போது....
. 

கவிதையில் எல்லாம்
சொல்லிவிட முடியாத
உன் காதலை,
உன்னோடு இருக்கும் போது
உணர்கின்றேன்..
இது உனக்கே உண்டான
ஒன்று...
 .

விலகி விலகி
சென்றாலும்,
விருச்சமாய் நீ
எனக்குள்ளே...
.

( வணக்கம் நண்பர்களே நலம் தானா?.....மறுபடியும் பதிவுலகம் வந்தாச்சு, இனி வழக்கம் போல, என் பதிவுகளுக்கு வருகை தாருங்கள்.... )

வியாழன், 9 ஜூன், 2011

பதிவுலகத்திற்கு நன்றிகள் பல....

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் 
பண்புடை யாளர் தொடர்பு.


என்னடா திருக்குறளோட ஆரம்பிக்கரானு பாக்குறேன்களா?....படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு. அப்படிப் பட்ட நண்பர்க்களுக்கு நன்றி சொல்லும் பதிவாய் இதைத் தொகுத்திருக்கின்றேன்....
இப்போ நண்பர்களுக்கு நன்றி சொல்ல, என்ன வந்ததுன்னு நீங்க கேக்குறது, எனக்கு புரியுது...இனி வலையுலகம் வரமுடியுமான்னு எனக்கு தெரியல, கொஞ்சம் இடைவெளி தேவைப் படுகிறது...இந்த இடைவெளி தற்காலிகம் தானா?...இல்லா நிரந்தர இடைவெளியானு எனக்கு தெரியல, அதனால, முகம் தெரியாமல், எனக்கு பதிவுலக முகவரி தந்த சகோதர நட்புகளுக்கு நன்றிகள் சொல்ல இந்த பதிவை பயன்படுத்திக்கிறேன்...

பதிவுலகம் வந்து கிட்டத் தட்ட ஒன்றை ஆண்டுகள் ஆன போதிலும், நான் முழுதாய் அறியப்பட்டது ஒரு நான்கு மாத காலம் தான்....சகோதரன் கார்த்திக் அவர்கள் உதவியாலே, திரட்டிகளில் பதிவுகளை இணைக்கும் முறையையும், பல பதிவர்களின் பதிவுகளுக்கு சென்று கருத்திடும் முறையையும் அறிந்தேன்...அவருக்கு நன்றிகள் பல......

அடுத்து முதல் பிரிவு நண்பன் ஆனந்துக்கு, என் எல்லா பதிவுக்களுக்கும், கருத்திட்டு என்னை வளர்த்த நண்பன் இவன்...என் எழுத்தில் என்னைவிட இவருக்கு காதல் அதிகம்....அதோடு நான் வலையுலகம் வந்து, கிடைத்த முதல் நட்பும் இதுவே...எவனோ ஒருவனாய் இருந்து,  என் நண்பனான ஆனந்திருக்கும்  நன்றிகள்...

அடுத்த நட்பாக, நண்பர் பிரியமுடன் வசந்த்....என் எண்ணங்களுக்கு புது வடிவம் கொடுத்த, என் பதிவுலக ஆசான்..இவர்..அவருக்கும் நன்றிகள்......நண்பன் சிவா, பதிவுலகில் எனக்கு கிடைத்த மற்றும் ஒரு உண்மை நண்பன்....அவருக்கும் நன்றிகள்....

சகோ கூர்மதியன்.....சண்டையில் ஆரம்பித்த எங்கள் உறவு, சமாதானம் என்னும் வார்த்தை மூலம், சகோதர பாசம் கொண்டு, நயமாய் செல்கிறது..உள்ளக் கருத்தை உள்ளபடியே சொல்லி, என் வளர்ச்சிக்கு வித்திட்ட இவருக்கும் நன்றிகள் பல....

சகோதரன் சௌந்தர்க்கும், ரஜீவனுக்கும், நிரூபனுக்கும், மனோவிற்கும், என் பதிவுக்கு மறுமொழியிட்டு, என்னை ஊக்கப் படுத்திய அனைத்து நண்பர்களுக்கும், நன்றி நன்றி நன்றி ...

பதிவுலகம் அல்லாமல், என் படைப்புக்கு ஊக்கம் கொடுத்த, என் உயிர் நண்பன் குணா விற்கும்,நண்பன் அருணுக்கும், முரசொலிக்கும், சகோதர நண்பன் குமார்க்கும், நன்றி சொல்கிறேன், இந்நேரத்தில்....

 முகமறியாமல்.தோள் கொடுக்கும் தோழமையையும், உயிர் கொடுக்கும் சகோதர உறவையும் தந்த பதிவுலகத்திற்கு நன்றிகள் பல....நன்றி நன்றி நன்றி....

