
**அன்னை முகம் பார்த்து
ஆசையாய் விடிந்த
பொழுதெல்லாம் இன்று
அன்னை அவள் அலுவலகம்
செல்ல, உன்முகம் பார்த்தே
உயிர் கொண்டோம்....
உன் உயிரோசையைத்தந்து
எம்மை உயிர்ப்பிக்கச்செய்யும்
என் உலகமே....
நீ இல்லையென்றால் .....
என் உலகம் நிசப்தமாய் போய்விடும்...
**விடியல் வரும் பொழுதினிலும்,
விடியலது விடை பெறும் வேளையிலும்,
என்னோடு நீ இல்லாத உலகம்
நரகமாகவே நீளும் ...
** என்னிரண்டாம் உறவே!!!
~தனிமைச் சிறையில் அறையப்படும்
நாட்கள் எவ்வளவு நரகமோ?
அவ்வளவு நரகம்,
நீ இல்லாத உலகம்...
~கடவுள் மனிதனைப் படைத்தான்,
எம் மனிதக்கடவுள் வரமாய்
உன்னைப் படைத்தான்...


ஆம்!
~வரமாய் வந்த கைப்பேசி நீ
வழங்கிய வரங்கள் தான் எத்தனையோ....
~உயிராய் நினைக்கும்
உறவையெல்லாம் ஊட்டி வளர்ப்பதும்
நீ தான்...
~ தீராத பகையெல்லாம்
தீர்த்து வைக்கும் சமாதான
தூதுவன் நீ தான்...
~கலங்கி நிற்கும் இதயத்திர்க்கெல்லாம்
இனிய கடவுள் நீ தான்...
~ என் இனிய கைபேசியே!!!
நீ கொடுத்த காலமாற்றம்
தான் கணக்கிலடங்கா~!~
நீ இல்லாத உலகை
கொஞ்சம் சுற்றி வந்து பயணிப்போம்
இந்த கவிதையில்....
~@~பெற்றோருக்கு:


~ உன் வழியாய், தன் வழி
வந்த உறவின் குரலொலி
கேட்டு தன் வாழ்வின்
பசுமை நினைவுகளோடு
கதை பேசி திரியும் காலம்
இல்லாமல் போயிருக்கும்
நீ இல்லாத உலகத்தில்...
~@~நட்புக்கு:
அறுதல் சொல்லவும்ஆனநதக்கூத்தாடவும்
அன்பு மொழியை
குறுந்தகவலாய்
பரிமாறிக்கொள்ளவும்.,
அன்னை மடியாய் அவன்
அமுத குரல் தரும்
அரவணைப்பும்
இல்லாமல் இருந்திருக்கும்
நீ இல்லாத உலகத்தில்...
~@~காதலர்க்கு:
காதலால் கசிந்துறிகி ,காளையர் அன்புக்காதல்
கதை பேச, சிறு சிறு
கள்ளத்தனம் செய்ய,
விடியும் வரை உன்னை
உறங்கவிடாமல்
"தன்னுறவுக்காய்
உன்னுறவு கொண்டு
பரிமாறப்படும்
காதல் குறுந்தவகல்கள்
எனயாவும் காணமல்
போயிருந்திருக்குமே
நீ இல்லாத உலகத்தில்...
~@~தூரதேச இதயத்திற்கு:
உறவுகளை இதயத்தில்சுமந்துகொண்டு, உயிர்
வாழ்வின் அடிப்படை
தேவைக்காய் கடல் கடந்து,
காலம் மறந்து,
தம் பொருளாதாரத்தை
வறுமையின்
எல்லைக்கோடில் இருந்து
விரட்ட பாடுபடும் இந்த
" இன்பச்சுமையாளிக்களுக்கு "
அறுதல் கதை கூற,
ஆனந்தக்கண்ணீரால்
அன்பை வெளிக்காட்ட
வாய்ப்பில்லாமல்
போயிருக்குமே,
நீ இல்லாத உலகத்தில்...
காதலே!
**எம் மனிதக்கடவுள்கொடுத்த வரத்தால்...
தினமும் உன் முகம்
பார்த்தே எழுந்து,
உன்னை கையோடே வைத்து
கண்ணுறக்கம் கொண்டு
நகரும் இந்த நாட்கள்
எல்லாம் வளமாய்,
வரமாய் நீள்கிறது...
அப்படி நீ
இன்று இல்லையென்றால்
இனி நகரும் நாட்கள்
எல்லாம் நரகமாய்
போகுமே...
***அன்னை முகம் பார்த்து
ஆசையாய் விடிந்த
பொழுதெல்லாம் இன்று
அன்னை அவள் அலுவலகம்
செல்ல, உன்முகம் பார்த்தே
உயிர் கொண்டோம்....
உன் உயிரோசையைத்தந்து
எம்மை உயிர்ப்பிக்கச்செய்யும்
என் உலகமே....
நீ இல்லையென்றால் .....
என் உலகம் நீச்சப்தமாய் போய்விடும்...
~தனிமைச் சிறையில் அறையப்படும்
நாட்கள் எவ்வளவு நரகமோ?
அவ்வளவு நரகம்,
நீ இல்லாத உலகம்...
அன்புடன்
ரேவா
























ரேவா



