உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 31 டிசம்பர், 2010

வருக புத்தாண்டே !!!!!

***********
 
*********
* பிறக்கும் புத்தாண்டில்,
எல்லோர் மனதிலும்
மகிழ்ச்சி நிலவட்டும்....

*னவுகள், லட்சியம்,
ஆசை, எதிர்பார்ப்பு,
ஏக்கம்,  என
நம் எல்லோர் மனதிலும்
நிறைவேறாமல்
நிறைந்து கிடக்கும் எண்ணங்கள்
யாவும் வெற்றி என்னும்
ஒற்றை மந்திரத்தில்  உயிர்பெறட்டும்...

* நாணயத்தின் இரு பக்கம் போல்
வெற்றியும் , தோல்வியும்
நம் வாழ்வில் நிறைந்திருக்க..
நாணயமானோரே இங்கு நலமுடன்
வளர்வார் என்பதை  நல்லோர் மனம்
புரிந்துகொள்ளட்டும்...

 * திட்டமிடலும்,
திரும்பிப் பார்ப்பதும்
நம் வாழ்வின் வளர்சிக்கு உதவும்..
சமாதானம் என்னும் சொல்லின் மூலம்
அன்பு நிலவும்.மனதில் அமைதி தழுவும் ..
முடிந்தவரை உன் எதிரிக்கும்...
உன் அன்பை பரிசளி...
கடந்து செல்கின்ற வருடத்தில்
நாம் விதைத்த விசயத்தின்
விதையை எடுத்து இந்த
புது வருடத்தில்
புதிய மனிதானாய்
பயணிப்போம்....

ம் புதிய மனிதனாய்
பயணிப்போம்......அதற்கு
இலக்கை நோக்கி பறந்து செல்வோம்
தடைகள் வந்தால் தாண்டிச் செல்வோம்...
அன்பை வைத்து உலகை அளந்துப் பார்ப்போம்...
அனுமதித்தால் அதற்கும் ஓர் அளவு வைப்போம் ..
 பிறந்த பிள்ளை போல்
நேசம் கொள்வோம்...
நேசம் கொள்ளும்,
தூரோகம் மறப்போம்...
அச்சம் தவிர்ப்போம்...
ஆணவம் களைவோம்...
விழுந்தாலும் வீரியம் மிக்க விதையாய் எழுவோம்..

ண்பா!!!

* முடியாத "இலக்கு"  என்று எதுவும் இல்லை
முடிந்தால் இமயம் கூட தூரம் இல்லை..
தோல்வியில் துவண்டாலும்,
தோற்றிடாத உன் நம்பிக்கை கொண்டு
புதிய பாதை செய்...
தோல்வி என்பது தோற்றதில் இல்லை...
தோற்ற ஒன்றின் தோற்றத்தில்
இருந்து தெளிந்த பின்னும்
தொடராமல் இருப்பது
என்பதை புரிந்து  
பயணிப்போம் இந்த இனிய புத்தாண்டில்...

என் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வளங்கள் யாவும் உங்கள் வீட்டில் குடிபுகவும் , மாற்றம் தரும்  ஏற்றத்திற்காய் காத்திருக்கும் உள்ளங்களுக்கும்.... வேண்டியவை வேண்டியபடியே கிட்ட ... எல்லாம் வல்ல அன்பெனும் ஆண்டவன் துணை கொண்டு  வேண்டுகிறேன்....  

அன்புடன்
ரேவா

திங்கள், 27 டிசம்பர், 2010

வாழ்க்கை வசப்பட....
வாரமலர் இதழில் வெளியானது.... நண்பர்களின் பார்வைக்காய் என் தளத்தில் பதிவு செய்துள்ளேன்... நன்றி தினமலர்....

வாழ்க்கை வசப்பட.... 

* அழுத்தமாக கை குலுக்குங்கள்...
* கண்களை நேராக பார்த்துப் பேசுங்கள்...
* இயல்பாக, இதமாகப் புன்னகையுங்கள்..
* அறிமுகமானவர்கள் எதிர்ப்படும் போது, "வணக்கம்" சொல்வதில் முந்திக் கொள்ளுங்கள்..
* உங்கள் பலங்களை  பலப்படுத்துங்கள்...
* உங்கள் பலவீனங்களை பலவீனப்படுதுங்கள்...
* நெஞ்சார நன்றி சொல்லுங்கள்...
* இயற்கையை ரசிக்க நேரம் ஒதுக்குங்கள்..

* எப்போதும் துணையிருக்கும் நண்பர்களுக்கு,
எப்போதும் வழிகாட்டும் எழுத்துக்களுக்கு,
எப்போதும் சிரிக்கும் பூக்களுக்கு,
எப்போதும் கைவிடாத நம்பிக்கைக்கு,
நன்றி சொல்லுங்கள்....

* சோர்வாக இருக்கிறதா:

* அமைதியான இடத்திற்கு செல்லுங்கள்...
* உங்கள் பலன்களை எழுதுங்கள்...
* மாற்று வழிகளைச் சிந்தியுங்கள்..
* தியானம் செய்யுங்கள்...

சோதனை சூறாவளியில்: 

* அச்சம் தான் நம் எதிரி - அச்சத்தை உதறுங்கள்.
* உடனடியாய் என்னை செய்ய? உள்ளுணர்வைக் கேளுங்கள்.
* அடுத்தடுத்துப் போராட ஆயத்தம் ஆகுங்கள்...
* போனதெல்லாம் போகட்டும்.... புதிதாக தொடங்குங்கள்..

