உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 24 ஜூன், 2010

உன் நல் வாழ்விற்க்காய்


நீங்கி விடாதே
என்று நெஞ்சம்
சொல்கிறது....
ஆனாலும்,
உதடுக்கு பூட்டுப்
போட்டு உள்ளம் ஊமையாகிறது
உன்
நல் வாழ்விற்க்காய்


அன்புடன்
ரேவா

இந்த காதல்



காலமெல்லாம் காத்திருந்து,
தடிபிடிக்கும் வயதிலும்
தாங்கி நின்று
பின் சாதலே!!!!
இந்த காதல்

அன்புடன்
ரேவா

பிரிவு


காதலே!!

உன் கடைசி காதல்
முத்தத்துடனும்,
நீ கொடுத்த
ஒற்றை ரோஜாவுடனும்
பிரிவின் வலிகளோடு
காத்திருக்கிறேன்...
காதலோடு காலத்தில்
வந்து சேர்....

அன்புடன்
ரேவா

தவம்


கொட்டும் மழையிலும்,
உன்னோடு குடை பிடித்துச்
செல்லவே ஆசை...

குடை இங்கே!?.
என் துணை????
விடைதேடியே ஒற்றை காலில் தவம்....

அன்புடன்
ரேவா

மாற்றம்


இந்த
பெண்மையும், ஆண்மையும்
மாற்றத்தின்
மென்மையை உணர்கின்றனர்
அன்பு பெற்றோராய்.........

அன்புடன்
ரேவா

வியாழன், 17 ஜூன், 2010

பரிசு


அன்பே!
என்னை காணவேண்டி
காட்சிக்கு
கல்லாய் அமர்ந்திருக்கும்
உனக்கு உச்சி முகர்ந்து
ஓர் இச்சை முத்தம்
தருவதை விட்டு
உன் காதலுக்கு
வேறு என்ன பரிசு
தரமுடியும் சொல்!!!!!
அன்புடன்
ரேவா

ஆசை


நடைப்பழகும் ஆசை
எனக்கு...
நடமாடும் நிலவாக
நீ என்னோடு
இருப்பதானால்!!!!


அன்புடன்
reva

திங்கள், 14 ஜூன், 2010

***உனக்கான ஓர் கவிதை***

அன்பே,

*முத்தத்தின் சத்தத்தை கொடுத்து,
எனக்குள் ஒரு யுத்தத்தை
அரம்பம்மாக்கிய
என் அன்பு உறவுக்காய்
இந்த கவிதை.....

* எனக்குள் ஒரு வலியை கொடுத்து
அந்த வலியோடு என் வாழ்க்கை வழியை
வகுத்துக்கொடுத்த
என் வானத்து சூரியனுக்காய்
இந்த கவிதை.....

* பார்வைகள் பழக்கமாகும்
பழக்கங்கள் உறவாகும்- ஆனால்
பார்க்காமல் பழகாமல்
பரிமாற்றங்களிலே
என்னை பரிதவிக்கவிட்ட
என் பாசதிற்குரியவனுகாய்
இந்த கவிதை.....

* விழி மூடும் போதெல்லாம்
விழிதிரைக்குள் விளையாடும்
என்னுள் இருக்கும் என்
இரண்டாம் உலகை எனக்கு
அடையாளம் கட்டிய, நான்
இரண்டாம் நினைத்த
என் தாயுமானவனுக்காய்
இந்த கவிதை.....

* உன் எண்ணங்கள் மலரும்
போதெல்லாம் விரிவடையும்
உன் விசித்திர வாழ்கையை எனக்கு
விளையாட்டாய் விளக்கி காட்டிய
என் வித்தகனுக்காய்
இந்த கவிதை.....

* உன் வாழ்வில் ஓர் ரசிகனாய்
இருந்து, நீ ரசித்த பொருளுக்கெல்லாம்
என்னை ரசிகையாக்கி என்னுள்
ரசாயன மாற்றம் ஏற்படுத்தியவனுக்காய்
இந்த கவிதை.....

* கற்பனையில் கவிதை அரங்கேறும்
ஆனால், ஆளரவமில்லாமல் பரிமாற்றங்களிலே
ஓர் கற்பனை வாழ்க்கையை அரங்கேற்றம்
செய்த என் அரங்கநாதனுக்காய்
இந்த கவிதை.....

* நவீன உலகத்தில் மாயமாகி போகிவிட்ட
உள்ளத்தின் உணர்வுகளையெல்லாம்,
ஒருமித்து காட்டிய
என் உண்மையுள்ளவனுக்காய்
இந்த கவிதை.....

* உறவுகளால் உதறப்பட்டு உடைந்து
போன என்னை, உன் உண்மை உறவுகளை
அறிமுகப்படுத்தி, அடுத்த உறவுக்கு என்னை
அழைத்துச்சென்ற
என் நட்பின் உறவிற்காய்
இந்த கவிதை.....