மீண்டும் என்றேனும் சந்திப்போம்.. இடைவெளிக்கு வருந்தி விடை பெறுகின்றேன்....
மீண்டும் உங்களை சந்திப்பேன்....
அன்புடன்
பிரியத் தோழி
ரேவா
reva.believe2011@gmail.com

 

திங்கள், 6 ஜூன், 2011

தூரமாகிப் போனவன்...


*** புன்னகை சிந்தியே,
என் உயிர் பறித்தவன்,
வாழ்வியல் வளர்ச்சிக்கு,
முழு வடிவம் தந்தவன்...
பசாங்கில்லா அன்பை
பருக தந்தவன்...
என் பத்து மாத கருவறைக்கு,
மதிப்பை தந்தவன்..
 தாய்மையின் அன்பினை
அறிய காரணமானவன்...
மனதின் சோகங்களை,
அருகில் இருந்து
களையக் கற்றுத் தந்தவன்...

** இன்று,
என் அன்பின் பிடியில் இருந்து,
விரும்பிப்பிரிகின்றான்....
எவனோ ஒருவனைப் போல
அவன் நகர்ந்தவேளை,
தூரமாக்கியது 
என் அன்பை என்று, 
அன்று
தெரியாமலே போயிற்று....
கண்குளிர அவன் 
கல்யாண கோலத்தை
காண ஆசைப்பட்டு,
இன்று கரைந்து 
கொண்டிருக்கிறேன்,
கானல் நீர் கனவுகளில்...

** நிதர்சன உணமைகளை
தாங்கிக்கொண்டு,
எதிர்கால வாழ்விற்காய்,
நினைவுகளை துரத்தி,
நிஜங்களை கொளுத்தி,
பொய்யாய் சிரிக்க,
காலம் எனக்கு
வாழ்வியல் முறையைக்
கற்றுக்கொடுத்திருக்கிறது....

** ஆனாலும்
சில வேலைகளில்,
பழைய நினைவுகள்,
என் இதயத்தை பிளக்கும் 
வலியை உணர்கின்றேன்.....
பத்து மாதம் சுமந்த
வயிராயிற்றே.....எங்கனம்
மறப்பேன்....
தூரமாகிப் போன
என் மகனை...


அன்புடன்
ரேவா

சனி, 4 ஜூன், 2011

அவளின் சந்தேகத்தால்...


மாலைப் பொழுது லேசாய் அயர்ந்து கொண்டிருக்க, எப்பொழுதும் இந்த நேரத்தில் வந்திருக்கும் கணவன் வராததை நினைத்து வருத்தத்தில் இருந்தால் பவித்ரா..மணி 10 நெருங்கி கொண்டிருக்கையில்  கணவன் மாதவனிடம் இருந்து அழைப்பு வர... தாமதத்தின் காரணம் தெரிந்தவுடன் அமைதியானாள் பவித்ரா..

ஆனாலும் கண்ணுக்குள் தூக்கம் இருப்புக் கொள்ள மறுக்க, ஏதேதோ சிந்தனையில் முழ்கிப் போனாள்..லேசானா தென்றல் காற்று மெதுவாய் அவள் தேகம் நுழைய, விடிந்து விட்டதை உணர்ந்து எழுகையில், கணவன் மாதவன் ஒரு குழந்தையைப் போல் உறங்கிக் கொண்டிருந்தான்... எப்போது உறங்கிப் போனோம், இவர் வந்ததைக் கூட அறியாமல், என தன்னைத் தானே கேட்டுக் கொண்டு சமையல் வேலைகளில் மூ
ழ்கிப் போனாள்..

பவித்ராவுக்கும், மாதவனுக்கும் திருமணம் நடந்து பத்து வருடங்கள் கடந்து விட்டது, இருவருக்கும் குழந்தைப் பேறு இல்லாததை தவிர வேறு எந்த குறையும் இல்லை... மாதவனின் பெற்றோர் இவனை மறுமணத்திருக்கு எவ்வளவோ வற்புறுத்தியும் சம்மதிக்க மறுத்தான்.. அவ்வளவு காதல் பவித்ரா மீது..

பவியும் குறையாத அன்போடு அந்த குடும்பத்தை வலம் வருபவள்..தனக்கு குழந்தை இல்லை என்ற குறையை தன் அன்பான கணவனின் அன்பின் மூலம் போக்கி கொண்டவள்...