வாழ்க்கை வசப்பட:
* பகைவர்கள் மிக நல்ல நண்பர்களாய் மாறலாம்..
* பழைய தோல்விகளின் பாரங்கள் நீங்கலாம்.
* எத்தனை இழந்தாலும் இழந்த பொருளை மீட்கலாம்.
* என்றைக்கு இருந்தாலும் எண்ணியதை எட்டலாம்..
* பதறாத மனம்தான் புதுமைகள் நினைக்கும்..
* புதுமைகள் செய்தால் செயல்கள் சிறக்கும்.
* செயல்கள் சிறந்தால் சாதனை பிறக்கும்.
* சாதனை பிறந்தால் வாழ்க்கை இனிக்கும்..
 

* புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்...
* பழைய நண்பர்களைக் கொண்டாடுங்கள்...
* இரவல் வந்குபவற்றைத் திருப்பி கொடுங்கள்..
* நாளொன்றுக்கு மூன்று பேரையாவது பாராட்டுங்கள்..

நிரந்திரமான மகிழ்ச்சி :

* துணிவான முடிவுகளில் இருக்கிறது .
* பணிவான வார்த்தைகளில் இருக்கிறது...
* கனிவான அணுகுமுறையில் இருக்கிறது..
* பரிவான உதவிகளில் இருக்கிறது...
* தோல்வி வந்தால் பொறுமை அவசியம்..
* வெற்றி வந்தால் பணிவு அவசியம்..
* எதிர்ப்பு வந்ததால் துணிவு அவசியம்...
* எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்...
* கவனக்குறவை உணர்த்தும் தோல்விகளுக்கு,
* திருத்தத் தூண்டிய தவறுகளுக்கு, 
* வைராக்கியம் வளர்த்த அவமானங்களுக்கு,
* பாராட்டும்படி வளரச் செய்த பரிகாசங்களுக்கு 
நன்றி சொல்லுங்கள்...
* ஆற்றல் சிதறாமல் திரட்டிக் கொள்ளுங்கள்.
* அடிப்படை சரியாமல் நிறுத்திக் கொள்ளுங்கள்..
* மாற்று ஏற்பாட்டை வகுத்துக் கொள்ளுங்கள்...
* மறுபடி  எழுவோம் என் உறுதி கொள்ளுங்கள்..
* உங்கள் விருப்பத்திற்கு வாழ்க்கையை வளைக்கலாம்.
* உங்கள் கனவுகளை உண்மையென ஆக்கலாம்.
* உங்கள் உறுதியினால் சிரமங்களைக் கடக்கலாம்.
* உங்கள் எல்லைகளை நீங்களே உடைக்கலாம்..  

நிரந்திரமான மகிழ்ச்சி :

* கனவுகளை வரையறுப்பதில் இருக்கிறது..
*லட்சியத்தை செயல்படுத்துவதில் இருக்கிறது.
* இழப்புகளை ஈடுகட்டுவதில் இருக்கிறது  * கணிசமாக சேமிப்பதில் இருக்கிறது.

 வாழ்க்கை வசப்பட:

* வழிதேடி வளர்ந்தவர்தான்  வழிகாட்ட முடியும்.
* பதில் தேடி அடைந்த்தவர்தான் பதில் சொல்ல முடியும்.
* தடுமாறி எழுந்தவர்தான் துணையாக முடியும்.
* முதல் தோல்வி பார்த்தவர்தான் முன்னேற முடியும்..
* எத்தனை முயன்றாலும், முயற்சிகள் போதாது!!!
* எத்ததனை  பயின்றாலும், பயிற்சிகள் போதாது!!!!
* எத்தனை வளர்ந்தாலும், வளர்சிகள் போதாது!!!!

நன்றி 
தினமலர் (வாரமலர்) நாளிதழ்...

அன்புடன் 
ரேவா

வெள்ளி, 24 டிசம்பர், 2010

இந்த காதலால்?!............காலம் மறந்தேன்!.....
காட்சிகள் மறந்தேன்!.....
சுழலும் பூமி
சுத்தமாய் மறந்தேன்!.....
உறக்கம் மறந்தேன்!.....
உள்ளுற இருக்கும்
உள்ளத்து உணர்வுகள்
உன்னிடம் உரைக்க மறந்தேன்

இந்த காதலால்?!............

அன்புடன் 
ரேவா

வியாழன், 23 டிசம்பர், 2010

சுகம்...

.

* உன் விரல் பிடிக்கையில் தான் 
என் தந்தையின் சுகம்
உணர்கின்றேன்..

* தந்தையாய் என் (அன்பு) சுமை
என்னவென்று 
அறிகின்றேன்....

* மாற்றங்கள் வாழ்க்கையில் 
மாறாமல் இருக்க..
நான் வாழ்வில் அடைந்த 
மாற்றமே "  நீ
அன்று " பிள்ளையாய் "
இன்று " தந்தையாய் "

அன்புடன்
ரேவா 

செவ்வாய், 21 டிசம்பர், 2010

கொஞ்சம் கொடுக்கலாமே!!!!!


ள்ளி உன் வெட்கத்தையா 
கேட்டேன் ...
ன் வெட்கத்தின் பின்னால்
னக்காய் நீ ஒளித்து
வைத்திருக்கும் என் முத்தத்தை
தான் 
கொஞ்சம் கொடுக்கலாமே!!!!!

அன்புடன் 
ரேவா

திங்கள், 20 டிசம்பர், 2010

காதல் சான்றி(இ)தழ்....