* தினமும் உன் அழைப்புக்காய்
காத்திருந்து, அந்த உரையாடலுக்காய்
என்னுள் ஒத்திகை பார்த்து
உன் அழைப்பால் அனைத்தையும் மறந்து
உன் பேச்சை மட்டுமே ரசிக்கவைத்த
என் அன்பு பேச்சானுக்காய்
இந்த கவிதை.....

* ஓர் அன்னையாய், தந்தையாய்
உடன்பிறவாய், ஆசானாய், நண்பனாய்
காதலனாய், எதிரியாய், என்னவனாய்
நீ வேண்டும் என்ற வேண்டுகோளிற்க்கு
தற்காலிக வரமளித்த
என் மனதளந்த என் வாமனனுக்காய்
இந்த கவிதை.....

* வலிகளை பழக்கப்படுத்தினால்
தீராத வலியை கொடுக்கும் என்று
உன்னோடான என் கனவுகளுக்கெல்லாம்
ஒரே கவிதையில் முற்றுப்புள்ளி
வைத்த முடிந்து போன
என் கவிதையின் நாயகனுக்காய்
இந்த கவிதை.....

* கவிதைகள் எல்லாம் கற்பனைகள் தான்....
என் கற்பனைக்கும் புது விடியல் தந்த
என் விடியலுக்காய்
இந்த கவிதை.....

* ஆறடுக்கு மாளிகையில் நீ இருக்க
ஆளவே ஆளில்லை என்று நான் இருக்க
பணம் வந்து பகடியாடிய என் பரமபத
வாழ்க்கை ஆரம்பித்த இடத்திலேயே
அடங்கி போனதன் மாற்றத்தை
புரிந்துகொண்டவனுக்காய்
இந்த கவிதை.....

* மாற்றங்கள் நமக்குள் ஏற்படுத்திய
மாற்றத்தால் வந்த நம் உறவு,,,,
இன்று .....
உனக்கான ஒரு உறவின் வருகையால்
உறைந்து போன போது எனக்கு
இது தான் வாழ்க்கை என்று
எதார்த்தத்தை எதார்த்தமாய்
சொன்னவனுக்காய்
இந்த கவிதை.....

* முடிக்க முடியாமல் தவிக்கும்
என் மனதிற்கு முடிந்து போன
என் இந்த கவிதை நியாபகப்படுத்திகிறது
தோழா!!!!!!!!!!!!!!!!?
இந்த கவிதை..... உனக்கானது என்று!!!


அன்பே,

*முத்தத்தின் சத்தத்தை கொடுத்து,
எனக்குள் ஒரு யுத்தத்தை
ஏற்படுத்திய என் முடிந்து போன
என் உறவிற்க்காய்
இந்த கவிதை.....


இப்படிக்கு
உனக்கான இந்த கவிதையுடன்
ரேவா

காதலுடன்

தட்டு தடுமாறி
நடைபோட்ட
பொழுதில் கை கொடுத்த
என் அன்னை மீது
எனக்கு முதல்
காதல்.......................


தவறு எனத் தெரிந்தாலும்
தடுக்காமல் என்னை
நெறிபடுத்திய என்
தந்தை மீது
எனக்கு இரண்டாம் காதல்..............


காதலையே நேசித்து
காதலையே காற்றாய்
சுவாசித்த அந்த காதல் மீதும்
எனக்கு ஓர் மூன்றாம் காதல்............


ஆனால் இந்த காதல் தந்ததோ?

காற்றாய் வந்து என் கனவு
கலைத்தது...

நெருப்பாய் வந்து என்னை
வாட்டி சென்றது.

கண்ணீராய் வந்து சோகம்
நனைத்து.......

நிலமாய் வந்து என்னை
விதைத்து சென்றது..........

ஆகாய போர்வையில்
என்னை மறைக்க
நினைத்தது.............


ஆம் இவ்வைந்து
புலன்களும் நான் நேசித்த
உன்னை மறக்க மறுத்தது.
காதலே!


* உன் கண்ணாடி மனதில்
என்றேனும் என் பிம்பம்
வந்ததுண்டா?

* காற்றாய் வந்து என்றேனும்
உன் தூக்கம் நான்
கலைத்ததுண்டா?

* கலவரமான உன் மனதிற்குள்
எந்தன் கனவுகள் என்றேனும்
வந்ததுண்டா?

* காயமான உன் மனதிற்கு
ஊனமான என் காதல் என்றேனும்
மருந்து தடவி சென்றதுண்டா?

சொல்லடா?

