உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
யாதுமாகி நின்றாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாதுமாகி நின்றாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 ஜனவரி, 2013

புரியாக்காலமது



இன்றோடு வருடம் ஆறாக, என் நினைவுதனில் வற்றாது ஓடும் ஒரு பிரவாகமாய்  நீ உருவெடுத்திருக்கிறாய், இன்னும் இன்னும் ஆழமாய்.
ஒரே பார்வையில் பருகிவிட முடியா ஆழத்தில்  நீ இருக்கிறாய் என்பது மட்டும் திண்ணம்..எப்படி ஆரம்பம் என்ற புள்ளியில் தெளிவில்லையென்றாலும் அமர்களமாய் நீ மனதமர்ந்த காலம் என்றும் எனக்கு விழாக்காலம் தான்..

 மழைக்கு ஒளிந்து கொள்வதின் பொருட்டு, என் துப்பட்டா தூரலில் பதியமிட்ட அந்த பார்வைக்குப்பின் பல மழையை சந்தித்தாகிவிட்டது, ஒன்றிலும் உன்னை சந்தித்த உற்சாகமில்லை என்பதே உண்மை..பிரிதொரு நாள் என் இருக்கை அருகில் வந்தமர்ந்த தினம் யுத்தம் செய்யும் எந்தன் உள்ளத்தின் ஓசை நீ அறிந்திருப்பாயா என்று நான் அறியேன்.. 
ஆர்பாட்டமில்லா உன் புன்னகை, கர்வத்தை மறைக்கும்  உன் குறும்பு மீசை, திருத்தம் செய்த உன் புருவம், பாங்காய் எடுத்த வகிடு, கையோடு இட்டிருந்த அந்த மஞ்சள் கயிறு, நெற்றி நடுவில் சின்னதாய்  குங்குமம் இவையெல்லாம் உனக்கு கூடுதல் அழகை கொடுக்கத்தான் செய்தது..

ஹாய் மேம், இப்படித்தான் ஆரம்பித்தாய்..

உங்கள எங்கையோ பார்த்திருக்கேனே என்பதைப்போல் நான் ஆரம்பமானேன்..

கிட்டதட்ட குட்டி மழையொன்று சில்லென்று என் நெஞ்சம் நனைக்க, மழைவிட்டதும் வெரித்திருக்கும் வானத்தை போல் அழகு நிறைந்ததாய் இருந்தது அன்றைய தினம்..பரஸ்பரம் அறிமுகம் முடிந்தாகிற்று, தொலைபேசி எண்ணுக்குள் நுழைந்து கொண்டு குறும்பு செய்தது என் நெஞ்சம்..அதை உணர்ந்தவனாய் உடன் கொடுத்தாய் உன் எண்ணை..
வீடு வந்தாகிற்று விற்றுத்தீர்த்த பலாப்பழத்தின் வாசம் போல விடாது துரத்தியது உன் வாசம்.. ஏதே ஏதோ குழப்பம் கொண்டு அனுப்ப நினைத்து அழித்த குறும்செய்திகள் எண்ணிக்கையில் 100த்தொட, என்னை நான் திட்டிக்கொண்டே தூக்கிப்போனேன்...

காலை 6 மணி இப்போதெல்லாம் என் மூன்றாம் கைகளாய் மாறிப்போன கைப்பேசியை எடுத்து பார்த்துத்தான் ஆரம்பமாகும் என் அத்தனை நாளும், இன்று மட்டும் ஒரு ஆனந்தவிருட்சத்தை விழிக்கு தந்தது, குட் நைட் என்னும் குறும் செய்தியில் தொடங்கி அன்பு தாங்கி அனுப்பட்ட அத்தனை குறும்செய்திகளாலும் நிறைந்து வழிந்தது என் கைப்பேசி..என்ன நினைப்பான் என்னை என்ற எண்ணம் மேலிட, சின்னதாய் மன்னிப்பில் தொடங்கி வைத்தேன் அன்றைய நாளை..அதன் பின் பதிலேதுமில்லாது போனது, அதைப்பற்றி நினைப்பேதுமில்லாமல் மூழ்கிப்போனேன் எந்தன் வேலையில்..

ஏதோ புரியாத உணர்வு தொண்டை நெருக்கி, புலப்படா வலிவந்து கண்ணீரில் முடிக்க, விதி அமைத்துகொடுத்த பயனாய் வந்து நிறைத்தது அவன் அழைப்பு
பரஸ்பர பேச்சிலும் பிடிபடா ஏதோ ஒரு உணர்வை அவனோடு பேசையில் உணர்ந்தேன்... பின்னும் இரவும் பகலுமென எங்கள் நேரத்தை தின்று தீர்த்தது எங்கள் இரவுக்குமான பிடிபடா ஏதோ உணர்வு...

உடைத்து பேசிவிடவேண்டுமென்ற எண்ணத்தில் துளிர்த்துக்கொண்டிருந்த மனஒத்திகைகளை இனம் கண்டவனைப்போல் என் அருகில் வந்தான்

இன்னைக்கு ஈவினிங் நம்ம ஆபிஸ் பக்கத்தில இருக்கிற காபிடேக்கு போவோம் வர்ஸிதா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..