காதல் ஒப்புதலுக்கு
நீ கொடுத்த சான்றிதழோ ??? 
ன்  இதழ் முத்தம்.... 
அன்புடன் 
ரேவா

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

பிரியமானவன்* விழிப் பார்வையில், 
ன் மொழி ஆள்பவன்....
* மொழிப் போரிலோ,
மௌனம் காப்பவன்... 
* மௌனம் காத்தே,
ன் உயிர் குடிப்பவன்.... 
* யிர் குடிக்கவோ,
என் உள்ளம் கேட்பவன்....
* உள்ளம் கொடுத்தால் 
உள் நின்று எனை ஆள்பவன் 
என்
***பிரியமானவன்***

அன்புடன் 
ரேவா

வெள்ளி, 17 டிசம்பர், 2010

இனியும் வரப்போவதில்லை....னியவனே!!!!!
உன் முதல் பார்வை என்னுள்
காதலை விதைக்க.,
காத்திருந்தவன் போல் நீயும் 
உன் காதலைச் சொல்ல.,
தொடக்கம் எங்கென்று  தெரியாமல்
தொடங்கிய நம் காதல் காலம்
இனியும் வரப்போவதில்லை...

* ன் கண்ணில் விழுந்து,
என் கருத்தை கவர்ந்த 
என் அன்பு காதலி நீ  தான்  என்று
சொல்லிச் சொல்லி என் கவனம்
ஈர்த்த என் காதலனே!!!!!


* பொய்மைக்கும் மெய்மைக்கும்
இடைப்பற்ற ஒன்றை உருவாக்கி
என் நம்பிக்கைக்கு உரித்தாகி
என் உயிர் கலந்த என் காதல் நீ
தான் என்று  ஊருக்கு
உரக்க சொன்ன காலம்
இனியும் வரப் போவதிலை.....

*ன் பாதி நீ என்றும்
என் பதி நீ என்றும் கர்வமாய்
உன் கரம் பற்றி நான்
வலம் வந்த நாட்கள்
இனியும் வரப்போவதில்லை....

*றக்கம் மறந்து,
உண்மை மறந்து
உன்னையே என் உயிராக
உருகி உருகி நான் உயிர் தவித்த பொழுதுகள்
இனியும் வரப்போவதில்லை...

* சிறு சிறு தவறுகளாலும், அர்த்தமற்ற
உன் சந்தேகங்களாலும், சரிவை நோக்கிய
நம் காதலை சமாதானத்தின் முலம்
சாந்தி படுத்திய காலம்
இனியும் வரப்போவதில்லை... 

* டலின் பின் நீ அர்த்தப்படுத்தும்
நியாங்கள் தவறென்று தெரிந்தாலும்
உன் புன்னைகைக்காய் தவறை மறந்து
புலம் பெயரும் அகதியாய்
நான் என்னை மாற்றிய வேலைகள்
இனியும் வரப்போவதில்லை....

* ங்கோ தொடங்கிய நம்
காதல் அர்த்தமற்ற காரணங்களால்  
காயம் காண, எனை விட்டு செல்
என்று சொல்லியும் விலகாது நிற்கும்  
என் காதலை நீ உணர்ந்து
கொள்ளும் காலம்
இனியும் வரப்போவதில்லை....

*ம் ஏதோதோ காரணங்களுக்காய்
காதல் கொள்ளும் காலத்தில்
உன்னையே உயிராய் நினைத்து
உன் உணர்வுகளுக்காய் என் உணர்வை
புதைத்து நான் வாழ்ந்த பொய்
காலம் இனியும்
திரும்பி வரப்போவதில்லை....

* காதலுக்கு அன்பின் பெயரால்
பலர் பல அர்த்தம் புகட்ட
என்னோடான உன் காதலுக்கு
என்னை நிராகரித்தத்தின் வழியே
புது அர்த்தம் தந்த
இனியவனே....
உன்னோட இனிக்கும் அந்த
காலங்கள்  
இனியும் வரப்போவதில்லை....

 னியவனே!!!!!
உன் முதல் பார்வை என்னுள்
காதலை விதைக்க.,
காத்திருந்தவன் போல் நீயும் 
உன் காதலைச் சொல்ல.,
தொடக்கம் எங்கென்று  தெரியாமல்
தொடங்கிய நம் காதல் காலம்
இனியும் வரப்போவதில்லை...

அன்புடன்
ரேவா

சனி, 4 டிசம்பர், 2010

உயிரற்ற என் கவிதை!!!!

என்னுள் கருவாகி
என் எழுத்தின் உயிராகி
என்னுள் கலந்த என் இதயமே
உனக்காய் உருவாக்கப்பட்ட
என் கவிதை உன் பார்வைக்கு 
வராமலே சிதைக்கு இரையாய்
போனதால் இதுவும் 
 ஓர் உயிரற்ற கவியே!!!.
******
வெகுநாட்களாய் எனக்கோர் ஆசை 
என்னை எழுதவைத்து எனக்குள் 
என்னை ஆட்டிவைக்கும் என்னவன் 
என் கவியை படிக்கவேண்டும்....
 அது வரை 
இதுவும்  ஓர் உயிரற்ற கவியே!!!!
 ************
நிதர்சனங்களை நீக்க 
தெரிந்தவன் நீ என்பது எனக்கு 
தெரியும்... அதனாலே உன்னால் 
புறந்தள்ளப்படும்
என் கவிதையும் கூட 
**உயிரற்ற ஓர் கவிதையே...** 

அன்புடன் 
ரேவா

வெள்ளி, 3 டிசம்பர், 2010

அன்பென்பது யாதெனில்


* அண்டம் என்னும்
அகண்ட வெளியில்
அனுமானங்களை சில நேரங்களில்
கடந்து விடுகிறது இந்த அன்பு...