@ சொல்லாமலே போன என்
காதலின் சோகம் சொல்லி சொல்லி
என்னை கொல்லுதடா?
^ இது உன் முதல் காதலா என்று? ^


********^தட்டு தடுமாறி
நடைபோட்ட
பொழுதில் கை கொடுத்த
என் அன்னை மீது
எனக்கு முதல்
காதல்.......................

இப்படிக்கு
முதல் காதலுடன்
உன் காதலையும் விரும்பும்
உன்னவள்
ரேவதி

பிடிக்கும் எனக்கு....

தோழனே.

* உன்னால் எனக்குள் உருவான
மாற்றங்கள் பிடிக்கும்........

* கொள்ளாமல் என்னை கொள்ளும்
உன் காதல் பிடிக்கும்

* உன்னக்காக எனக்குள் உருவான
கவிதை பிடிக்கும்...

* உன்னோடு இருந்த அந்த ஆனந்த
நினைவுகள் பிடிக்கும்...

* ரகசியமாய் நீ என்னை
ரசிப்பது பிடிக்கும்...

* நீ ரசிப்பதை நான் அறிந்ததும்
ஒன்றும் அறியா பிள்ளை போல் நீ
நடிப்பது பிடிக்கும்...

* உனக்கான காத்திருப்பில்
நான் தொகுத்த கவிதையை
உன்னிடம் கொடுக்கும் போது
அலச்சியம் செய்யும் உன் செல்லத்
திமிர் பிடிக்கும்......

* என் காதலை ஏற்றுக் கொள்ள
மனம் இருந்தும் ஏளனமாய்
பார்ப்பது போல் உன்னை நீ
ஏமாற்றிக்கொல்வதாய் நீ உணரும்
உன் பார்வையின் ஏக்கம் பிடிக்கும்...

* என் கைகோர்த்து நடக்க
ஆசை இருந்தும்
அசையாமல் இருக்கும்
உன் ஆண்மை பிடிக்கும்...

* உன்னையும் உன் நினைவுகளையும்
நிழலாய் நேசிக்கும் என்னை பிடிக்குமா
என்று நான் கேட்க மறந்து போன
அந்த நாட்களை பிடிக்கும்

* தடுமாறி போன என்
என் நினைவுகள் எல்லாம்
தடம் மாறாத உன் நினைவுகளுடன்
தான் பயணம் செய்கின்றன
என்று தெரிந்தும்
ஒன்றும் தெரியாதவனை போல்
நீ செய்யும் முகபாவம் பிடிக்கும்...


தோழனே,


*உன்னோடு வாழும் பொழுதுகள்
வேண்டும் என்று தான்
வாடாத மலரான இவள்
வாடும் மலர் கொண்டு
பூஜிகின்றாள்

* இந்த மலரின் வேதனை தான்
புரியுமோ? இல்லை
உன் தோளுக்கு வராமல்
இந்த மலரும் வீணாகுமோ?
விடை தெரியவில்லை


^ இருப்பினும் பிடிக்கும் எனக்கு,
என்றாவது என்னை உன்னக்கு
பிடிக்கும் என்று காத்திருக்கும்
அந்த நாட்களே பிடிக்கும் எனக்கு ^

* அந்த நாட்கள் வந்தால்
தயங்காமல் சொல் அன்றாவது பிடிக்குமா
என்னை உனக்கு ?

இப்படிக்கு
உன்னை பிடிக்கும்
ரேவதி

***தெரியாத எனது பயணம்***+

*அன்புக்கு அர்த்தமான
என் அன்னையை....

* அறிவுக்கு துணை தந்த
என் தந்தையை....

* பாசத்தை உண்மையாய் பரிமாறும்
என் சகோதர உறவுகளை....

* நட்பிற்கு உயிர் கொடுத்த
என் நண்பனை....

என அத்தனை உறவுகளையும்
மறந்தேன்,
உன்னை சந்தித்ததிலிருந்து

^இறுதியாய் என்னையும் நான்
மறந்தேன் அது உன்னைபற்றி
நான் சிந்தித்ததில் இருந்து^

என் நேசமிகு உறவே!!!

* உயிர் தெரியா? உணர்வுகள் அறியா?
ஏதோ ஓன்று உன்னிடம்
என்னை அடிபணிய செய்கின்றது....

*உன் நிழலும் என் நினைவுடன்
தான் நித்திரை கொள்ள வேண்டும்
என்று நித்தமும் என் மனம்
எதிர்பார்கின்றது.....

தூயவனே!!!!

* உனது பார்வை கிரகங்களாய்
என் மீது விழும் போது
நான் அதைநேசிக்கவில்லை
என்று தான் நினைத்திருந்தேன்..
ஆனால் உன் நியாபகம்
காற்றாய் வந்து என் மன திரையை
அகற்றும் போது தான்
உன் பார்வையின்
ஆளுமையை பத்திரமாய் என்னக்குள்ளே
சேமித்து வைத்திருப்பதை
நானே அறிந்தேன்....

