உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 31 ஜனவரி, 2012

அழிக்கப்படா உன் நினைவுகள்....


பிரிதல் எனும்
உடன்படிக்கையின் வாயிலாய்
உன்னை பிரிந்தாகிற்று,
ஆயினும்,
களைக்கப்படாத
செய்தித்தாள்களில்,
வரிசையாய் அடுக்கப்பட்ட 
காலனிகளில்,
சீப்பில் சிக்கிய
உன் கற்றை முடியில்,
படுக்கை கசங்காத
விரிப்புகளில்,
சரியாய் வரிசைப்படுத்தப்படாத
என் முகப்பூச்சுகளில்,
நீ பாதி படித்து முடித்த
புத்தக்கத்தில்,
சுவர் எங்கும் 
இருக்கும் உன் முத்த கிறுக்கலில்,
காதல் கக்கும் நாட்குறிப்பில்,
என
அத்தனையிலும் 
அழிக்கப்படா உன் நினைவுகள்
எனக்கு நினைவு படுத்துகின்றன...
காதல் சில நேரம் கொடுமையானதென்று...








ஞாயிறு, 29 ஜனவரி, 2012

அவரவர் அனுபவம்





நண்பன் என்று 
பெயரிட்டு 
அறிமுகப்படுத்தியும் ,
ஆணுக்கும், பெண்ணுக்குமான
நட்பை சில உறவுகளிடம்
நியாயப்படுத்தவே முடியவில்லை..
அனைவரின் பயமும் 
அவரவர் அனுபவங்களில் 
கிடைத்த அவர்களாகவே இருக்கிறார்கள்..  









வெள்ளி, 27 ஜனவரி, 2012

தனியாக நான்...


தனிமையில் இருந்தேன்
தவம் என்ன புரிந்தேன்,
இருக்கின்ற இடத்தில்
என் சுயத்தோடு கிடந்தேன்...

இருளின் மடியிலும்
பயமற்று திரிந்தேன்..
எனக்கென்ற விருப்பென்று
புரியாமல் சுழன்றேன்..

சொந்தமென்று வந்தாய்..
என் சுயத்தை 
தொலைக்கச்செய்தாய் 

கட்டுபாடுகளுக்கும்,
கட்டளைகளுக்கும்
கட்டுப்படசெய்தாய்..

அன்பென்று எண்ணி
அடங்கினேன் அன்றி 
அடக்கிலேன்,

என் ஒவ்வொரு நிகழ்வுக்கும்
வர்ணனைகள் படைத்தாய்..
வகைவகையாய் அன்பு செய்தாலும்
வக்கிலை என்று 
வசைமாலை சூடினாய் ..

நான் நானாக இருக்க
எண்ணி
இன்று நான் எதுவாகவுமின்றி 
இதுவாக இருக்கிறேன்...

சொல்லத்தெரியா வலி
வந்து,
தொண்டையில் சிக்கிய
முள்ளாய் உறுத்த,
புரியாத அன்புக்கு அருகில் 
இருந்து பயனிலை 
என்று 
விட்டு பிரிகின்றேன் உன்னை...

என் சுயம் தொலைக்க 
விரும்பாத நான்
மீண்டும் 
தனிமையை துணைக்கு அழைக்கின்றேன்...

புதன், 18 ஜனவரி, 2012

எதிர்பார்புகள் நிறைந்த வீடு...




பல சலனப் பார்வைக்கு
மத்தியில்,
உன்னை எனக்காய்
என் குடும்பம் கண்டெடுத்த நாள் அது..

எனக்கு முகவரி
கொடுத்த தந்தையின்
முதல் எழுத்தும் மாற்றியாகிவிட்டது,
என் தந்தையின் இடத்தில்
உன்னை சுமந்து
எதிர்பார்ப்புகள் நிறைந்த
நான் வாழ்ந்த வீட்டில் இருந்து
வாழப் போகும் வீட்டுக்கு
வந்த கணம் அது..

சுமக்க முடிய மனச்சுமை
என்னை பயமுறுத்த,
புதிதாய் கிடைத்த
சொந்தகளின் சிரிப்பும்
அன்னியமாய்த் தெரிய,
ஆறுதல் என்னவோ
ஆழப் பொதிந்திருந்த
உன் மீதான நம்பிக்கை
மட்டும் தான்.

உயிர் கொடுத்த
உறவில் தொடங்கி,
அடித்து விளையாடும்
என் உடன்பிறந்தவரில் இருந்து ,
விரும்பிக் குடித்த
தேநீர் குவளை,
அணைத்துறங்கும்
என் செல்ல பொம்மையென,
அனைவரையும் 
நீ சூடிய
ஒற்றை கயறோடு
பிரிந்து வந்தாகிற்று...