* படிப்பினைக்கும் பல நேரங்களில் 
பாடம் கற்பிக்கின்றது  இந்த அன்பு...

* தோற்றவனையும் வெற்றிபெற 
வைக்கிறது இந்த அன்பு...

*  இருக்கின்ற ஒன்றை இல்லாமல் 
ஆக்கவும், இல்லாத ஒன்றை
உருவாக்கவும் பிறந்தது  தான் இந்த அன்பு...

* அழுகின்ற கண்ணில் விழுகின்ற
நீரை துடைத்து விடும் கைகள் தான் இந்த அன்பு...

* மாற்றம் என்பது
மாறாதிருக்க மனிதனின் மனிதம்
காக்க உதவுவது தான் இந்த அன்பு...

* அடையாளமற்று அழிகின்ற
உயிரை ஆட்சிசெய்வது தான்  அன்பு...

* இருளின் வழியில் வாழ்கின்ற
உயிரை உனக்காய் நான் இருக்கிறேன்
என்று ஒன்றை சொல்லில் உயிர்பிக்க
செய்யும்  கனிவு தான் இந்த அன்பு...

* முகவரிகள் தெரியாமால்.
முன்னுரை எழுதும் பல உறவிற்கு
ஆணிவேர் தான் இந்த அன்பு...

* அழுகின்ற குழந்தைக்கு
தருகின்ற இனிப்பு தான் இந்த அன்பு...

* தொலைதூர உறவையும்,
தொடுகின்ற உணர்வு தான் இந்த அன்பு...

* கோபத்தில் புதையுண்ட மனதையும்,
தனிமையின் தணலில்  தக்கிக்கும் மனதையும்,
அமைதி படுத்துவது தான் இந்த அன்பு....


* வரமேன்பது சில நேரங்களில்
சாபமாய் போக, வருகின்ற பிறர்
துயர்க்காய் வருந்தி துடிப்பது
தான் இந்த அன்பு...

* சொல்ல முடியா வேலைகளிலும்
சொல்லி அழும் காலங்களிலும்
அன்னை மடியாய்
ஆறுதல் தருவது தான் இந்த  அன்பு...

* காதல் என்னும் மாயையில்
மடிந்து போகும் மனதிற்கு
நட்பின் ஆறுதல் மருந்தாய்
இருப்பது தான் இந்த அன்பு...

* வலியவனும், எளியவனும்,
அவனவனாய் வாழ்வதற்கு காரணமாய் விளங்கும்
ஆதாரப் பொருள் தான்  இந்த அன்பு...

* வாழ்கை வருகின்ற வரைக்கும்...
முடிகின்றவரைக்கும் நம்மை
பலவாறு வடிவமைக்கும் கலை தான் இந்த அன்பு...

* அன்பு!!!!
அன்பு  இதை உச்சரித்து உணர்ந்தவன்
மனிதனாவான்...
அன்பு இதை எச்சரித்து அறிந்தவன்  
ஞாநியாவான்.....

 * இறுதியாய்,
மனிதனை மனிதனாக்குவதும்
மனிதனை மனத்தால் இறைவனாக்குவதும்
இந்த அன்பு...

* அண்டம் என்னும்
அகண்ட வெளியில்
அனுமானங்களை சில நேரங்களில்
கடந்து விடுகிறது அன்பு...

அன்புடன் 
ரேவாதிங்கள், 29 நவம்பர், 2010

தவறா மைந்தா


*மாதம் பத்துதனில் அன்னையவள்
உயிர்கொண்டு,
அன்பாய் உனைசுமக்க,
பூமித்தாயாகிய நான்
என்னுள் உருப்பெறும்
எல்லா உயிர்களையும் ஒரு சேர சுமந்தேன்..
சுமையை சுகமாய் உணர்ந்தேன்...
*எல்லா உயிரும் தனக்கென்று 
ஓர் நெறிகொண்டு வாழ 
மனிதா நீ 
மட்டும் மனிதம் மறந்து 
மனிதன் பெயரில் உலவும் 
மிருகமாய் ஏன்
மாறிப்போனாய்????
சொல்....


நீ
* மதம் என்ற பெயரால்
மனிதம் தொலைத்தாய் ....

* ஜாதியின் பெயரால்
ஜனநாயகம் அழித்தாய்...

* கல்வியின் பெயரால்,
பகல் கொள்ளை செய்தாய்...

* அரசியல் என்னும் பெருங்கடலில்,
அலைவரிசையின் பெயரால்...
சாமானியர் வாழ்வாதாரத்தை 
வதைத்தாய்...


 * காதல் என்ற பெயரில்,
கடற்க்கரை மணலில், 
கண்ணியம் மறந்து கலவி கொண்டாய்...


* விளை நிலங்களையும், 
காடுகளையும் அளித்து,  வீடுகளாக்கி 
என் கருப்பையை மலடாக்கி
உன் பணப்பையை நிறைத்தாய்...* பொது இடத்தில்
உன் சுய ஒழுக்கம் மறந்தாய்..
பாலிதீன் பைகளால் 
என் சுவாசத்தை நெரித்தாய்...