***தோழனே-உன்னை
நீக்கிய இந்த வாழ்வு
சரிப்படுமா? சாத்தியமா?
தெரியவில்லை....
இதற்கு காலம் என்ன பதில்
சொல்லுமோ புரியவில்லை-இவ்

**விடைதெரியா விதியறியா?
ஒரு கேள்விக்கு இருவரும்
பதில் எழுதிவிட்டோம்.-இதற்கு
நம் உறவுகள் என்ன பதில் சொல்லுமோ
புரியவில்லை

என் இனியவனே!!!

* நீ என்னை பார்த்திடும் போதெல்லாம்
நான் பார்வை இழந்தவள் ஆகின்றேன்
இந்த உலகத்தின் மீது..

* உன் சுவாசம் என்னை
சுட்டிடும் போதெல்லாம் சத்தியமாய்
சொல்கிறேன்
உன் வசமே நான் அடிமை ஆகின்றேன்....

நீ புன்னகைக்காய் உன் இதழ்
பிரிக்கும் போதெல்லாம்
நான் உன்னோடு
சேர்வதாய் உணர்கின்றேன்..
உன் புன்னகைக்கும் நானே
காரணமாக வேண்டும் என்று எதிர்பார்கிறேன்..

^இது சரியா? தவறா?
என ஒரே பதில் தரும்
கேள்விகளை என்னக்குள்ளே
நான் கேட்டு விட்டேன்,
இறுதியாய் என் கேள்விகளுக்கு
எல்லாம் பதிலாய் என்னை
வென்று நிற்பது
**உன் மோக(ன)ப்
புன்னகை மட்டும் தான்**
***தோழனே உன் நினைவோடு
வாழும் இந்த வாழ்கை
போதும் என்று சொல்ல
நமக்குள் நடப்பது
திரைக்கதையும் அல்ல..

*உன்னயே வென்று
காட்டுவேன் என்று சொல்ல
நமக்குள் நடப்பது
காவியக்கதையும் அல்ல.
**எதார்த்த உலகத்தில்
ஏமாற்றங்களையும் நமக்கு
ஏற்றதாய் எடுத்துக்கொள்ள
தெரிந்தவனே ஏதார்த்த மனிதன்.

^நான் ஏதார்த்த மனிதனாய்
வாழவிரும்பும்
ஒரு போகும் பாதை
தெரியாத பயணி.
எனக்கு தெரிந்ததெல்லாம் -
**நான் இன்று
உன்னோடு பயணப்படுகின்றேன்***
***என் நினைவுகள்
உன் கனவோடு
பயணபப்படுப்படுகின்றன****
இப்படிக்கு
முடியாத பயணங்களை
உன்னோடு மட்டும்
பயணிக்க
விரும்பும்

ரேவதி

சிந்தனை செய் மனிதா?

^மனிதா^
* உயர்ந்திடும் எண்ணம்
பறவைக்கும் உண்டு.....

*உழைத்திடும் எண்ணம்
எறும்புக்கும் உண்டு...

*இறைதேடும் பழக்கம்
விலங்குக்கும் உண்டு...

*சேர்த்து வாழும் பண்பு
பறவைக்கும் உண்டு...

*பகிர்ந்துண்டு வாழும் குணம்
காக்கைக்கும் உண்டு...

*பழிவாங்கும் தன்மை
பாம்பிற்கும் உண்டு...

*நன்றியை சொல்லும் நயம்
நாய்க்கும் உண்டு...

*அன்பு கட்டும் ஆற்றல்
கோழிக்கும் உண்டு...

*சேமிக்கும் குணம்
ஒட்டகத்திற்கும் உண்டு....

^மனிதா^
* உன்னிடம் உள்ள எல்லா
பண்பும் ஐய்ந்தறிவுள்ள உயிர்களுக்கும் உண்டு....

*ஆனால்*

*ஆறாவது அறிவாய் ஆண்டவன்
நம்மை பூமியில் படைத்தது
எதற்க்ககா?

***சிந்தித்து பார் மனிதா? ***
@ புறம் பேசும் பழக்கம்
விலங்குக்கு இல்லை...

*அடுத்தவரை ஏமாற்றும் குணம்
அதற்கு இல்லை...

*சொந்தமாய் பழகி சூழ்ச்சி செய்யும்
வழக்கம் அதற்கு இல்லை...

* கூட்டு வாழ்கையை இன்னும்
அது குழைக்கவில்லை...

*எந்த புறாவும் தன் ஜோடியன்று,
பிற ஜோடியை தொடுவதில்லை....