ம்ம்ம்ம் ஒகே பார்க்கலாம் ப்ரியன்...

உள்ளுக்குள் உற்சாகக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டாலும் வெளியே எதுவும் நடக்காதைப்போல் காட்டிக்கொள்வது எத்தனை பெரிய சங்கடமென்பதை அன்றே உணர்ந்தறிந்தேன்... 6 மணிக்கு இதோடு 6000 முறை கடிகாரம் பார்த்தாகிவிட்டது, நகராத கடிகாரம் உலக அழிவை கண்முன்னே நிறுத்துவதைப்போலொரு மாயையைக்கொடுக்க, நிறுத்திக்கொள் உன் கற்பனையை என்பது போல் 6 மணியை நெருங்கியது...

இதோ கண்முன் திரையிட்டு நாடகம் நடத்தும் எங்கள் உணர்வுகளுக்கு காதலெனும் பெயர் சூட்டுவிழா நடந்தேறிக்கொண்டிருக்கிறது...

இருவருக்குள்ளும் ஒளிந்து விளையாடிய காதல் பிள்ளையை கண்டெடுத்து இதோ வருடம்  6 ஆக, காதலியலை முழுதாய் படிக்கும் முயற்சியில் ஒவ்வொரு நாளும் புதுப்புது பாடம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது....
நினைவுகளில் எப்போதும் சூல் கொண்டு எங்களை சுமங்கும் அஸ்திவார நியாபங்களே எங்களின் அந்த புரியாக காலங்கள் தான்.....

ஒவ்வொரு சமாதானங்களுக்கு 
பின்னும் 
முளைத்து வரும்
அத்தனை விருட்சமும் 
காதலே.....

  - ரேவா

வெள்ளி, 25 மார்ச், 2011

என் காதல் மருத்துவன் நீ...



* ஒட்டுமொத்த அழகையும்
ஒன்றாய் திரட்டி -
இறைவன்  உன்னைப்  படைக்க
உனைப் பார்த்த என்
விழிகள் படபடக்க,
நீ வீசிச் சென்ற
பார்வைக் கணையில்
சிக்கிக் கொண்டது
என் இதயம்...
பேசும் உன் விழி கொண்டு
காதல் எனும்  மருந்திடு,
பிழைத்துக்கொள்ளும்
என் காதல்...




* தயவு செய்து
ஒரு முறையாவது
புன்னகை செய்...
உன்னால் புது வாழ்வு 
பெறத் துடிக்கிறது 
நான் சூடிக்கொள்ளும் 
என்
தோட்டத்துப்  பூக்கள்...  


 இருட்டில் உனைப் பார்த்த 
மயக்கத்தில்...
என்னைவிட அதிகமாய் 
உருகுகிறது
உன் வீட்டு மெழுகுவர்த்தி 
கொஞ்சம் அணைத்து விடு 
நீண்டுவிடும் 
என் நாட்கள்... 
எத்தனையோ பேரோடு 
வாதாடி வென்ற 
என் வார்த்தைகள் 
எல்லாம் நோய்கண்டது
உன் மௌனத்தால் ...   
   


* நீ சிந்திய வார்த்தையில் 
என் பேனா
பிழைத்துக்கொள்ள,
நான் மாட்டிக்கொண்டேன்
காதல் நோயில்...



  இறுதியாய் 
என் கவிதை காயப்படக்
கூடாதென்று
என் கவிதைக்கும்,
கவிதையை  (உன்னை ) நேசிக்கும் எனக்கும்
உன் இதழ் கொண்டு
மருந்திட்ட
என் 
காதல் மருத்துவன் நீ...


முந்தையக் கவிதை : வாழ்க்கை வழக்கு...

படங்கள் : நன்றி கூகிள்
அன்புடன் 
ரேவா

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

யாதுமாகி நின்றாய்!!!!



~.. ~ "அகரம் தொடங்கி
சிகரம் அடைய துடிக்கும்
எல்லோர் வாழ்விலும்,
ஆசை துறந்து, கர்வம் மறந்து
சுயம் மறைத்து, நாம் வளர
வேராய் நம்மை தாங்கி பிடிக்கும்
ஓர் உன்னத உயிராய்
யாதுமாய் நிறைந்திருக்கும் தந்தைக்காய்
இந்த கவிதை....

~~கருவான உரு, உயிராகும்
வரை கண்ணுறக்கம் தான்
மறந்து தாய்க்கு சமமாய்
பிரசவவலி கண்டு நம் எல்லார்
வாழ்விலும் விடியல் கொடுத்து
யாதுமாய் நீக்கமற நிறைந்திருக்கும்
நம் வாழ்வியல் ஆசானுக்காய்
இந்த கவிதை...









~~தந்தையே,
பூமி வந்து உன்
பூமுகம் கண்ட முதல் நாள்
உன் (ஆண்மையின்) முழு நாள்....

