உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 9 ஜனவரி, 2014

எப்படியோ முடிந்துவிடுகிறதுஎப்படியோ முடிந்து விடுகிறது
எதிர்பார்த்த எதுவும்
அப்படியில்லாமல்..

எப்போதும் போலவே
இன்னும் சில நாட்கள்
அதிகமாய் கொல்லும்
அப்படியில்லாமல் போனது பற்றி

ஒவ்வொரு நாளில் முடிவில்
நுழைந்து கொள்கிற
அப்படியில்லாமல் போனதின் வலி
அடுத்து நாளுக்கான குறிப்பின் முனையையும்
கூர்தீட்டியே வைத்திருக்க

எப்படியோ மாறியிருக்கலாம்
நாம் ஆசைபட்ட படியோ
பிறர் ஆசைபட்டவாறோ
அப்படி மாறாதது போனதன்
குறிப்பு
மாறியதன் தோல்வியிலோ வெற்றியிலோ எழுதப்படலாம்
எழுதியவை அரித்துக்கொண்டேதானிருக்கும்
வேறு வழிகளில்லை
விதைத்துப்போட்ட எதிர்பார்ப்புகளிலிருந்து
துளிர்த்திருக்கும் அதிருப்தியோடு
கடந்து போகும்
நேற்றைப்போல இன்றும்
இன்றைப்போல இனிவரும்
என்றும்

எப்படியோ முடிந்துவிடுகிறது
எதிர்பார்த்த எதுவும்
அப்படியில்லாமல்..புதன், 1 ஜனவரி, 2014

எதாவது சொல்.

எதாவது சொல்
எதையாவது செய்
நினைப்பதை பேசு
நினைத்ததில் நில்
அழுக்கு ஆடை
அழகென்று சொல்
அரிதாரம் சுத்தமாய்
ஒட்டவில்லையென சரிசெய்
நெற்றிப்பொட்டின் கோணலை காட்டி
நெற்றி தொடு
நெற்றியிலிருந்து கண்களை பார்
காரணம் கேள்
காத்திருக்கும் இவ்விழிகளின்
பார்வைக்குள் நுழை
அனுமதி வேண்டுமெனில் அதையும் கேள்
அனுமதித்த இதழ்களை தொடு
இன்னும் வேண்டுமென
புன்னகையில் கொல்
இதற்குமேல் வேகத்தடைகொடுக்கும்
அமைதியினை எறி
எதற்கும் தயாராய் இரு
தொடராத புள்ளியில்
முழுக்கோலம் அழகென்று பொய்சொல்
மருதாணி பொருத்தமென்று சொல்லி
என் பெரும்மூச்சை அள
ஆர்பரிக்கும் அலைகளின் முன்
என் அழுகுரல் கேள்
அணைத்துறங்கும் தலையணையிடம்
ஆசையினை அறி
கோபிக்க வேண்டுமென நான் சொன்ன
பொய்களை ரசி
ரசித்தாயாயின் ருசி
ருசி கண்ட மனம்
இன்னுமொருமுறை
உனைக் காரணம் கேட்கும்
காரணமுடைத்து
காதல் வேண்டும்
கதைத் துறங்க காதல்மடி தேடும்
அதற்குமுன்
ஒரே ஒரு முறை
 
சத்தம் போடாதே
தனித்திருக்கும்
இந்நிமிடம் பேசட்டும் ...