***சிந்தித்து பார் மனிதா? ***

^ இரண்டறிவு மரம் கூட மறித்தாலும்
மனிதனுக்கு பயன்படுகிறது.....

^ ஓரறிவு இனம் கூட
உரமாய் நமக்கு பயன்படுகிறது...

** ஆனால் நீ? **
யோசி மனிதா? யோசி
ஆறாவது அறிவாய் ஆண்டவன்
நம்மை பூமியில் படைத்தது
எதற்காய்???

அன்புடன்
ரேவதி

புரியாமல் ஓர் கவிதை

விட்டு விலகும் நெஞ்சங்கள்
எல்லாம் விடுதலை விரும்பிகள்
என்றால்..,

விருப்பத்தை மறைத்துத்தான்
விதைத்திருக்கலாமே ?

* விடையறியா
என் வழியோடு விளையாடும்
என் ஆண் விதியே.,

இது தான்
உன் கணக்கென்று
அன்றே நீ உறைத்திருந்தால்,
மனனம் செய்த உன்
கணக்கெல்லாம் என் மனதோடே
போயிருக்கும்......

*ஆனால் என் ஆண் விதியே - நீ
உன் விழியால்
என் மனதை கிறங்கடித்தாய்....

உன் அன்பால் ,
என் மனதை சிறைப்பிடித்தாய்....

புன்னகைக்கும் உன் இதழ்களுக்குள்,
இரு விடைகள் தந்து நின்றாய்...

**புரியாத உன் புன்னகைக்கு
புதுப்பெயர் காதல் என்று இவள்
கணித்து கொண்டாள்**

என்னவனே...

என் காதல் விதியோ
உன் நினைவின் பயணத்தோடு

ஆனால்
உன் பயணமோ
ஒரு வித பயத்தோடு ...

சொல்,


விட்டு விலகும் நெஞ்சங்கள்
எல்லாம் விடுதலை விரும்பிகள்
என்றால்..,

விருப்பத்தை மறைத்துத்தான்
விதைத்திருக்கலாமே ?

அன்புடன்
ரேவா

நியாபகம்



**நடை பழகும் நேரத்தில்
நண்பர்களாய் நாம்....

**நட்பை தவறவிட்ட
இளமை காதலில் நீ....

**நாம் ஓடி விளையாடி
இளைப்பாறிய அந்த திண்ணை
நிழல்கள்....

**சீண்டி விளையாடி சண்டை
போட்ட அந்த சப்த ஓசைகள்

* நட்புக்கும் காதலுக்கும்
நடுவில் நீ தவித்த
அந்த பொழுதுகள்

**என இவை எல்லாம்
நியாபகம் இருக்கிறது
நண்பா நான் தவற விட்ட
என் "ஆட்டோகிராஃப்" நோட்டில்

இப்படிக்கு
ரேவா

போராடு மனமே- போராடு

போராடு மனமே- போராடு
வாழ்கையின் அர்த்தம்
என்னவென்று அறியும்
வரை போராடு.....

@ இருட்டில் வெளிச்சத்தையும்
வெளிச்சத்தில் இருளையும்
காணும் வரை போராடு....

@ சப்தத்தில் நிசப்தத்தையும்
நிசப்தத்தில் சப்தத்தையும்
இனம் காணும் வரை போராடு....

@ பூவிற்குள் பூகம்பம்மும்
பூகம்பத்தில் பூமணமும்
காணும் வரை போராடு....

@ தோல்வியில் வெற்றியையும்
வெற்றியில் தோல்வியின்
மனநிலை என்னவென்று
காணும் வரை போராடு...

@ வாழ்ந்துகொண்டே சாபவர்களையும்
இறந்தபிறகும் வாழ்பவர்களின்
உண்மை எதுவரை என
அறியும் வரை போராடு....

@ துன்பத்தில் இன்பத்தையும்,
இன்பத்தில் துன்பத்தையும்
இனம் பிரிக்கும் வரை
போராடு....

@ மனதின் குழப்பத்திற்கும்
குழப்ப மனதிற்கும் அர்த்தம்
காணும் வரை போராடு...

@ போராடு மனமே- போராடு

உன்னை நீயே அறிந்த
பிறகு, வாழ்கையின்
அர்த்தம் புரிவதற்கு
போராடு மனமே- போராடு.....

^ இது தான் வாழ்கை என்று
அறியும் வரை போராடு.....^


போராட்டங்களுடன்

ரேவா

சிறகுகள் எங்கே?

சிறகுள்ள பறவையாய்
எங்களை படைத்திருந்தால்
சிகரத்தை அடைந்திருப்போம்
சிறகற்ற பறவையாய் எங்களை
படைத்ததால் சிக்கி தவிக்கிறோம்
சில மனிதர்களிடம்

***உன்னுடன்***

* உன்னுடன்

நான்

இருக்கையில்

புதிதாய் உணர்கின்றேன்

நான் எனதில்லை

உனதென்று!!!