~~ தவழும் வயதிலும், தடை மீறி
உன் விரல் பிடித்து நடை பயின்ற
நாட்களிலும்,
மழலையின் மடியினில்
கிடந்த பொழுதுகளிலும்,,
நீயே என் தலைவனாய் நின்றாய்...

~~ நீ காணாத உலகம்,
நான் காணவேண்டி,
என் அடையாளம் தனை
நான் பெற, பள்ளி சென்ற அந்த
நாட்களில் எல்லாம் பாடச்சுமையை விட- உன்
பாசச்சுமையே எனக்கு உயர வேண்டும்
என்ற அழுத்தத்தை தந்தது...

~~பெண்ணியம் பேசும் பலர்
இந்த பூமியில் இருந்தாலும்,
பெண்ணை பிறந்த காரணத்தால்
தடை படும் பல உரிமை நான் பெற
காரணமாய் இருந்து
பெண்ணியம் போற்றிய
தந்தையே!!!!

~~ பெண்மையின் முதல் படியை
அடைந்த நாட்களிலிருந்து,
உன் அன்பு மடியில் இருந்து
விலகி நின்ற வேலைகள்.,
உன் தோள் மீது அம்பாரி
போகும் பொழுதுகள்.,
உன் மார்பில் தலை வைத்து
தூங்கும் இரவுகள்.,
என் எல்லாவற்றிற்கும் என்
தாய் தடை போட்டாலும்,
உண்மையை பக்குவமாய் விளக்கி
உனக்குமெனக்குமென இடையே
இடைவேளிதனை இல்லாமல்
என்னை வளர்த்த என் தந்தையே !!!

~~கல்லூரி காலங்களில் பரிசுகள்
பல நான் பெற வெற்றியின் களிப்பு
என்னை விட உனக்கே அதிகம்..
நான் வென்ற பரிசுகளை கொண்டு
ஊருக்குள் ஊர்கோலம் நடத்தும்
என் தந்தையே!!!

~~ உன்னைப்போல் தந்தையே
வேண்டுமென என் தோழிகள்
என்னிடம் சொல்ல, அதை
என் தோழனாய் நான் உன்னிடம் சொல்ல
அனுமதித்த என் தந்தையே!!!

~~ என் வாழ்வில் வளர்பிறை
தந்த நாயகனே!
ஆசை, எதிர்பார்ப்பு ஏமாற்றம்
என்னும் தேய்பிறை எனை
நெருங்காமல், என் விருப்பம்
தனை முழுதாய் செய்து முடிக்கும்
என் தந்தையே!!

~~விடியல் வரும் வேளையிலும்
விதி என் வழி வந்து
விளையாடிய வேளையிலும்
என்னை விட்டு நீங்க
என்னிரண்டாம் நிழலே!!

~`~தந்தையே
* அன்பின் பிறப்பிடமாய்
என் வாழ்வினில் நின்றாய்...
*ஆற்றலின் ஆசானாய்
என் அறிவினில் நின்றாய்...
* இயல்பின் இருப்பிடமாய்
என் இதயத்தில் நின்றாய்...
* ஈகையின் விளக்கமாய்
என் இயல்பினில் நின்றாய்...
* உண்மையின் உருவமாய்
என் உயிரினில் நின்றாய்..
* ஊக்கத்தின் உத்வேகனாய்
என் உள்ளத்தில் நின்றாய்...
* எளிமையின் திருவுருவாய்
என் வாழ்வினில் நின்றாய்...
* ஏற்றத்தின் படிகளாய்
எனக்கு வளர்பிறை தந்தாய்...
* ஐயத்தின் போது காப்பாளானாய்
என்னருகில் நின்றாய்...
* ஒழுக்கத்தின் பிறப்பிடமாய்
எனக்கு படிப்பினை தந்தாய்...
*ஓய்வின்றி உழைக்கும்
யுக்தியால் உயர்ந்து நின்றாய்
* ஒளவை தமிழாய்
வாழ்வில் அர்த்தங்கள் தந்தாய்...
* எஃகின் உறுதியாய்
என் வாழ்வில் யாதுமாய் நின்றாய்...

என் தந்தையே,
என் வாழ்வில் நீக்கமற
நிறைந்திருக்கும்
என் நீஜ நாயகனே.,
உன்னோடு இனி நகரும் நாட்களிலும்
என் கணவன் கைப்பற்றி
உன் விழி பார்த்து நான்
நடக்கும் நாட்களிலும் என் வாழ்வியல்
எல்லா நிகழ்வுகளிலும்
யாதுமாய் நீயே நின்றாய்...

~.. ~ "அகரம் தொடங்கி
சிகரம் அடைய துடிக்கும்
எல்லோர் வாழ்விலும்,
ஆசை துறந்து, கர்வம் மறந்து
சுயம் மறைத்து, நாம் வளர
வேராய் நம்மை தாங்கி பிடிக்கும்
ஓர் உன்னத உயிராய்
யாதுமாய் இருக்கும் தந்தைக்காய்
இந்த கவிதை....

அன்புடன்
அன்பு மகள்
..ரேவா..