* உனக்காய் நான் பொறுத்திருந்தால்
உன் இனத்தை நீயே 
அழித்துன்னும் நிலை வரும் 
என்று உணர்ந்தே 
நானே அழித்தேன் என் பிள்ளைகளை ...

 * ஆம்
பொங்கி எழுதேன் 
ஒரு பக்கம் பூகம்பமாய்...
ஒரு பக்கம் ஆழிப்பேரலையாய்,
ஒரு பக்கம் எரிமலைசீற்றமாய்...
ஒரு பக்கம் காட்டுத்தீயாய்...
ஒரு பக்கம் நோய்களின் துணையால்
விலாசமின்றி, வித்தியாசமின்றி 
அனைவரையும் அழித்தேன்...

மைந்தா!!!
உன்னை சுமந்த போது
கூட எனக்கு வலிக்கவில்லை,
சுமையை இறக்கிய போது 
தான் வலித்தது....


நீங்கள் செய்தது 
எல்லாம் சரிஎன்றால்
நான் செய்தது 
தவறா மைந்தா...
சொல் 
தவறா மைந்தா ...?


அன்புடன்
ரேவா

ஞாயிறு, 28 நவம்பர், 2010

உன்னை பார்க்காமல் இருந்திருந்தால்.....


*அன்பே
உன்னை பார்க்காமல் இருந்திருந்தால்,
எனக்கு, 

*சுற்றும் இந்த உலகம்
 சுயமாய் தெரிந்திருக்கும்....

* நீளும் இரவுகள்
  நிமிடத்தில் முடிந்திருக்கும்...

* நிசப்தமும்  உன்
  நினைவின்றி நிம்மதியாய்
  கழிந்திருக்கும்....

* தனிமையின் பொழுதுகள்
  தடையற்று சென்றிருக்கும்..

* காதலின் பெயரில்  என் இதயம்
காயம் படாமல் இருந்திருக்கும்...

* உன்னால் பற்றி எரியும்
  என் காதல், உன்னை பற்றி
  யோசிக்காமலே நகர்ந்திருக்கும்...

* தாயிடம் புன்னகை சிந்தி,
  தலையணையில் கண்ணீர் சிந்தும்
  களவு வாழ்க்கை இல்லாமல் இருந்திருக்கும்..

* உன் கடிதங்கள் விலாசமின்றி
   என் வீட்டு முகவரி தேடி வரும்
  காலம் இல்லாமல் போயிருக்கும்...

* என் அரைசாண் இதயத்தில்
உன்னை பற்றிய ஆயிரம் கனவுகள்,
கவிதைகாளாய்  உருபெறாமல் மறைந்திருக்கும்..

* உன்னையே சிந்தித்து
  சிதைந்து போகும் காலம் இல்லாமல்
  இருந்திருக்கும்....

* ஒற்றை பார்வையில் களவு போகும்
   கலை அறியாமல் இருந்திருக்கும்...

* உயிர் குடிக்க என் உணர்வுகள்
குடித்த காதலனே!!!!!!
உன்னை பார்க்காமலே
இருந்திருந்தால்,
நீ நடத்திய நாடகத்தில்,
சாட்சியம் அற்று,
ஓர் அகதியாய்
தலையணையில் அடக்கலம்
புகும் என் கண்ணீரின் காரணம்
நான் அறியாமலே இருந்திருப்பேன்... 

** எதிர்பாராவிதத்தில் 
எதிர்பாரா கணத்தில் 
என்னுள் நுழைந்து,
என்னை ஆளும்
என் காதலே!!!!
உன்னால் சுயம் மறந்து போன
இவள் உன்னை பார்க்காமலே 
இருந்திருந்தால்....
 உருவம் தந்து,
உயிர் தந்த என் பெற்றோரிடம் 
நட்பு பாராட்டும்,
நண்பனிடம் ..
எனக்காய் உருகும்
என் உடன் பிறப்புகளிடம்,
என் உயர்வுக்காய் உருகும்
உறவுகளிடம்,
என எல்லோரிடமும்
நான் நானாய் இருந்திருப்பேன்....அன்புடன் 
ரேவா
புதன், 24 நவம்பர், 2010

நீ எங்கிருந்து வந்தாய்....?**தோழனே!!!
வர்ணங்கள் நிறைந்த
வானவில்லது, 
வான்மழை வரும் 
நேரத்தில் வருவது போல்,
என் இதயவானத்தில் வர்ணம்
தரும் வானவில்லாய்
நீ எங்கிருந்து வந்தாய்....?

** கண்ணுக்கு புலப்படும்
மாயைகள் எல்லாம்
கானல் என்று 
காலங்கள் உரைக்க,
என் கண்ணில் அகப்பட்டு
மாயங்கள் புரியும்
தூயவனே,
 நீ எங்கிருந்து வந்தாய்....?

நீ மட்டும் தான்


                     *** அன்பே!!!!* என்னை அடிக்காமல்
அழவைப்பது
நீ மட்டும் தான்...

* என்னை காயப்படுத்தாமல்
வலிகள் தருவதும்
நீ மட்டும் தான்....

* என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவதும்
நீ மட்டும் தான்....

* என்னை சிதைக்காமல்
சித்திரவதை செய்வதும்
நீ மட்டும் தான்....

* நான் வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும் என்னோடும்
என் நினைவோடும்
நிலைத்திருப்பதும்
நீ மட்டும் தான்

ஆம்
நீ மட்டும் தான்
நீ மட்டும் தான்
நீ மட்டும் தான்

அன்புடன்
ரேவா

திங்கள், 22 நவம்பர், 2010

வாழ்க்கைக்களம்

 தோழனே!!!!
வாக்குறுதிகளை அள்ளி வீசும்
வேட்பாளனாய்
என் வாழ்க்கை களத்தில்  ....நீ....