* உயிர் கொடுத்த என்

தாய்மைக்கு அடுத்து

நான் உயிராய் நினைப்பது

உன்னைத்தானடா!!!

* உயிர் கொடுப்பாயா ?

காதலே,

என் காதலுக்கும்

என் காதலோடு சேர்ந்த

என் காதல்
வாழ்க்கைக்கும்...

உன்னோடு வாழும் வழி

அமைப்பாயா?


கேள்விக்குறியுடன்

ரேவா

அதிர்ஷ்டம்

* புதுவரம் வேண்டுமென்றேன்
புதுயுகம் நீ தந்தாய்...

* புதுமலர் வேண்டுமென்றேன்
பூந்தோட்டம் நீ தந்தாய்...

* புன்னகை வேண்டுமென்றேன்
குழந்தையின் புன்சிரிப்பை நீ தந்தாய்...

* தென்றலின் மென்மை வேண்டுமென்றேன்,
தெவிட்டாத இனிமையை நீ தந்தாய்...

* துன்பத்த࠮?லிருந்த௠? மீள வேண்டுமென்றேன்,
வெற்றியின் புனிதத்தை நீ தந்தாய்...

* ஏற்றங்கள் வேண்டுமென்றேன்,
ஏணியின் படிகளாய் நீ வந்தாய்....

* நீயே என்றும் வேண்டுமென்றேன்,
ஏமாற்றத்தை எனக்களித்து
நீ ஓடி சென்றாய்.....

^*** எந்தன் அதிர்ஷ்டமே ***^

தனிமை விரும்பி நான்



தனிமை விரும்பி நான்......
ஆனால்,
உன் தகவல் நுட்பம்
என்னை தவிர்த்து சென்ற
நாளிலிருந்து நான் விரும்பும்
தனிமையை தவிர்க்கிறேன்.

ஆம் தோழனே,

*** தனிமையில் நான் கண்மூடும்,
பொழுதுகளில் எல்லாம்,
என் விழித்திறைக்குள்
விளையாடும் விண்மீன்
நீ தானே!!!!!!!!!!!!!!!!!

தனிமையில் நான்
நடக்கும் பொழுதுகளில்
எல்லாம் நான் காணும் காட்சிப்பிம்பம்
உன் முகம் தானே!!!!

தினம் தினம்
போட்டி போடும் உலகில்
என் போராட்டம் எல்லாம்
உன் நினைவோடு தானே!!!!

தோழனே!
@ எனக்கென்று ஒரு உலகம்
என்னோடு இருந்தும், என்னக்காய்
பட்ட என் உலகம் நீ தானே!!!!

உன்னோடு நான்
இருந்த பொழுதுகள் எல்லாம்
என் தாயின் கருவறைக்குள் நான்
இருந்த நினைவுகள்...
அந்த ஆனந்த நினைவுகள் எல்லாம்
இன்று நெஞ்சத்தில் பத்திரமாய்
என்னுளே

தோழனே!!!!
மறந்து விடு என்று
நீ சொன்னாய்..... சொன்ன நிமிடத்தில்
இருந்து மறந்தேன்! நீ சொன்ன
ஒற்றை வரி உயிர் வலிக்கும்
சொல்லை...

தோழனே!
உயிர் குடிக்கும்
உன் நினைவுகள் எல்லாம் எனக்கு
நித்திரையை மறக்க செய்தனவே தவிர
உன்னை????

தவிக்கிறேன் தோழனே
தனிமையில்,
உன்னோட நான் தவற விட்ட
என் உரிமைகளை எண்ணி
தவிக்கிறேன் தோழனே....

இன்றும் சொல்கிறேன்
தனிமை விரும்பி நான்.....

ஆனால்,
உன் தகவல் நுட்பம்
என்னை தவிர்த்து சென்ற
நாளிலிருந்து நான் விரும்பும்
தனிமையை தவிர்க்கிறேன்.


முதல் காதலி

அம்மா என் முதல் காதலி
நான் நேசிக்காமல் என்னை நேசிக்கும்
என் அன்பு காதலி..........

என் முதல் காதலும் அவளோடு தான்
என் முதல் முத்தமும் அவளுக்கு தான்.........

தோல்வியில் தோல் கொடுக்கும்
என் தோழனும் அவள் தான்...........

என் தனிமையில் கை கொடுக்கும்
என் எழுதுகோலும் அவள் தான்....

என் கண்ணீரை சுட்டெரிக்கும் என்
பகலவன் அவள் தான்...........

என் முதல் காதலும் என்
தாயோடு தான்
அதுவும் அவள் தந்த
அன்பு முத்தத்தில் தான்..

