உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 30 ஜூலை, 2012

சின்ன சின்னதாய் காதல்..5எத்தனைமுறை
இறுக கட்டியும்
அவிழ்ந்துவிடுகிற மனதை
நானும்,
ஈர்க்கின்ற விழியை
நீயும்,
பெற்றிருக்கின்றோம்
காதலிடம்...காட்டிக்கொடுத்த
கண்முன்-உன்னை
கட்டிப்போடுகிறது
காதல்...

நீயில்லா அறையில்
தனக்கு பிடித்தவாறு
உன்னை நிறைத்துக்கொள்கிறது
என் தனிமை....


ஜன்னலோர இருக்கையாய்
என்னை எப்போதும்
ஈர்த்துகொள்கிறது
உன் விழிகள் :)

உன்னை அலங்கரிப்பதாய்
நினைத்து
இவ்வரிகள்
ஒவ்வொன்றும்
தன்னை
அலங்கரித்துகொள்கின்றன......


உன்னை கடக்கும் நிமிடங்களில்
ஆசையாய் கைக்கோர்த்து
கொள்கிறது
உன் நினைவு........


இப்போதைக்கு
உன் நினைவுகளை
தின்றே
உயிர்வாழ்கிறது
என் கவிதை............

நம் ஒவ்வொரு சண்டையும்
ஏதோ ஒரு புள்ளியில்
ஆரம்பித்து,
காதல் எனும்
பெரும்புள்ளியில் முடிகிறது... 


தீர்ந்து போனபின்னும்
தீரா தாகத்தை
உணர்கிறாயாயின்
நீ
காதல் முன்
ஆசிர்வதிக்கப்பட்டவன்..
செவ்வாய், 3 ஜூலை, 2012

உனக்கும் பெண் பிறக்கலாம்...


சிறுகுழந்தையைப்போல
கவனமீர்க்கிறது
உன் வருகை...

உன் வருகைக்கு பின்னான
நியாயங்கள் ஒவ்வொன்றையும்
அளந்துபார்க்க ஆயத்தமாகிறது
மனது...

உனக்கு பிடித்ததில் தொடங்கி
பிரியமற்றதாய் நீ தவிர்க்கும்
விசயங்களென அத்தனையும்
அறிந்துவைத்திருக்கிறது
இந்த மனது...

என்னை பற்றிய
உன் நிலைப்பாடு எதுவென்றறிய
என் நிலையிலே இருந்துபார்க்கிறேன்,-பின்
உன் நிலைப்புரியாது
நிதானமிழக்கிறேன்..

உன் ஆசைக்காய் வாதாடும்
மனம்- ஏனோ
என்னைப்பற்றி நினைப்பதேயில்லை..

பெண்ணென்று எல்லாவற்றிலும்
 என்னை நிர்பந்திக்கும் மனம்
உன்னை எதிலுமே நிர்பந்திக்கவேயில்லை..

உனக்காய் சுயம் சுருக்கிய பொழுதுகளில்
எனக்குண்டான வலி
நீ அறியவே இல்லை..

பரீசிலணை செய்யாமலே
பலிகொடுக்கப்படுகின்ற
என் நெஞ்சத்து ஆசைகளை
அசைபோட
நீ ஒரு ஆடாய் கூட இல்லை..

அத்துமீறி அந்தரங்கம் திருடும்
கள்வனைப்போலல்லாது
சிறுகயிற்றின் நிமித்தம்
அன்னிச்சையாய் நடக்கும்
புணர்தல்
அதிகம் வலிகொடுக்கிறது,
உன் நேசிப்பின் தூரம் விளங்கியதன் பொருட்டு..

ஆயிரம் கனவுகளை சுமந்து
அரைகயிற்றில் அனைத்தையும்
தூக்கிலேற்றும் தந்திரம்
தெரிந்த ஆணே
உனக்கும் என் மூலம் பெண் பிறக்கலாம்..(விதைப்பதை தான் அறுக்கமுடியும்.......)