உன்னால் என் வாழ்வில்

விடியல் வரும் எனக்  காத்திருக்கும்  
சராசரி குடிமகளாய் ...நான்...

வாக்குறுதிகள் எல்லாம்

கானல் காலங்கள் என்று
என் கருத்துக்கு ஏன்
எட்டவில்லை தோழா....  


அன்புடன் 
ரேவா

வலி

REVA KAVITHAIKAL
காதலே!!!!
உன் பாதையோடே
என் பயணம்
என்று நினைத்திருந்தேன்...
ஆனால்,
விதி என்னும்  
வில்லன் என் வழி வந்து
உனக்கும் எனக்குமான
பயணத்தை முடிப்பானென்று
கனவிலும் அறியேன்...
விதி வலியது ,
நீ கொடுத்த வலி
அதனினும் கொடியது...

அன்புடன்

ரேவா

ஞாயிறு, 7 நவம்பர், 2010

தமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help

நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்”  அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக  நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது  மிக பெரிய பெருமை.  இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில்  அதிபரோ இல்லை.  'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை.   சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட  முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!
யார் இந்த கிருஷ்ணன்...?!!
சமையல்கலை படிப்பு படித்து தங்க பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில்  வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை  யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்கான சன்மானம், அந்த முதியவரின்  பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின்  கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது! இந்த மாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக  உதவணும் என்று இவர் முடிவு செய்த போது  இவரது வயது வெறும்  21    
இப்போது 29 வயதாகும் கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... !! இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொல்லி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......!!   

இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது! 
சி.என்.என். தேர்வு பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.....!

கிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது 
 இவருக்கு எப்படி நாம் ஓட்டு போடுவது என்று பார்ப்போம். இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். http://heroes.cnn.com/vote.aspx 

  • இதில் நான் கட்டம் போட்டு காட்டி இருப்பது தான் நம்மாளு அவர் படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள். 
  • உடனே அவருடைய படம் கீழே இருக்கும் காலி கட்டத்தில் வந்திருக்கும்.
  • அடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்புங்கள். 
  • அடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்கு உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.
  • முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும். 
  • பதிவர்கள் நினைத்தால் இதை அனைவருக்கும் எளிதாக கொண்டு செல்ல முடியும். பதிவர்களே தமிழனுக்காக ஒரு பதிவை போடுங்கள்.
வந்தேமாதரம் தளத்தில் இந்த   பதிவை பார்த்து இந்த பதிவை போட எண்ணம் எனக்கு தோன்றியது. அது போல் உங்களுக்கு பதிவு போட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால் உடனே போடவும். தாமதிக்க வேண்டாம். கடைசி தேதி நவம்பர் 18 வரை மட்டுமே.
 
அன்புடன் 
ரேவா

சனி, 30 அக்டோபர், 2010

ஊன்றுகோலாய் நீ  வீழ்வதும், வாழ்வதும்,
அவரவர்  விதி என்றால்,,,
வீழ்ந்த நான் எழுவது
உன் மொழியாலே....

  தோல்வி என்பது,
என்  எழுத்தாய்  என் கவியில் இருக்க...
தோற்றது நான் என்று பலர்
எள்ளி நகைக்க...
இதுவே உன் வெற்றி என்று
எனக்கு உத்வேகம்  தந்தது
நீ .

ஆண்மையின் பலத்தால்
பலர் ஆயிரம் விதைக்க,
ஒற்றை கவியில் நான்
என்னை விதைக்க,
தோல்வி என்பது தோற்பதில்
இல்லை,
தோற்ற ஒன்றின்
தோற்றத்தில் இருந்து தொடர்வது,
தொடர்ந்த ஒன்றின் அனுபவத்தில்
இருந்து அமைவது என்று எனக்கு
புரியவைத்தவன் நீ...

  உணர்வுகள் என்பது பொதுவென்றிருக்க,
உணர்த்திடும்  நெஞ்சம் உணரட்டும்
என் மொழியை...
உரைத்திடும் நெஞ்சம்
ஒதுங்கி நிற்கட்டும்....
 என்று என் கவிக்கு உணர்ச்சி தந்த 
என் நட்பின் கவிதை இலக்கணமே ..
நீ,

என் வடிவங்கள் எல்லாம்
காலம் தந்த மாற்றம்,
என் மாற்றம் எல்லாம்
என் நட்பு நீ தந்த தோற்றம்...

என் கவிக்கு மறுவடிவம்
தந்த என் மாற்றுத் தாயே ....
என் கவிதையின் ரசிகன் நீ...
என் கவிதையின் காட்சிக்கு கலங்கரை விளக்கம் நீ....
என் கானல் கவிதையின் தூண்டுகோல் நீ...
என்னை தாங்கி பிடிக்கும் ஊன்றுகோல் நீ...
உத்வேகம் தரும் புது இலக்கணம் நீ...
ஆம் பலர் அர்த்தத்தில் அகப்படாத இலக்கண மீறல் நீ!!!

தோழனே!!!!!

வீழ்வதும், வாழ்வதும்,
அவரவர்  விதி என்றால்,,,
வீழ்ந்த நான் எழுவது
உன் மொழியாலே...
ஆம்
அன்பு கொண்ட உன் மொழியாலே....