அன்புடன்
ரேவா

இப்படிக்கு என் காதல்

அன்பே!

உன் ஆழப்பார்வையால்
ஆஜகுபவனாய் அன்பால்
என் நெஞ்சில் அரியாசனம்
விற்றிருக்கும் என்னுயிரே!
கேளடா என் காதல் பற்றி....

முதல் பார்வை பரிமாற்றத்திலே
என்னுள் பதியம் போட்ட என் காதல்
(தாழ்வாய் ) போன என் மனதால்,
ஆழத்தாழ்ப்பாள் போட்டுக்
கொண்டதென்னவோ உண்மைதான்.....!

பிரம்மாண்டமாய் நீ நின்ற அந்த
அரங்கில் ஓர் மூலையில் உன்
சிறுபிள்ளைத்தனத்தை வியந்து
உன் விளையாட்டை விளையாட்டாய்
ரசித்தததென்னவோ உண்மைதான்.....!


உன்னால் உண்டான என்
காதல் எண்ணங்கள் வலிமையானதுதான்
கல்லாய் போன நீ கொஞ்சம்
எனக்காய் வளைந்து கொடுத்தாய்...
உன் வர்ணங்களை கொஞ்சம்
என் வாசலில் தெளித்தாய்

எனதுயிரே:-

உன்னைப்பற்றி இந்த என்
கவிதைத் தொகுப்பில் எப்படி
எழுதுவது? தெரியவிலையே!

சரி...உன்னை என் நண்பன்
என்று எழுதவா?
இல்லை இல்லை என் நண்பன்
எனக்காய் துடிப்பவன்...-அதனால்
நீ என் நண்பன் இல்லை....

உன்னை என் பகைவன்
என்று எழுதவா?
இல்லை இல்லை என் பகைவன்
என் நிறை குறைகளை நான்
அறிவதற்கு காரணமானவன்.....அதனால்
நீ என் பகைவன் இல்லை....

உன்னை என் தந்தையின் வடிவம்
என்று எழுதவா?
இல்லை இல்லை என் தந்தை
எனக்காய் தன சுயவேர்களை
சில கிளைகளில் படராமல் வெட்டிக்
கொண்டவர்....- அதனால்
நீ என் தந்தையின் வடிவம் இல்லை....

உன்னை வழிபோக்கன் என்று
எழுதவா?
இல்லை இல்லை வழிபோக்கர்கள்
முகமறியா, முகவுரையறியா,
நம்மோடு கொஞ்சம் அன்பு பாராட்டிச்
செல்பவர்கள்....- அதனால்
நீ என் வழிபோக்கன் இல்லை....

பின் நீ யார் எனக்கு???!
சொல்லடா?

இறுதியாய் உன்னை என் காதல்
என்று எழுதவா?
இல்லை இல்லை என் காதல் என்பவன்
என் நண்பனாய், என் பகைவனாய்
என் ஆசானாய், என் தந்தையாய்
தன்னை, எனக்காய் பிரதிபலிப்பவன்...-அதனால்
நீ என் காதல் இல்லை....

அன்பே!

எல்லாப் பெண்களைப் போல
நானும் என் காதலை காதலித்த
தென்னவோ உண்மைதான்.....!

உயிராய் உன்னையே நினைத்து
என் உயிருக்குள் கருவாய் உன்
நினைவுகளை சுமந்து திரிந்த
அந்த நாட்கள் என்னவோ உண்மைதான்....

உனக்காய் வடித்த என்
கவிதைகள், கனவுகள், உன்
காலடித்தடம் நாடி ஓடி வர வேண்டும் என்று
நான் நினைத்த தென்னவோ உண்மைதான்.....!


புரியவில்லை உன்னோடான
என் காதல்,

சில நேரம் விரும்பி வருகிறாய் ....
சில நேரம் விலகிச்செல்கிறாய்.....
புரியாத புதிராய் புலம்பிச்செல்கிறாய்....
என் தாய்மைக்கு அடுத்து நீயே
என்கிறாய்....

ஆனால்? காதல் சுயனலமானதுதான்!!!!!

எதிர்பார்புகளையும் அதனால் உண்டான
ஏமாற்றங்களையும் தாண்டி வந்து
உனக்காய் நானும், எனக்காய் நீயும்
உணர்வுகள் என்னும் உரிமைத்தீயில்
எரிவதுதானடா காதல்...


ஆனால் இந்த காதலால் நான் அடைந்தது
என்ன? இழந்தது என்ன?
கணக்கு போட விரும்பவில்லை....
கரணம் நான் இன்னும்
உன்னைக் காதலிக்கிறேன்...

காதலே!