மாதவன் எதையும் தொலைநோக்கு பார்வையோடு சிந்திக்கும் ஒரு இளங்கலை பேராசிரியர்...பவித்ரா குடும்பம் அன்றி வேறு யாதும் அறியாதவள்... கண்மூடித் தனமான அன்பு அவள் கணவன் மீது..
சின்ன சின்ன விசயங்களை எல்லாம்  பெரிது படுத்தும் குணம் உடையவள்...பலகீனம் கொண்ட அவள் மனதில், எப்போதும் மாதவன் தனக்கு குழந்தையில்லாததை வைத்து பிரிந்து சென்று விடுவானோ, என்ற பயம்.. அதனாலேயே எப்போதும் மாதவனின் இன்னொரு நிழலாய் அவனைத் தொடர்வாள்

அவ்வப்போது சின்ன சின்ன சண்டைகள் எழுந்தாலும், மாதவன் எதையும் பெரிது படுத்தாது பொறுமை காப்பவன்... அன்றும் அப்படி தான், ஒரு விடுமுறை அன்று,  தன் கல்லூரியை சேர்ந்த இளங்கலை மாணவி, மது ஏதோ பாடம் நிமித்தமாக மாதவன் இல்லம் வர,  வழக்கம் போல் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் மதுவுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை விளக்கி கொண்டிருந்தார் மாதவன்..இதனிடையே தன் வேலையில் இருப்புக் கொல்லாத பவித்ரா அங்கும் இங்குமாய் அலைந்து கொண்டிருந்தாள்... பாடம் நடத்தப் படும் அறையில் இருந்து சிரிப்பு சத்தமும், மதுவின் கிண்டல் பேச்சும் பவித்ராவுக்கு எரிச்சலை உண்டு பண்ண, மாதவன் பாடம் நடத்தும் அறையை நெருங்கிய பவித்ரா, சிறிதும் தாமதிக்காமல் மதுவின் மனதை காயப் படுத்தும் வார்த்தைகளை உதிர்க்க, மதுவின் கண்கள் கலங்கியதை அறிந்த மாதவன் சற்றும் எதிர்பார்க்காமல், பவியின் கன்னத்தில் அறைந்தான், இதை சற்றும் எதிர்பாராத பவித்ரா, இன்னொரு பெண் முன் தன் கணவன் தன்னை அடித்து விட்டான் என்ற காரணத்தால். மதுவை  அவள் வீட்டில் வெளியே விட்டு வீட்டுக்குள் வந்தாள் பவித்ரா...


தன் வகுப்பு மாணவி, முன் தனக்கு நேர்ந்த அவமானம் பற்றி சிறிதும் எண்ணாமல், இது வாடிக்கை தான் என்பது போல் மாதவன் தன் வேலைகளை தொடர்ந்தான், இந்த விசயமே தன் வாழ்க்கையில் பெரிய இடியாய் இறங்கும் என்பதை அறியாமல்...

காலை எப்பொழும் போல் கல்லூரி செல்ல ஆயத்தமாகிகொண்டு இருந்தான். பவித்ரா வீடு வேலைகள் எதவும் செய்யாமல் தன் அறையிலேயே இருந்தாள். பவித்ராவின் குணம் அறிந்த மாதவன் கல்லூரி கிளம்பி செல்ல, தன் கோவத்தின் காரணம் கேட்காமல், தன்னை தனிமையில் விட்டு சென்றதை நினைத்து பவித்ராவுக்கு அதிக கோவம் வந்தது..

அன்றில் இருந்து பவித்ராவின் செயல் முறையில் மாற்றம் தோன்றியது. எப்போதும் கணவனின் கைபேசியிலிருந்து, எல்லாவற்றிலும் சந்தேகம் கொள்ள ஆரம்பித்தாள். தன் சக நண்பனிடம் மாதவன் பேசினாலும் பெண்ணிடம் பேசுவதாய் சண்டை இட்டாள். மாதவன் கல்லூரியில் இருக்கும் பெண் பேராசிரியர்களின் கைபேசிக்கும் தொடர்பு கொண்டு தன் கணவனைப் பற்றி தாறு மாறாக சொல்லி இனி அவரோட தாங்கள் எந்த தொடர்பும் கொள்ளத் தேவை இல்லை, அப்பொழுதே எங்கள் வாழ்க்கை சுகமாய் இருக்கும்  என்பதை போல சொல்லி முடித்தாள்...


அன்றில் இருந்து மாதவனை கல்லூரி வளாகம் ஏதோ விஷ ஜந்துவை பார்ப்பதை போல் பார்த்தனர்.  அவனிடம் சகஜமாய் பழகும் யாரும் அவனிடம் பேசுவதை தவிர்த்தனர்.. முதல் முறை மாதவன் நரகத்தின் இருப்பை அந்த கல்லூரியில் உணர்ந்தான்.. எந்த தீய பழக்கமும் இல்லாத மாதவன் குடிப் பழக்கத்திற்கு  அடிமையாகிப் போனான்... தன் வாழ்க்கையில் சந்தோஷம் வெறும் வார்த்தையாகிப் போனாதாய் உணர்ந்தான்...