அன்புடன்
ரேவா

வியாழன், 30 செப்டம்பர், 2010

எங்கே சென்றாய் நீ?* காதலே!
உன்னை நேசிக்க வேண்டி,
நீ,
வந்து வந்து காதல்
பேசிய காலங்கள்...

* பொய்யை கூட
மெய்யாய் நம்பும் படி
சொன்ன வேலைகள்...

* வண்டி வண்டியாய் 
நலம் விசாரித்து,
அக்கறை காட்டிய தருணங்கள்...

* உன் பெயரோடு  என் பெயரையும்
சேர்த்து நீ உச்சரித்த பொழுதுகள்...

* என் சிரிப்பிற்காய்  நீ
சேஷ்டை செய்த நிமிடங்கள்...

* என அள்ள அள்ளக் குறியாத
உன் நினைவுகள் என்னை
வதைக்க...

* உன் காதலை உணர்ந்தவளாய்
என் காதலை உன்னிடம் சொல்லவரும்
போது என்னை விட்டு 
எங்கே சென்றாய் நீ?

* உனக்கொரு துயர் என்றால்
என் உயிர் கொண்டு துடைப்பேன்
என்று சொல்லி, என்னை தூரமாக்கி
எங்கே சென்றாய்?...

* உன் அக்கறை, நலம் விசாரிப்புகள்
விலாசமின்றி தொலைந்து போனதை
போல்..நீயும்
எனைவிடுத்து எங்கே சென்றாய்?...

* என்னை விட்டு நீ சென்றாலும்,
உன் அன்பை விட்டுகொடுக்காதவளாய்,
உன் நினைவை விடாது தொடர்பவளாய்,
உணர்வுகளை உணர்தலும்,
உனக்காய் உருகுவதும்,
உனையே உயிராய் நினைத்தலும்,
என என் காதல்,
என்னுள் ஆழமாய் தொடர,
****நீ மட்டும்****
காதலை கானலாக்கி
எங்கே காணமல் சென்றாய்...
 
* காதலே!!!
உன் உருவமில்லாமல்
தொடரும் என் நினைவுகளை
தொலைதூரம் ஆக்கி
என்னை தூரமாக்கி
கொண்ட தூயவனே.....
என்னை நிராகரித்ததின்
பொருள் கேட்டு நித்தமும்
என் மனம் போராடுகிறது....

* விருச்சமாய் நான் வளர்த்துக்கொண்ட
உன்னோடான என் காதல் கனவுகளை
வெட்டியெறிய நினைத்தாலும்
துளிர்விடும் வேராய்
உன் நினைவுகள்....

* காதலே!
*** அறிதுகொண்டேன்
காலத்தில் சொல்லாத காதலும்,
சரியான காலத்தில் கொடுக்க
படாத மன்னிப்பும்...
நம்மை மீளா நினைவுத் துயரில்
ஆழ்த்தும் என்பதை புரிந்துகொண்டேன்...

* காதலனே!!!!!
 உன் அன்பை விட்டுகொடுக்காதவளாய்,
உன் நினைவை விடாது தொடர்பவளாய்,
உணர்வுகளை உணர்தலும்,
உனக்காய் உருகுவதும்,
உனையே உயிராய் நினைத்தலும்,
என என் காதல்,
என்னுள் ஆழமாய் தொடர,
****நீ மட்டும்****
காதலை கானலாக்கி
எங்கே காணமல் சென்றாய்???...

அன்புடன் 
ரேவா 
( ஒரு இணைய நட்பின் வேண்டுகோளுக்காய் இந்த கவிதை)

புதன், 29 செப்டம்பர், 2010

எனக்கானவன் எவனோ?


*விடை தெரியா,
விதி அறியா ஒன்று நம் வாழ்வு....
இதில் என் பயணத்தில்
 தன் கதை எழுதும்
என் நாயகன் எவனோ?
அவனுக்காய்....

* நான் போகும் பாதை எங்கும்
தோல்வி என்னும் இருள் சூழ,
வெற்றி என்னும் வெளிச்சத்தை
எனக்கு அறிமுகம் செய்யும்
என் விடியல் எவனோ?

* உண்மையாய் ஓர்
உயிரை நம்பி ஊனமான
என் மனதிற்கு,
மறுவாழ்வு தரும்
என் நாயகன்  எவனோ?

* சூழ்ச்சியில்  உலகம் சுற்ற,
சூசகமாய் பலர் என்னை சுற்ற,
புரியாமலே போன
என் காதல் வாழ்வை,
எனக்காய் திருப்பி தரும்
என் காதலன் எவனோ?

* அன்பை மட்டும்,
மூலதனமாய் கொண்டு என்னை
மட்டும் சுற்றும் என்
சூரிய குடும்பத்தின் நாயகன் எவனோ?

* விசாரிப்புகள்,  "நலம்" என்னும்
விஸ்வரூப பொய்யை சுமக்க,
மனம் வாடி நிற்கும் என் தனிமை
காலங்களுக்கு வர்ணம் திட்டும்
என் வானவில் எவனோ?

* கண் எல்லாம் கனவாக,
என் காட்சியெல்லாம் நினைவாக
எனக்கு திருப்பி
தரும் என் லட்சியனாயகன்  எவனோ?

* அன்னையின்  அன்பை,
தந்தையின் கண்டிப்பை,
தோழமையின் நட்பை,
உறவுகளின் பாசத்தை,
ஒரே உறவில் தரும்
என் "அட்சய" நாயகன் எவனோ?