எனக்காய் எதையுமே பிரதிபலிக்காத
உன் கண்ணாடி காதலில் என்றேனும்
என் பிம்பம் படுமோ என்று காத்திருக்கிறேன்
உன் காதலாக.......

என்றேனும் என் காதல் உன்
நினைவோரம் வந்து செல்லும்,
அன்று என் காதல் உன் கண்களை
நனைத்தால் தயங்காமல் சொல்லடா.....
உன் கண்ணீர் துடைக்க
இரு கரம் நீட்டி காத்திருக்கிறேன்.....
இன்று காதலாக!!!!! நாளை ?????

(ஒரு மாலை ரயில் பயணத்தில் நான் சந்தித்த ஒரு தோழியின் பயண பரிமாற்றம் இங்கே என் இப்படிக்கு என் காதலாக!!!!)

அன்புடன்
ரேவா

ஊடல்

அன்பே!

*நம் கண்கள் பார்பதற்குள்ளே
கருத்தொருமித்தோம்!!!!
கனவுகள் கொண்டோம்!!!
காரணமில்லா சிறு சிறு கள்ளத்தனம் செய்தோம்!!!!

*விதிவழியே,
நமக்கு விதிக்கப்பட்ட
வழியை விளையாட்டாய்
படி படியாய் கடந்தோம்...

*எனக்கானவன் நீ என்றும்
உனக்கானவள் நான் என்றும்
(தயக்கத்துடன்) நம் உள் மனது சொன்னாலும்
நம்மை உறங்காமல் உளற
வைப்பது எது?

*இந்த சிறிய நாட்களில்
நமக்குள் உண்டான ஏதேச்சை
எண்ணங்கள் எத்தனையோ!!!!

*முட்டி மோதி நம்மிடம்
எட்டி பார்க்கும் நம்
ஒற்றுமைகள் எத்தனையோ!!!!

*ஆழ இருக்கும் மனதில்
நம்மை ஆளத்துடிக்கும்
ஆசைகள் எத்தனையோ!!!!

*தயக்கங்கள் எத்தனையோ!!!!
தவிப்புகள் எத்தனையோ!!!!
தடையில்லா என்னை நெருங்கி வரும் உன்
தார்மீக உரிமைகள் எத்தனையோ!!!!

*இப்படி எத்தனையோ,
இருந்தும் ஓர்
**எத்தனை** போல்
நம்மை ஆட்டுவிப்பது எது! தோழா??

அன்பே!

*சுகமான ஒரு மாலை பொழுதில்
முதன் முதல் பார்வை பரிமாற்றம்...

என் இரண்டாம் தாய் நீயா?
என்று என்னுளே ஆயிரம் கேள்விகள்...!

ம்...ம்

நம் வாழ்கை கேள்விகளுக்கெல்லாம்
விடை தெரிந்து விட்டால்
"விதி" என்ற ஓன்று
வீண் தானே!!!!!

*மாற்றங்கள் வாழ்கையில்
மாறாமல் இருக்க நம்மை
வந்தடையும் வாழ்வியல் மாற்றங்கள் தான்
எத்தனை!!! எத்தனை!!!!

*தினம் தினம் உன் குறுந் தகவல்களால்
நிறப்பப்படும் என் கைப்பேசி
இபோதெல்லாம் கணவனை
இழந்த கைம்பெண்ணாய்
மாறியதன் மாற்றம்
என்னடா?????

*என்னை வந்தடையும்
உன் அழைப்புகள்,
உன் அரவணைப்பு,
உன் தாய் உள்ளத்தின் கனிவுயாவும்
காற்றில் கிடத்திய கற்பூரமாய்
காணாமல் போனதன்
கரணம் என்னடா???

புரிந்துகொண்டேன்னடா!!!!

*மாற்றங்கள் வாழ்கையில்
மாறாமல் இருக்க நம் வாழ்வில்
நம்மை வந்தடையும் வாழ்வியல்
மாற்றங்கள் தான்
எத்தனை!!! எத்தனை!!!!

மாற்றங்கள் தரும்
மாற்றங்களை
எதிர்பார்த்திருக்கும்

ரேவா

பயணம்

தோழனே ,

உன்னுடன் பேசுவதாய்
என்னக்குள் பேசிய வார்த்தைகள்
அதிகம்என்பதால்
தான்உன் விழி பார்வை
எனக்கு விடை தர மாறுகின்றதோ ?

என் தோழனே,
நான் ........
உன் விழியோடு
பயணம் செய்யதான் விரும்பினேன்.
இன்று என் விதியோடு
என் காதல்
பயணம் செய்துகொண்டு
இருக்கிறது.

சொல் தோழனே ,
காதல் கண்களின் பயணமா?
இல்லை கண்ணீரின் பயணமா?
புரியாமல் உன் நினைவோடு
பயணம் செய்யும்

உன்
ரேவதி