இதனால் பவித்ராவிற்க்கும், மாதவனிற்கும்   அன்றாடம் சண்டைகள்... பவித்ராவின் சந்தேகத்தால் அந்த குடும்பம் முழுமையும் நிம்மதி இழந்து தவித்து வருகிறது.. மாதவன் தன் பேராசிரியர்.வேலையை விட்டு மதுக் கடையே கெதியென இருக்கின்றான். பவித்ரா கிடைத்த வாழ்க்கையை சந்தேகத்திற்கு அடகு வைத்து சந்தோஷம் இழந்து தவிக்கின்றாள்...இன்று .குடும்பம் மொத்தமும் சிதைந்து போய் கிடக்கிறது
அவளின் சந்தேகத்தால்..

நண்பர்களே இது கதை தான்.....ஆனால் இந்த கதைக்குள் இருக்கும் நிதர்சன உண்மையை பெரும்பாலான பலர் சந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்...ஆம் சந்தேகம் மனித குலத்தை அழிக்க வந்த ஒட்டுண்ணி.... உள்ளுக்குள்ளே இருந்து உயிர் அறுக்கும் ஒரு  கொடுமையான வலி...

 
1)  பவித்ராவை போன்ற பல பெண்கள் நம்மில் இருக்க தான் செய்கின்றனர்,  கண்மூடித் தனமான அன்பும் அதன் விளைவாய் வந்த சந்தேகமும் அவள் வாழ்வை புரட்டி போட்டது உண்மைதானே....

2) தன் கணவன் தனக்கு மட்டும் தான் என்று நினைக்க, மனித உயிர் ஒன்றும் பூட்டி வைக்கும் சொத்துப் பத்திரம் இல்லை...கொடுக்கும் அன்பை நிலையாய்க் கொடுத்தால், தனக்கான ஒன்று தன்னிடமே இருக்கும் என்பது உணமைதானே...

3 ) ஒருவர் மீது நாம் வைக்கும் அன்பு என்பது, காற்றை போல இருக்கவேண்டும்... கடிவாளம் இட்டால், புயாலாய் மாறி சேதப்படுத்துவது நிச்சயம்...உண்மையான அன்பிற்கு உண்மைகள் தெரியும்...அன்பு உணர்தலில் இருக்கிறதே அன்றி புரியவைத்தலில் அல்ல...

4 ) தன் வாழ்க்கை பறிபோவதாய் நினைத்து பவித்ரா கொடுத்த சந்தேக அழுத்தம், அவர்களின் அன்பின் ஆழத்தை குழைத்தது உண்மை தானே...


5 ) வாழ்கையில் எந்த உறவுக்குள்ளும்  சந்தேகம் இருக்க கூடாது... இருந்தால் மனம் விட்டு பேசுங்கள்... அன்பு காட்டுங்கள்... எங்கு தனக்கான அன்பு குறைகிறது என்ற எண்ணம் வளர்கிறதோ,அங்கு வாழ்வை தரிசாக்கும் சந்தேகக்
களையும் வளரத் தான் செய்யும்.

6 ) பிடித்தமானவர்களிடம் எப்பொழுதும் பிடித்தம் வையுங்கள்...எதை உங்களால் கடைசி வரை பின்பற்ற முடிகிறதோ அதை மட்டுமே உங்கள்  பிரியமானவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்...

அழகான நம் குடும்பம் பாலாய்ப் போன சந்தேகத்தால் பாழாகலாமா.... 

7 ) உறவுக்குள் சந்தேகம் தோன்றின் மனது விட்டு பேசுங்கள்...உண்மை நிலையை உங்கள் உறவுக்கு புரியவையுங்கள்.... புரிதலில் தானே வாழ்க்கை இனிக்கும்...எனவே  சந்தேகம் ஆட்சி செய்யும் எண்ணங்களை  களை எடுப்போம்.. சந்தோஷ விதை விதைத்து, குடும்ப அமைப்பை செழிப்பாக்கி அழகான வாழ்க்கை வாழ்வோம்

இங்கு பலர் கிடைத்த வாழ்வை, பயன்படுத்த தெரியாமல், தானும் கெட்டு, தன்னை சேர்ந்தோரையும்,நிம்மதி இல்லாமல், சந்தேகத்தால் வதைத்து, நரக வாழ்க்கை வாழ்கின்றனர்...ஏன் இந்த கோவம், எதற்கு இந்த சந்தேகம்...இருக்கும் ஒற்றை வாழ்வில், அன்பாய் இருந்து, அன்போடு செல்வோம்....
இயன்ற வரையில், இணைந்திடுவோம்.....வணக்கங்களுடன் ரேவா....