உன் பிரமாண்டம்
என்னை பயமுறுத்த,
அம்மாவின் இடத்தில் அத்தையும்,
அப்பாவின் இடத்தில் மாமாவையும்,
தம்பியின் இடத்தில் கொழுந்தனையும்,
தங்கையின் இடத்தில் நாத்தனாரையும்,
என் இஷ்ட தெய்வத்தின்
இடத்தில் உன் குலதெய்வத்தையும்,  
வைக்கையில் உணர்ந்தேன்
ஆணாய் பிறந்திருக்கலாம் என்று..

வேரோடு பிடிங்கிய
மரமாய் நான் நிற்க,
மரத்தாலான ஜன்னலும்,
கதவும், உன் வீட்டின் பிரமாண்ட
வரவேற்பறையும்,
இனி என் கனவுகளின் கூடாரம்
இது என்று விமர்சிக்க,
எதார்த்தங்களின் வாசிகியாய்
என் முதல் அடியை வைக்கின்றேன்.

விமர்சனங்கள் நிறைந்த வீடு
என்னை வரவேற்க
காத்திருக்க,
என் கனவுக்கு உயிர் கொடுக்கும்
என்ற நம்பிக்கையில்
முதல் அடியை வைக்கின்றேன்..

வியாழன், 12 ஜனவரி, 2012

காத்திருக்கிறேன்





பிரிந்து விட
துடிதுடிக்கும் உன்னை
புரிந்துகொண்டு,
பழகியிரா தனிமையைத்
துணைக்கு அழைத்துக்கொண்டு
செல்கின்றேன்,
காற்றோடு கலந்துவிட்ட
உன் சுவாசம்
என்றேனும் என்னை சேர்த்துவிடும்
என்றெண்ணி...  

புதன், 11 ஜனவரி, 2012

கனாக்காலங்களில் என் சென்னை காலம்


வணக்கம் வணக்கம் வணக்கம்...என்னடா இத்தன தடவ வணக்கம் சொல்றாலேன்னு பாக்குறேங்களா ? அட வேற ஒன்னும் இல்லைங்க, நமக்கு பிடிச்ச ஒரு விஷயத்த பத்தி பேசும் போதோ, இல்லை கேக்கும் போதோ நம்மையும் அறியாம ஒரு எனர்ஜி வரும் பாருங்க அது தாங்க இது... என்ன டா
 இவ அது இது எதுன்னு ஏதோ சிவா கார்த்திகேயன் மாதிரி ஷோ போடா போரளானு பாக்குறேங்களா? அட போங்க பாஸ் நமக்கு ஷோ காட்டவும் தெரியாது, ஜு காட்டவும் தெரியாது  மீ சின்ன புள்ள... 

ஒவ்வொரு மனுசனுக்கும் அவன் வளர்ந்த காலங்கள்ல சில காலம்
மறக்க முடியா காலமா இருக்கும், மழலை காலத்துல இருந்து, இளமை காலத்து வரை , நிறைய விஷயங்களை  கடந்து வந்தாலும், சில விஷயங்கள் மட்டும் நமக்கு எப்போவும் இதயத்துக்கு பக்கமாவே இருக்கும், அப்படிஎன்னை கவர்ந்த என் சென்னை காலத்தை பத்தி தான் இந்த பதிவு முழுதும்..

எங்கேயும் எப்போதும் படம் பக்கும் போதே, இப்படி ஒரு பதிவு எழுதனும்னு நினச்சேன், ஆனாலும் சுய சுரண்டல்கள் எதுக்குன்னு நினைச்சு எழுதாம
விட்டுட்டேன், அப்பறம் இப்போ ஏன் எழுதுனங்கிற உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்டுடுச்சு, இனி எனக்கு தோணுற விஷயங்களை எந்த தயக்கமும் இல்லாம செய்யபோறேன்னு நான் முடிவு எடுத்துருக்கேனுங்க.. ஹி ஹி..
சரி விஷயத்துக்கு வாறேன். இந்த இருபத்தியாறு வருட வரலாற்றுல இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையா? கொஞ்சம் ஓவர் அஹ இருக்கோ சரி நொவ் டியூன் சேஞ்சு மாமு..