* ஆறடுக்கு மாளிகையேயானாலும்,
இல்லை ஆறாடி நிலமேயனாலும்,
எனக்காய் தன் தோள் கொடுக்கும்
என் தோழன் எவனோ?

* புரியாமலே போன
என் எதிர்காலவாழ்வில்
எனக்காய் எதிர்நீச்சல் போடும்
என் நாயகன் எவனோ?

* தோழமையாய்,
என் அன்னையாய், என் காதலாய்,
என் கனவாய், என் கணவனாய்,
என் சமுகமாய் என்னுள்
நிறையும் என்னவன் எவனோ?

* எனக்கான ஒருவன்
தனக்கான ஒன்றை
கண்டறியும் நாளும்
எதுவோ?
 

அன்புடன் 
ரேவா

Flower Image

சனி, 18 செப்டம்பர், 2010

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

ஆதலால் காதல் செய்காதல்,

நம் உயிர் வாழ்வின் உன்னத தருணத்தை
நினைவுகளால் உயிர்ப்பிக்கும்  

ஒற்றை மந்திரம்  காதல்...
நாம் மறந்த நிமிடத்தை,
மறக்க நினைக்கும் தருணத்தை
நினைவால் கிட்ட வந்து
கட்டி போடும் ஒற்றை சொல்
...  காதல்.....

~ உயிர்க்குள்ளே உயிர் பறிக்கும்
ஓர் உன்னத வலி தான் காதல்....

~ நிழலாய் நினைவை தொடர்ந்து
நினைவால் அகம் தொடும் ஓர் உன்னத
கலை தான் காதல்.....

~ உயிர் வாழ்வின் அடிப்படை
தேடலே, தேடலின் பொருளே, 
காதல்....

~ பிரபஞ்சமே நீயாக....
பிதற்றலும் கவியாக உருமாறும்
வித்தையே காதல்....

~ அன்னையின் வடிவாக,
ஆதார பொருளாக நம்மை நாடி
வரும் உயிர் தான் காதல்...

~ கனவுகளின் வடிவாக,
கடமையின் வேறாக நம்மை
வளர்ப்பதும், வடிவமைப்பதும்
தான் காதல்...

~ முன்னுரை தெரியாமல்
முகவரி அறியாமலே  ஒற்றை
பார்வையிலே ஆட்டி படைக்கும்
அகிம்சை இம்சை  தான் காதல்.....

~ பார்த்தமாத்திரத்தில் உயிருக்குள்
உட்புகுந்து உன்னை ஆட்சி செய்யும்
ஆனந்த அவஸ்த்தை  தான் காதல்

~ எதிர்மறைகள் ஒரே புள்ளியில்
சங்கமிக்கும் சாரம் தான் காதல்....

~ நம்மையறியாமல் களவு போகும்
கலைக்குப் பொருள்  தான் காதல்...

~ கண்களில் தொடங்கி,
இதயத்தின்  வழியாய் இருமனங்கள்
இணைவது தான் காதல்....

~ முரண்பட்ட மனதினை
பண்படுத்தும் உன்னத நிலை தான் காதல்....

~ மதத்திரையை அகற்றும் மனம்
கொண்டது தான் காதல்....

~ கண்ணீரில் கரைந்தாலும்,
காலத்தை  தொலைத்தாலும்
நம்மில் இருக்கும் நம்மை,
நமக்கே அடையாளம் காட்டும்
கருவி தான் காதல்....

~ தனிமைப்பொழுதின் ரணங்களை
நினைவின் மூலம், திருப்பித்தரும்
 வலிநிவாரணி தான் காதல்...

~ எட்டி உள்ள மனிதரையும்,
எட்டாத தூரம் என
ஏங்கி நிறுக்கும் மனிதரையும்,
அன்பால் ஆட்டிப்படிக்கும் இந்த காதல்....  

~ ஓற்றை சொல்லில் உயிர் வாழ்வதும்
ஓற்றை சொல்லுக்காய் உயிர் வாழ்வதும் தான் காதல்...


~ மொத்தத்தில் நம்,  

வாழ்வியல் வளர்ச்சியில்,
வளர்பிறை காண வயதினில்,
முதல் முதல் இச்சைகொண்ட பொழுதினில்,
அன்பை ஆதாரமாய் அவன் வசம் கண்டபொழுதினில்,
பார்த்த மாத்திரத்தில் பறிபோன பொழுதுகளில்,
இவள் இன்றி உலகம் இல்லை என்ற எதார்த்தங்களில்,
என்று பலபேர்க்கு பலமுகம் காட்டி நம்மை
பண்படுத்தும் இந்த பாடத்திற்கு
பெயர் தான் காதல்...

~ இந்த காதலால்,
பிறர் மனத்தை  வென்று சாதித்தவன்
எல்லாம் பித்தனும் இல்லை.........
இந்த காதலின்றி,
பிறர்  மனதை சாதிப்பது என்பது சாத்தியமுமில்லை...
  
~ ஆம் ,
காதல் என்று சொன்னவுடன்
உயிர் துடிக்கும், உணர்வுகள் துடிக்கும்
நம் உயிர் வாழ்வின் உன்னத தருணத்தை
நினைவுகளால் உயிர்ப்பிக்கும் ஒற்றை மந்திரம்,

மறக்கும் நிமிடத்தை,
மறக்க நினைக்கும் தருணத்தை
நினைவால் கிட்ட வந்து
கட்டி போடும்
ஒற்றை சொல் தான்  
இந்தக்காதல்.....


அன்புடன் 
ரேவா