எங்கேயும் எப்போதும் படம் என்ன மனதளவுல ஈர்த்த படம்னு சொல்லலாம், ஆரம்ப கால என் சென்னை வாழ்க்கைய எனக்கு என் கண்முன்னாடி நிறுத்துன மாதிரி தான் இருந்தது. என் சென்னை பயணம் ரொம்ப வித்தியாசமானது..
நான் வளர்ந்த விதத்துல இருந்து அப்டியே மாறுபட்ட ஒரு சுழலுக்கு என்ன கொண்டு போனது இந்த காலம் தான்.. கல்லூரி படிப்ப முடிச்சு, சுயமா வேலை செய்யணும்ன்னு நினைச்சு, நானே சொந்த செலவுல சூனியம் வச்சு கிட்டது தனி கதை.. அப்பறம் குடும்ப வண்டி அப்படி இப்படி ன்னு தடம்புரள, குடும்ப சூழலுக்காக சென்னை நோக்கி என் பயணம் ஆரம்பம்...

நான் வளர்ந்த உலகம் ஆண்கள் இல்லாத உலகம்.. உங்க அப்பா ஒரு ஆண் தானேன்னு கேக்கலாம்..அதுக்கும் நாங்க பதில் வச்சு இருக்கோம்ப்பா, என் குடும்பத்து உறுபினர்களை தவிர வேறு ஒரு ஆணிடம் நட்பு கூட வச்சுகிட்டது கிடையாது... ஏன்னா ஏன்னா எங்க அப்பா ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபிசர், ஆபிசர் னதும் உணவு உலகத்துக்கு போய்டாதீங்க, என் குடும்பம் ரொம்ப கட்டுக் கோப்பான குடும்பம், சொந்தம் ன்னு சொல்லி யாரும் வந்தாலும், வாங்கனு சொல்லிட்டு வீட்டுக்கு உள்ள போய்டனும், அப்படி தான் நானும் என் தங்கையும் வளர்க்கப் பட்டோம். 


பள்ளிப் படிப்பும் சரி, கல்லூரிப் படிப்பும் சரி பெண்கள் கல்லூரியில தான், கல்லூரி போட்டிகள்ள கூட பெண்கள் கல்லூரி போட்டியா பாத்து தான் விண்ணப்பிபேன். அதற்க்கான காரணம் எனக்கு என்னனு புரியல, என்னப்
பொறுத்தவரை, உறவல்லாத எல்லா ஆண்களும் அப்போ ஏதோ எனக்கு ரொம்ப பயத்த தான் கொடுத்தாங்க, கொடுத்தாங்கன்னு சொல்ல முடியாது, எல்லாம் என் பாட்டி பண்ணுன வேலை... சின்ன வயசுல இருந்தே பசங்க கிட்ட சேரக்கூடாதுன்னு சொல்லி வளத்துட்டாங்க..


பலபேரு அறிவுரைக்கு அப்பறம், சென்னைக்கு என் உறவினர் வீட்டுல தங்க அனுமதி வாங்கி பொறப்பட்டேன்.
ஒரு வழிய சென்னை எக்மோர் அஹ அடஞ்சாச்சு. ஜனம் பெருத்த ஊருன்னு
சரியத் தான் சொன்னங்க.. சென்னைய பாத்ததும் பயம் தொத்திக்கிச்சு, எங்க மதுரை தூங்கா நகரம் தான், அங்கேயே எவ்ளோ நேரம்னாலும் நாங்களெல்லாம் அசால்ட்டா சுத்துவோம், இது என்ன பெரிய சென்னைன்னு பீத்திக்கிட்டு வந்தேன், எக்மோர் அஹ பாத்ததுமே நான் சொன்னது தப்புன்னு ஒத்துக்கிட்டேன்...


ஒரு வழியா சொந்தக்காரங்க வீட்டுல தங்கியாச்சு, முதல் தடவை அம்மாவின் அருகாமையை, தம்பி தங்கச்சியோட சண்டைய, அப்பாவோட ஆறுதல் பேச்ச ரொம்ப மிஸ் பண்ணுன நேரம் அது. முதல் முதல் அஹ ஒரு interviewku போறேன்...இன்டெர்வியூல செலக்ட் ஆனேனா இல்லையா? அத அடுத்த பதிவில சொல்றேன், கண்டிப்பா இந்த பதிவு மெகா செரியல் தான் பாஸ். பின்ன மூணு வருஷம்ல ஒரே போஸ்ட் அஹ போட்டுட முடியுமா? அடுத்த பதிவில பாக்கலாம்...ஹி ஹி....

திங்கள், 9 ஜனவரி, 2012

கடந்த காலம் ஒரு பார்வை...


வணக்கம் என் வலையுலக உறவுகளே நலமா? வருடம் ஆரம்பித்து இப்பொழுதுதான் உங்களை சந்திக்க முடிந்தது. மகிழ்ச்சியா 2011 வழியனுப்பி வச்சாச்சா? பிறந்திருக்கும் வருடம் கண்ணிடிப்பா நல்ல விசயங்களை எல்லார் வாழ்க்கையிலும் தரும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை...(மாயன் காலண்டர் ஒரு பக்கம் பயமுறுத்தும்... இருந்தாலும் டோன்ட் வொர்ரி பி ஹாப்பி  )  இந்த வருடத்தில  இருந்து  ஒவ்வொரு  விசயத்தையும்  மன நிறைவோட பண்ணனும்னு நினைச்சிருக்கேன்,  அதான் என் மனசுக்கு பிடிச்ச விசயங்களையும், பாதிச்ச விசயங்களையும் அசைபோடும் ஒரு நிகழ்வா இந்த பதிவ வடிச்சிருக்கேன்... 2011 நான் அதிகம் எதிர்பார்த்த வருடம்னு தான் சொல்லணும்....எனக்கான பல மாற்றங்களை கடந்த காலம் தரும்னு காத்திருந்தேன், உதாரணாம வேலையில இருந்து இன்னும் பல விஷயங்களை சொல்லலாம்...

வாழ்க்கையில நம்மளையும் மீறி சில விஷயங்கள் நடக்கும் தானே, அது மாதிரி தான் என் பதிவுலக பயணமும்...ஆனாலும் இங்க  எல்லாருக்கும் இருக்கிற இந்த காதல் (பதிவுலகம் மேல ) எனக்கு அப்போ பதிவுலகம் மேல இல்லை..எனக்கு தெரிஞ்சு என்னோட ரேவா கவிதைகள் என் பர்சனல் டைரி அஹ தான் எனக்கு இருந்தது, இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு மாய உலகம் இருக்கும்னு நான் நினைச்சதே இல்லை. இரண்டாயிரத்து பத்திலேயே பதிவுகள் போட ஆரம்பிச்சாலும், பதிவுலகத்துக்கே இருக்கிற சில சம்பிரதாய சடங்குகள் நான் அறிய காரணமா இருந்தது சகோதரன் கார்த்திக், அவர் இல்லாட்டி இன்னைக்கு எனக்கு நல்ல உறவும் நட்பும் கிடைச்சிருக்காது,,அதற்க்கு நன்றி.

என்னப் பொறுத்தவரை பதிவுலகம் எனக்கு ஒரு தவச்சாலைன்னு தான் சொல்லணும்...என்னோட வாழ்வியல் வலிகளுக்கு மருந்தா இருந்ததால, இருக்கிறதால அப்படி சொல்றேன்..ஏதோ விளையாட்டா  எழுத ஆரம்பிச்சேன், நல்லா எழுதுறேனோ இல்லையோ தெரியாது, ஆனா போலியாய் இல்லாமல் எனக்கு ஒன்னுனா உயிர் துடிக்கும் நல்ல மனிதர்களை நட்பாவும், உறவாவும் சம்பாதிச்சிருக்கேன்னு நினைக்கும் போது, என்னையும் அறியாம ஒரு கர்வம் காதலா என்ன தொற்றிக் கொள்ளுது...

பதிவுலகம் வந்தப்போ  இருக்கிற என் எழுத்திற்கும், இப்போ இருக்கிற என் எழுத்துக்கும் மாறுதல் இருக்கு, சோ மாறுதல் தந்த இந்த உலகிற்கு நன்றிகள். என்னோட சின்ன சின்ன கவிதைகளையும் பாராட்டி, தப்புனா திருத்தச் சொல்லி, நல்ல இருந்தா வாழ்த்தி வருற அத்துணை மறுமொழிகளுக்கும், மறுமொழி இடும் நண்பர்களுக்கும் நன்றி...
கடந்த வருடத்தின் சந்தோஷ நிகழ்வுனா பதிவுலகத்துல இருந்து நல்ல நட்புகள் கிடைச்சது தான். வேதனையான விஷயம்னாலும் இதே பதிவுலகத்தில் நடந்த கசப்பான விஷயங்கள் தான்..
மிகப் பெரிய சந்தோஷம் னு சொல்லனும்னா என் தம்பி கல்லூரி படிப்பில இருந்து அடுத்தக் கட்ட வாழ்க்கைக்கு அதாவது வேலைக்கு அடியெடுத்து வச்சது தான்...இப்போதைக்கு எல்லா வலிகளையும் சுகங்களா எடுத்து வாழப் பழகிகிட்டேன்..இனிவரும் என் காலமும் அப்படியே தான் தொடரும்...
இதுவரை என்னைத் தொடரும் அனைத்து சகோதர நட்புக்கும் நன்றிகள் பல... தவிர்க்க முடிய சில காரணங்களால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் போட வேண்டிய பதிவு இப்போ தான் போட முடிஞ்சது...மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம் என் உறவுகளே....